ஆஹா இவன் வேற தொடங்கிடான் என்று யோசிக்காதிங்க.தலைப்பு தான் Java vs C# தவிர இது ஒரு ஜாலியான பதிவு மட்டுமே.யாரும் serious ஆக படிக்க வெளிக்கிட்டு நோந்து போனால் நான் பொறுப்பில்லை :)
பல நாட்கள் பூங்கா பக்கம் போய் என்று யோசிச்சுக்கொண்டு பேரூந்து வண்டியில் இன்று வரும் போது ஒரு நண்பனை சந்தித்து அளவுலாவும் சந்தர்ப்பம் கிடைச்சுது.என்ன செய்யிற என்டு கேட்டான்,நானும் இப்பதான்டா ஒரு சாப்ட்வேர் கொம்பனில training க்கு போய்கொண்டிருக்கன் என்டு சொன்னேன்.நான் எதிர்பார்த்த மாதிரி அடுத்த கேள்விய கேட்டுடான்,என்ன கேள்வி என்றா யோசிக்கிறீங்க????நீங்க நினைக்கிற அதே கேள்விதான்:).மச்சான் project java or c# லயோ போகுது?.நான் training க்கு போக தொடங்கிய காலத்தில் இருந்து இந்த கேள்விய என்னுடய செவிகள் சுமார் 100 தடவைக்கு மேல் கேட்டிருக்கும்.இதைப்பற்றி ஏன் நம்முடைய பூங்காவில் கதைக்ககூடாது என்ற அவா தான் இந்த பதிவு.(ஏன்டா நண்பர்களே java,c# தவிர வேற எதுலயும் project செய்ய முடியாதா?என்று கேட்கவேண்டும் என்று உதடுகள் துடித்தாலும் நான் மட்டும் என்ன யோக்கியனா?நானும் எனது நண்பர்களிடமும் இதே கேள்வியை தானே கேட்கிறன்:)lol)சரி சரி அலம்பினது போதும் விசயத்துக்கு வா என்று சொல்றது விளங்குது:).ம்ம்ம்ம்ம் விசயத்துக்கு போவமோ.
நீங்களே சொல்லுங்க காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சுதானே.அதேபோல் அவன் அவனுக்கு தான் வேலை செய்யும் மற்றும் தெரிந்த கணனி மொழியே அவனுக்கு கணனி தாய் மொழி(என்ன உதாரணம் எல்லாம் செம மொக்கயா இருக்கா:)lol).என்ன கேட்டா தாய் மொழி போன்று ஒரு கணனி மொழியை தெரிந்து கொண்டு மற்ற எல்லா கணனி மொழிகளையும் உங்களின் இரண்டாம் மொழியாக கொண்டிருந்தால் நீங்கள் எங்கோ போய்டுவிங்க boss:).java இல் உள்ள நல்ல விடயங்களைப்போன்று C# இல் கூட பல நல்லவிடயங்கள் உள்ளன,இவை மட்டும் அல்ல மற்ற எல்லா கணனி மொழிகளும் தங்களுக்கே உரிய தனி தன்மை உடனேயே காணப்படுகின்றன.(ஆஹா ஜாதி கலவரம்,மொழி வெறி போன்று கணனி மொழிக்கலவரம் வந்தால் எப்படி இருக்க்ம்:(lol.இந்த உலகம் தாங்குமாடா சாமி).ஆனால் C என்ற பெரும்பாலான கணணி மொழிகளின் தாய் மொழி தெரிந்தால் C யின் பிள்ளைகளை புரிதலில் சிரமம் இருக்காது என்பது என்னுடைய தாழ்மையான் கருத்து.(நீங்க என்ன் சொல்லுரீங்க :))
நான் இந்த துறையில் இப்போது தான் காலடி எடுத்து வைக்கிறன் என்ற காரணத்தால் ஏதவது ஒரு மொழியைப்பற்றி சொல்ல வெளிக்கிட்டு வேண்டிக்கட்ட தயார் இல்லை:).அனுபவம் மற்றும் தங்களுடைய கணனி தாய் மொழியில் நான்கு தேர்ச்சி பெற்றவர்களும் பின்னூட்டல்கள் மூலம் தெரிவித்தால் பூங்காவிற்க்கு இளைப்பாற வருபவர்களுக்கு பேருதவியாக இருக்க்ம் என கேட்டுகொள்ளும் java வை தாய் மொழியாக கொண்டும் C யை மறந்தவனுமாகிய எவனே ஒருவன்............
Wednesday, March 19, 2008
Java vs C#
பூக்களின் வகைகள்
கணினி உலகம்
Subscribe to:
Post Comments (Atom)
2 பின்னூட்டங்கள்:
நல்லவொரு பகிடியான் பதிவு. இப்படி நாங்கள் பேருந்தில் செல்லும்போது, நடந்துசெல்லும்போது ஏதேச்சையாக நிகழும் சிறுசிறு சம்பவங்களை பதிவாக்கும்போது அவை சுவையூட்டுவனவாகவே இருக்கின்றன்.
அடடா.. உங்களைப்போல துறைசார் வித்தகர்கள் இது சம்பந்தமான பதிவுகள் எழுதினால் தமிழுலகுக்கு பேருதவியாயிருக்குமேஇஇ!!!
Post a Comment
உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம். அனைவரும் இந்த வலைப்பூவை வாசிப்பார்கள். எனவே நல்ல வார்த்தைப் பிரயோகங்களைப் பாவியுங்கள். அத்துடன் இடுகையின் மேற்புறத்தில் உங்கள் நட்சத்திர வாக்கையும் இட்டுவிட்டு செல்லுங்கள்.
நன்றி