Monday, March 31, 2008

எனக்கு 'விசா' கிடைத்து விட்டது!

தோழர்களே...,

அளவற்ற மகிழ்ச்சியுடன் சொல்கின்றேன் எனக்கு 'விசா' கிடைத்து விட்டது. இதுவரை நான் காத்திருந்த நாள் இப்போது எனக்காக மணித்துளிக்கணக்களவில் சுருங்கிக் கிடக்கின்றது. முருங்கை மரம் ஏறும் வேதாளமாக எத்தனையோ நிராகரிப்புக்களுடன் போராடி போராடி ஈற்றில் இன்று எனக்கு வெற்றி. இச்செய்தியைக் காவி வந்த என் நண்பனின் வாடிய முகம் பார்க்க பாவமாகத்தான் இருந்தது. என்னை விட அதிக தடவைகள் அவன் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாய் உணர்கின்றானா? அல்லது பிரிவுத்துயரா?

ஊட்டி வளர்த்த அம்மா, ஓடி விளையாடிய கடற்கரை மணல், அறிவூட்டி இன்று யுத்த அழிவுச் சின்னமாய் மிளிரும் எனது பாடசாலை.... எப்படி இவை எல்லாவற்றையும் விட்டுப்போக உன்னால் முடிகிறது என வெளியிலிருந்து நீங்கள் தொடுக்கும் ஒவ்வொரு அறிவார்ந்த வினாக்களும் எனது காதுகளுக்கு கேட்கின்றது. எல்லோரையும் போல கடல் தாண்டி வேலை கிடைத்ததும் பணம் அனுப்புகின்றேன் என சொல்லமாட்டேன். ஆனால், இவைகளுக்காகத்தான் போகின்றேன்; என்னை நம்புங்கள்.

நேற்று வரை 'விசா' பெற்று ஒவ்வொரு தோழர்களும் விடை பெறுகின்ற போதும் பொறாமைப்பட்டேன்; பிரிவுத்துயர் தாங்காது கலங்கினேன். இன்று அந்தப் பாத்திரத்தை தாங்கும் உங்களுக்கு என்னால் என்ன கூற முடியும்?

தோழர்களே... இது ஒரு அமாவாசை இரவு... காதுகளைக் கூர்மையாக்கிக் கொள்ளுங்கள். ஆழ்கடலில் உலகதிரும் வெடியோசை... அது என் பயணச்செய்தியை சொல்லிச் செல்லும்...!

Sunday, March 30, 2008

ஓரிரண்டு மாதம் உருண்டோடி விட்டால்..


காலை உணவு உண்ணும் போது ..
அவளுக்கும் எனக்கும் ஆறேழு கதிரை
இடைவெளி இருந்தாலும்
ஆனந்தத்தில் நிறைந்தது என் மனது.

இன்னும் ஓரிரண்டு மாதங்கள்
உருண்டோடிவிட்டால் ..
பல்கலைகழக வாழ்க்கைக்குப்
பதவி இழப்பு - அவளுக்கு
இன்னும் ஒருவருடம் மிச்சம்.

காலம் தாழ்த்தாமல் காதல்
சொல்வோம் என்று காலடி வைக்க..
விட்டில் பூச்சிக் காதலடா ,விட்டுவிடு
என்கின்றது என் சகபாடி.

இன்னும் ஒரிரண்டு மாதம்..
காலைப்பொழுது , கன்டீன் ...
சுகந்தமாக இருக்கும் என்பொழுதுகள்
-பிறை

என்ன கொடுமை சார் இது?

நான் YouTube இல் அலைந்தபோது இந்த வீடியோவை பார்த்து வயிறு புண்ணாகிவிட்டது. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகமும். இந்த வீடியோவை ஒலி வசதிகளுடன் கேட்டபதே நல்லது. இறுதியில் வரும் சூப்பர்ஸ்ராரின் முகபாவத்தை வடிவா பாருங்கோ.

Saturday, March 29, 2008

கொழும்பு பல்கலைக்கழகம்- கேவலத்தின் சாட்சி.

கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான-கணனி பீட மாணவர்கள் சில மாதங்களுக்கு முன்பு திரைப்படம் ஒன்றை தயாரித்துத் திரையிட்டிருந்தார்கள். அது தொடர்பாக சில குறிப்புகளை வரையலாம் என்ற எண்ணம் இருந்த போதிலும் பொதுத்தளத்தில் கேவலமான விடயங்களை காட்சிப்படுத்துவதின் காரண்மாக அவை இன்னுமின்னும் வேகமான பரவலுக்குள்ளாகி தீய அதிர்வுகளை உண்டாக்க கூடும் என்ற பயத்தின் காரணமாக இது பற்றிப் பேசுவதில்லை என்ற நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளானோம். ஆயினும் ஒரு சில வாரங்களில் அது தொடர்பான விடயம் ஒன்றை வீரகேசரியில் கண்ட போதும் எதிர்வினையாற்ற எண்ண்யிருந்தோம். ஆயினும் அதனையும் தவிர்க்க வேண்டியதாகிவிட்டது.

இன்று இணையத்தில் இத்திரைப்படத்தை முன்வைத்து ஊரோடி பகீ பிச்சை எடுக்க முற்படுகின்ற இவ்வேளையில் இது தொடர்பாக எதிர்வினையாற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்க்குத் தள்ளப்படவேண்டியதாயிற்று. கொழும்பு பல்கலைக்கழகம் நூற்றாண்டுகால சிறப்பை தன்னகத்தே கொண்டது. நூற்றுக்கணக்கான சமூக ஆய்வாளர்கள், சட்ட வல்லுநர்கள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்களை உருவாக்கிய பெருமை பெற்றது. சமூகத்தளத்தில் கொழும்பு பலகலைக்கழகத்தின் மிகப்பெரியது. பல்வேறுவகையான சமூக ஆர்வலர்களை உற்பத்திக்களமாகவும் விளங்கியது.இலங்கையில் மார்க்சிய இயக்கங்களில் ஆரம்பித்து போராட்ட இயக்கங்கள் வரை கொழும்பு பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் காலத்தின் சாட்சியாக இருந்தார்கள்.

ஈழத்தின் புதுக்கவிதை முன்னோடி முருகையன் இது பற்றி அழகாகச் சொல்லுவார். தாங்கள் கொழும்பு பல்கலைக்கழகத்தில் படித்த காலங்களில் மேற்கொண்ட கலந்துரையாடல்கள் மற்றும் செயற்பாட்டு இயக்கங்கள் பற்றிய விடயங்களை. அப்போது கொழும்பு பல்கலைக்கழகம் இலங்கைப் பல்கலைக்கழகம் என்ற பெயருடன் இருந்தது. அதன் பின்னர் ஜே.வி.பி புரட்சி மையம் கொண்ட 70 களில் கொழும்பு பல்கலைக்கழகத்தை மையமாக வைத்து பல விதமான புரட்சிகர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் கணிசமான அளவினர் தமிழ் மாணவர்களே. ஆரம்பத்தில் கருத்தியல் அளவில் உள்வாங்கப்பட்ட மார்க்சியம் பின்னர் பல்கலைக்கழகங்களை முன்வைத்து புரட்சிகர செயற்பாட்டு இயக்கங்களாக வளர்ச்சி பெற்றது. அவ்வகையில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பங்கு முக்கியமானது. அதிலும் கொழும்பு பல்கலைக்கழக சட்டபீடம் இது தொடர்பாக பரந்த அளவில் தன்னை ஈடுபடுத்தியதும் அதில் தமிழர்கள் கணிசமான அளவானோர் என்பதும் வரலாறு.

தமிழ்த்தேசியம் எழுச்சி பெற்ற காலங்களில் கொழும்பு பல்கலைக்கழகத்தில் அவை தொடர்பான கலந்துரையாடல்கள் பல்வேறுவகைப்பட்ட மாணவர்களால் மேற்கொள்ளப்பட்டன. தெற்கில் இருந்த மாணவர்கள் வடக்கில் இருந்த மாணவர்களுடன் தொடர்ச்சியாக தொடர்புகளைப் பேணி அவை தொடர்பாக தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்கள். சிலர் தம்மை போராளிகளாக இணைத்துக் கொண்டு போராட்டத்தில் நேரடியாகவே பங்குபற்றினர். புளொட் இயக்கத்தின் உள்விவகாரங்களை வெளிக்கொணர்ந்த ஈழத்தின் முக்கியமான அரசியல் படைப்பான புதியதோர் உலகம் என்பதை எழுதியவர் பிற்காலத்தில் கோவிந்தன் என அறியப்பட்ட நோபேட் கொழும்பு பல்கலைக்கழக மாணவனே. புதியதோர் உலகம் முன்னுரையில் இருந்து சில விடயங்கள்.. ...இவர் தனது ஆரம்பக் கல்வியை திருகோணமலை புனிதவளனார் தமிழ் வித்தியாலயத்தில் முடித்தார். இடைநிலை கல்வியை திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியிலும், உயர்கல்வியை திருகோணமலை இந்துக் கல்லூரியிலும் முடித்தார். கொழும்பு பல்கலைக் கழகத்தில் கலைப் பிரிவில் பட்டப்படிப்பை மேற்கொண்டார். அக் காலத்தில் மாணவர் அமைப்புகளில் தீவிரமாக பங்கெடுத்தார். மார்க்சியக் கருத்துகளில் ஈடுபாடு செலுத்தினார். பல்கலைகழக வாழ்வில் பல்வேறு இடதுசாரிக் குழுக்கள், அமைப்புகளுடன் இணைந்து செயற்பட்டார்...

தமிழ்த்தேசிய எழுச்சியின் பிற்பட்ட காலங்களிலும் கோவிந்தன் போன்று புலிகள் அமைப்பிலும் பல கொழும்புப் பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து வேலை செய்தனர். இயக்க அரசியலில் ஈடுபட விருப்பமற்ற மாணவர்கள் அது தவிர்த்து சமூக அபிவிருத்தி இயக்கங்க்ளில் ஈடுபட்டனர். ஆயினும் 90 களின் பிற்பகுதி தெற்கில் வாழும் மாணவர்களை இன அடையாளம் சார்ந்து செயற்பட முடியாத நிலமைக்கு உள்ளாக்கியது. சமூகம் சார்ந்து செயற்பட முடியாத நிலைக்கும் இன ஒடுக்குதலுக்கு உள்ளாகிய மாணவர்கள் தம்மால் இயன்றவரை தமது அடையாளம் சார்ந்த பிரக்ஞையின் காரணாமாக அடையாள பேணுகையை மேற்கொண்டனர். தமிழ்விழா போன்ற பல்கலைக்கழக நிகழ்ச்சிகள் ஊடாக தமது குறைந்தபட்சமான குரலை ஒலிக்கச்செய்தனர். மொரட்டுவ பல்கலைக்க்ழகம், பேராதனிய பல்கலைக்கழகம், கொழும்பு பல்கலைக்ழகம் மற்றும் சப்பிரகமுவ பல்கலைக்கழகம் போன்றவை இவற்றில் முக்கியமானவை. முக்கியமாக நாடகங்கள் மூலமாக தமது ஈனக்குரலை வெளிப்படுத்துவதில் வெற்றிபெற்றனர். சில வருடங்களுக்கு முன்னர் மொரட்டுவ பல்கலைக்கழகம் தமது வருடாந்த கலைநிகழ்ச்சியூடாக டக்ளஸ் தேவானந்த அவர்களை கடுமையாக வசைபாடியது. கேலியான நடிப்பினூடாக மாணவரொருவர் அருமையாக அதனை வெளிப்படுத்தியிருந்தார்.

கொழும்பைத் தளமாகக் கொண்ட பல்கலைக்கழகத்தில் அரசியல் சார்ந்து இயங்குவதன் கடினத்தை நாம் அறிவோம். ஆயினும் எங்கிருந்தாவாது வரும் ஒரு சில குரல்களுக்காவது எமது ஆதரவை எழுத்து மூலமாகவாவது தெரிவிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.கொழும்பு பல்கலைக்கழகமும் தமது வருடாந்த நிகழ்ச்சிகளை இவ்வாறான முறையில் தொடர்ச்சியாக செய்து வந்தது. வடக்கு கிழக்கில் நடைபெறும் யுத்தத்தினால் ஏற்படும் துயரங்களை வடக்கு கிழக்குக்கு வெளியேயும் தம்மால் இயன்ற அளவில் பதிவுசெய்தனர். மற்றும் வர்த்தக நோக்கில் பொதுப்புத்தியை அவமதிக்கும் நோக்கில் தயாரிக்கப்டும் சினிமா மற்றும் நாடகம் போன்ற்வற்றிற்கு மத்தியிலும் மக்கள் நலன் சார்ந்த கருத்தியலை வலுப்படுத்தும் நோக்கிலான படப்புக்கள் இன்றும் அழிந்து போகாமல் இருக்கின்றன என்பதற்குச் சாட்சியாக பல்கலைக்கழகங்களில் நடைபெறும் சில நிகழ்ச்சிகளைச் சொல்லலாம். இறுதியாக கொழும்பு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கூத்து பற்றியதான நிகழ்ச்சி ஒன்றைப் பார்த்த வேளை கலை தொடர்பாக மாணவர்களிடத்தில் எஞ்சியிருக்கும் நினைவுகள் நம்பிக்கையளிக்க கூடியவை என்ற எண்ணம் ஏற்பட்டது. அயினும் அதன் பின்னர் ஒரு குழுவினர் தென்னிந்திய சினிமாப் பாணியில் ஒரு நிகழ்ச்சியை அரங்கேற்றினர். பாலியலை மையாமாக்கிய ஆணாதிக்க சொல்லாடல்களினூடான பகிடிகள் மூலம் பகிரங்கமான மேடையில் மாணவ சமூகத்தால் அரங்கேற்றப்பட்டது. அவர்கள் தமது அசைவுகளையும் சொற்களையும் வர்த்தக சினிமாவில் இருந்து பெற்றுக்கொண்டனர். பார்வையாளர்களை அவமதிக்கும் வகையில் அமைந்த வகையிலானதாக அவர்களின் வெளிப்படுதிறன் அமைந்திருந்தது. இம்மாணவர்கள் கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான-கணனி பீட மாணவர்கள் என அறியக்கிடைத்தது. அதன் பின், நடந்த இன்னுமொரு விழாவில் திரைப்படம் ஒன்று மாணவர்களால் காட்சிப்படுத்தப்பட்டது. முந்தய விழாவைக் கேவலப்படுத்திய அதே குழுவினராலேயே இம்முறை இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டு திரையிடப்பட்டதாக அறிந்தோம். அக்குழுவினர் வழமையாக இதேவிதமான நாடகங்களை மேடையேற்றுவதாகவும் அதன் உச்சக்கட்டம் தான் இத்திரைப்படம் எனவும் அறியக்கிடைத்தது. இங்கு மாணவரின் கேளிக்கை உணர்வினை விமர்சிப்பது எமது நோக்கமல்ல. ஆயினும் வர்த்தக நோக்கிலான கலைவடிவங்களே மக்கள் சார்பானவை மக்களுக்கானவை சமூக மயமானவை சமூக யதார்த்ததளத்தில் அமையப்பெற்றவை எனும் மாயை கட்டமைக்கப்படுவதையும் அதன் தொடர்ச்சியான போக்கிலான அபாயத்தினையும் சுட்டிக்காட்டுவதே எமது நோக்கமாகின்றது. தென்னிந்திய சினிமா வின் நேரடியான தாக்கத்துக்கு உட்பட்ட கேவலமான சமூகக்குழு ஒன்றிடம் இருந்து இதற்கு மேல் எதிர்பார்ப்பது தவறென்பது விளங்கியதாலேயே இவ்விடயம் பற்றி நாம் அதிகம் அக்கறை எடுக்கவில்லை. இக்குழுவைச் சேர்ந்தவர்கள் 3 ஆம் வருட மாணவர்களாவார்கள். இதற்கு முந்தைய பிரிவினர் இவ்வாறு நடந்து கொள்ளக்கூடியவர்கள் அல்ல என சிரேஸ்ட மாணவர்கள் தரப்பில் தெரிவீக்கப்பட்டது. ஆயினும் இம்மாணவ குழுவுக்கு கீழே புதிதாக அனுமதிக்கப்படும் மாணவர்களையும் இவ்வாறான மனநிலை தயாரிப்புக்கு இம்மாணவ குழு உட்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டது. இப்பிரிவைச் சேர்ந்த பல மாணவர்களின் விருப்பமின்றி ஒரு சிலரே இவ்வாறான விடயங்களில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இத்திரைப்படம் அடுத்த பிரிவு மாணவர்களில் ஒரு பகுதியினரது ஒத்துழைப்புடன் கூட்டாகவே எடுக்கப்பட்டதாக அறிகின்றோம். தமிழ்மணம் வாசகர்களே,நீங்கள் இப்படத்துண்டைப் பார்த்திருப்பீர்கள். இதிலிருந்து இத்திரைப்படம் பற்றியும் இதன் தயாரிப்பாளர்கள் பறியுமான ஊகம் ஒன்றிற்கு வந்திருப்பீர்கள். ஒவ்வொரு நாளும் உயிர்கள் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பூமியில் இருந்து இவ்வாறான திரைப்படம் ஒன்று தயாரிக்கப்பட்டதை நினைத்து நீங்கள் வருத்தப்படக்கூடும். அதுவும் வியாபார நோக்கத்திற்காக அன்றி மாணவர் குழு ஒன்று இவ்வாறான கேவலமான திரைப்படம் ஒன்றை தயாரித்து தமது கேவலமான மனநிலையையும் சமூக அக்கறையையும் எல்லோருக்கும் வெளிக்காட்டி உள்ளார்கள். இத்திரைப்படம் தொடர்பாக உதவும் எண்ணமுள்ளோர் உங்கள் எண்ணத்தை மாற்றி இவ்வாறான மோசமான திரைப்படங்கள் இனிமேலும் வராமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். நீங்கள் உதவுமிடத்து நாளை இதுவே தவறான முன்னுதாரணமாகி பல்வேறு திரைப்படங்களின் வருகையைச் சாத்தியமாக்கிவிடக்கூடும். நீங்கள் வழங்க நினைக்கும் பணத்தை வேறு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு வழங்குவதன் மூலம் உங்களது நல்லெண்ணத்தை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான-கணனி பீட தமிழ்ச்சமூகத்திற்கு, இவ்வாறான நடவடிக்கைகளுக்கு உங்களது பூரண ஒத்துழைப்பு இருக்கின்றதா? இவ்வகையான விடயங்களை நீங்கள் ஆதரிக்கின்றீர்களா என்பதை தெரியப்படுத்துமாறு வேண்டுகின்றோம். பல்கலைக்கழகங்க வளாகங்களுக்குள் நடைபெறும் விடயங்கள் பொதுச்சமூக வெளிக்கு வரும்போது அது தீவிர விமர்சனத்துக்கு உட்படுத்தப்படும். நீங்கள் பொது வெளியில் இவ்வாறானதொரு விடயத்தை அனுமதிப்பதன் மூலம் சமூக பொதுவெளியில் உங்களது நற்பெயரை இழக்கின்றீர்கள். இது தொடர்பாக உங்களது கருத்தைத் தெரியப்படுத்துமாறு வேண்டுகின்றோம்.

கிரிக்கெட்டும் மட்டம் தட்டப்படுதலும்.......

இப்பெல்லாம் ofiice போறதால cricket match live ஆக பார்க்க time கிடைப்பதில்லை(என்ன சொல்ல வாரன் என்டா நான் இப்ப வெட்டியாக இல்லை வேலைக்கு எல்லாம் போக தொடங்கிட்டன் :) lol),இப்படித்தான் இன்று office முடிஞ்சு வந்து neo sports போட்டு பார்த்தா வளவள மொகிர்ந்தர் அமர்நாத் சொல்லிக்கொண்டு இருந்தார் செவக் fastest 300 in test cricket அடிச்சுட்டான் என்டு,கொஞ்ச நேரம் பார்த்தன் வள வள அமர்நாத் கதைகிறத நிறுத்தல,எவ்வளவு அடிச்சது என்டும் சொல்லல so cricinfo க்கு போய் score பார்த்தன்,ம்ம்ம்ம் சும்மா சொல்லக்கூடாது நல்லாத்தான் செவாக் அடிச்சுருந்தான்.இனி விசயத்துக்கு போவம்

எல்லா துறைகளிலும் மட்டம் தட்டப்படுபவர்கள் வெகுண்டு எழவது வழக்கம்,ஆனால் விளையாட்டுத்துறையில் அதன் பரிமாணம் வித்தியாசமானதாகவும் சதானைகளை நோக்கியதாகவும் இருக்கும் ,அதே தான் செவக் விசயத்திலும் இன்று அரங்கேறியுள்லது.இதே செவக் 2 மாதங்களுக்கு முன் water boya செயற்ப்பட்ட முன்னால் சாதனையாளர்.நேற்று செவக் இன்று ராவிட் நாளை?????சமீபத்தில் இதே போன்று கெய்டனும் வெகுண்டு எழுந்தது ஞபகம் இருக்கும் எல்லோருக்கும்,ஆனால் என்னைப்பொறுத்த வகையில் கிரிக்கெட்டில் மட்டம் தட்டப்படுவது உழல் நிறைந்த தெற்காசிய நாடுகளான இந்தியா,இலங்கை,பாகிஸ்தான்,பங்களாதேஸ் இல் தான் கூடுதலாக நடைபெறுகின்றது,காரணம்???? உழல் நிறைந்த நாடுகளின் selectorக்கு தான் தெரியும்.(நான் இங்கே selctors லஞ்சம் வாங்கினம் என்று ஒரு வார்த்தை பிரயோகம் கூட பாவிக்கவில்லை so என் மேல் வழக்கோ பினூட்டல் மூலம் காட்டமான பதிலோ அனுப்பமுடியாது:))

மட்டம் தட்டப்பட்டதால் எத்தனை திறமையான வீரர்கள் ஓய்வு பெற்றுவிட்டனர்?????இது நல்ல ஒரு கிரிக்கட் எதிர்காலத்துக்கு உகந்தது அல்ல என்பது என்னுடைய தாழ்மயான கருத்து,சென்ற வாரம் கூட திரஸ்கொத்திக் ஓய்வு என்பது கிரிக்கெட்டை கிரிக்கெட்டாக பார்க்கும் எனக்கு அதிர்சியளித்தது:(காரணம்?????இங்கிலாந்தில் கூடவா????? "கடந்த 2 ஆண்டுகள் மன அழுதத்தினால் அவதிப்பட திரஸ்கொத்திக் ஓய்வு" இது செய்தி மட்டம் தட்டப்பட்டதால் ஏற்ப்பட்ட மன அழுத்தமா????(கிரேசி மோகன் வசூல் ராஜா mbbs ல சொல்லுற மாதிரி) how do i know sir?????? Any how கிரிக்கெட்டில் மட்டம் தட்டுபடுதாலால் சாதனைகளும் இதே போன்று சோதனைகளும் அரங்கேறுகின்றன............

Friday, March 28, 2008

மௌனம்

நீ சொல்லாமல் மறைக்கிறாய்
நான் சொல்ல முயன்று தோற்கிறேன்
கண்ணீரோடு காதல்

Thursday, March 27, 2008

குர்-ஆன் ஒரு முன்னோட்டம் (Miracle of Qur'an)

இஸ்லாமியர்களின் வேதனூல் குர்-ஆன் பற்றி அனைவரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இன்றைக்கு 1420 ஆண்டுகளுக்கு முன் முஹம்மது நபி (ஸல் அலை) அவர்கள் மூலமாக அல்லஹ்வினால் அவன் புறத்தில் இருந்து இறக்கப்பட்டது( "Quran is a word of god not a word of man"). இது எந்த அளவுக்கு உண்மையாய் இருக்கும் என்று அனைவருக்குமே ஒரு கேள்வி வருவது உண்மைதான். அது பற்றி விபரிக்கவே இப்போது இந்த பதிவினை மேற்கொள்கிறேன்.

குர்-ஆனைப் பொறுத்தவரை அனைத்து விடயங்கள் பற்றியும் அழகாகவே சொல்லப்பட்டுள்ளது. வாணியல், Biological, Physics, Geographical என்று விஞ்ஞானம் தொடர்பாக மட்டுமின்றி சமூகம் கலாசாரம் என்று பொதுவாழ்வியல் பற்றியும் தெளிவாகவே சொல்லப்பட்டுள்ளது.

இன்றைய பொழுது வானியல் பற்றி குர்-ஆனில் எவ்வாறு கூறப்பட்டுள்ளது என்று நோக்குகிறேன்.(நேரம் கிடைக்கும் போது மற்றய விடயங்கள் பற்றியும் பதிகிறேன்).

வானியலை கருத்தில் கொள்கையில் Orbits பற்றி பேசாமல் இருக்க முடியாதில்லயா? Orbits பற்றிய சில ஆதாரபூர்வமான விளக்கங்களும் அதற்கான Qur'an என்ன கூறுகிறது என்று நோக்குவோமா?

Surah 21 - Al Anbiya
verses: 33. It is He Who created the Night and the Day, and the sun and the moon: all (the celestial bodies) swim along, each in its rounded course(in a certain orbits).

இனி விஞ்ஞான ரீதியாக பார்க்கையில் சூரியன், பூமி, கோள்கள் அனைத்துமே ஒரு குறிப்பிட்ட Orbits யில் வலம் வருவது நிரூபிக்க பட்டுள்ளது. அனைத்து கோள்களுக்கும் தனித்தனி Orbits காணப்பதுகிறது, அவை தமது பாதையில் அசைந்து கொண்டிருக்கிறது. இதை விட முக்கியமான ஒரு விடயம் எனனை ஆச்சரியத்தில் தள்ளியது. சூரியன் நிலையான ஒரு இடத்தில் இல்லாமல் குறிப்பிட்ட Orbits யில் அசைந்து கொண்டிருக்கிறது எனபதே. இதனை விட ஆச்சரியபடும் விடயம் என்னவெனில் சூரியனின் வேகம் Normally 725Km/h. அதாவது ஒருநாளைக்கு அது பயணிக்கும் தூரம் 17,280,000Km/day. இது New physics Technology மூலம் நிரூபிக்க பட்ட ஒன்று. சூரியனின் Gravitational force காரணமாக அதனை சார்ந்துள்ள கோள்கள், அவற்றின் துணைக்கிரகங்கள் அசைகின்றன.

Surah 36 - Ya Sin
Verses: 38. And the sun runs his course for a period determined for him: that is the decree of (Him), the Exalted in Might, the All-Knowing.

Surah 51 - Al Dhariyat
Verses: 7. By the Sky with (its) numerous Paths.

200billion galaxy in the universe, 200billion stars in each most of the star has planet, most planet has satelite.
All are moving in certain Orbit. Millions of years each swim alone in an orbit Perfect harmony in an order. All galaxy not touching each other.

இது Qur'an வசனம். 1400 வருடங்களுக்கு முன் new Knowledge of physics or astronomy எதுவுமே இல்லாத நேரத்தில் இத்தனை துல்லியமான விடயங்களை சொல்வது என்பது Miracle தான்.

Because Qur'an is Word of God. Orginator Knows everything.

தொடர்ந்து இன்னும் பல சுவாரசியமான விடயங்களை பதிவிடுகிறேன்...(எல்லாம் படித்து ரசித்தவைதான்! :))

Reference:
www.harunyahya.org

Wednesday, March 26, 2008

வணக்கம்

எல்லோருக்கும் வணக்கம்
நான் அபிமன்யு
இதோ எனது சிறு கிறுக்கல்

வறுமையின் நிறம் சிவப்பு

புது வருடம் சிவப்பு மற்றும் பச்சையில் பிறக்குதாம்.....
முதலாளியம்மா மனமுவந்து தரும் பாவித்த உடுப்புகளில் இருந்தால் எனக்கும்.....
சிவப்பு எமக்கு சொந்தமான நிறம்... பச்சைக்கு எங்கே போவது?


நான் காதலித்ததால்...........

கவிதை எழுத தொடங்கினேன்
நான் காதலித்ததால்

இளையராஜாவின் குரல் பிடிக்காமல் போனது
நான் காதலித்ததால்

குறுஞ்செய்தி அனுப்புவதில் விண்ணணாணேன்
நான் காதலித்ததால்

தட்டச்சு வேகம் கூடியது கணணி உரையாடல் மூலம்
நான் காதலித்ததால்

பொண்களிடம் கூச்சம் இன்றி பேசத்தொடங்கினேன்
நான் காதலித்ததால்

ஆகமொத்ததில் இன்பதின் வலி உணர்ந்தேன்
நான் காதலித்ததால்

Tuesday, March 25, 2008

FaceBook vs Hi5

சாப்ட்வேர் துறையில் வேலை செய்து கொண்டு Officeல வேலை ஒரே bore அடிக்குது ஒருக்கா facebook or Hi5 பக்கம் போய் பார்போம் என்டு நீங்க நினைக்கிற ஆள் இல்லையோ நீங்கள்.அப்படி இல்லை என்றால் நீங்கள் இந்த துறைக்கு பொருத்தம் அற்றவர் என்று கருதப்படுவீர்கள் இல்லாவிடின் நீங்கள் போன generation ஆளா இருப்பீங்க என்டு நினைக்கிறன்(இதை படிச்சுடாவது இப்பவே போய் facebook,hi5 or any social network account திறவுங்கோ இல்லாடி உங்களுக்கு தான் நோண்டி(என்னடா நோண்டி புது வார்தை என்டு யோசிக்காதிங்க கொழும்பு தமிழர்களால் அவமானத்திற்கு பதிலாக பாவிக்கப்படும் ஒரு வார்த்தை பிரயோகம் ;)lol))ok விசயத்துக்கு போவம் வாங்கோ(இந்த எவனோ ஒருவனுக்கு இதே வேலையா போச்சு எப்ப பார்தாலும் சின்ன விசயம் ஒன்டு சொல்லுறத்துக்கு சும்மா பெரிசா build up கொடுப்பாரு என்டு நீங்க மனசுக்க திட்டுறது விளங்குது.pls இந்த மொக்கஎல்லாம் பொறுத்துக்ககொண்டு பதிவை மேலும் படியுங்க :)lol)

நான் இந்த பதிவை எழுத வெளிக்கிட்டது ஏன் என்டா இப்படி தான் அன்டைக்கு ஒரு நாள் சும்மா பொழுது போகல என்டு கதைத்துக்கொண்டு இருக்கக்க ஒரு நாண்பன் மச்சான் இப்ப எல்லாம் Hi5 விழுந்துட்டு என்னடா facebook சும்மா சக்கையா இருக்கு பார்தியோ என்டு கேட்டான் ,so ஏன் நாம இதைப்பற்றி நம்மட பூங்காவுக்கு போய் கதைக்க கூடாது என்டு யோசிச்சதன் விளைவே இந்த பதிவு(நாமக்கு பதிவு எழுதுறத்துக்கு ஒரு தலைப்பு கொடுத்ததுக்கு மாப்பிள்ளைக்கு நன்றி:)lol).இந்த ஆக்கத்தில் வரும் கருத்து பரிமாற்றங்கள் என்னுடைய சிற்றறிவுக்கு உட்பட்டவையும் நானும் என்னுடைய நண்பர் குலாமும் பாவிக்கின்ற Facebook மற்றும் Hi5 க்கு இடையிலான வேறுபாடுகளைப்பற்றிய எனது தனிப்பட்ட கருத்துக்களே.(பின்னூட்டலில் facebook,hi5 தவிர உங்களுக்கு வேற social network தெரியாதா? என்று லொள்ளு தனமாக கேட்க்கும் கனவான்களுக்காகவே இந்த அவையடக்கம்,ஆம் நான் ஒத்துக்கொள்கின்றன் facebook,hi5 விட சிறந்த பல social networks இருக்கு.ஆனால் தெற்காசிய நாடுகளை பொறுத்த வரைக்கும் facebook,hi5 சற்று பிரபலம் என்பது என்னுடைய கருத்து,நீங்க என்ன சொல்லுறீங்க????)

facebook கண்டுள்ள அசுர வளர்ச்சி microsoftக்கே பிடிக்கல என்டா பார்த்துக்கொள்ளுங்களேன்(இந்த வீணா போன microsoft யாரைப்பார்த்து தான் புகையாம இருந்துருக்காங்கள்)so நான் எதுக்கு support பண்ணி இந்த பதிவை தொடரப்போறன் என்டு உங்களுக்கு விளங்கியிருக்கும் தானே:).Technical wise ஆக பார்த்திங்கள் என்றால் hi5 sturts ல develop பண்ணியிருக்காங்கள் facebook php ல develop பண்ணியிருக்காங்கள்.எதில் develop பண்ணினால் என்ன எங்களுக்கு privacy+entertainment எதில் கூட கிடைக்குதோ அதுதானே நமக்கு பிடிக்கும்:)என்ன பொறுத்த வரைக்கும் இரண்டுமே facebookல hi5 விட மிகவும் கூடுதலாக கிடைக்கின்றது(மிகவும் என்றதை underline பண்ணிக்கொள்ளுங்க:)lol).எனக்கு என்னமோ hi5 கொஞ்சம் கொஞ்சமாக facebookக follow பண்ணுது என்று தோன்றுகின்றது(copy என்னும் வார்த்தை சற்று காட்டமானதாக இருக்கும் என்பதால் பாவிக்கவில்லை மற்றும் இந்த பதிவை hi5 owners படிச்சுட்டு மான நஷ்ட வழக்கு போட்டால் நான் எங்கு போவது:)lol)Facebook பல applications ஜ தன்னகதே கொண்டுள்ளது என்பதை facebook அபிமானிகளுக்கு தெரியும் (friend for sale application சொம ஜோரா இருக்காம்? try பண்ணி பார்த்தனிங்களோ)அது போன்று hi5 இல் ஏதும் உண்டோ?(hi5 அபிமானிகளே பின்னூட்டல் மூலம் உங்களின் காட்டமான பதிலடிகள் எதிர்பார்க்கபடுகின்றது)

ஆனால் technical wise ஆக facebook portal tecnology ஜ பாவித்திருப்பதும் facebook என்னை கவர்ந்திருப்பதற்கான் முக்கிய காரணம்.(உண்மையா சொல்லுறன் சொம சொக்கா இருக்கப்பா)இதில் ஆச்சரியப்படும் இன்னோரு விடயம் facebook ownerக்கு நம்மட வயதாமே(நாமலும் இருகிறமே வெட்டியா blog வசிச்சுக்கொண்டு(உங்கள தான் சொல்லுறன் :)lol) வெட்டியா blog எழுதிக்கொண்டு(என்னை தான் சொல்லுறன் :)lol))இப்படி facebookக பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்,so உங்களிடம் facebook account இல்லையா?இன்றே தொடங்குங்கள் ஒரு facebook account இங்கே சொடுக்குவதன் மூலம் www.facebook.com (நான் ஒன்றும் facebook க்கு விளம்பரம் பண்ணல,இதன் மூலம் ஒரு பூங்கா வாசகனாவது facebook account திறந்து நான் பெற்ற இன்பம் பெறுக அந்த வாசகன்)

எரிச்சல்

தேவயானவர்களை
தேவயற்ற நேரத்தில் பார்க்கும் போது
ஏற்படும் உஷ்ண பிரசவம்...!

Friday, March 21, 2008

கிடைக்காத ஒன்று

இன்று அவனது மேற்படிப்பை முடித்துக்கொண்ட பயணம் வீடு நோக்கியதாக இருந்தது. லீவு கிடைக்காத உயர்கல்வி, ஒப்படைகள், பயிற்சிகள், பரீட்சைகள், தோல்விகள், மரணத்துடனான உறவாடல்கள்... அத்தனையும் 2004ம் ஆண்டு வீட்டை விட்டு புறப்பட்டவனை புடம் போட்டு வழியனுப்பி வைத்திருக்கின்றன. இன்று சொந்த ஊரிலேயே பணியாற்ற அடம்பிடித்து அனுமதி பெற்ற மகிழ்ச்சி அவனது முகத்தில்... நேரம் காட்ட மணிக்கூடு மறுத்த போதும், மனதில் கணக்கிட்டுக் கொண்டான் இன்னும் ஐந்தே ஐந்து நிமிடங்கள் மட்டும் போதுமாக இருந்தது நான்கு வருடமாக எட்டாத தாயன்பில் திளைப்பதற்கு...

*****

நடு நிசியில் வேட்டுச் சத்தங்களின் தொடராக எழுந்த பாரிய வெடிப்பொலி... நாய்களின் மரண ஓலங்கள்... எதுவும் புதிய நிகழ்வுகளாக இவளுக்கு தோன்றவில்லை. வழமையான காரியங்களாயினும், திடீரென முளைத்த விக்கலுக்குப் பருக நீரெடுக்கச் செல்ல பயமாகத்தான் இருந்தது.
விடிந்தது... முதல் வேலையாக வழமை போன்று ஓடிச்சென்று பேப்பர் வாங்கினாள். இன்றும் இவளது மாவட்டத்தைச் சேர்ந்த ஐவரின் விபரங்கள். ம்... தேடியதொன்று கிடைக்காத மகிழ்ச்சியில் கடவுளுக்கு நன்றி சொன்னாள்.

Thursday, March 20, 2008

சபாஷ் சரியான கேள்வி

மூன்று மாததில் மூன்றாவது மொபைல் மாற்றிய
என்ன பார்த்துக்கேட்டாள் மொபைல் மட்டும் தானா?

Wednesday, March 19, 2008

Java vs C#

ஆஹா இவன் வேற தொடங்கிடான் என்று யோசிக்காதிங்க.தலைப்பு தான் Java vs C# தவிர இது ஒரு ஜாலியான பதிவு மட்டுமே.யாரும் serious ஆக படிக்க வெளிக்கிட்டு நோந்து போனால் நான் பொறுப்பில்லை :)

பல நாட்கள் பூங்கா பக்கம் போய் என்று யோசிச்சுக்கொண்டு பேரூந்து வண்டியில் இன்று வரும் போது ஒரு நண்பனை சந்தித்து அளவுலாவும் சந்தர்ப்பம் கிடைச்சுது.என்ன செய்யிற என்டு கேட்டான்,நானும் இப்பதான்டா ஒரு சாப்ட்வேர் கொம்பனில training க்கு போய்கொண்டிருக்கன் என்டு சொன்னேன்.நான் எதிர்பார்த்த மாதிரி அடுத்த கேள்விய கேட்டுடான்,என்ன கேள்வி என்றா யோசிக்கிறீங்க????நீங்க நினைக்கிற அதே கேள்விதான்:).மச்சான் project java or c# லயோ போகுது?.நான் training க்கு போக தொடங்கிய காலத்தில் இருந்து இந்த கேள்விய என்னுடய செவிகள் சுமார் 100 தடவைக்கு மேல் கேட்டிருக்கும்.இதைப்பற்றி ஏன் நம்முடைய பூங்காவில் கதைக்ககூடாது என்ற அவா தான் இந்த பதிவு.(
ஏன்டா நண்பர்களே java,c# தவிர வேற எதுலயும் project செய்ய முடியாதா?என்று கேட்கவேண்டும் என்று உதடுகள் துடித்தாலும் நான் மட்டும் என்ன யோக்கியனா?நானும் எனது நண்பர்களிடமும் இதே கேள்வியை தானே கேட்கிறன்:)lol)சரி சரி அலம்பினது போதும் விசயத்துக்கு வா என்று சொல்றது விளங்குது:).ம்ம்ம்ம்ம் விசயத்துக்கு போவமோ.

நீங்களே சொல்லுங்க காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சுதானே.அதேபோல் அவன் அவனுக்கு தான் வேலை செய்யும் மற்றும் தெரிந்த கணனி மொழியே அவனுக்கு கணனி தாய் மொழி(
என்ன உதாரணம் எல்லாம் செம மொக்கயா இருக்கா:)lol).என்ன கேட்டா தாய் மொழி போன்று ஒரு கணனி மொழியை தெரிந்து கொண்டு மற்ற எல்லா கணனி மொழிகளையும் உங்களின் இரண்டாம் மொழியாக கொண்டிருந்தால் நீங்கள் எங்கோ போய்டுவிங்க boss:).java இல் உள்ள நல்ல விடயங்களைப்போன்று C# இல் கூட பல நல்லவிடயங்கள் உள்ளன,இவை மட்டும் அல்ல மற்ற எல்லா கணனி மொழிகளும் தங்களுக்கே உரிய தனி தன்மை உடனேயே காணப்படுகின்றன.(ஆஹா ஜாதி கலவரம்,மொழி வெறி போன்று கணனி மொழிக்கலவரம் வந்தால் எப்படி இருக்க்ம்:(lol.இந்த உலகம் தாங்குமாடா சாமி).ஆனால் C என்ற பெரும்பாலான கணணி மொழிகளின் தாய் மொழி தெரிந்தால் C யின் பிள்ளைகளை புரிதலில் சிரமம் இருக்காது என்பது என்னுடைய தாழ்மையான் கருத்து.(நீங்க என்ன் சொல்லுரீங்க :))

நான் இந்த துறையில் இப்போது தான் காலடி எடுத்து வைக்கிறன் என்ற காரணத்தால் ஏதவது ஒரு மொழியைப்பற்றி சொல்ல வெளிக்கிட்டு வேண்டிக்கட்ட தயார் இல்லை:).அனுபவம் மற்றும் தங்களுடைய கணனி தாய் மொழியில் நான்கு தேர்ச்சி பெற்றவர்களும் பின்னூட்டல்கள் மூலம் தெரிவித்தால் பூங்காவிற்க்கு இளைப்பாற வருபவர்களுக்கு பேருதவியாக இருக்க்ம் என கேட்டுகொள்ளும் java வை தாய் மொழியாக கொண்டும் C யை மறந்தவனுமாகிய எவனே ஒருவன்............

உன் நினைவில்

பழைய உன் Photo பார்த்தபோதுதான்
காலத்தின் வேகமும் அதனால் கழுவிச்சென்ற
நிஜங்களும் மனதை தொடுகிறது..!

Wednesday, March 12, 2008

நீ ஒரு கடவுள்

இயேசுபிரான் சாவிலிருந்து உயிர்த்தெழுந்தான்
ஒரேயொரு தடவை!
ஆனால்....
கதிரைகள் மாறுகின்ற ஒவ்வொரு தடவையும்
நீ சாகடிக்கப்படுகிறாய் - ஒரு
உயிர்த்தெழுகைக்காக....

Monday, March 10, 2008

இன்று வாக்கெடுப்பு....!

முண்டங்களாய் கண்டெடுக்கப்படும் எங்களுக்கு
கொள்ளி வைக்கும் உரிமை வென்ற
கொலைகாரக்கும்பல் யார்...?
ஒரு நாள் பொறுத்திருங்கள்...
நாளை தேர்தல் முடிவு!!!