Monday, April 21, 2008

கொடியிடை பெண்கள் புத்திசாலிகள்: ஆய்வில் தகவல்

கொடியிடை பெண்கள் புத்திசாலிகள்: ஆய்வில் தகவல்

வாஷிங்டன் :
கொடியிடைப் பெண்கள், மற்றவர்களை விட புத்திசாலிகளாக இருக்கின்றனர்.

அதுமட்டுமின்றி, இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளும் திறமைசாலிகளாக உள்ளனர்.

பெண்களின் உடல் எடை தொடர்பாக ஒரு லட்சம் பெண்களிடம் நடத்திய ஆய்வில் பல்வேறு தகவல்கள் வெளிவந்துள்ளன. பொதுவாக கடந்த நூற்றாண்டில், அதிக எடை உள்ளவர்கள், பணக்காரர்களாக கருதப்பட்டனர். தங்கள் அந்தஸ்து அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவே, கண்டதையும் உண்டு, எடையை அதிகரிப்பது வழக்கமாக இருந்தது.

அமெரிக்க அழகியாக முடிசூடப்பட்ட லில்லியன் ரஸ்செல், 90 கிலோ எடையுள்ளவர். ஆனால், 1904ம் ஆண்டுக்கு பின் நிலைமையில் மாற்றம் ஏற்படத் துவங்கியது. ஐந்தே கால் அடி உயரம் கொண்ட கலிபோர்னியா மாகாணம் சான்டா மோனிகாவை சேர்ந்த எம்மா நிவ்கிர்க், அமெரிக்க அழகியாக தேர்வு செய்யப்பட்டார். அவரது எடை 62 கிலோ. அவரது உயரத்துக்கு அதிகபட்சமாக இருக்க வேண்டியை எடையை ஒட்டி இருந்தார். ஆனால், ஆண்டுக்கணக்கில் ஏற்பட்ட மாற்றத்தை தொடர்ந்து, எலும்பும் தோலுமாக இருப்பதே அழகு என்ற எண்ணம் பெண்களிடம் ஏற்படத் துவங்கியது. குறிப்பாக 1992ம் ஆண்டுக்கு பின் தான் இந்த மனமாற்றம் ஏற்படத் துவங்கியது.

கடந்த 30 ஆண்டுகளாக தேர்வு செய்யப்பட்டு வரும் அமெரிக்க அழகிகள், தங்கள் உயரத்துக்கு ஏற்ப எடை கொண்டவர்களாக இல்லை. குறைந்த எடை பெண்கள் தான் இந்த பட்டத்தை பெற்று வந்துள்ளனர். ஐந்தே கால் அடி உயரத்துக்கு வெறும் 45 கிலோ எடை கொண்ட பெண்கள், அழகிப் போட்டியில் வெற்றி பெறும் நிலை ஏற்பட்டது. பெரும்பாலான பெண்களுக்கு தங்களின் உடல் எடை குறித்து பெரிதும் கவலை தோன்றியுள்ளது. இதன் காரணமாகத் தான், பெண்கள் தங்கள் எடையை குறைத்து, எலும்புக்கு மேல் கொஞ்சம் சதை, அப்புறம் தோல் என்ற நிலைக்கு வந்து விட்டனர்.

உயரத்துக்கு அதிகமான எடை கொண்டவர் களுக்கு, இருதய நோய் பிரச்னைக்கு ஆளாகின்றனர். இதனால், அதிக உயிரிழப்புகள் ஏற்படுவது உண்மைதான். எலும்பும் தோலுமாக இருப்பவர்களுக்கு, இருதய நோய், புற்று நோய் தாக்குவது பெரிதும் குறைவுதான். ஆனால், மற்ற எல்லா நோய்களாலும், மற்றவர்களை விட இவர்கள் அதிக உயிரிழப்புக்கு ஆளாகின்றனர்.

பெண்களின் புத்திசாலித்தனத்துக்கு அவர்களின் எடை மட்டுமின்றி, உடலின் தோற்றமும் முக்கிய காரணம். இடுப்பு பெரிதாகவும், இடை சிறிதாகவும் இருக்கும் பெண்கள் இயல்பாகவே புத்திசாலிகளாக இருக்கின்றனர். இடுப்புக்கும் இடைக்கும் அளவு குறையக்குறைய அவர்களின் புத்திசாலித்தனம் அதிகரிக்கிறது. அதே போல, இடுப்பு பெருத்து, இடைசிறுத்த பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளும் திறமையானவர்களாக உள்ளனர். இதற்கு காரணம் கருவில் உள்ள குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு, இடுப்பு மற்றும் தொடைப்பகுதியில் உள்ள கொழுப்புச் சத்து தான் முக்கியமாக இருக்கிறது. இது போன்ற பெண்களுக்கு இந்த பகுதிகளில் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு தேவையான விகிதாச்சாரத்தில் கொழுப்பு உள்ளது.

ஆனால், இந்த பெண்கள் தங்கள் குழந்தை பேற்றை தள்ளிப்போட்டால் மட்டுமே இதற்கு வாய்ப்பு ஏற்படும். 19 வயதுக்கு முன்பாக இந்த பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்ளும் போது, குழந்தைகளின் மூளை வளர்ச்சியில் குறைபாடுகள் ஏற்பட நேரிடுகிறது. ஆனால், பாரம்பரியமாக சிறுத்த இடையுடன் இருப்பவர்களின் குழந்தைகள் இதில் இருந்து பாதுகாக்கப்படுகின்றன.

பின் குறிப்பு - இடுப்பு பார்த்து தர்ம அடி வாங்கினால் நான் பொறுப்பு இல்லை

3 பின்னூட்டங்கள்:

மதுவர்மன் said...

ஆயிலியன்,

உங்கள் இந்த தகவலுக்கான ஆதாரங்களை நீங்கள் வழங்கவில்லை.

யாரால் இவ்வாய்வு செய்யப்பட்டது, அதற்கான இணைப்புக்கள் உங்களால் வழங்கப்படவில்லை.

ஆகவே வாசகர்கள், உங்கள் இந்த தகவலை பொய் (Hoax) என்று எடுத்துக்கொள்ள சந்தர்ப்பம் உண்டு.

நியாயமாக பார்த்தால், நானும் அப்படித்தான் சொல்வேன்.

ஆயிலியன் said...

வணக்கம் மதுவர்மன்

இன்னும் 2 வருடங்களில் இந்த தகவலுக்கான ஆதாரங்களை வழங்குகிறேன்

:)

மதுவர்மன் said...

ஆயிலியன்,

தமிழ் பூங்காவின் பராமரிப்பாளர்களில் நானும் ஒருவன் என்ற வகையில் என்னுடைய முன்னைய ஆலோசனையை உங்களுக்கு கூறினேன்.

இணையத்திலே யாரும் எதையும் எழுதிவிட்டுப்போகலாம் என்ற நிலை இருக்கும்போது, இவ்வாறான ஆய்வு சம்பந்தமான தகவல்களை நீங்கள் வெளியிடும்போது அதற்கான ஆதாரங்களையும், இணைப்புக்களையும் வழங்கவேண்டும்.

ஆவ்வாறல்லாவிடில் , இதன் நம்பகத்தன்மை கேள்விக்குரியதாகிவிடும்.

எதனை விதமான புரளி மின்னஞ்சல்களை (Hoax Mails) அன்றாடம் நாங்கள் பெறுகின்றோம் என்பதை நீங்களும் அறிவீர்கள்.

ஆகவே தயவுசெய்து உங்களுடைய இத்தகவலுக்கான ஆதாரங்களை வழங்குமாறு தயவாக கேட்டுக்கொள்கின்றேன். எங்கேயெல்லாமிருந்து இத்தகவல்களை நீங்கள் பெற்றுக்கொண்டீர்கள் என்பதை வாசகர்களும் அறிந்துகொள்ளட்டும்.

பூங்காவை ஒரு நம்பகமான தகவல் வழங்கியாக பேனுவோம்.

நன்றி.

Post a Comment

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம். அனைவரும் இந்த வலைப்பூவை வாசிப்பார்கள். எனவே நல்ல வார்த்தைப் பிரயோகங்களைப் பாவியுங்கள். அத்துடன் இடுகையின் மேற்புறத்தில் உங்கள் நட்சத்திர வாக்கையும் இட்டுவிட்டு செல்லுங்கள்.
நன்றி