Wednesday, March 12, 2008

நீ ஒரு கடவுள்

இயேசுபிரான் சாவிலிருந்து உயிர்த்தெழுந்தான்
ஒரேயொரு தடவை!
ஆனால்....
கதிரைகள் மாறுகின்ற ஒவ்வொரு தடவையும்
நீ சாகடிக்கப்படுகிறாய் - ஒரு
உயிர்த்தெழுகைக்காக....

5 பின்னூட்டங்கள்:

எவனோ ஒருவன் said...

அருமை நண்பரே அருமை
நான் கூட இரு முறை சாகடிக்கப்பட்டவன்......

மதுவர்மன் said...

சும்மா, கவிதை என்றதற்காக, பொய்யெல்லாம் பேசக்கூடாது.

இயேசுநாதர் உரிர்த்தெழுந்தது எல்லாம் கட்டுக்கதை, ஆதாரமற்றது.

விஞ்ஞான ரீதியாக, இன்றுவரை, இறந்த ஒரு உயிரினம், மீழவும் உயிர்நிலையை அடையமுடியாது.

கவிதையாக இருந்தாலும், இப்படியான மூடநம்பிக்கைகளை பரப்பக்கூடாது..

ஆதிரை said...

நன்றி எவனோ ஒருவன் உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும்.

மது,
//இயேசுநாதர் உயிர்த்தெழுந்தது எல்லாம் கட்டுக்கதை, ஆதாரமற்றது.
இல்லையென்று வாதிட என்னிடம் நீங்கள் குறிப்பிடும் விஞ்ஞான ரீதியான ஆதாரங்கள் எதுவும் நிச்சயமாக இல்லை. ஆனால், கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த ஒருவன் உங்கள் சர்ச்சை மிகுந்த இந்த கருத்துக்கு தங்கள் பக்க நியாயத்தை நிச்சயம் முன்வைப்பான் என நம்புகின்றேன். இந்த சர்ச்சை மிகுந்த கருத்தாடல் ஆரோக்கியமான முறையில் எடுத்துச் செல்ல வாழ்த்துக்கள்.

//விஞ்ஞான ரீதியாக, இன்றுவரை, இறந்த ஒரு உயிரினம், மீளவும் உயிர்நிலையை அடையமுடியாது.
நல்லது மது. உங்கள் ஆறாவது அறிவு வேலை செய்கிறது. ஆனால், கவனமும் வேண்டும். இப்போதெல்லாம், சொந்தமாக சிந்திப்பவனுக்கு 'எங்களுடைய சிந்தனையின்' பிரகாரம் ஆயுள் கம்மி.

//மீளவும் உயிர்நிலையை அடையமுடியாது.
நடந்திருக்கிறதே. 80களில் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள், சுனாமியில் ஒரு தடவை, இப்போது ஒரு தடவை....

மதுவர்மன் said...

சிறிகரன்,
//நடந்திருக்கிறதே. 80களில் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள், சுனாமியில் ஒரு தடவை, இப்போது ஒரு தடவை....//

நடந்திருக்கின்றதே என்பதன் மூலம், நீங்கள் எந்த விடயங்களை குறிப்பிடுகின்றீர்கள் என்றூ விளங்கவில்லை. பூடகமாக ஏதாவது சொல்கின்றீர்களோ தெரியவில்லை.விளக்கமாக சொல்லுங்கள் முடிந்தால்.

மேலும், ஏன் கிறிஸ்தவ மதத்தை சார்ந்த ஒருவர்தான் இயேசு பற்றி கதைக்கவேண்டும்.அவர்பக்க, இவர்பக்க நியாயம் என்றொரு முறைமை இங்கே தேவையில்லை என்று நான் நினைக்கிறேன்.

கன்னிப்பிறப்பு (எல்லா மதங்களிலும் இதை காணக்கிடைக்கும், காப்பியடித்திருப்பார்களோ!), உயிர்த்தெழுகை (அதுவும் மூன்று நாட்களுக்கு பிறகு), என்பவை எல்லாம் சுத்த பைத்தியக்காரத்தனம், மூடநம்பிக்கைகள் என்று, அறிவியல் ஓரளவேனும் தெரிந்த ஒருவருக்கு இலகுவாகவே விளங்கும். இந்த ஐதீகங்கள்(myths) இப்படியான விடயங்களை நிறையவே கொண்டுள்ளன.

இந்து மதத்தில் தான் இப்படியான விடயங்கள் அதிகம்.

நான் விரும்புவதெல்லாம் இதைத்தான், ஆதாரமற்ற, நிறுவப்படாத விடயங்களை, உண்மையென்று நம்பி, அவற்றின் மேல் மற்றைய விடங்களை நிறுவாதீர்கள். அது ஆபத்தானது.

உதாரணத்துக்கு, அண்மையில் நிகழ்வொன்றில், ஒரு மதிப்புக்குரிய, அனுபவமிக்க (சமய அனுபவம் ;)) அம்மையார் ஒருவர் கூறினார்
“ நெருஞ்சி முள்ளு மனிதர்களின் கால்களிலே குத்தி, அவர்களின் இரத்தத்தை உறிஞ்சி அவ்விரத்தத்திலே வளருமாம், அவ்வாறே, ஒருவரை, வருத்தி, ஏமாற்றிப் பிழைப்போரும்...” என்று.

சனம் மிக நிறைந்திருந்த ஒரு பொதுக் கூட்டம். பாருங்கள், எவ்வளவும் பொறுப்பற்ற தன்மை, அறிவற்ற தனமை.

இப்படியொரு தாவரத்தை, நான் கற்பனை, காமிக்ஸ் கதைகளில் தான் கேள்விப்பட்டிருக்கின்றேன். இந்த அம்மையார் இப்படி சொல்லிவிட்டார் என்பதற்காக, கேட்டுக்கொண்டிருந்த இன்னும் எத்தனை பேர், இப் ‘பெரும் உண்மையை' தங்கள், தங்கள் மேடைகளிலெல்லாம் குறிப்பிடப்போகின்றார்கள்...

மக்களை தவறாக வழிநடத்துவதே, இம்மாதிரியானவர்களின் வேலையாகிவிட்டது.

உதிரியான தகவல் ஒன்று.. நாங்கள் தமிழர்கள் கூட பலவிடயங்களில் அறிவியல் பூர்வமான சிந்தனையற்றவர்களாகவோ, அல்லது குறைந்தவர்களாகவோ தான் இருக்கின்றோ.

உ+ம் - ஆறறிவு, அறுசுவை என்றெல்லாம் சொல்கின்றோம், அவை எந்தளவுக்கு உண்மையானவை? எந்தளவுக்கும் அவற்றை நாங்கள் அறிவியல் பூர்வமாக ஆராய்ந்திருக்கின்றோம். யாரோ ஓரிருவர், எப்போ சொல்லிவிட்டார்கள் என்பதற்காக, நாங்கள் இன்னும் அவர்கள் சிந்தனைகளிலேயே இருக்கின்றோம்.

ஆறறிவு என்று ஒன்றில்லை.. ஐம்பொறியாலான உணர்தலகள் தான் எமக்குள்ளன.. இந்த ஐந்தையும், தான் அறிவென்ற வார்த்தையால் குறிப்பிடுகின்றீர்கள் என்றால், உடன்படுகின்றேன், ஆனால் அறிவு(knowledge) உணர்வு(புலன்)(sense) என்ற பதங்கள் வேறூபட்டவை.

நாங்கள் ஆறாவது அறிவு என்று சொல்கின்ற பகுத்தறிவு (உள்ளுணர்வு) என்பது, மேற்படி ஐந்து புலன்களாலேயே கட்டியமைக்கப்படுகின்றது. அதை ஆறாவது புலன் (6th sense) என்று சொல்வது எந்தளவுக்கு பொருத்தமானது என்பது பிரச்சினைக்குரியது. ஆரயப்படவேண்டியது) ஏனைய விலங்குகளுக்கும் இது பொருந்தும். என்ன அந்தப் பகுத்தறிவில் நாங்கள் கொஞ்சம் விசேடமான இயல்புகளை பரிணமித்திருக்கின்றோம்.

அறுசுவை - மிக அண்மைக்காலம் வரை, உலகில் நான்கே நான்கு சுவைகள் தான் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. அவை (இனிப்பு (sweetness), புளிப்பு (sourness), கசப்பு (bitterness), உவர்ப்பு (saltyness)) மிக அண்மைக்காலத்தில் தான் ஐந்த்தாவது சுவையான umani or savouriness கண்டுபிடிக்கப்பட்டுள்ளது..

பொதுவாக, நான்கு சுவைகளே கருத்தில் கொள்ளப்பட்டன.

அவ்வாறில்லாமல், நாங்கள், தமிழில், அறுசுவையென்கின்றோம். யாரோ ஒருவர் கண்ணை மூடிக்கொண்டு, சொல்லிவிட்டுப்போக, இன்னும் நாங்கள் அதிலிருந்து விடுபடுவதாயில்லை.

இதைப்பற்றறி, விரிவாக பதிவொன்று எழுதிக்கொண்டிருக்கின்றேன், விரைவில் வெளியிடுகின்றேன்.

நன்றி, நண்பரே, இவவாறான நல்ல கலந்துரையாடல்களை மேலும் தொடர்வோம்.

இந்தப் பூங்காவை தத்தெடுத்துக்கொண்ட மது ஒருவர் இருக்கின்றார், அம்மதுவல்ல இம்மது. ;)

ஆதிரை said...

மதுவர்மன்,
//...நடந்திருக்கின்றதே என்பதன் மூலம், நீங்கள் எந்த விடயங்களை குறிப்பிடுகின்றீர்கள் என்று விளங்கவில்லை. பூடகமாக ஏதாவது சொல்கின்றீர்களோ தெரியவில்லை.விளக்கமாக சொல்லுங்கள் முடிந்தால். ...//
கவிதைகள் எப்போதும் நேர்ப்பொருளைப் பற்றி பேசுவதில்லை என்பதை என் மனதில் இருத்தி மனதில் பட்டதை கிறுக்கினேன். இங்கு பூடகம் பொதிந்திருப்பது உங்களுக்கு தெரியாமல் இருக்கின்றது என்பதை நம்ப மனது பின்னடிக்கின்றது. என்றாலும், உங்களின் சவாலில் (//..விளக்கமாக சொல்லுங்கள் முடிந்தால்//) எனக்கு தோல்விதான். ஏற்றுக்கொள்கின்றேன்.

//..மேலும், ஏன் கிறிஸ்தவ மதத்தை சார்ந்த ஒருவர்தான் இயேசு பற்றி கதைக்கவேண்டும்.அவர்பக்க, இவர்பக்க நியாயம் என்றொரு முறைமை இங்கே தேவையில்லை என்று நான் நினைக்கிறேன்..//
நல்லது மதுவர்மன்... இங்கு நான் எதிர்பார்த்தவையெல்லாம், உங்களுடைய அறிவுபூர்வமான நிறுவல்களை தேடும் கருத்துக்களுடன் அவற்றிற்கு சவாலாகியுள்ள இப்படியான மதக்கருத்துக்களை மோத வைத்து அதிலிருந்து தெளிவு பெறவேண்டும் என்ற அவாவே. நிச்சயமாக, எனக்கு இயேசுநாதரின் உயிர்த்தெழுகை சம்பந்தமாக கிறிஸ்தவ மதம் போதிக்கின்றவைபற்றி தெரிந்திருப்பின் பதிலிட்டிருப்பேன். என் இயலாமையே ஒரு கிறிஸ்தவனின் உதவியை நாடியது.

//நான் விரும்புவதெல்லாம் இதைத்தான், ஆதாரமற்ற, நிறுவப்படாத விடயங்களை, உண்மையென்று நம்பி, அவற்றின் மேல் மற்றைய விடங்களை நிறுவாதீர்கள். அது ஆபத்தானது.//
நல்ல கருத்து. இத்துடன் நானும் உடன் படுகின்றேன் எங்கள் சமுதாயத்தில் போலிச்சாமியார்கள் பெருகி விட்டார்கள் என்ற சாபக்கேட்டை மறைக்க முடியாதவனாக...

இறுதியாக, பரீட்சைக்கு படித்தபோது வழிந்த தூக்கத்தின் நடுவே எழுந்த எண்ணக்கரு இப்படியான் ஒரு கருத்தாடலுக்கு வழிகோலியதை நினைத்து பெருமைப்படுகின்றேன். இச்சிறு கிறுக்கலின் மூலம் நான் சொல்ல வந்ததும் இதைத்தான்
"ஆதாரமற்ற, நிறுவப்படாத விடயங்களை, உண்மையென்று நம்பி, அவற்றின் மேல் மற்றைய விடங்களை நிறுவாதீர்கள். அது ஆபத்தானது மட்டுமல்ல அபத்தமானதும் கூட".
சொல்ல வேண்டிய நேரத்தில் சொன்ன திருப்தியுடன், உங்களுக்கும் புரிந்திருக்கும் என்ற நம்பிக்கையுடன்,
அ.சிறிகரன்.

Post a Comment

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம். அனைவரும் இந்த வலைப்பூவை வாசிப்பார்கள். எனவே நல்ல வார்த்தைப் பிரயோகங்களைப் பாவியுங்கள். அத்துடன் இடுகையின் மேற்புறத்தில் உங்கள் நட்சத்திர வாக்கையும் இட்டுவிட்டு செல்லுங்கள்.
நன்றி