Wednesday, April 9, 2008

சாயிபாபாவின் உண்மை முகம் - விவரணச் சித்திரம் (தமிழில்)

இது 2004 ஆம் ஆண்டு BBC யினால் தயாரிக்கப்பட்ட ஒரு விவரணச்சித்திரம். இந்தியாவின் மிக்கபெரிய ஆன்மீக குரு(?) சத்திய சாயி பாபாவினை பற்றியது. சாயிபாபாவுக்கு உலகம் முழுவதும் அண்ணளவாக 30 மில்லியன் பக்தர்கள் உள்ளனர்.

ஆனால், அதேநேரம் அதிகரிக்கும் எண்ணிக்கையிலான முன்னை நாள் பக்தர்கள், குற்றஞ் சாட்டுகின்றார்கள், சாயிபாபா அவர்களையும், அவர்களது குடும்பத்தவர்களையும் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்துள்ளதாக.

இவ்விவரணச்சித்திரம் அவை சம்பந்தமாக ஆதாரங்களுடன் ஆராய்கின்றது. அவரால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டவர்களின் நேரடி பேட்டிகள் இடம்பெறுகின்றன. சாயிபாபாவின் தற்போதைய வயது 82.

இது ஆங்கிலத்தில் 'Secret Swami' என்ற பெயரில் BBC Two அலைவரிசையில், 2004 - ஜூன் - 17 வியாழக்கிழமை, பிரித்தானியாவில் ஒளிபரப்பப்பட்டது.

இதிலே அவரது பாலியல் துஷ்பிரயோகங்கள் மட்டுமல்லாது, விபூதி உருவாக்குதல், வாய்க்குள்ளிருந்து சிவலிங்கம் எடுத்தல் மற்றும் காற்றிலிருந்து ஆபரணங்கள் எடுத்தல் என்பவற்றுக்கு பின்னாலுள்ள ஏமாற்று வித்தைகளும் வெளிப்படுத்தப்படுகின்றன.

பகுதி 1


SAI BABA 1
Uploaded by PERIYAR


பகுதி 2

SAI BABA 2
Uploaded by PERIYAR


பகுதி 3

SAI BABA 3
Uploaded by PERIYAR

இவ்விவரண படம் சம்பந்தமாக ஒரு விமர்சனம் (ஆங்கிலத்தில்)
http://barrypittard.wordpress.com/2007/04/04/the-bbcs-the-secret-swami-a-revision/

பி.பி.சி இணையத்தளத்த்தில் இப்படம் சம்பந்தமான தகவல் (ஆங்கிலம்)
http://news.bbc.co.uk/2/hi/programmes/this_world/3791921.stm

Google Video தளத்த்தில் இவ்விவரண சித்திரம் ஆங்கிலத்தில் (மூலம்)
http://video.google.com/videoplay?docid=-3767740320034777862

'Secret Swami' விவரணம் ஆங்கிலத்தில் wmv கோப்பில்
http://www.rfjvds.dds.nl/thesecretswami/thesecretswami.wmv

இது மற்றொரு விவரணப்படமான 'Seduced' டென்மார்க்கில் டென்மார்க்கின் தேசிய தொலைக்காட்சி, வானொலி அலைபரப்பாளரான DR இனால் ஒளிபரப்பப்பட்டது
http://www.rfjvds.dds.nl/seduced/seduced.wmv

இவை இரண்டும் சம்பந்தமான் தகவல்
http://india.indymedia.org/en/2004/09/209770.shtml

6 பின்னூட்டங்கள்:

Kalaiyagam said...

Well done! Everyone must watch this. I want to add a link, to this video.

Kalaiyagam
http://kalaiy.blogspot.com

மதுவர்மன் said...

வணக்கம் கலை,

உங்கள் வரவுக்கு நன்றி, நல்லது, இவை போன்ற விடயங்களை ஒவ்வொருவரும் மக்களுக்கு வெளிப்படுத்தவேண்டும்.

செய்வோம்.

FBI_007 said...

சாய் பாவா செய்வது சரியோ, தவறோ இருக்கட்டும். ஆனால் அவர் சில அமைப்புக்களை நிறுவி கொஞ்ச வேலையாவது நல்லாக செய்கிறார்.

ஆனால் இலங்கையில் மதம் மாற்றும் ஆசமிகளை விட ஒரு படி மேல் பாவா.

மதுவர்மன் said...

fbi_oo7,

இளம் பையன்களுடன் தன்னினச்சேர்க்கையில் ஈடுபடும் ஒரு மிருகத்துக்கு, இரகசியக் கொலைகளில் ஈடுபட்ட ஒரு கொலைகாரனுக்கு, ஏமாற்று வித்தைகள் செய்து மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கும் ஒரு பக்கா ஏமாற்றுக்காரனுக்கு வக்காலத்து வாங்குகின்றீர்களாக்கும்(?).

இவன் போன்ற ஏமாற்று ஆசாமிகள், ஒரு சில நல்லகாரியங்களை செய்தே மறுபுறத்தில் மக்களை ஒட்டுமொத்தமாக ஏமாற்றுகின்றார்கள்.

உலகத்தின் மதங்களை எல்லாம் தரப்படுத்தினீர்கள் என்றால், அவற்றை காட்டுமிராண்டித்தனத்திலிருந்து ஓரளவு பகுத்தறிவான் மதம் என்ற ரீதியில் வகைப்படுத்த முடியும்.

காட்டுமிராண்டித்தனமான ஒரு மதத்திலிருந்து ஓரளவு நல்ல மதத்துக்கு மாறுவது நல்ல செயல் தானே.

மதம் மாற்றுகின்றார்கள் என்று சொல்கின்றீர்கள். பலவந்தப்படுத்தி அதை செய்வதை நானும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. ஆனால், மதமாற்றத்துக்கான பிரச்சாரம் ஏற்றுக்கொள்ளப்படலாம்.

ஆனாலும், நான் சொல்வேன், மதங்களையே வாழ்விலிருந்து முற்றாக விட்டுவிடவேண்டுமென்று.

நானும் காட்டுமிராண்டி மதமான இந்துமதத்தவன் தான். அம்மதத்திலிருந்து இன்னொரு கொஞ்சம் நல்ல மதத்துக்கு ஒருவர் மாற்றப்படுவாரானல் அதை வரவேற்பேன், டாக்டர் அம்பேத்கார் செய்தது போல.

இந்த காட்டுமிராண்டி இந்து மதத்தில் தான் சாயிபாபா போன்ற ஏமாற்றுக்காரர்களும், பாலியல் வக்கிரக்காரர்களும் உருவாகின்றார்கள். அப்படியான காட்டுமிராண்டி மதம் இது.

80 வயதிலும் பாலியல் வெறிகொண்டு திரியும் ஒரு காட்டுமிராண்டி தான், சாயிபாபா. அந்த ஏமாற்றுக்காரனால் நீங்களும் நன்றாகவே ஏமாற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றீர்களோ என்ற சந்தேகம் எனக்கு!

M.Siva said...

நல்ல விடையம்! இச் செய்தியினை நான் கேழ்விப்பட்டிருக்கேன் ஆனால் இப்பகுதியில்தான் விவரணப் படத்தை பார்க்க முடிந்தது. இவைகளைப் போல பல ஏமாற்றுக் காறர்கள் தோன்றுவதற்கு மக்களிடையே உள்ள கொடிய மூட நம்பிக்கையே காரணமாகின்றன, இந்த மூடநம்பிக்கையை பயன்படுத்தி ஒரு சில சமூகம் வெயில் காய்கிறது. நாம் பிறந்ததிலிருந்து பாடசாலைவரை எமது மதம் பற்றி படிப்பைவையெல்லாம் எழுதிய கற்பனைக் கதைகளும் மூட நம்பிக்ககைளையும்தான், கல்லையும் சாணத்தில் பிடித்த கடவுளையும் காகிதத்தில் வரைந்த கடவுளையும் நம்பும் மனிதன் சாய்பாபா போன்ற சில வித்தைகளைச் செய்யும் மனிதனைக் கண்டு கடவுள் என்று சொல்வதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.பல்லாண்டுகளுக்கு முன் வேணுமென்றே மக்கள் மீது திணிக்கப்பட்ட வளக்கப்பட்ட மூடப்பளக்க வளக்கங்களை இல்லாது களைவதும் சிரமமான காரியம்தான், உங்களைப் போன்ற இச் சேவை பலராலும் மேற்கொள்ளப்பட வேண்டும். இப்படத் தொகுப்பினை www.eain.ch என்ற இணையத்தில் இணைத்துள்ளேன் நன்றி. M.Siva

மதுவர்மன் said...

M.Siva,

உங்களுடைய கருத்துக்களுக்கு நன்றி,
எல்லா மூடப்பழக்கவழக்கங்களையும் ஒழிப்பதற்கு ஒரே வழி, அதற்கு காரணமான மக்களின் முக்கியமான ஒரு சந்தேகத்தை போக்குவது தான்.

அதாவது, எங்களுக்கு மேற்பட்ட சக்தி ஒன்று உண்டு என்று பலரும் நம்புகின்றார்கள்.

அப்படி ஒன்றுமே இல்லை என்று இற்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு முன்பு கௌதம புத்தர் சொல்லியிருக்கின்றார்.

இன்றைக்கு அறிவியல் அபரிமிதமாக வளர்ந்து, மதங்களும், மதவாதிகளும் சொன்ன எண்ணுக்கணக்கற்ற விடயங்களை பிழைகளென்று நிறுவிவிட்டோம்.

ஒரே வழி, மக்களை அறிவியல் மயப்படுத்துவது தான், அல்லது அறிவூட்டுவது.

இவற்றை இறுவட்டுக்களில் எழுதி பலபேருக்கு கொடுத்திருக்கின்றேன். ஒரு சில சாயி பக்தர்கள் சாயி வெறுப்பாளர்களாக மாறியிருகின்றார்கள். நான் கூட அப்படித்தான்.

முடிந்தால், நீங்களும் உங்களால் இயன்றதை செய்யுங்கள்.

Post a Comment

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம். அனைவரும் இந்த வலைப்பூவை வாசிப்பார்கள். எனவே நல்ல வார்த்தைப் பிரயோகங்களைப் பாவியுங்கள். அத்துடன் இடுகையின் மேற்புறத்தில் உங்கள் நட்சத்திர வாக்கையும் இட்டுவிட்டு செல்லுங்கள்.
நன்றி