Friday, March 21, 2008

கிடைக்காத ஒன்று

இன்று அவனது மேற்படிப்பை முடித்துக்கொண்ட பயணம் வீடு நோக்கியதாக இருந்தது. லீவு கிடைக்காத உயர்கல்வி, ஒப்படைகள், பயிற்சிகள், பரீட்சைகள், தோல்விகள், மரணத்துடனான உறவாடல்கள்... அத்தனையும் 2004ம் ஆண்டு வீட்டை விட்டு புறப்பட்டவனை புடம் போட்டு வழியனுப்பி வைத்திருக்கின்றன. இன்று சொந்த ஊரிலேயே பணியாற்ற அடம்பிடித்து அனுமதி பெற்ற மகிழ்ச்சி அவனது முகத்தில்... நேரம் காட்ட மணிக்கூடு மறுத்த போதும், மனதில் கணக்கிட்டுக் கொண்டான் இன்னும் ஐந்தே ஐந்து நிமிடங்கள் மட்டும் போதுமாக இருந்தது நான்கு வருடமாக எட்டாத தாயன்பில் திளைப்பதற்கு...

*****

நடு நிசியில் வேட்டுச் சத்தங்களின் தொடராக எழுந்த பாரிய வெடிப்பொலி... நாய்களின் மரண ஓலங்கள்... எதுவும் புதிய நிகழ்வுகளாக இவளுக்கு தோன்றவில்லை. வழமையான காரியங்களாயினும், திடீரென முளைத்த விக்கலுக்குப் பருக நீரெடுக்கச் செல்ல பயமாகத்தான் இருந்தது.
விடிந்தது... முதல் வேலையாக வழமை போன்று ஓடிச்சென்று பேப்பர் வாங்கினாள். இன்றும் இவளது மாவட்டத்தைச் சேர்ந்த ஐவரின் விபரங்கள். ம்... தேடியதொன்று கிடைக்காத மகிழ்ச்சியில் கடவுளுக்கு நன்றி சொன்னாள்.

3 பின்னூட்டங்கள்:

Unknown said...

யதார்த்தத்தை பிரதிபலிக்கும் சிறந்த கதை. இன்றைய தமிழ் மக்களின் நிலமையை மிகச்சிறப்பாக காட்டுகிறது. ஒவ்வொரு நாளும் பார்க்கும் செய்திகள் எங்கள் மனத்தை மரக்கச்செய்துவிட்டன். ஏதோ சினிமா செய்திகள் போல் இவையும் எம் மனதில் சலனங்களை ஏற்படுத்த தவறுகின்றன் அவை எம் உறவுகளுடன் தொடர்பில்லாத வரையில்....

மிகச்சிறப்பாக சுருக்கமாக சொல்லியுள்ளீர்கள்

வாழ்த்துக்கள்

Unknown said...

கிடைக்கவேண்டிய எம்முரிமை கிடைத்திருந்தால்
இக் "கிடைக்காத ஒன்று" (சிறியால்) படைக்காமல் போயிருக்கும்

ஆதிரை said...

கண்ணன் & பிறைதீசன்,

உங்கள் வருகைக்கும் கருத்திடலுக்கும் நன்றிகள்.

Post a Comment

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம். அனைவரும் இந்த வலைப்பூவை வாசிப்பார்கள். எனவே நல்ல வார்த்தைப் பிரயோகங்களைப் பாவியுங்கள். அத்துடன் இடுகையின் மேற்புறத்தில் உங்கள் நட்சத்திர வாக்கையும் இட்டுவிட்டு செல்லுங்கள்.
நன்றி