Friday, December 5, 2008

அப்பிளின் அப்பிள்





Thursday, October 30, 2008

போராட்டங்களில் நாடக அரங்கத்தின் வகிபாகம்

ஒரு புலக்காட்சி ஊடகம் என்ற வகையில், எழுத்தறிவற்ற பாமரமக்களையும் சென்றடையக்கூடியது அரக்காற்றுகையாகும். மக்கள்நிலைப்பட்ட அல்லது மக்களால் முன்னெடுக்கப்படுகின்ற போராட்டங்களின் பிரதான பிரசார ஊடகமாக நாடகங்களே திகழ்ந்து வந்திருக்கின்றன. மக்கள் போராட்டங்களைப்பொறுத்தவரையில் அதன் பெருவாரியான பிரதிநிதிகள் உழைக்கும் மக்களைச்சேர்ந்த பாமர மக்களே. போராட்டங்களை முன்னேடுக்கும் மக்கள் சார்பு சக்தியானது பலவகையான ஊடகங்களை மக்களை அறிவூட்டவும் எழுச்சியூட்டவும் பயன்படுத்துவது வழமை.

பெரும்பாலன மக்கள் போராட்டங்கள் இடம்பெறும் பிரதேசங்களில் இலத்திரனியல் ஊடகங்கள் எல்லாம் அடக்கியாழும் வர்க்கத்தின் கைக்கூலிகளாகவே செயற்பட்டு வருகின்றன. இதனால் அவை புரட்ட்சியின் போராட்டத்தின் எதிர் ஊக்கிகளாகவே நோக்கப்படவேண்டியன. மேலும் அச்சு ஊடகங்களும், அடக்கியாழும் சக்திகளின் வண்ணமயமான அச்சு ஊடகங்களுடன் போட்டியிட்டு மக்களை சென்றடய வேண்டியவையாகவுள்ளன. அத்துடன் பாமர மக்களின் எழுத்தறிவு மட்டமானது அவ்வடைவுக்கு பெரும் தடையாகவே அமைந்துவிடுகிறது. ஆக பாமர மக்களை வெற்றிகரமாக சென்றடையக்கூடியதும், இலகுவாக கருத்துக்களை புகுத்தி எழுச்சிகொள்ளச்செய்யக்கூடியதுமான ஊடகம் புலக்காட்சி ஊடகம் ஒன்றாகும். சினிமா என்பது நேர, பண விரயம்மிக்கதும் காட்சிப்படுத்துவதற்கு திரையரங்குகளின் தேவையுடையதுமான ஊடகமாகும்.போராட்ட சக்திகளின் அக புற சூழ்நிலைகள் சினிமாவை பிரசார ஊடகமாக கைக்கொள்ள ஏதுவாக அமைவதில்லை. இதனால் போராட்டங்களில் சினிமாவின் பங்கு மட்டுப்படுத்தப்பட்டதாகவே உள்ளது. (ஆனாலும சில போராட்டங்களில் சினிமா பிரச்சார ஊடமாக பயன்பட்டுள்ளது) எனவே செலவு குறைந்த செயற்றிறன் மிக்க ஊடகமாக நாடகத்தையே கொள்ளலாம். அதுவும் முக்கியமாக வீதி நாடகங்களே போராட்டங்களுக்கு மிகச்சிறந்த ஊடகமாக அமையக்கூடியன.

அநேகமாக அதிகார வர்க்கத்தினால் நடமாட்டத்துக்கு தடைவிதிக்கப்பட்டிருக்கும் போராட்ட சக்திகள் திடீர் திடீரென மக்கள் கூடுமிடங்களில் ஒன்றுசேர்ந்து வீதி நாடகம் ஒன்றை நிகழ்த்திக்காட்டிவிட்டு மறைவதில் உள்ள இலகுத்தன்மை மற்றய புலக்காட்சி ஊடகங்களில் இல்லை.மக்களுக்கும் பிரச்சினைலளை வெறும் சொற்ற்களால் விளங்கிக்கொள்வதைவிட தமது பிரச்சினைகளை மூன்றாம் நபராக நின்று பார்த்து உணர்ச்சிபெறுவதென்பது இலகுவானதொன்றாகும். தமது அவலங்கள் தம்முன்னே நிகழ்த்திக்காட்டப்படும்போது அவ்வவலம் பலமடங்காகி மக்களின் நெஞ்சை சுடும். அடக்கப்பட்ட வாழ்வினால் ஏற்படும் துலங்களின்மை அல்லது மரத்துப்போதல் (insensitiveness ), தினமும் நடக்கும் அவலங்கள் மக்களின் உள்ளுணர்வை தொடாத்தன்மை என்பன அதிகரித்தே காணப்படும். அதையும் மீறி மகளின் மனதை தொட்டு அவலங்களின் உண்மைக்கோலத்தை உணரச்செய்வதில் நாடகங்களே மிகச்சிறந்த கருவியாகும்.

தலைவிதியை நொந்துகண்டிருக்கும் மக்களுக்கு இவ் அவலஙகள் தீர்க்கப்படலாம், அதிகாரத்தை மக்கள் கேள்வி கேட்களாம் , மக்கள் எழுச்சியின் முன் எவ்வாறான அதிகாரமும் செல்லாக்காசே என மக்களின் பலத்தை மக்களுக்கு உணர்த்துவதற்கு நாடகத்தாலேயே முடியும். அவலங்களை அநுபவிக்கும் நாடக கதைமாந்தரின் எழுச்சியானது அவர்களின் மீட்சிக்கு வழிகோலுவதாக காட்டப்படுவதும், எழுச்சியினதும் போராட்டத்தினதும் மாட்சிமை விளக்கப்படுவதுமே போராட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துவோரின் மிகச்சிறந்த நாடக உத்தியாக அமையும். நம்பிக்கையீனச்சகதியில் கிடந்துழலும் மக்களுக்கு நம்பிக்கையளித்து எழுச்சிகொள்ளச்செய்வதும் எழுச்சிகொண்ட மக்களின் போராட்டத்தை ஆற்றுப்படுத்துவதிலும் நாடகக் கலையால் மிகச்சிறந்த பங்கொன்றை ஆற்றமுடியும் . எனினும் பிரச்சார ஊடகமாக நாடகத்தின் வெற்றியானது ஏனய ஊடகங்களை அதுவும் வண்ணமயமான மயக்கும் போதைதரும் இலத்திரனியல், சினிமா ஊடகங்களை வென்று மக்களிடத்தே சென்றடைவதிலும் அதன் பின் மக்களை அவ்வூடகங்களின் மலிவான போதையூட்டலிலிருந்து மீட்டு நாடகத்தைநோக்கி கொண்டுவருவதிலுமே தங்கியுள்ளது.

அடுத்த பதிவில் போராட்டங்களின் வெற்றிக்கு காரணமாக நாடகங்கள் அமைந்த சில சந்தர்ப்பங்களான "கந்தன் கருணை" "மண் சுமந்த மேனியர்" மற்றும் நேபாள மாவோயிஸ்டுகளின் போராட்டங்களில் நாடகங்களின் பங்கு என்பனபற்றி பார்க்கலாம்.

Tuesday, October 28, 2008

தேசிய கலை இலக்கியப் பேரவை - பகுதி ஒன்று

எனது கடைசி பதிவிற்கு பின்னூட்டம் போட்டவர்கள் தேசிய கலை இலக்கியப் பேரவை பற்றி விரிவான பதிவு போடும்படி கேட்டதற்கு இணங்க இப்பதிவு இடப்படுகிறது . மொத்தம் மூன்று பதிவுகளுக்கு இது நீளும்

1. வரலாற்றுப் பின்புலம்

2008இல் தேசிய கலை இலக்கியப் பேரவை தனது 35வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. மூன்றரைத் தசாப்த காலத்திற் பேரவை ஆற்றி வந்த பணிகள் காத்திரமானவை. கலை இலக்கியச் சவால்கள், நிதி நெருக்கடிகள், சமூகத் துயரங்கள், அரசியல்-யுத்தக் கொடூரங்கள், மனித அவலங்கள், வீண் உயிரிழப்புக்கள் என்பன நடுவே கடும் எதிர்நீச்சலிட்டு அது தனது பணிகளை முன்னெடுத்து வந்துள்ளது. அப் பணிகளை வெற்றிகரமாக நிறைவேற்ற உதவிய பிரதான காரணங்கள் இரண்டு. ஒன்று தேசிய கலை இலக்கியப் பேரவையின் கலை இலக்கியக் கொள்கை. மற்றது அக் கொள்கையை அமைப்பு வாயிலாக முன்னெடுத்தவர்களின் அர்ப்பணிப்பு மிக்க கடும் உழைப்புக் கொண்ட கூட்டு முயற்சி. அந்த உழைப்பு, சுயநலம், பொருள்தேடல், புகழ் நாட்டம், பட்டம் பதவி பெறல், தனிமனித வெற்றிப் புலம்பல் போன்றவற்றுக்கு அப்பால் தன்னடக்ககமும் சமூக அக்கறையும் கொண்ட கனதிமிக்க கலை இலக்கியப் பங்களிப்பாக இருந்து வந்துள்ளது. மக்கள் கலை இலக்கியக் கோட்பாட்டை உயர்த்திப் பிடித்துத் தேசிய கலை இலக்கியப் பேரவை ஆற்றிய பன்முகப் பணிகளையும் பங்களிப்புகளையும் இப்போது நினைவுபடுத்தல் அவசியமாகின்றது.

எந்தவொரு கலை இலக்கியக் கோட்பாடும் அதனை முன்னெடுக்கும் கலை இலக்கிய அமைப்பும் அதன் அரசியல் பொருளாதார சமூக கலாசார வரலாற்றுச் சூழலை உள்வாங்கியே உருவாகிறது. படைப்பாளிகளும் தத்தமது நிலைக்களங்களுக்கு ஏற்பவே செயற்படுவர். வர்க்க சமூகத்தில் இலக்கிய நோக்கும் போக்கும் ஏதோ ஒரு வர்க்க அடையாளத்துடனேயே இருக்கும். தேசிய கலை இலக்கியப் பேரவைக்கும்; ஒரு வரலாற்று அடிப்படையும், வர்க்கச் சார்பும் உண்டு.

இலங்கையில் 1940களிலும் 1950களிலும் பொதுவுடைமை இயக்கம் ஆழமான செல்வாக்கைச் செலுத்தியது. அதன் காரணமாக இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உருவானது. அதைக் கட்டியெழுப்பி அதற்குரியதொரு முற்போக்கு கலை இலக்கியக் கொள்கையை வகுத்து வழி நடத்த அவ் இயக்கத்தைச் சேர்ந்த கலை இலக்கியவாதிகள் கடுமையாக உழைத்தனர். முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஈழத்து இலக்கியப் பரப்பில் ஆற்றிய இலக்கியப் பணியாற் சமூக அக்கறையும் வர்க்க முனைப்பும் கொண்ட எழுத்தாளர்கள் பலர் உருவாகினர். ஈழத்து இலக்கியத்தின் தனித்துவத்தை அடையாளங் காட்டத் தேசிய கலை இலக்கியத்தின் முக்கியத்துவத்தை வற்புறுத்தி விதேசிய இலக்கியச் சீரழிவை எதிர்ப்பதில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட பெரும் பணியை ஆற்றியுள்ளது.

ஆனால் அச் சங்கம் அறுபதுகளின் முற்கூறுடன் திசைமாறத் தொடங்கி விரைவில் முற்று முழுதாகச் சீரழிந்தது. இலங்கையின் பொதுவுடைமை இயக்கத்தில் அக் காலத்தில் ஆழமான அரசியல் தத்துவார்த்த விவாதங்கள் இடம்பெற்றுப் பொதுவுடைமை இயக்கம் 1964ல் பிளவடைந்தது. அப் பிளவும் அணி பிரிதலும் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை இயங்காமலாக்கின. தலைமைப் பொறுப்பில் இருந்த சிலர் அவ் அரசியல் தத்துவார்த்த பிளவின் போது சமாதானப் பாராளுமன்றப் பாதையைத் தேர்ந்தோர் பக்கம் தம்மை நிறுத்திக் கொண்டனர். மாறாகக் கவிஞர் பசுபதி, பேராசிரியர் கைலாசபதி, சுபைர் இளங்கீரன், என்.கே. ரகுநாதன், கே. டானியல், எச்.எம்.பி. முகைதீன், சில்லையூர் செல்வராசன், செ. கணேசலிங்கன், நீர்வைப் பொன்னையன், கவிஞர் சுபத்திரன்;, இளைய பத்மநாதன், இ. சிவானந்தன், கே. தங்கவடிவேல், இ. முருகையன் போன்றோர் உட்பட்ட பெரும்பா லானோர் புரட்சிகர வர்க்கப் போராட்டத்தை வலியுறுத்திய அணியில் இணைந்து தமது கலை இலக்கியப் பணிகளை ஆற்றினர்.

1964-1972 காலகட்டம் தேசிய அளவிலும் சர்வதேசிய அளவிலும் சகலவகையான ஒடுக்கு முறைகட்கும் எதிரான எழுச்சிகளும் போராட்டங்களும் இடம்பெற்ற ஒரு புரட்சிகர காலப்பகுதியாகும். இலங்கையின் பல பகுதிகளிற் பல வகைப்பட்ட போராட்டங்கள் எழுவதற்கான சூழல்கள் தோன்றின. 1965ல் ஐக்கிய தேசியக் கட்சி - தமிழரசு - தமிழ்க் காங்கிரஸ் கட்சிகளுடனும் ஏனைய சிங்கள இனவாதக் கட்சிகளுடனும் வர்க்க ரீதியில் இணைந்து இன மொழி வேறுபாடு கடந்த வலதுசாரி ஆட்சியைத் தேசிய அரசாங்கம் என்னும் பெயரில் அமைத்துக் கொண்டது. அதேவேளை பாராளுமன்றச் சந்தர்ப்பவாத அரசியலிற் தம்மை இழந்த இடதுசாரிகள் சிறீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து சந்தர்ப்பவாத அரசியலில் இறங்கினர். புரட்சிகரக் கோட்பாட்டை ஏற்றவர்கள் தோழர் நா. சண்முகதாசன் தலைமையில் பொதுவுடைமைக் கட்சியின் வழிகாட்டலில் நடைமுறைப் போராட்டங்கள் ஊடாகத் தமது அரசியல், தத்துவார்த்தக் கொள்கைகளை விருத்தி செய்ய முற்பட்டனர். அம் முயற்சிகள் கலை இலக்கியப் பரப்பிலும் பல்வேறு தாக்கங்களை உருவாக்கின.

கலை இலக்கியத் துறைக்குரிய முயற்சிகள் பற்றிய சிந்தனைகள் எழுந்தன. அதன் விளைவாக 'வசந்தம்' எனும் கலை இலக்கிய சஞ்சிகையை வெளியிட முடிவானது. 1964ன் பிற்கூற்றிலே 'வசந்தம்' தொடக்கப்பட்டது. அதை வெளிக் கொணர்வதில் அன்றைய இளம் வளர் நிலைப் படைப்பாளிகளான செ. யோகநாதன், இ.செ. கந்தசாமி, நீர்வைப் பொன்னையன், யோ. பெனடிக்ற் பாலன், ச. முத்துலிங்கம், செல்வ. பத்மநாதன், அ. கந்தசாமி போன்றோர் முன்னின்று செயற்பட்டனர். அவர்களது முயற்சிக்கும் வசந்தத்தின் இலக்கியத் தரத்திற்கும் ஆதரவாக ஏற்கனவே குறிப்பிட்ட நாடறிந்த எழுத்தாளர்கள் தமது ஆக்கங்களை வழங்கிப் பக்கபலமாக நின்றனர். ஒரு வருடம் மட்டுமே இலக்கியப் பணி ஆற்றிய வசந்தம் நிதி வளம் இன்மையால் நின்று போனாலும் அது தோற்றுவித்த இலக்கியத் தாகமும் காட்டிய திசையும் எழுத்தாளர்களுக்கு ஒரு உந்து விசையாக அமைந்தது. எனினும் எவ்வித கலை இலக்கிய அமைப்பையும் தோற்றுவிக்காமலே கலை இலக்கிய முயற்சிகளை நாடு பூராவும் இருந்த எழுத்தாளர்கள் முன்னெடுத்தனர்.

1964க்குப் பின்பு வடக்கிலும் தெற்கிலும் மலையகத்திலும் அரசியல் தொழிற்சங்க வெகுஜனப் போராட்டங்கள் வேகமடைந்தன. தெற்கிலே தொழிற்சங்க வேலை நிறுத்தப் போராட்டங்கள் தனியே பொருளாதாரக் கோரிக்கைகளை மட்டுமன்றி அரசியல் கோரிக்கைகளையும் முன்னெடுத்தன.

வடக்கில் 1966ம் ஆண்டு ஒக்டோபர் 21 எழுச்சி சாதிய-தீண்டாமை அமைப்புக்கு எதிரான புரட்சிகரப் போராட்டக் களத்தை திறந்து வைத்து ஒரு வரலாற்றுத் திருப்பு முனையை ஏற்படுத்தியது. போராட்டங்கள் பல்வேறு களங்களில் முன்னேறிய அக் காலப்பகுதியில் வட பகுதியில் தொழிற்சங்க வேலை நிறுத்தப் போராட்டங்கள் பல இடம்பெற்றன. அத்துடன் அரசாங்கத்தின் மக்கள் விரோத நிலைப்பாடுகட்கு எதிராகவும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும் இயக்கங்கள் முன்னெடுக்கப்பட்டன.

மலையகம் முன் கண்டிராதவாறான தொழிற்சங்கப் போராட்டங்கள் வர்க்க உணர்வின் உச்ச நிலையிற் பற்றிப் பரவின. பல்வேறு வேலைநிறுத்தப் போராட்டங்களில் தோட்டத் தொழிலாளர்கள் ஆண்களும் பெண்களுமாகத் தமது வர்க்க உணர்வுகளை வெளிப்படுத்தினர்.

மேற்கூறிய இயக்கங்களும் போராட்டங்களும் சமூக மாற்றத்தை வேண்டி நின்ற கலை இலக்கியவாதிகளுக்கு மக்கள் கலை இலக்கியக் கோட்பாட்டு அடிப்படையில் புதிய புதிய அனுபவங்களை வழங்கின. அவற்றின் செழுமையான பின்புலத்தில் வளமிக்க ஆக்க இலக்கியங்கள் எழுந்தன. கவிதைகள், பாடல்கள், சிறுகதைகள், நாவல்கள் என்பனவற்றுடன் நாடக வடிவங்கள் புதிய புதிய பரிசோதனைகளில் வெற்றி பெற்றன.

“எச்சாமம் வந்து எதிரி நுழைந்தாலும் / நிச்சாமக் கண்கள் நெருப்பெறிந்து நீறாக்கும் / குச்சுக் குடிசைக்குள் கொலுவிருக்கும் கோபத்தை / மெச்சுகிறேன்" “பாளையைச் சீவிடும் கைகளைப் புதுப் பணி / பார்த்துக் கிடக்குதடா" என்று கவிஞர் சுபத்திரனும், “ஆற்றல் மிகு கரங்களிலே ஆயுதங்கள் ஏந்துவதே / மாற்றத்திற்கான வழி, மாற்றுவழி ஏதுமில்லை" எனக் கவிஞர் கணேசவேலும், “மாவிட்டபுரத்திலோர் மந்தி / மடைச் சேட்டை புரியுது / வாசலில் குந்தி" எனக் கவிஞர் வில்வராசனும் பாடியவை மக்கள் போராட்டக் களத்திற்குப் புதிய வேகத்தை அளித்தன. மேலும் சி. மௌனகுரு, சில்லையூர் செல்வராசன், சாருமதி, சிவானந்தன், புதுவை இரத்தினதுரை, முருகையன், முருகு கந்தராசா, முருகு இரத்தினம், தில்லை முகிலன், பூமகன் ஆகியோரது கவிதைகள் வீச்சுடன் பிறந்தன. அக் காலகட்டத்தில் மலையக மக்களது வர்க்க உணர்வுகளைக் கூறுங் கவிதைகள் படைக்கப்பட்டன. பாடல்கள் போராட்டத் தீ - 1, போராட்டத் தீ - 2 என நூல் உருப் பெற்றன. மலையகக் கவிஞர்கள் எம். முத்துவேல், பி. மரியதாஸ், ஆர். இராமலிங்கம் போன்றவர்கள் கனதி மிக்க கவிதைகள் படைத்தனர்.

அவ்வாறே கருத்தாழமும் கலையுணர்வும் மிக்க சிறுகதைகளை என்.கே. ரகுநாதன், கே. டானியல், பெனடிக்ற் பாலன், செ. யோகநாதன், நா. யோகேந்திரநாதன், நந்தினி சேவியர், இராஜா தருமராஜா போன்றோர் படைத்தனர். இளங்கீரனின் “நீதியே நீ கேள்", கணேசலிங்கனின் “செவ்வானம் " பெனடிக்ற் பாலனின் மலையகப் பின்னணியிலான “சொந்தக்காரன்" போன்ற நாவல்கள் குறிப்பிட வேண்டியன. டானியலின் “பஞ்சமர்" நாவல் கடும் விமர்சனங்களை எதிர்நோக்கிய போதும் சாதிய ஒடுக்குமுறையின் பல்வேறு அம்சங்களை வெளிக் கொணர்ந்த முக்கியமான ஆக்கமாகும்.

மேற்கூறிய ஆக்கங்கள் மக்களது அன்றைய வர்க்க, சமூகப் பிரச்சினைகளையும் போராட்ட நியாயங்களையும் ஆற்றல்களையும் பிரதிபலித்ததுடன் மக்கள் இலக்கியத்திற்குரிய வலுவான அடிப்படைகளையுங் கொண்டிருந்தன. அவை பற்றிய பன்முக நோக்கும் ஆயு;வுகளும் விமர்சனங்களும் ஏற்கனவே வெளிவந்துள்ளன. அவற்றின் வரலாற்று முக்கியத்துவங் கருதி அவை தொடர்ந்தும் ஆக்கபூர்வமாக ஆராயப்பட வேண்டும்.

ஆக்க இலக்கியங்கள் போன்று விமர்சனமும் கலை இலக்கியத் துறையின் கவனத்திற்குரிய ஒரு துறையாக அன்று செழுமை பெற்றது. விமர்சனத் துறையின் கவனத்தைக் க. கைலாசபதி பெரிதும் ஈர்த்தார்.

அப்போது எழுதி மேடையேற்றிய நாடகங்களை மக்கள் பெரிதும் வரவேற்றனர். மக்கள் கலை இலக்கிய கோட்பாட்டு வழி நின்று தரம் மிக்க நாடகங்களை உருவாக்க முடியும் என அவை உணர்த்தின. முதல் நாடகமாக மட்டக்களப்பு நாடகசபா தயாரித்து, சி. மௌனகுருவின் நெறியாள்கையில், 1969ம் ஆண்டில் வடமோடி தென்மோடிக் கூத்து வகைகள் இணைந்த “சங்காரம்" எனும் நாடகம் மேடையேறிப் பெரு வரவேற்பைப் பெற்றது.

அடுத்து என்.கே. ரகுநாதன் எழுதிய “கந்தன் கருணை" நாடகப் பிரதி அம்பலத்தாடிகளினால் காத்தவராயன் கூத்துப் பாணியில் இளைய பத்மநாதனின் நெறியாள்கையில் வட பகுதியில் மேடையேறியது. 1969-1974 காலப்பகுதியில் “கந்தன் கருணை" கொழும்பிலும் வடபகுதியிலும் ஐம்பது முறைகட்கும் மேல் மேடையேறியது. அந் நாடகத்தின் வெற்றி இளைய பத்மநாதன் சுட்டிக் காட்டியது போல ஒரு கூட்டு முயற்சியின் வெற்றியாகும். அந் நாடகம் சாதிய அமைப்பை அம்பலமாக்கி ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டத்தின் நியாயங்களை வலியுறுத்திய மக்கள் கலை வடிவமெனலாம். அவ்வாறே மட்டுவில் மோகனதாஸ் கலைக்கழகம் தயாரித்த “குடி நிலம்" “புதிய வாழ்வு" முருகையனின் “கடூழியம்" பண்டத்தரிப்பு காலையடி மறுமலர்ச்சி மன்றம் தயாரித்த “காகிதப் புலிகள்" மாவை நித்தியானந்தனின் “ஐயா எலக்சன் கேட்கிறார்" போன்ற நாடகங்கள் மக்கள் மத்தியில் ஆழமான கருத்துக்களை எடுத்துச் சென்றன. “கந்தன் கருணை" பின்னர் புதிய வகை உத்தி முறைகளைப் பயன்படுத்தி வெவ்வேறு நாடக அமைப்புக்களால் நடிக்கப் பெற்றது. புதிய உத்திமுறைகளைப் பயன்படுத்துவதில் சி. மௌனகுரு, இளைய பத்மநாதன், தாசீசியஸ், முருகையன் போன்றோர் தத்தமது ஆற்றல்களை ஏனையோருடன் பகிர்ந்தமை முக்கியமான விடயமாகும்.

சித்திர ஓவிய முயற்சிகளும் மேற் கொள்ளப்பட்டன. தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்க மாநாட்டிற்கான சித்திரக் கண்காட்சி குறிப்பிட வேண்டியதாகும். அன்றுவரை சாதிய ஒடுக்கு முறைக்கு உள்ளான சாதிய-தீண்டாமைக் கொடுமைகளை உயிர்ப்புடன் சித்தரிக்கும் சித்திரங்களும் ஓவியங்களும் சேகரிக்கப்பட்டுக் கண்காட்சியில் வைக்கப்பட்டன. 1969ல் வடக்கின் பல பகுதிகளிலும் நடாத்தப்பட்ட இக் கண்காட்சி பின்னர் கொழும்பிற் பலரது கவனத்தை ஈர்த்தது. மறைந்த பேராசிரியர் சரச்சந்திர கண்காட்சியைத் திறந்து வைத்தார். பெருந்தொகையான தென் இலங்கை மக்கள் தமது உணர்வுளை வெளிப்படுத்திப் பார்வையிட்டனர். அதனால் கண்காட்சியை மேலும் இரண்டு தினங்கள் நீடிக்க வேண்டியதாயிற்று. கண்காட்சியை நடாத்துவதிற் பேராசிரியர் க. கைலாசபதி முன்னின்று உழைத்தார். கண்காட்சிக்கான சித்திரங்கள் வரைவதிலும் ஏனையோரிடம் பெறுவதிலும் என். கே. ரகுநாதன், கே. தங்கவடிவேல் கே. டானியல் போன்றோர் ஆர்வத்துடன் செயற்பட்டனர்.

இவ்வாறு 1964-1972 கால கட்டகத்தில் நடைபெற்ற மக்கள் போராட்டங்களும் அவற்றின் வளமான அனுபவங்களும் ஒரு பரந்த மக்கள் இலக்கியக் கோட்பாட்டுத் தளத்தை விரிவுபடுத்தி செழுமையாக்கின. மாறாக, முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை நெருங்கி நின்ற இலக்கியவாதிகளின் அரசியல் நிலைப்பாடு மக்கள் இலக்கியக் கோட்பாட்டுக்கு முரணாக அமைந்தது. எல்லா விடயங்களிலும் சமரச மார்க்கத்தைப் பின் பற்றிய இவர்கள் அரசியலிலும் இலக்கியத்திலும் வெகுஜன மார்க்கப் பாதையை நிராகரித்து மக்கள் இலக்கியக் கோட்பாட்டிலிருந்து விலகி நின்றனர். 1970ல் ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் வரவும் 1971 ஏப்பிரல் கிளர்ச்சியும் அதனையொட்டிய அரசாங்க அடக்குமுறை நடவடிக்கைகளும் புரட்சிகர இயக்கத்திற்குக் கடுமையான பின்னடைவுகளை ஏற்படுத்தின. இத் தேக்க நிலையிலிருந்து மீள இரண்டு மூன்று ஆண்டுகள் சென்றன. இச் சூழலில் தம்மை மீள அமைத்துக் கொள்ள முயன்ற முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நாட்டின் யதார்த்த சூழலுக்கு ஏற்ற கலை இலக்கியக் கோட்பாட்டை நிலை நிறுத்தத் தவறியது. ஆளும் ஐக்கிய முன்னணி அரசாங்கத்தை ஆதரிப்பதற்கு அப்பாற், கலை இலக்கியத் துறையில் அவர்களுக்கு எதுவும் இயலவில்லை.

Thursday, October 16, 2008

எத்தர்கள் வரலாறு எழுதினால் எப்படியிருக்கும்? 2008இன் ஞானம் சிறப்பிதழைப் பார்த்தால் விளங்கும்

நவீன இலக்கியச் சிறப்பிதழாக ஞானம் சஞ்சிகையின் நூறாவது இதழ் வந்திருக்கிறது. அதில் பெரும் பகுதியானவை கட்டுரைகள். கட்டுரைகளில் பெரும்பகுதியானவை இலக்கிய வரலாறுகள். இலக்கிய வரலாறுகளில் பெரும் பகுதியானவை பட்டியல்கள்.

எழுதுகிறதுக்கு வேறு எதுவுமில்லை என்கிறதால் சிலபேர் பட்டியல் போடுவார்கள். தங்களுக்கு வேண்டியவர்களுக்கு முதுகு சொறிய சிலபேர் பட்டியல் போடுவார்கள். சில பேர் வலுங் கவனமாக முக்கியமான படைப்புக்களையும் படைப்பாளிகளையும் ஒதுக்கிப் பட்டியல் போடுவார்கள். இன்னுஞ் சிலபேர் தங்களுடைய பட்டியல்களால் தங்களுடைய முதுகுகளையே சொறிந்து கொள்ளுவார்கள்.
பட்டியல்கள் ஆய்வாளர்கட்குத் தேவையானவை தான். என்றாலும் அவை போதுமானவை அல்ல. என்ன தேவைக்காகப் பட்டியல் ஒன்று தரப்படுகின்றது என்கிறதை நாங்கள் கவனிக்க வேண்டும். ஆய்வு என்கிற பேரில் வருகிற அரைகுறைப் பட்டியல்களால் ஒரு பிரயோசனமும் இல்லை. எழுதுகிறதுக்கு வேறு எதுவுமில்லை என்கிறதால் சிலபேர் பட்டியல் போடுவார்கள். தங்களுக்கு வேண்டியவர்களுக்கு முதுகு சொறிய சிலபேர் பட்டியல் போடுவார்கள். சில பேர் வலுங் கவனமாக முக்கியமான படைப்புக்களையும் படைப்பாளிகளையும் ஒதுக்கிப் பட்டியல் போடுவார்கள். இன்னுஞ் சிலபேர் தங்களுடைய பட்டியல்களால் தங்களுடைய முதுகுகளையே சொறிந்து கொள்ளுவார்கள்.
இது ஞானத்தின் அஞ்ஞானமா அயோக்கியத்தனமா?
இந்த விதமான பட்டியல் வரலாறுகள் ஒவ்வொரு துறையிலும் ஏற்பட்டு வந்திருக்கிற மாற்றங்களும் வளர்ச்சிகளும் என்ன காரணத்தால் ஏற்பட்டன என்று சொல்லுவது இல்லை. அவை என்ன விதமாகச் சமூகத்தைப் பாதித்தன என்றும் சொல்லுவது இல்லை. இடையில் ஒரு படைப்பையோ எழுத்தாளரையோ புகழ்ந்து நாலு வரிகள் வரும். ஆனால் என்ன சிறப்பு என்கிறதை கட்டுரையாசிரியர் சொல்லமாட்டார். உண்மையான காரணம் உள்ளடக்கத்தை விட்டு வேறெதுவுமாக இருக்கும்.

இந்த விதமான குறைபாடுகளுக்கு ஒரு காரணம் பல ஆய்வுக் கட்டுரைகள் ஒரு தரவழி ஆய்வும் இல்லாத அவசரக் கோலங்களாக இருக்கிறது தான். அதைவிடப் பொல்லாத காரணங்களும் இருக்கின்றன. அவை வன்மம் வக்கிரச் சிந்தனை தனிப்பட்ட பகைமை பொறாமை தொடர்புடையவை.

இந்தச் சிறப்பிதழில் வலிந்து சொல்லப்பட்டுள்ள சில இடதுசாரி விரோதமான திரிப்புக்களையும் திட்டமிட்ட புறக்கணிப்புக்களையும் பற்றிச் சொல்ல வேண்டி இருக்கிறது. இந்தப் பொய்களும் போலித்தனங்களும் இப்போது சுட்டிக்காட்டப்படாவிட்டால் அவையே மற்ற ஆய்வாளர்களுக்கான ஆதாரபூர்வமான உண்மைகளாகி நாளைய இலக்கிய வரலாறாகி விடும்.

மு.பொன்னம்பலதத்தின் பொய்கள் பற்றிப் 'புதிய பூமி'யில் ஒரு கட்டுரை சிலவருடம் முந்தி வெளிவந்தது. திரும்பத் திரும்ப சளைப்பில்லாது சொல்லப்படுகிற பொய்கட்காக அவருக்கு "கொயபெல்சு" பரிசு வழங்கினால் நன்றாயிருக்கும். கைலாசபதி தினகரனில் ஆசிரியராக இருந்த போது முற்போக்கு எழுத்தாளர்கட்கு மட்டுமே ஆதரவுகாட்டினாரென்றும் அந்த அணி சாராதோர் புறக்கணிக்கப்பட்டார்கள் என்றும் அதனால் சமஷ்டி ஆட்சிக் கொள்கை இலக்கியத்தில் இருட்டடிப்புச் செய்யப்பட்டது என்றும் தனக்கே உரிய கோமாளித்தனத்துடன் அடுக்கடுக்காகப் பொய் எழுதியிருக்கிறார். இந்தக் கட்டுரையில் வருகிற பிதற்களுக்கெல்லாம் மறுமொழி எழுதுகிறது என்றால் அதற்காகவே ஒரு சிறப்பிதழ் வெளியிடக் கூடிய அளவுக்குப் புண்ணியவான் பிதற்றி வைத்திருக்கிறார்.
திரும்பத் திரும்ப சளைப்பில்லாது சொல்லப்படுகிற பொய்கட்காக மு.பொன்னம்பலதத்திற்கு "கொயபெல்சு" பரிசு வழங்கினால் நன்றாயிருக்கும்.
இந்த விதமான சில பொய்களை விமர்சனமில்லாமல் விழுங்கி மீண்டும் மீண்டும் சொல்லுகிறவர்களுள் கலாநிதி துரை மனோகரனும் ஒருவராகக் காணப்படுகிறார். உலக இடதுசாரி இயக்கம் பிளவுபட்டு நாற்பது ஆண்டுகட்குப் பிறகும் ரஷ்யசார்பு சீனசார்பு என்று எழுதி அந்தப் பிளவின் அடிப்படையையே அவர் கொச்சைப் படுத்துகிறார்.

பேராசிரியர் கா. சிவத்தம்பியும் என். சோமகாந்தனும் சில ஆண்டுகள் முந்தி வருத்தம் தெரிவித்ததை வைத்து 1963இல் யாழ்ப்பாணத்தின் படுபிற்போக்குச் சிந்தனையாளர்கள் நடத்திய கூட்டத்தில் கூழ் முட்டை எறிந்தது முற்போக்கு எழுத்தாளர்களின் "இமேஜைக்" குறைத்ததாக எழுதியிருக்கிறார். இந்த இரண்டு பேருக்கும் அந்தக் கூட்டத்தைக் குழப்புகிற தீர்மானம் முன்கூட்டியே தெரியும். ஏனெனில் அது எழுந்தமானமாக நடந்த சம்பவமில்லை. யோசித்து எடுக்கப்பட்ட முடிவு. இதை மிகவும் நேர்மையாகவே சொக்கன் சில காலம் முந்தி உறுதிப்படுத்தியிருக்கிறார். அவர் அது சரியானது என்றுங் கூறியிருக்கிறார். அன்றைய நிலைமையில் சாதி வெறி இலக்கியப் பிரமுகர்கள் ஒடுக்கப்பட்ட சாதியினர் மீதும் தொழிலாளர் மீதும் இழிசினர் என்றும் வேறு நிந்தனைச் சொற்களாலும் நாளாந்தம் கூழ்முட்டை எறிந்து கொண்டு இருந்தார்கள். அதைப் பற்றி எங்களுடைய இலக்கியப் பண்பாட்டுக்காரர்களுக்கு இது வரையிலும் ஒரு கவலையும் இருக்கவில்லை.
வேண்டுமென்றே விடயங்களைத் தவிர்க்கிறதில் ஸ்ரீபிரசாந்தன் மிகுந்த ஆற்றல் உடையவராகி வருகிறார். தேசிய கலை இலக்கியப் பேரவையின் எந்தத் தொகுப்பு நூலும் அவர் கண்ணிற்படாமல் எந்த அவதாரம் அவரது கண்ணை மறைத்திருக்கிறதோ தெரியவில்லை.
"புரட்சி என்பது தேநீர் விருந்து வைபவமல்ல" என்று நினைவூட்ட விரும்புகிறேன். முற்போக்கு எழுத்தாளர் சங்கம் மக்களிடையே மரியாதை கெட்டது அதனாலில்லை. சந்தர்ப்பவாதிகளுக்குப் பின்னால் அந்தச் சங்கத்தை இழுத்துக் கொண்டு போனவர்கள் மக்களிடமிருந்து அந்நியப்பட்டுப் போனார்கள். தீண்டாமை ஒழிப்பு போராட்டத்தை எதிர்க்கிறவர்களுடன் சேர்ந்து நின்றார்கள். 1966இல் பேரினவாத ஊர்வலம் போனவர்களை ஆதரித்தார்கள். 1970 முதல் பதவிகளுக்குப் பின்னால் அலைந்தார்கள். இவற்றால் தான்.

அப்படிச் செய்யாதவர்கள் தங்களுடைய ஒவ்வொரு செய்கைக்கும் தட்டிக் கழித்துப் பிறர் மேல் பழி சொல்லாமல் துணிந்து பொறுப்பெடுக்கிறார்கள். நல்ல இடதுசாரிக்கு வேண்டியது "இமேஜ்" இல்லை. நேர்மையான இதயம். இது தான் கைலாசபதி காட்டிய வழி. "இமேஜ்" தேவையானவர்கள் பச்சோந்தி போல நிறங்களை மாற்றிக் கொள்ளலாம்.
கலாநிதி துரை மனோகரன், பேராசிரியர் கா. சிவத்தம்பியும் என். சோமகாந்தனும் சில ஆண்டுகள் முந்தி வருத்தம் தெரிவித்ததை வைத்து 1963இல் யாழ்ப்பாணத்தின் படுபிற்போக்குச் சிந்தனையாளர்கள் நடத்திய கூட்டத்தில் கூழ் முட்டை எறிந்தது முற்போக்கு எழுத்தாளர்களின் "இமேஜைக்" குறைத்ததாக எழுதியிருக்கிறார்.
கலாநிதி துரை மனோகரன் சொல்கிறது போல முற்போக்கு எழுத்தாளர் சங்கம் எழுபதுகள் வரை வீறு நடைபோடவில்லை. அறுபதுகளிலேயே படுத்து விட்டது. எழுபதுகளில் அரசாங்கத்துக்கு வால்பிடித்து எழும்பி நிற்கப்பார்த்தது. நிற்க முடியவில்லை. டொமினிக் ஜீவாவின் தளராத உழைப்பும் திரிபுவாதிகளிடமிருந்து கிடைத்த மறைமுகமான சிறு நிதி உதவியும் மல்லிகையை மாதமாதம் வெளியிட உதவி செய்தன. மற்றப்படி அந்த அமைப்பால் இலக்கியத் துறையில் எதையுமே செய்ய முடியவில்லை. இதைச் சிவத்தம்பியோ டொமினிக் ஜீவாவோ இயலுமானால் மறுக்கட்டும். என்.ஜி.ஓப் பிழைப்பு நடத்தி வந்த உதிரிகள் சிலர் சில ஆண்டுகள் முன்பு உருவாக்கிய ஒரு அமைப்பை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தொடர்ச்சி என்ற விதமாகச் சொல்லியிருக்கிற கலாநிதி துரை மனோகரனுக்குத் தேசிய கலை இலக்கியப் பேரவையே முற்போக்கு இலக்கியச் சிந்தனையின் மக்கள் இலக்கியப் பாசறையாக 1974 முதல் இன்று வரை இருந்து வருவதை உரிய இடத்தில் கூற முடிய வில்லை. கட்டுரையின் முடிவில் இன்னுமொரு அமைப்பாக அது குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இது ஏன்?

வேண்டுமென்றே விடயங்களைத் தவிர்க்கிறதில் ஸ்ரீபிரசாந்தன் மிகுந்த ஆற்றல் உடையவராகி வருகிறார். தேசிய கலை இலக்கியப் பேரவையின் எந்தத் தொகுப்பு நூலும் அவர் கண்ணிற்படாமல் எந்த அவதாரம் அவரது கண்ணை மறைத்திருக்கிறதோ தெரியவில்லை. ஒழுங்காக ஒருதொகுப்பை வழங்குவதற்கு இரண்டு விடயங்கள் தேவை. ஒன்று திட்டமிட்ட முறையிலான கடும் உழைப்பு. மற்றது நேர்மை. தன்னுடைய அரை வேக்காட்டுத் தொகுதியை விமர்சித்தவர்கள் புலம்பித்தீர்த்திருக்கிறதாகச் சொல்லுகிற ஸ்ரீ பிரசாந்தன் கட்டுரை முடிவில் கட்டுரைக்குப் பொருத்தமின்றித் தனக்காகப் புலம்பித் தீர்த்திருக்கிறார். பிழையைப் பிழையென்று விளங்கிக்கொள்ள அறிவு வேண்டும். அதை ஏற்றுக் கொள்ள நேர்மை வேண்டும். இவரிடம் எது மிகவுங் குறைகிறது என்று விளங்கவில்லை.
பேராசிரியர்கள் நுஃமானும் மௌனகுருவும் பாநாடகங்கள் பற்றி எழுதியிருக்கிறார்கள். இந்தப் பேராசிரியப் பெருந்தகைகள் இரண்டு பேரும் சொல்ல மறந்த முருகையனுடைய நாடகம் ஒன்றும் இருக்கிறது. அவருடைய "வெறியாட்டு" என்ற நாடகம் வெற்றிகரமாக மும்முறை மேடையேறிய பின் யாழ்ப்பாணத்தில் நான்காம் மேடையேற்றம் நடவாதபடி தமிழ்த் தேசிய வாத போராட்ட இயக்கத் தலைமைக்கு அது பற்றிய பொய்த் தகவல் அனுப்பப்பட்டதால் நாடகம் தடை செய்யப்பட்டது. அதற்குப் பொறுப்பானவர்களில் இந் நாள் தமிழ்த் தேசியவாதிகளும் முன்னாள் தமிழ்த் தேசிய வாதிகளும் அடங்குவார்கள். இதனை பேராசிரிய வக்கிரத்தனம் என்பதா அல்லது ஒரு கண்ணில் வெண்ணை மறு கண்ணில் சுண்ணாம்பு என்பதா?
பேராசிரியர்கள் நுஃமானும் மௌனகுருவும் பாநாடகங்கள் பற்றி எழுதியிருக்கிறார்கள். பேராசிரியர் நுஃமான் சிறுவர்கட்கான பாநாடகங்கள் பற்றியும் எழுதியிருக்கிறார். என்றாலும் அவருக்குப் பேராசிரியர் சிவசேகரம் பல வேறு செய்யுள் வடிவங்களையும் கூத்துச் சந்தங்களையும் பயன்படுத்தி எழுதிய "கிட்கிந்தை" பற்றித் தெரியாதா? "பாட்டுங் கூத்தும்" என்ற தலைப்பில் வெளிவந்த சிறுவர்கட்கான பாநாடக நூல் பற்றித் தெரியாதா? அவை பல முறை லண்டனில் மேடையேறியதும் கொழும்பில் மேடையேற்றப்பட்டதும் தொடர்ந்தும் மேடையேறி வந்ததும் தெரியாதா? பேராசிரியர் மௌனகுருவுக்கும் பேராசிரியர் சிவசேகரத்தின் சிறுவர் நாடகங்கள் பற்றித் தெரியாதா? மொழி பெயர்ப்பு நாடகங்கள் பற்றிப் பேசுகிற போதும் நூல்வடிவம் பெற்ற பேராசிரியர் சிவசேகரத்தின் நாடகங்கள் பற்றியோ பாலேந்திரா மேடையேற்றிய பிற தமிழாக்க நாடகங்கள் பற்றியோ பேராசிரியர் மௌனகுருவுக்கு எழுத இயலவில்லை என்றால் அதற்கான காரணம் அறியாமையாக இருக்க முடியாது. இதனை பேராசிரிய வக்கிரத்தனம் என்பதா அல்லது ஒரு கண்ணில் வெண்ணை மறு கண்ணில் சுண்ணாம்பு என்பதா? இந்தப் பேராசிரியப் பெருந்தகைகள் இரண்டு பேரும் சொல்ல மறந்த முருகையனுடைய நாடகம் ஒன்றும் இருக்கிறது. அவருடைய "வெறியாட்டு" என்ற நாடகம் வெற்றிகரமாக மும்முறை மேடையேறிய பின் யாழ்ப்பாணத்தில் நான்காம் மேடையேற்றம் நடவாதபடி தமிழ்த் தேசிய வாத போராட்ட இயக்கத் தலைமைக்கு அது பற்றிய பொய்த் தகவல் அனுப்பப்பட்டதால் நாடகம் தடை செய்யப்பட்டது. அதற்குப் பொறுப்பானவர்களில் இந் நாள் தமிழ்த் தேசியவாதிகளும் முன்னாள் தமிழ்த் தேசிய வாதிகளும் அடங்குவார்கள்.

இளங்கீரனின் நாவல்களை மிகைப்படுத்தி பேராசிரியர் கைலாசபதி இலக்கிய உலகில் உயர்த்தி வைத்தார் என்று முறைப்படுகிற செங்கை ஆழியான் அவரது இரண்டு நாவல்கள் ஈழத்து நாவல் துறைக்கு வலுச் சேர்த்ததாகவும் சொல்லியிருக்கிறார் இவர் இன்னொரு இடத்தில் ஏராளமான தமிழ் நாவல்களில் ஒரு சில ஒரு சில போக எல்லாமே சருகுகள் என்றும் சொல்லி வைத்திருக்கிறார். இதில் ஞானம் ஆசிரியர் சருகல்லாத ஒரு நாவலை எழுதியதாகச் சொன்ன புண்ணியத்திற்காகவே இந்த மேற்கோள் என நம்பலாம்.

ஈழத்தில் தலித் இலக்கியம் என்ற தலைப்பில் எழுதியிருக்கிற மா. ரூபவதனன் இலங்கையிலே தலித் இலக்கியம் என்ற முத்திரை இல்லாமல் சாதிய ஒடுக்கு முறைக்கு எதிரான காத்திரமான படைப்புக்கள் 1950கள் தொடங்கி வர்க்கக் கண்ணோட்டத்தில் வெளியாகி உள்ளன என்பதை விங்கிக் கொள்ள இயலாதவராகத் தெரிகிறார். முருகையனைப் போலி இலக்கியப் படைப்பாளர் என்று வலிந்து தாக்கியும் இருக்கிறார். அதற்கும் மேலாகச் சாதிய தீண்டாமை எதிர்ப்புப் போராட்டத்தையும் வக்கிரப்படுத்தி எழுதியுள்ளார். அவருக்கு சாதிப்பிரச்சனை தானாய்த் தீரும், சண்டை வேண்டாம் என்பவர்கள் யாரென்று தெரியாது. சாதி முறையின் வரலாறும் தெரியாது. சாதி முறைக்கும் சாதியத்துக்கும் ஆதரவாக நிற்கிறவர்கள் யாரென்றும் தெரியாது. அவர்கள் எல்லாரையும் விட்டு விட்டு யார் யாரெல்லாம் சாதியத்துக்கு எதிராகத் தளராது போராடி நிற்கிறார்களோ அவர்கள் மீது சேறு வீசுகிறார்.
வணிக நோக்கங்கள் பற்றி விளாசித் தள்ளியிருக்கிற சுதர்சன் அறிய வேண்டிய உண்மைகள் இருக்கின்றன. பதிப்பித்த புத்தங்களுக்கு நூலாசிரியர்கள் காசு தராததால் நட்டப்பட்ட நூல் வெளியிட்டாளர்கள் இருக்கிறார்கள். தொடர்ந்து நட்டப்பட்டு விரக்தியால் நூல் வெளியீட்டுத் துறையிலிருந்தே ஒதுங்கிப் போனவர்களும் இருக்கிறார்கள்.
மார்க்சிச எதிர்ப்பு என்கிற தொற்று வியாதிக்கு செ. சுதர்சனும் உள்ளாகியிருக்கிறார். கட்டுரைக்கு எவ்வகையிலும் பொருத்தமில்லாமல் "ஒரு காலத்தில் ஈழத்துப் புனைகதைத் துறைக்கும் வாசிப்புத் துறை க்கும் வித்திட்ட பொதுவுடைமைவாதிகள் பலர் இன்று வணிக நாயகர்களாக வடிவம் எடுத்துள்ளனர்" என்று வலிந்து சாடியிருக்கிறார். தடித்த எழுத்தில் இது அச்சிடப்பட்டிருக்கிறது. இது சுதர்சனுடைய கை வண்ணமா அல்லது இது போல பிற கட்டுரைகளிலும் தடித்த எழுத்துக்களைப் புகுத்தியிருக்கிற ஞானம் பத்திரிகைக் "குடும்பத்தின்" கை வண்ணமா?. சுதர்சனுக்கும் பேராசிரியர் சிவசேகரத்தைத் தெரியாதா? வணிக நோக்கங்கள் பற்றி விளாசித் தள்ளியிருக்கிற சுதர்சன் அறிய வேண்டிய உண்மைகள் இருக்கின்றன. பதிப்பித்த புத்தங்களுக்கு நூலாசிரியர்கள் காசு தராததால் நட்டப்பட்ட நூல் வெளியிட்டாளர்கள் இருக்கிறார்கள். தொடர்ந்து நட்டப்பட்டு விரக்தியால் நூல் வெளியீட்டுத் துறையிலிருந்தே ஒதுங்கிப் போனவர்களும் இருக்கிறார்கள். மணிமேகலைப் பிரசுரத்தின் வியாபாரி மாதிரி எல்லாரையும் முட்டாளாக்குகிறவர்களை விட்டுவிட்டு ஏன் யாரோ முன்னாள் இடதுசாரியை நினைத்து 'பல' பொதுவுடைமைவாதிகளை சுதர்சன் தாக்க வேண்டும்? இப்படி பொத்தம் பொதுவான தாக்குதல்களை விட்டு குறிப்பான விமர்சனங் களை முன்வைப்பது நல்லது. முழுத் தமிழினத்தையுமே விற்றுக் கொண்டிருக்கிற தமிழ்த் தேசியவாத இலக்கிய வியாபாரிகளைப் பற்றி அப்போது பேச வேண்டி வராதா? பழைமையும் ஆன்மீகமும் பேசி ஆலயங்கள் எழுப்பிக் காசு சம்பாதிக்கிற இலக்கியச் செம்மல்கள் பற்றியும் அப்போது பேச வேண்டி வராதா?

நடுநிலை பற்றி மிகவும் பேசிவருகிற ஒரு சஞ்சிகை ஞானம். இப்போது அதனுடைய நடுநிலையின் லட்சணம் பளபளவென்று ஜொலிக்கிறது.

புதிய பூமியில் வசந்தன் எழுதிய விமர்சனம்

Tuesday, October 7, 2008

இயற்பியலுக்கான நோபல் பரிசு




இந்த ஆண்டுக்கான இயற்பியலுக்கான நேபல் பரிசு 3 பேருக்கு கிடைத்துள்ளது. இவை யாவும் அணு பற்றியது (sub atomic ).

யப்பானை பிறப்பிடமாகவும் ஜக்கிய அமெரிக்காவை வசிப்பிடமாகவும் கொண்ட இய‌ற்பியல் பேராசிரியர் Yoichiro Nambu . இவருக்கு நேபல் பரிசு கிடைப்பதற்கான காரணம் "for the discovery of the mechanism of spontaneous broken symmetry in subatomic physics " (மன்னிக்க வேண்டும் இதை என்னால தமிழ் ஆக்க முடியவில்லை)

இவருடைய சுயவிபரம்



பிறந்தது 1921 யப்பானில் தலைநகரம் டோக்கியோ...

அமெரிக்கா பிரயாவுரிமை..

University of Chicago

இக்கே இவருடைய முடிவை ஆங்கிலத்தில் தருகிறேன்.

The fact that our world does not behave perfectly symmetrically is due to deviations from symmetry at the microscopic level

" ஒரு உண்மையான விசயம் என்னவென்றால் இந்த உலகத்தில் எதுவும் அச்சொட்டான சமச்சீரில்லை. காரணம் என்னவென்றால் சமச்சீர் என்பது விலத்தி நிற்க்கின்றது துணிக்கை மட்டத்தில் " (மொழி பெயர்ப்பில் பிழையிருந்தால் மன்னிக்கவும் மற்றும் திருத்தவும்).

இந்த நேபல் பரிசு அறிவித்த போது. அவர் துக்கத்தில் இருந்தார். இவருக்கான பரிசுத்தொகை சுமார் $1.4 மில்லியன் அமெரிக்க டோலர்.

மற்றாவர்கள் ஜப்பான் நாட்டை சேர்ந்தவர்கள்.

முதலாம்மவர் பேராசிரியர் Makoto Kobayas



இரண்டாம்மவர் பேராசிரியர் Toshihide Maskawa


இரண்டுபேருடைய பங்களிப்பு ஒன்று சார்ந்ததாகவே இருக்கின்றது. அதாவது "for the discovery of the origin of the broken symmetry which predicts the existence of at least three families of quarks in nature"

Makoto Kobayas, இவருக்கான நோபல் பரிசு 0.7 மில்லியன் அமெரிக்க டோலார்.

Toshihide Maskawa ,இவருக்கான நோபல் பரிசு 0.7 மில்லியன் அமெரிக்க டோலார்.

Monday, October 6, 2008

நேபாளம்: பெண்களின் போராட்டப் பங்களிப்பும் அரசியல் பிரதிநிதித்துவமும்

"எங்களுடைய பெண்கள் இயக்கம் ஆண்களுக்கு எதிரானதல்ல. அது ஒடுக்கு முறை நடைமுறைகளைக் கொண்ட நேபாள பழைமைவாத சமூகத்திற்கு எதிரானதாகும். இத்தகைய சமூகத்தில் 300 பெண்கள் பாராளுமன்றத்திற்கு வந்தாலும் அதனை மாற்றியமைக்க முடியாது. உண்மையான மாற்றம் போராட்டம் மூலமே சாத்தியமாகும்." இவ்வாறு நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் பெண்கள் இயக்கத்தின் அரசியல் நிர்ணயசபைக்குத் தெரிவான பெண் உறுப்பினர் ஒருவர் கூறினார்.

அண்மையில் நேபாளத்தில் இடம் பெற்ற அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தலில் சிறுபான்மை இனத்தவர் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பின்தங்கிய மக்கள் பிரிவினரின் பிரதிநிதிகள் பலர் வெற்றி பெற்றனர். குறிப்பாகப் பெண்களுக்குரிய பிரதிநிதித்துவம் மேற்படி சபையில் 33.21 வீதமாக உள்ளது. அதாவது 575 உறுப்பினர்கள் கொண்ட அரசியல் நிர்ணய சபையில் 191 பேர் பெண் பிரதிநிதிகளாவார். இவர்களில் 30 பேர் நேரடித் தேர்தல் மூலமும் மிகுதி 161 பேர் விகிதாசாரத் தேர்தல் அடிப்படையிலும் தெரிவாகியுள்ளனர். ஆனால் 1999ம் ஆண்டு பழைய பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பெண்கள் வெறும் 6 சதவீதம் மட்டுமே அதாவது 205 உறுப்பினர்கொண்ட பாராளுமன்றத்தில் 12 பேர் மட்டுமே பெண்களாக இருந்தனர்.

ஆனால் அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தலில் மாஓவாத கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்களாக 74 பேர் போட்டிக்கு நின்றனர். 39 பெண்கள் நேபாளக் காங்கிரஸிலும் 36 பேர் ஐக்கிய மாக்ஸிஸ லெனினிஸக் கம்யூனிஸ்ட் கட்சியிலும் 13 பெண்கள் மாதேசிக் கட்சியிலும் வேட்பாளர்களாக இருந்தனர். இத்தகைய பெண் வேட்பாளர்கள் பல முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தோற்கடித்து வெற்றி பெற்றனர். இவ்வாறு வெற்றி பெற்ற பெண் வேட்பாளர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் மாஓவாதக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களாவர்.

அவர்களில் ஒருவர் ஹகாற்றி மாகர் என்பவர். அவரது கணவர் முடியாட்சியை எதிர்த்த மாஓவாதிகள் நடாத்திய போராட்டத்தில் தியாகியானார். தனது கணவனது இறப்பிற்கு பின்பும் கைக் குழந்தையுடன் நேபாளத்தின் பல பிரதேசங்களிலும் சென்று மக்கள் யுத்தப் போராட்டப் பணிபுரிந்த ஒரு போராளியாவார். அவரைப் போன்ற பெண்களின் பிரதிநிதிகள் நேபாளத்தின் 12.5 மில்லியன் பெண்களுடைய உரிமைகளுக்கான பிரதிநிதிகளாக உள்ளனர். அவர் கூறுகையில் 33 வீதத்துடன் நின்றுவிடாது எதிர்காலத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் 50 வீதமாக உயர வேண்டும் என்றார்.

பெண்கள் பிரதிநிதித்துவம் என்பது வெறும் பதவிப் பிரச்சினை அல்ல. நடப்பில் இருக்கும் சமூக அமைப்பில் உள்ள பெண்கள் மீதான ஒடுக்கு முறைகள் உட்பட அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் எதிராகப் போராடும் கொள்கையையும் நடைமுறைகளையும் கொண்டிருக்க வேண்டும் என்பதே பிரதானமானதாகும்.

மேற்படி பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை இலங்கை, இந்திய நாடுகளுடன் ஒப்பிட்டுப்பார்த்தால் அது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு போன்றதாகும். குறிப்பாக இந்தியாவில் இதுவரை பெண்களுக்கான 33 சதவீத ஒதுக்கீடு சட்டமாக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஜனாதிபதி என்ற பொம்மைப் பதவிக்கு ஒருவரை நியமித்துவிட்டுத் தம்பட்டம் அடிக்கும் பிற்போக்கு நிலைதான் அங்கு காணப்படுகிறது. இங்கும் சிறிமாவோ, சந்திரிகாவைக் காட்டி பெண்களுக்கு அந்தஸ்து கிடைத்ததாகப் பெருமை பேசுவோர் உள்ளனர். ஆனால் நேபாளத்தின் பத்து வருட ஆயுதப் போராட்டமும் கிளர்ந்தெழுந்த ஐந்து பிரதான வெகுஜன எழுச்சிப் போராட்டங்களும் பெண்களின் பங்களிப்பைச் சாத்தியமாக்கிக் கொண்டன.

நேபாளத்தில் மாஓவாதக் கட்சியின் பெண்கள் இயக்கம் சகல நிலைகளிலும் ஒடுக்கப்பட்டு வந்த பெண்கள் மத்தியில் சமூக மாற்றம் நோக்கிய வெகுஜன அரசியல் வேலைகளை முன்னெடுத்து வந்ததன் விளைவே அங்கு பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்க காரணமாகும்.

Saturday, October 4, 2008

இப்போது பேஸ்புக் (Facebook) தமிழில்


நண்பர்களை இணைக்கின்ற வலையில் பேஸ்புக்கும் (Facebook) ஒன்று. இது இப்பொழுது தமிழில் மொழிமாற்றப்பட்டு (முதலாம் கட்டத்தை தாண்டி) பாவனைக்கு விடப்பட்டுள்ளது. இப்பொழுது இரண்டாம் கட்டத்தின் வாக்களிப்புக்காக விடப்பட்டுள்ளது.

இது பற்றி ஆர்வம் உள்ளோர் உங்களாலான பங்களிப்பை செய்யலாம்.

Monday, September 22, 2008

புரோட்டன் மோதலுக்கு நடந்தது என்ன!


பொதுவாக திரவ நிலை நைதரசன் குளிருட்டும் ஊடகமாக பாவிக்கப்படுகிறது. இது அண்ணளவாக -200 செல்சியஸ். ஆனால் CERN இல் திரவ நிலை ஹீலியம் (-271 செல்சியஸ்) குளிருட்டும் ஊடகமாக பாவிக்கப்படுகிறது. இதற்கு இரு முக்கிய காரணங்கள் இருக்கின்றது. ஒன்று பூச்சியத்தடை கடத்தியை(super conductivity) உருவாக்குதல், மற்றையது பரிசோதனையில் உருவாக்கும் வெப்ப சக்தியை சமப்படுத்துதல்(வெப்ப நிலையை -271 செல்சியஸ் (அண்ணளவாக 1.7 கெல்வின்)) .



திரவ நிலை ஹீலியத்தில் ஏற்பட்ட ஒழுக்குதான் பிரச்சனைக்கு காரணம். அது பற்றி ஒரு செய்தி தான் இது.

ஜெனீவா: "Big Bang" மூலம் எப்படி நமது அண்டம் (யுனிவர்ஸ்) தோன்றியது என்பதைக் கண்டறியும் நம்பிக்கையோடும், இந்த சோதனையால் உலகமே அழிக்கப் போகிறது என்ற கூக்குரலுடனும் ஆரம்பிக்கப்பட்ட புரோட்டான் சிதைப்பு ஆராய்ச்சிக்கு பிரேக் விழுந்துவிட்டது.

புரோட்டான்களை சிதைக்கும் Large Hadron Collider (LHC) கருவில் பெரிய ரிப்பேர்.

ஜெனீவாவுக்கு அருகே 27 கி.மீ. சுற்றளவில் பூமிக்கு அடியே அமைக்கப்பட்டுள்ள இந்த மாபெரும் கருவியில் புரோட்டான்களை சிதறடிக்கும் சோதனைகள் இரு இடங்களில் நடக்கின்றன.

LHCல் 13.5 கி.மீ இடைவெளியில் அமைந்துள்ளன அட்லஸ், CMS என்ற இரு கருவிகள். LHCல் புரோட்டான்கள் எதிரெதியே பாய்ச்சப்பட்டு மோதி சிதறும்போது என்ன நடக்கிறது என்பதை ரிஜிஸ்டர் செய்யும் கருவிகள் தான் இவை.

கிட்டத்தட்ட 15 ஆண்டுகால கட்டுமானத்துக்குப் பின் கடந்த 10ம் தேதி இந்தக் கருவிகள் இயக்கப்பட்டன. முதல் கட்டமாக கடிகாரச் சுற்றில் புரோட்டான் கதிர்வீச்சுகள் செலுத்தப்பட்டன.

இந்த கதிர்வீச்சு ஒளியின் வேகத்தை எட்டிப் பிடித்தபின் எதிர் திசையில் இன்னொரு புரோட்டான் கதிர்வீச்சை செலுத்தி மோத வைக்க இருந்தனர்.

இந்த கதிர்வீச்சை செலுத்துவது, அதற்கு ஒளியின் வேகத்தைத் தருவது ஆகிய வேலைகளைச் செய்வது மாபெரும் மின் காந்தங்கள் (Super conducting electro magnets).

புரோட்டான்கள் மோதலின்போது பெரும் அளவில் வெப்பம் உருவாகும் என்பதால் இந்த 27 கி.மீ. தூரச் சுற்றளவிலும் எல்லா கருவிகளிலும் வெப்ப நிலையை மைனஸ் 271.30 டிகிரி செல்சியசுக்குக் கீழ் வைத்திருக்க வேண்டிய கட்டாயம். அந்த வேலையைச் செய்வது ஹீலியம்.

புரோட்டான் சோதனை ஆரம்பித்த ஒரு வாரத்தில் மின் காந்தங்களுக்கு இடையிலான மின் இணைப்பில் கோளாறு ஏற்பட்டுவிட்டது. இதனால் ஏற்பட்ட மின் பொறியால் ஹீலியம் வாயுவை கொண்டு செல்லும் பைப்புகள் சேதமடைந்துவிட்டன.

இதனால் ஹீலியம் வெளியேறி வெப்ப நிலை தாறுமாறாக அதிகரித்துவிட்டது. இந்த நிலையில் இந்தச் சோதனையைத் தொடர்வது ஆபத்து என்பதால் LHCன் செயல்பாடு முழுமையாக நிறுத்தப்பட்டுவிட்டது.

பைப்பில் அடைப்பை சரி செய்துவிட்டு திரும்பவும் LHCயை ஆன் செய்ய வேண்டியது தானே என்கிறீர்களா?. அது அவ்வளவு எளிதல்ல.

முதலில் இந்த 27 கி.மீ. சுற்றளவு கொண்ட LHCயை சுற்றுப்புற வெப்ப நிலைக்குக் கொண்டு வர வேண்டும். இந்த 27 கி.மீ. சுற்றளவிலும் வெப்ப நிலையை room temperatureக்கு கொண்டு வரவே சில வாரங்கள் பிடிக்குமாம்.

அதன் பின்னர் மின் காந்தங்களுக்கு இடையிலான மின் இணைப்புகளை சரி செய்து, ஹீலியம் குழாய்களை சரி செய்து, மீண்டும் ஹீலியத்தை குழாய்களில் அடைத்து LHCயை இயக்க 2 மாதங்களாவது ஆகும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

ஒவ்வொரு பொருளும் அணுவால் ஆனது. அந்த அணு நியூட்ரான், புரோட்டான், எலெக்ட்ரானால் ஆனது. இந்த புரோட்டானும், நியூட்ரானும், எலெக்ட்ரானும் குவார்க், பெர்மியான், குளுயான்ஸ், இத்யாதி.. இத்யாதியால் ஆனவை.

அப்போ குவார்க், பியான், பெர்மியான், குளுயான்ஸ், மற்றவை எல்லாம் எதனால் ஆனவை..?. Higgs Boson என்ற பார்ட்டிகிளால் ('கடவுளின் துகள்கள்') ஆனது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

இது தான் அணுவுக்கும் பொருட்களுக்கும் 'நிறை'யை (Mass) தருகிறது என்கிறார்கள். (ஒரு பொருளின் எடை மைனஸ் அதன் மீதான புவி ஈர்ப்பு சக்தி தான் அதன் நிறை)

மேலும் குவார்க், பியான், பெர்மியான், குளுயான்ஸ் எல்லாம் உருவாவதற்கு முன் என்ன இருந்திருக்கும்..?. அதை 'பிளாஸ்மா ஸ்டேஜ்' என்கிறார்கள். அதி வெப்ப வாயு நிலையில் அணுக்கள்... இது தான் பிளாஸ்மா.

ஏன் அந்த பிளாஸ்மா குவார்க், பியான், பெர்மியான், குளுயான்ஸ் ஆக மாறி.. புரோட்டானாகி.. அணுவாகி.. மூலக்கூறாகி 'எல்லாமுமாய்' ஆனது என்பதைத் தான் LHC மூலம் கண்டறிய முயல்கிறார்கள்.

இப்போது ஹீலியம் லீக் இந்த சோதனைகளுக்கு இடையூறாகியிருக்கிறது.. முதலில் இதை சிறிய பிரச்சனையாகத் தான் நினைத்தார்களாம். ஒரு வாரத்தில் மீ்ண்டும் LHC ஓட ஆரம்பிக்கும் என்றார்கள்.

ஆனால், உள்ளே நுழைந்து பார்த்த பின்னர் தான் பிரச்சனை 'யுனிவர்ஸ்' அளவுக்கு இல்லாவிட்டாலும் கொஞ்சம் பெரிதானது தான் என்பது தெரிந்ததாம்.


நன்றி http://thatstamil.oneindia.in/news/2008/09/22/world-small-accidents-mean-big-trouble-for-supercollider.html

Saturday, September 13, 2008

இன ஒடுக்கலும் போராட்டமும் அமெரிக்க அக்கறையும்

(சோஷலிஸ நாடுகளிலும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான நாடுகளிலும் நிகழ்ந்த அமெரிக்கக் குறுக்கீடுகள் பலவும் தேசிய இனங்களினதும் தேசங்களதும் விடுதலைப் போராட்டங்கட்கு ஆதரவு என்ற தோற்றத்தைப் பெற்றன. ஆனால் விடுதலைப் போராட்டங்கட்குக் குழிபறிப்பதற்கும் தேசிய சிறுபான்மையினங்கள் தூண்டிவிடப்பட்டன. தமிழர் மீதான இன ஒடுக்கலுக்கும் போருக்கும் உதவி வந்த அமெரிக்காவின் தேவை, இலங்கை மீதான பூரண ஆதிக்கம் மட்டுமே.)

ஏகாதிபத்தியத்துக்குத் தேசிய இனப்பிரச்சினை தொடர்பாக என்ன நிலைப்பாடு இருக்கிறது என்ற கேள்விக்குத், தேசங்களதும் தேசிய இனங்களதும் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான ஒரு விடை தேடுவது கடினம். ஏகாதிபத்தியம் தேசிய விடுதலைப் போராட்டங்களை ஆதரிக்கிறதா என்ற கேள்விக்கும் திட்டவட்டமான ஒரு விடை கிடையாது. கொலனிய யுகத்திலிருந்தே தேசங்கள் மீதான ஒடுக்குமுறை பற்றிய கேள்விக்கான திட்டவட்டமான ஒரு விடையை ஒடுக்கப்படுகிற தேசத்தின் நோக்கிலோ ஒடுக்குகிற தேசத்தின் நோக்கிலோ கூடப் பெற இயலாமலே இருந்தது.

ஒவ்வொரு ஏகாதிபத்திய நாட்டினதும் (உண்மையில் அந்த நாட்டின் உண்மையான எசமானர்களான ஏகபோக முதலாளிய நிறுவனங்களதும்) நலன்களை முன்வைத்தே அந்த நாட்டின் ஆட்சியாளர்கள் தமது உள்நாட்டு, அயல்நாட்டுக் கொள்கைகளை வகுக்கின்றனர்.

கொலனிய யுகத்தில் ஒரு கொலனிய வல்லரசு இன்னொரு கொலனிய வல்லரசின் கீழுள்ள நாட்டில் விடுதலைப் போராட்டங்களை ஆதரித்திருக்கிறது. ஆனால் அந்த ஆதரவுக்கு இரண்டு நோக்கங்கள் இருந்தன. ஒன்று தனக்குப் போட்டியாயிருக்கிற வல்லரசைப் பலவீனப்படுத்துவது. மற்றது கொலனி ஆட்சிக்குக் கீழ்ப்பட்ட நாட்டைத் தன் வசமாக்குவது. இவ்வாறான உலக ஆதிக்கத்திற்கான போட்டியே இரண்டு உலகப் போர்கட்குக் காரணமாயிருந்தது. இன்று ஏகாதிபத்தியங்களிடையே மேலாதிக்கத்திற்கான அப்படிப்பட்ட வெளிவெளியான மோதல் ஒன்றைக் காண முடியாது. ஏனெனில் அமெரிக்காவே உலகின் மிக வலிய மேலாதிக்க வல்லரசாக உள்ளது. நேரடியான கொலனி ஆட்சியின் இடத்தை நவகொலனியம் என்னும் பொருளியல் வழியிலான ஆதிக்கம் பிடித்துக் கொண்டுள்ளது. கொலனிய ஆட்சியாளரின் படைகள் செய்த காரியத்தை உள்ளுர் அரசின் படைகள் செய்கின்றன. நிலைமைகள் கட்டுக்கடங்காமற் போகும் போது, அதாவது ஏகாதிபத்திய மேலாதிக்கத்திற்கு எதிரான சவால்கள் வலுப்படும் போது, மட்டுமே ஏகாதிபத்தியம் தனது படைகளைப் பயன்படுத்துகிறது. முடிந்தால் அதையுங் கூட ஐ.நா. பாதுகாப்புச் சபையின் பேரில் செய்து கொள்கிறது.

இரண்டாம் உலகப் போரின் பின்பு மாறி மாறி எங்காவது பேரழிவு மிக்க போர்கள் நடைபெற்றுக் கொண்டே இருந்து வந்துள்ளன. கொலனிய மேலாதிக்கத்திற்கு எதிரான போர்களும் அந்நிய ஆக்கிரமிப்புக்கும் மேலாதிக்கத்திற்கும் எதிரான போர்களும் அவற்றில் முக்கியமான ஒரு பகுதியாவன. உள்நாட்டு யுத்தங்கள் அதேயளவுக்கு முக்கியமானவையாக இருந்து வந்துள்ளன. இவற்றியெல்லாம் ஏகாதிபத்தியம் குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியம் ஏதோ வகையில் ஒரு முக்கியமான பங்கு வகித்துள்ளது. சோவியத் யூனியன் வலிமையும் பின்னைக்காலத்தில் அமெரிக்க மேலாதிக்கத்திற்கு எதிரான ஒரு உலக வல்லரசாகத் தன்னை நிலைநிறுத்தும் முனைப்பில் சோவியத் யூனியன் மூன்றாம் உலகில் மேலாதிக்கப் போக்கில் நடந்து கொண்டதுவும் சோவியத் யூனியனுக்கு எதிரான அமெரிக்கக் குழிபறிப்பு வேலைகளைத் தீவிரப்படுத்தியது. அந்த நோக்கத்திற்காகவும் பொதுவாகவே சோஷலிஸ ஆட்சிகள் நிலவிய நாடுகளிலும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஆட்சிகள் இருந்த நாடுகளிலும் பலவாறான குறுக்கீடுகள் நிகழ்ந்தன. இவற்றுட் பல தேசிய இனங்களினதும் தேசங்களதும் விடுதலைக்கான போராட்டங்கட்கு ஆதரவு என்ற தோற்றத்தைப் பெற்றன. விடுதலைப் போராட்டங்கட்குக் குழிபறிப்பதற்குக் கூடத் தேசிய சிறுபான்மையினங்கள் தூண்டிவிடப் பட்டுள்ளன.

சோவியத் யூனியனின் ஆதிக்கத்திற்கு எதிராக நேரடியாகவோ மறைமுகமாகவோ அமெரிக்கா குறுக்கிட்ட மூன்று நிகழ்வுகளைப் பார்ப்போம். ஒன்று அங்கோலா. அங்கே விடுதலை இயக்கங்களாகத் தொடங்கிய இரண்டு அமைப்புக்களிடையிலான மோதல் விடுதலையின் பின்பு உள்நாட்டுப் போராக இருபது ஆண்டுகட்கு மேலாகத் தொடர்ந்தது. சோவியத் சார்பான அரசாங்கத்திற்கு எதிராக அமெரிக்காவினதும் நிறவாத தென்னாபிரிக்காவினதும் நேரடி ஆதரவுடன் யோனாஸ் சவிம்பியின் தலைமையில் தொடர்ந்த கிளர்ச்சியில் சோவியத் யூனியனுக்கு ஆதரவாகக் கியூபாவின் குறுக்கீடு அரசாங்கத்திற்கு மக்கள் ஆதரவை வென்றெடுத்ததால் அமெரிக்க நோக்கங்கள் நிறைவேறவில்லை. எதியோப்பியாவின் கொடுங்கோலனான மன்னன் ஹெய்லே சலாசியைத் தூக்கி எறிந்து மிரியம் மெங்கிற்சு தலைமையிலான ராணுவ ஆட்சி வெளியே இடதுசாரித் தோற்றங்காட்டினாலும் வேகமாகவே ஒரு அடக்குமுறை ஆட்சியாக மாறி கொலனிய ஆட்சியாளரால் எதியோப்பியாவுக்குள் சேர்க்கப்பட்ட எரித்திரியாவை கொடிய தேசிய இன ஒடுக்கலுக்கு உட்படுத்தியது. எரித்திரிய மக்களின் விடுதலைப் போராட்டத்துக்கு அமெரிக்கா வழங்கிய ஆதரவின் நோக்கம் வஞசகமானது. எதியோப்பியாவில் ஒரு ஆட்சிக் கவிழ்ப்பு நடந்த பின்பு, எரித்திய மக்களுக்கு ஆதரவு வழங்கிய அமெரிக்கா எரித்தியா மீது குண்டு வீசுவதற்கு எதியோப்பியாவுக்கு உதவியது. அமெரிக்காவின் ஆதரவுபெற்ற ஒரு விடுதலை இயக்கம் ஒரே நாளில் ஒரு பயங்கரவாதப் பிரிவினை இயக்கமாக உருமாறியது.

ஆஃப்கானிஸ்தானில் இருந்த நிலப்பிரபுத்துவக் கொடுங்கோலாட்சியைத் தூக்கி எறிந்து உருவான ஆட்சிக்கு அண்டை நாடான சோவியத் யூனியனின் ஆதரவு இருந்தது. ஆஃப்கானிஸ்தானின் பிற்போக்குச் சக்திகளைக் கொண்டு ஒரு ஆட்சிக் கவிழ்ப்பை நடத்த அமெரிக்கா இஸ்லாமிய மதவாத அரசியலை நாடியது. ஆஃப்கானிஸ்தானின் கேந்திர முக்கியத்துவங் காரணமாக அதன் மீது தனது செல்வாக்கைக் கைவிட விரும்பாத சோவியத் யூனியன் முதலில் ஆஃப்கானிய அரசாங்கத்திற்கு இராணுவ உதவி வழங்கியது. பின்பு நேரடியாகவே தனது படைகளை அங்கு அனுப்பியதன் மூலம் அமெரிக்காவும் இஸ்லாமிய தீவிரவாதிகளும் வைத்த பொறியிற் சிக்கிக் கொண்டது. ஆஃப்கானிஸ்தானில் சோவியத் குறுக்கீட்டின் விளைவாக ஏற்பட்ட ராணுவத் தோல்வி உள்நாட்டிலும் வெளியிலும் சோவியத் ஆட்சியாளர்கட்குக் கிடைத்த ஒரு பெரிய அடியாக அமைந்தது. சோவியத் யூனியனின் உடைவைத் துரிதப்படுத்திய ஒரு முக்கிய நிகழ்ச்சி ஆஃப்கானிஸ்தானின் உள்நாட்டுப் போர் எனலாம். அங்கு, தான் ஆட்சிக்கு வர உதவிய மதவாத ஆட்சியைத் தன்னாற் கட்டுப்படுத்த இயலாத நிலையில், தான் ஊட்டி வளர்ந்த தலிபானிகளை ஆட்சியிலிருந்து விரட்ட அமெரிக்கா எடுத்த முயற்சிகள் இன்று ஒரு போராகி அமெரிக்காவை அல்லற்படுத்துகின்றன.

இவை அமெரிக்கா விடுதலைப் போராட்டங்களுக்கு வழங்குகிற 'ஆதரவின்" உண்மையான வடிவத்தை விளக்கப் போதுமானவையல்ல என்று யாரும் நினைத்தால் யூகோஸ்லாவியாவைப் பிளவுபடுத்திச் சிதைத்துப் பிரித்துப் போடுவதில் அமெரிக்கா தேசியவாதத்தை எவ்வாறு பயன்படுத்தியது என்பதைக் கவனிக்கலாம். அங்கு அமெரிக்கா விரும்பாத ஆட்சி எஞ்சியிருந்த சேர்பியாவினுள் அல்பானிய தேசிய இனத்தவர் செறிவாக வாழும் கொசொவோவினுள் பிரிவினைவாதச் சக்திகளை சி.ஐ.ஏ. மூலம் அமெரிக்கா ஆயுதபாணிகளாக்கி ஒரு இன மோதலுக்கும் இனப் படுகொலைகட்கும் வழி செய்தது.

தேசிய இன ஒடுக்கலை மிகக் கொடிய முறையில் அனுபவிப்பவர்கள் குர்திய இனத்தவர். துருக்கியின் தெற்கிலும் ஈராக்கின் வடக்கிலும் ஈரானின் வடமேற்கிலும் மூன்று நாடுகளிடையே குர்திய பிரதேசம் பிரிவுண்டுள்ளது. ஒரு சிறு பகுதியினர் சிரியாவின் வடகிழக்கில் வாழுகின்றனர். சதாம் ஹ{ஸேன் குர்திய மக்களைக் கொடுமைப்படுத்தியது பற்றி நமக்கு நிறையவே சொல்லப்பட்டாலும் அமெரிக்காவின் மிக நெருங்கிய கூட்டாளி நாடான துருக்கியிலேயே குர்திய மக்களின் மீதான ஒடுக்குமுறை மிகக் கொடுமையானது. அங்கு தான் விடுதலைப் போராட்டம் மிக வலிமைபெற்றுக் காணப்பட்டது. துருக்கிய குர்திய விடுதலைப் போராட்டத்தை நசுக்க அமெரிக்காவும் இஸ்ரேலும் மிகவும் உதவியுள்ளன. அதே வேளை சதாம் ஹ{ஸேன் 1990க்குப் பின்பு அமெரிக்காவின் எதிரியாக உருமாறிய பின்பு அமெரிக்கா சதாம் ஹ{சேனுக்கு எதிராக ஈராக்கிய குர்திய தேசியவாதிகளைப் பயன்படுத்தியது. இன்று ஈராக்கில் அமெரிக்காவின் அதி நம்பகமான நட்புச்சக்தியாக குர்திய தேசியவாதிகள் இருக்கின்றனர். எனினும் ஒரு தனியான ஈராக்கிய குர்திஸ்தானோ ஒரு பூரண சுயாட்சியோ உருவாகுமானால் இது துருக்கியினுள் சிக்கல்களை உருவாக்கும். எனவே ஈராக்கில் அமெரிக்காவுக்கு முழு ஆதரவான ஒரு சூழ்நிலை இல்லாதளவில் குர்திய தேசியவாதிகளை அமெரிக்கா அரவணைக்கும். ஆனால் குர்திய அதிகாரம் துருக்கியின் குர்திய இன ஒடுக்கலுக்கு ஒரு சவாலாக அமையுமளவுக்கு வளர அமெரிக்கா அனுமதிக்க மாட்டாது.

இன்னொருபுறம் தனது சர்வதேசக் காய் நகர்த்தல்கட்கு வசதியாகவும் உலகமயமாதல் திட்டத்திற்கு உடன்பாடாகவும் அமைகிற ஒவ்வொரு சூழ்நிலையிலும் தேசிய இன ஒடுக்கலுக்கு அமெரிக்காவின் பூரண ஆசிகள் இருந்து வந்துள்ளன. ஆக மிஞ்சினால் மனித உரிமை மீறல்கள் பற்றிய மெலிதான கண்டனங்கள் அல்லது கவலை தெரிவிப்பதற்கு மேலாக எதையும் கேட்க இயலாது. முன்னைய இந்தோனீசிய ராணுவ ஆட்சி கிழக்கு திமோரிலும் அச்சே மாகாணத்திலும் நடத்திய வெறியாட்டங்கள் பற்றிய அமெரிக்க மௌனம் முதல் இலங்கையின் தேசிய இன ஒடுக்கல் வரையும் இதற்கான உதாரணங்கள் பல உள்ளன.

இன்று இலங்கையில் அதிகாரப்பரவலாகத்தையும் அமைதியான தீர்வையும் வற்புறுத்தி இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான சில விமர்சனங்கள் வெளிவெளியாக மேலை நாடுகளிலிருந்தும் சாடைமாடையாக அமெரிக்காவிலிருந்தும் வருவதையிட்டுத் தமிழ் மக்களிடையே புதிய எதிர்பார்ப்புக்களை உருவாக்குகிற ஒரு போக்கைத் தமிழ் ஊடகங்களிற் காண்கிறோம். எனினும் தமிழ் மக்கள் மிக மோசமான விமானக் குண்டுவீச்சுக்கும் எறிகணைத்தாக்குதல்கட்கும் உட்பட்ட ஒரு வருடக்காலத்தில் நடந்த இடப்பெயர்வுகளும் உயிரிழப்புக்களும் பற்றி அமெரிக்காவோ ஐரோப்பிய நாடுகளோ இந்தியாவோ ஏன் எதுவுமே செய்யவில்லை என்பதற்கான காரணங்களையும் நாம் ஆராய வேண்டும். ஆனால்; அமெரிக்க ராஜாங்க திணைக்களம் மனித உரிமை மீறல்கள் பற்றி வெளியிட்ட அறிக்கையில் இலங்கை பற்றி கடுந்தொனியில் குறிப்பிட்டுள்ளமை கூட மக்கள் சார்பு நிலைப்பாடு எனக் கொள்ள முடியாது. அமெரிக்காவின் ஆதிக்க நோக்கமே மனித உரிமை மீறல்களின் மீதான கண்டனத்திற்குப் பின்னால் படிந்து காணப்படுகின்றமை பிரிந்துப் பார்க்கப்பட வேண்டியவையாகும்.

அமெரிக்கா ஈழத் தமிழரின் சுயநிர்ணயத்தை எந்த நிலையிலும் ஆதரிக்கவில்லை. மாறாக, 25 ஆண்டுகளாகத் தமிழர் மீதான இன ஒடுக்கலுக்கும் போருக்கும் உதவிய அமெரிக்காவின் இறுதித் தேவை, இலங்கை மீதான பூரண ஆதிக்கம் மட்டுமே. அது உடனடியாக இயலாத போது இடைக்காலத்தில் இந்தியாவின் ஒத்துழைப்புடன் கூடிய மேலாதிக்கம் இயலுமாகலாம். விடுதலைப் புலிகள் ஒரு வலிய ஆயுதப் போராட்டச் சக்தியாகவும் அரசாங்கத்துக்குச் சவாலாகவும் இருப்பது அமெரிக்காவுக்கு உடன்பாடானதல்ல. இலங்கை அரசாங்கம் அமெரிக்காவுடன் முரண்டுபிடித்தால் அல்லது அதன் உலகமயமாதல் கொள்கைக்குக் கேடான முறையில் நடந்து கொண்டால் விடுதலைப் புலிகளைப் பற்றிச் சிறிது பரிவுடன் நடந்து கொள்ளுவது போல ஒரு தோற்றங் காட்டப்படும். அதற்கும் மேலாக அமெரிக்காவிடமிருந்தோ எந்த மேலாதிக்க வல்லரசிடமிருந்தோ தமிழ்த் தேசிய இனமோ அல்லது ஏனைய தேசிய இனங்களோ எதையும் எதிர்பார்க்க நியாயமில்லை.

Thursday, September 11, 2008

குறிப்புகளாய் சில உலக நடப்புக்கள்: பயங்கரவாதம், தற்கொலைகள், பொலிவியா

பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை

பிலிப்பைன்ஸில் தனிநாட்டுக்காக போராடி வரும் மின்தானாவோ (Mindanao) போராளிகளுக்கும் அப்பிரதேச மக்களுக்கும் எதிராக கொடூரமான தாக்குதல்கனை பிலிப்பீனிய இராணுவம் நடத்தி வருகிறது. பிலிப்பீனியப் பத்திரிகைகள் இந்தத் தாக்குதலில் அமெரிக்கப் படைகளும் பங்குகொண்டதாக தெரிவித்திருந்தன. இது குறித்து கருத்துத் தெரிவித்த பிலிப்பைன்ஸில் உள்ள அமெரிக்கத் தூதரகம் "பயங்கரவாதத்தை ஒழிப்பதுதான் எங்களின் இலக்கு" என்றும் "தற்பாதுகாப்புக்காக தாக்குவது பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை" என்றும் சொல்லியிருந்தது. இத்தாக்குதல்களில் மின்தானாவைச் சேர்ந்த அப்பாவி மக்களே இலக்கு வைக்கப்பட்டு கொல்லப்படுகின்றனர்.

யாரும் எங்கும் எப்போதும் கொல்லப்படலாம், பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை என்பதன் பெயரால்.


தற்கொலைகள் சொல்லும் உண்மை

தற்கொலை செய்து கொள்ளும் அமெரிக்கப் படைவீரர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 15 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. தனது ஏகாதிபத்திய ஆசைகளுக்காக உலகின் ஏனைய நாடுகளை அடக்கியாள ஆசைப்படும் அமெரிக்க அரசின் பேராசைக்கான பரிசாகவே இதைக் கொள்ள முடியும். உலகெங்கும் "ஜனநாயகம்" பற்றிப் பேசும் அமெரிக்கா தனது படைவீரர்களுக்கு உரிய வசதிகளை செய்து கொடுப்பதில்லை. வெளியே தெரிகின்ற பகட்டான அமெரிக்காவிற்குள்ளே இருப்பதல்லாம் மனித உரிமை மீறல்களும் சித்திரவதைகளுமே. வாய்திறந்து எதையும் பேச முடியாத அமெரிக்க படைவீரர்களால் செய்யக் கூடியது தற்கொலை மட்டும்தானா? என்பது ஒருபுறமிருக்க இந்தத் தற்கொலைகளின் பின்னால் இருக்கின்ற ஏழ்மையும் இங்கே கவனிப்புக்குள்ளாக வேண்டியது. சொந்த நாட்டு மக்களின் நலனையே கவனிக்காத அமெரிக்க உலக மக்களின் நலனுக்காக உலகெங்கும் போர் செய்கிறது.


யாருடைய நாடு

பொலிவிய அரசாங்கம் தனது நாட்டுக்குள் வரவிரும்பும் அமெரிக்கப் பிரஜைகள் விசா அனுமதி பெற்ற பின்னரே தனது நாட்டுக்குள் வர முடியும் என்று ஒரு புதிய சட்ட மூலத்தை நிறைவேற்றியிருக்கிறது. இதுவரை காலமும் பொலிவியாவிற்குள் வருவதற்கு விசா அனுமதி தேவையில்லை. நாட்டின் பாதுகாப்புக் கருதியும் நலன் கருதியும் இப் புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டிருப்பதாக பொலிவிய அரசாங்கம் தெரிவிக்கிறது. இப்புதிய நடைமுறையை வன்மையாக கண்டிக்கும் அமெரிக்க அரசு இவ்வாறான செயற்பாடுகளால் அமெரிக்க - பொலிவிய இராஜதந்திர உறவுகளில் பாரிய விரிசலை ஏற்படுத்தக் கூடும் என எச்சரித்திருக்கிறது. ஒரு நாட்டுக்குள் இன்னொரு நாட்டுப் பிரஜை விசா பெற்றுப்போவது தான் நடைமுறையாக உள்ளது. விசா இல்லாமல் ஒரு நாட்டுப் பிரஜை இன்னொரு நாட்டிற்குள் நுழைவது சட்டவிரோதம். வழமையிலேயே சட்டவிரோதமான செயற்பாடுகளைச் செய்யும் அமெரிக்கா, பொலிவிய தனது மாநிலங்களில் ஒன்று என்று நினைத்துக் கொண்டிருக்கின்றதோ என்னமோ.

Wednesday, September 10, 2008

புரோட்டான் 'மோதல்' சோதனை ஆரம்பம்! கடவுளின் துணிக்கை ?

ஜெனீவா: உலகே மிக ஆர்வமாக எதிர்நோக்கியிருக்கும் புரோட்டான் மோதல் சோதனை இன்று தொடங்கியது.



27 கிலோ மீட்டர் சுரங்கப் பாதைக்குள் அமைக்கப்பட்டுள்ள டனலில் முதல் புரோட்டான் கதிர்வீச்சு இன்று சோதனைரீதியில் பாய்ச்சப்பட்டது.

ஜெனீவாவுக்கு அருகே உள்ள CERN அணு ஆராய்ச்சி மையத்தில் இந்த சோதனை தொடங்கியது.

இந்த சோதனையால் உலகமே அழியப் போகிறது என்று கூக்குரல்கள் ஒரு பக்கம் எதிரொலிக்க இந்த முயற்சி வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளது.



இந்த சோதனையால் எந்த ஆபத்தும் வராது என்று நம் காலத்திய மாபெரும் இயற்பியல் விஞ்ஞானியாகக் கருதப்படும் ஸ்டீபன் ஹாக்கின்ஸ் கூறியுள்ளார்.

ஸ்டீபன் ஹாக்கின்ஸ், ஒரு தலைசிறந்த எடுத்துக்காட்டான ஒரு பொளதிகவியளார்

இந்த புரோட்டான் கதிர்வீச்சு கட்டுப்படுத்த முடியாத அளவுக்குப் போனால், அதிகபட்சமாக அது 27 கிலோ மீட்டர் வட்டப் பாதையில் அமைந்துள்ள Large Hadron Collider ஆய்வுக் கருவியைத் தான் சிதறடிக்கும். மற்றபடி பிளாக் ஹோல் எல்லாம் ஏற்பட்டுவிடாது என்று கூறியிருக்கிறார்.



அதே நேரத்தில் இந்த சோதனை மூலம் 'Higgs Boson' என்ற சப்-அடாமிக் பார்ட்டிக்கிளை கண்டுபிடித்துவிட முடியும் என CERN விஞ்ஞானிகளின் முயற்சி எந்த அளவுக்கு பலனளிக்கும் என்று தெரியவில்லை. ஆனால், மானுடத்தின் அடுத்தகட்ட வளர்சிக்கு இந்த சோதனை மிக மிக அவசியம்.

எல்லோரையும் போலவே நானும் இந்த ஆய்வின் முடிவுகளை தெரிந்து கொள்ள ஆர்வமாய் காத்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

இன்று இந்த சோதனைகள் தொடங்கினாலும் கூட புரோட்டான்கள் முழு வேகம் பிடித்து ஒன்றோடு ஒன்று மோதிச் சிதற பல மாதங்கள் ஆகும். ஒரு வருடம் கூட ஆகலாம் என்கிறார்கள்.

இன்றைய சோதனையில் புரோட்டான் கதிர்வீச்சு கடிகார சுற்றுக்கு எதிர்சுற்றில் பாய்ச்சப்பட்டது. இந்த கதிர்வீச்சு 27 கி.மீ. நீள Large Hadron Collider-ல் சரியாக பயணித்தால், அடுத்ததாக எதிர் திசையில் இருந்து இன்னொரு புரோட்டான் கதிர் பாய்ச்சப்படும்.

இன்று நடப்பது வார்ம்-அப் சோதனை தான். முழுமையான சோதனை 6 வாரத்தில் தொடங்கும்.

அப்போது எதிரெதிர் திசையில் தலா 2,808 புரோட்டான் கதிர்கள் எதிரெதிரே பாய்ச்சப்படும். அதாவது பல பில்லியன் புரோட்டான்கள் ஒன்றுடன் ஒன்று ஒளியின் வேகத்தில் மோதிச் சிதறும்.

அதன் பின்னர் தான் பிளாக் ஹோல் வருகிறதா அல்லது Big Bang தியரிப்படி உலகம் எப்படித் தோன்றியது என்பதற்கான விடையும் கடவுளின் அணுத் துகள்கள் என்று சொல்லப்படும் 'Higgs Boson' தெரிகிறதா என்பதும் தெரியும்.

நன்றி தட்ஸ்தமிழ் ஆசிரியர்

Tuesday, September 9, 2008

உலகின் மிக ஆபத்தானதும் சவால் நிறைந்ததுமான பெரும் அறிவியல் சோதனை!


உலகின் மிக ரிஸ்கியான மாபெரும் அறிவியல் சோதனை ஒன்று நாளை துவங்கப் போகிறது. இந்த சோதனையை எதிர்த்து உலகெங்கும் நடுக்கக் குரல்கள்.. உலகம் அவ்வளவு தான்.. அம்பேல் என கதற ஆரம்பித்துள்ளனர் 'டூம்ஸ் டே' (Doom's day) ஆசாமிகள்.

பிரான்ஸ்-சுவிஸ் எல்லையில் ஜெனீவாவுக்கு கொஞ்சம் பக்கத்தில் இந்தச் சோதனை நடக்கப் போகிறது. ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகம் (CERN) இந்த சோதனையை நடத்துகிறது.

ரொம்ப 'பில்ட்-அப்- கொடுக்கிறீர்களே.. அது என்ன சோதனை என்கிறீர்களா?. பெரு வெடிப்புக் கொள்கை (Big bang theory) சொல்கிறபடி உலகம் எப்படி உருவானது என்பதை கொஞ்சம் நடைமுறையாக சோதனை செய்து பார்க்கப் போகிறார்கள் விஞ்ஞானிகள்.

அதாவது புரோட்டான்களையும்(Proton) நியூட்ரான்களையும்(Neutron) அதி பயங்கர வேகத்தில் மோதவிட்டு வேடிக்கை பார்க்கப் போகிறார்கள். இதற்காக கிட்டத்தட்ட 300 அடி ஆழத்தில் 27 கி.மீ. தூரத்துக்கு வட்டமான சுரங்கம் அமைத்து அதற்குள் அக அணுத் துகளக்ள் (Sub Atomic Particles) (Proton, Neutron) மோதிக் கொள்ளும் Large Hadron Collider-LHC என்ற வட்ட வடிவ குழாயை அதற்குள் அமைத்திருக்கிறார்கள். இதற்காக 5.8 பில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளன ஐரோப்பிய நாடுகள். கிட்டத்தட்ட 5,000 விஞ்ஞானிகளின் கூட்டு முயற்சி இது.

கனரக இரும்பினால் செய்யப்பட்டு வலிமைப்படுத்தப்பட்ட சீமெந்து மற்றும் ஏகப்பட்ட ரசாயன, அணு கதிர்வீச்சை தாக்குப்பிடிக்கும் பாதுகாப்பு பூச்சுக்கள் கொண்டது இந்த Collider.

இது அணுக்களை பிளக்க உதவும் வழக்கமான Cyclotron மாதிரி தான். ஆனால், இதில் விஷேசம் என்னவென்றால் இதன் வேகம். இதுவரை உலகில் கட்டப்பட்ட Cyclotronகளை விட இது 7 மடங்கு அதிக சக்தி கொண்டது.

1,800 'மீ கடத்து (Super Conducting)' காந்தங்கள் புரோட்டான்களை ஒளியின் வேகத்தில் இந்த 27 கி.மீ. வளையத்தில் சுற்றவிடவுள்ளன. LHC தன் முழு வேகத்தை அடைந்தவுடன் புரோட்டான்களையும் நியூட்ரான்களையும் வினாடிக்கு 600 மில்லியன் முறை நேருக்கு நேர் மோத விடப் போகிறார்கள்.

அப்போது புரோட்டான்களில் 7 டிரில்லியன் (Trillion) எலெக்ட்ரான் வோல்ட்ஸ் அளவுக்கு 'சக்தி' உருவாகும். அப்போது ஏற்படும் 'சப் அடாமிக் லெவல்' மாற்றங்களை இந்த 27 கி.மீ. வட்டத்தில் பொறுத்தப்பட்டு்ள்ள ஆயிரக்கணக்கான உணரிகள்(Sensors) கிரகித்து அந்த விவரங்களை சூப்பர் கம்ப்யூட்டர்களில் பதிவு செய்யவுள்ளன.

கிட்டத்தட்ட 15 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஒரு மாபெரும் வெடிப்பில் இருந்து தான் (Big Bang) பூமி உள்பட Universe தோன்றியது என கருதப்படுகிறது. அப்போது இருந்த சூழலை இந்த 27 கி.மீ. வட்டத்தில் உருவாக்கிப் பார்க்கப் போகிறார்கள்.

இந்த வளையத்தில் புரோட்டான்கள் என்ன வேகத்தில் சுற்றி வரப் போகின்றன என்பதை இப்படி ஈசியாக சொல்லாம்... ஒரு வினாடியில் இந்த 27 கி.மீ. தூரத்தை புரோட்டான் 11,245 முறை சுற்றி வரும்.

இந்த அளவுக்கு வேகம் பிடித்த புரோட்டான்களை அப்படியே நேருக்கு நேர் மோத விடப் போகிறார்கள். இப்போது புரிகிறதா.. உள்ளே என்ன நடக்கப் போகிறது என்பது.

புரோட்டான், நியூட்ரான், எலெக்ட்ரான் ஆகிய 'சப் அடாமிக்' கூறுகளைக் கொண்டது தான் ஒரு அணு. குவார்க், பெர்மியான், குளுயான்ஸ் ஆகியவற்றால் ஆனது தான் ஒரு புரோட்டான்.

ஆக, LHCல் வைத்து அதிவேகத்தில் புரோட்டான்களை 'கொத்து புரோட்டோ' போடும்போது குவார்க், பெர்மியான், குளுயான்ஸ், மின் காந்த கதிர்வீச்சு, வெப்பம் என புரோட்டான்கள் சிதறும்.

மேலும் Higgs Boson என்று ஒரு சமாச்சாரம். இப்படி ஒரு சப்-அடாமிக் பார்ட்டிகிள் இருப்பதாக தியரியில் சொல்கிறார்கள். ஆனால், அதை யாரும் நிரூபித்ததில்லை. இதனால் இதை விஞ்ஞானிகள் 'கடவுளின் அணுத் துகள்' (God's particle) என்கிறார்கள். அப்படி ஒன்று இருந்தால் இந்தச் சோதனை வெளியில் கொண்டு வரலாம் என்கிறார்கள்.

ஆனால், இது மிக ஆபாயகரமான ஆராய்ச்சி என உலகம் முழுவதும் கடும் எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன. உலகத்தின் கதையே முடியப் போகிறது என்று கூட சிலர் கிளப்பிவிட்டுள்ளனர்.

இவ்வளவு வேகத்தில் சப் அடாமிக் அணுத் துகள்களை மோதச் செய்யும்போது கருந்துளை (Black Hole) கூட உருவாகிவிடலாம் என்கிறார்கள். Black Hole என்பது நம் அரசியல்வாதிகளின் வாய் மாதிரி. உள்ளே போனால் போனது தான் எதுவுமே வெளியே வராது.. ஒளி-ஒலி உள்பட. (கருந்துளை நேரத்தையும் கூட விழுங்கிவிடும்.. இது அதீதமான டெக்னிக்கல் சமாச்சாரம். மண்டையை ரொம்பவே குழப்பிக் கொள்ள வேண்டாம். மிகவும் ஆர்வம் இருந்தால் ஸ்டீபன் ஹாக்கிங்ஸ்சின் 'The brief history of Time' வாங்கிப் படியுங்கள்)

நமது அண்டத்தில் (Universe) ஏராளமான மண்டலங்கள், அதாவது கேலக்ஸிகள் (Galaxies) உள்ளன. நமது சூரியன், பூமி, கோள்கள் உள்ளிட்ட சூரிய குடும்பம் இருக்கும் மண்டலத்தின் பெயர் Milky way Galaxy (பால்வெளி மண்டலம்).

பல பில்லியன் சூரிய குடும்பங்கள் சேர்ந்தது ஒரு கேலக்சி. பல பில்லியன் கேலக்சிகள் சேர்ந்தது தான் யுனிவர்ஸ். இந்த யுனிவர்ஸ் தொடர்ந்து விரிவடைந்து கொண்டே போகிறது என்பது தான் மிக இன்ட்ரஸ்டிங்கான விஷயம்.

ஒரு சிறிய நிலக்கடலை சைசில் இருந்த யுனிவர்ஸ், Big bangல் வெடித்துச் சிதறி விரிவடைய ஆரம்பித்தது.. விரிவடையும்போது அதற்குள் உருவானவை தான் பூமி, கோள்கள், நிலாக்கள், எரிகற்கள், சூரியன்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய கேலக்சிகள்.

இன்னும் விரிந்து கொண்டே இருக்கும் அண்டத்தில் மேலும் மேலும் ஏராளமான கேலக்சிகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. கூடவே கருந்துளைகளும்.

இந்த கருந்துளைகள் ஒளி-ஒலியை மட்டுமல்ல, சூரியன்களைக் கூட விழுங்கி ஏப்பம் விடும் சக்தி கொண்டவை.

இதனால் தான் இந்த அதிவேக அக அணுப் பிளப்பு சோதனை ஆபத்தானது... இதனால் கருந்துளை உருவாகப் போகிறது.. அப்படி உருவானால் அது பூமியையே விழுங்கலாம் என அச்சம் கிளப்பியிருக்கிறார்கள்.

ஆனால், அப்படியெல்லாம் ஏதும் நடந்துவிடாது என்கிறார்கள் இந்த ஆராய்ச்சியை நடத்தும் CERN மையத்தின் விஞ்ஞானிகள்.

அப்போ, என்ன தான் நடக்கப் போகிறது என்று கேட்டால் பதில் வருகிறது..

'தெரியாது'

Higgs Boson! கடவுளே!

(கட்டுரையாளர் தட்ஸ்தமிழ் ஆசிரியர்)

நன்றி http://thatstamil.oneindia.in/news/2008/09/10/world-atom-smasher-starts-operation-to-probe-universes.html

Thursday, September 4, 2008

கடவுள் என்பது கற்பனையா, உண்மையா? - பரிசோதனை முடிவுகள்

புத்த மதம் சொல்கின்றது மற்ற மதங்கள் சொல்கின்ற கடவுள் என்ற விடயம் இல்லை என்று, அது ஒரு கற்பனை விடயம் என்று.

இந்து மதமும், ஏனைய மதங்களும் கடவுள் என்று பலவாறாக சொல்கின்றன. சரி விஞ்ஞான முறையில் இப்பிரச்சினையை அணுகினால் என்ன. அதற்கு ஒரே வழி பரிசோதனை செய்து பார்த்தால் தான் உண்டு.

மிக மிக அண்மைய பரிசோதனையொன்றின் முடிவுகள் இங்கே. (பதிவின் இறுதியில் முடிவுகள்)

கொழும்பு இந்து ஆலயம் மீது பௌத்த பிக்கு தலைமையிலான காடைக்கும்பல் தாக்குதல்

[வியாழக்கிழமை, 04 செப்ரெம்பர் 2008, 04:55 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்]
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு கிராண்ட்பாசில் உள்ள சிறீ முத்துமாரி அம்மன் ஆலயத்தை பௌத்த பிக்கு ஒருவர் தலைமையிலான காடைக்கும்பல் தாக்கி சேதமாக்கிள்ளது. இதில் ஆலயத்தின் முன்பக்க கோபுரமும் உட்பக்கத்தில் உள்ள விக்கிரகங்களும் சேதமடைந்துள்ளன.

இந்த இந்து ஆலயம் புனருத்தாரணம் செய்யப்பட்டு நேற்று புதன்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.
இந்நிலையில் இன்று அதிகாலை 2:00 மணியளவில் ஆலயத்துக்குச்சென்ற பௌத்த பிக்கு தலைமையிலான காடைக்கும்பல் ஆயலத்தை அடித்து நொருக்கி சேதமாக்கியுள்ளது.


இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய கிராண்ட்பாஸ் காவல்துறையினர் தாக்குதல் நடத்திய பௌத்த பிக்குவையும் மேலும் மூவரையும் கைது செய்துள்ளனர்.
கிராண்ட்பாஸ் கெமல் மாவத்தையில் அமைந்துள்ள சிறீ முத்துமாரி அம்மன் ஆலயப்பகுதியில் பெரும்பான்மையான தமிழ் மக்களே வாழ்ந்து வருகின்றனர்.


இந்த ஆலயத்துக்கு அருகில் பௌத்த கோவில் ஒன்றும் உள்ளது. இந்த பௌத்த கோவிலைச் சேர்ந்த பௌத்த பிக்குவே சிறீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பௌத்த பிக்கு சிறீ முத்துமாரி அம்மன் ஆயலத்தைச் சூழவுள்ள தமிழ் மக்களை அச்சுறுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பௌத்த பிக்கு பாலியல் வல்லுறவு உட்பட்ட வேறு பல குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக காவல்துறையினரால் விசாரணை செய்யப்பட்டு வந்ததாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

##################################################################################

எப்படியிருக்கின்றது. நாங்களெல்லாம் (என்னையும் சேர்த்துத்தான், நானும் ஒரு இந்து தான்) கடவுள் இருக்கு என்று நம்பி சிலையெல்லாம் செய்து, கோயில் கட்டி கும்பிடுறம், ஆனால் ஆருக்கு உண்மையான உண்மை தெரிஞ்சிருக்கு எண்டு பாருங்கோ. புத்த பிக்குவுக்கு தானே உண்மை தெரிஞ்சிருக்கு. ஏனெண்டால் புத்தர் அப்பிடி தானே சொல்லியிருக்கிறார். அதாலை தானே புத்த பிக்குவும், காடையர் கூட்டமும் ஒரு பயமும் இல்லாமல் வந்து உடைச்செறிஞ்சிருக்கினம்.

நாங்கள் கடவுள் உண்மை எண்டு நம்பிக்கொண்டு, அதுகளுக்கெல்லாம் எவ்வளவு பயப்பிடுறம், எவ்வளவு பணம், பொருளை அநியாயம் செய்யுறம். எவ்வளவு நேரத்தை வீணாக்கிறம்.

கடவுள் எண்டது கற்பனை எண்டதாலை தானே, சிவலிங்கம் இரண்டு துண்டாக போகும்வரைக்கும், முத்துமாரியம்மனின்ரை முகத்தை உடைக்கும் வரைக்கும், ஏன் அந்த புத்த பிக்கு பாலியல் வல்லுறவுகள் புரியும்வரைக்கும் ஒண்டுமே நடக்கேல்லை.

அதுக்குள்ளை வேற அதைத்தாறதுக்கு, இதைத்தாறதுக்கு என்டு அண்மையிலை பால்குட பவனியெல்லாம் எடுத்தவை. எங்கடை சனங்கள் எப்பதான் இப்பிடியான சம்பவங்களையெல்லாம் (மடுமாதா சொரூபம் உட்பட) தங்கடை நம்பிக்கைகளோடை தொடர்புபடுத்தி சிந்திக்கப்போகுதுகளோ!

அதுக்காக, நடந்த சம்பவம் சரியெண்டு நான் சொல்லவரவில்லை. புத்த மதத்தவர்கள் இந்து மதத்தவர்கள் மீது வெறுப்புக்கொண்டது, இந்தமாதிரி தாக்கினது பிழை. ஒருத்தரை ஒருத்தர் வெறுக்கவைக்கிறதிலை மதங்கள் பெரும் பங்காற்றுகின்றன. மதநூல்களே மற்ற மதத்தவரை 'விடாதே, பிடி, கொல்' என்று தானே சொல்கின்றன. சமூகத்தை பிளவுபடுத்துகின்றவேலைகளையும் இந்த மதங்கள் செய்கின்றன. ஆனால், இந்த மேற்படி சம்பவத்துக்கு, மதமல்லாமல், சிங்களவர்களுக்கு, இயல்பாகவே தமிழர்கள் மீதுள்ள வெறுப்பும் காரணமாகவிருக்கலாம். இனம் என்ற பரிமாணத்திலும் வைத்து சிந்திக்கவேண்டிய விடயம் இது. என்னவிருந்தாலும் கடவுள் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்காது தானே. பரிசோதனை முடிவு விளங்கினால் சரி.

உதவி:
புதினம்.

Monday, September 1, 2008

பாலியல் வன்புணர்வு, இயற்கையானது தானே!

இன்னும் பல புதிய (தேடியறிந்த) விடயங்களை உள்வாங்கி, இக்கட்டுரை மேலும், ஆதாரங்களுடன் செம்மைப்படுத்தப்படவுள்ளது. எனினும், ஒரு பொதுவான கருத்துருவைப்பெற்றுக்கொள்ள, இக்கட்டுரையை தொடர்ந்து நீங்கள் வாசிக்கலாம்.

பெரும்பாலும் பாலியல் வன்புணர்வு என்று வரும்போது, வன்புணர்வுக்கு உள்ளாகுபவர்கள் பெண்களாகவும், வன்புணர்வை மேற்கொள்பவர்கள் ஆண்களாகவும் இருப்பதை காணலாம். அதற்காக, ஒரேயடியாக, பாலியல் வன்புணர்வால் பாதிக்கப்படுபடுவது பெண்களே என்று சொல்லமுடியாது, ஏனென்றால் ஆண்களும் பெண்களால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படும் சம்பவங்களும் இடம்பெறுகின்றன, சிறிய அளவில், பெரும்பாலும் மேலை நாடுகளில். என்றாலும், பாலியல் வன்புணர்வுக்கு அதிகம் இரையாகுபவர்கள் பெண்களே.

ஒப்பீட்டளவில், பலியல் வன்புணர்வுக்கு பெண்கள் அதிகளவில் இரையாக்கபடுவதற்கு முக்கிய காரணம், ஒரு ஆணினால் ஒரு பெண்ணின்மீது நிகழ்த்தப்படும் வன்புணர்வில் கூட, அந்த பெண்ணினால் ஆணை உடல்ரீதியாக எதிர்த்துப்போரிட முடியாமையாகும். ஒரு ஆணையே எதிர்த்துப்போரிட முடியாத நிலை நிலவும்போது, ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்கள் பாலியல் வன்புணர்வில் ஈடுபடும்போது, பெண்ணொருத்தி ஒன்றுமே செய்யமுடியாதவளாகின்றாள்.

அத்துடன், சமூகரீதியாக, ஆண்களோடு ஒப்பிடுகையில், போரிடும் திறன்குறைந்தவர்களாகவும், கபடபுத்தி குறைந்தவர்களாகவும் வளர்க்கப்படுவதும் இன்னொரு காரணம். ஏனெனில் அநேக வன்புணர்வுகளில், ஆண்களால் பெண்கள் கபடத்தனமாக ஏமாற்றப்பட்டே வன்புணர்விற்கு உள்ளாக்கப்படுகின்றார்கள். அத்துடன், உயிரியல் பரிணாம (Biological Evolution) மாற்றத்தில் (இயற்கைத்தேர்வு - Natural Selection மூலம்) அடைந்துகொண்ட ஆண்பெண் உடல்ரீதியான வேறுபாடுகள் (இயல்பாக ஆணின் உடலமைப்பு, பெண்ணைவிட பலம்பொருந்தியதாக இருத்தல், உடலுறவில் பெண்கள் பெற்றுக்கொள்ளும் அந்தத்தில் (Receiving End) இருத்தல், பாலுறுப்புக்களின் அமைப்பு என்பன) ஆணினால் பெண்மீதான வன்புணர்வுகளை அதிகமாக்கியிருகின்றது.

சரி, இத்தகைய, பாரிய சமூககுற்றமாக கருதப்படுகின்ற, பாதிக்கப்படுபவருக்கு உடல்ரீதியாகவும், உளரீதியாகவும் பாதிப்புக்களை ஏற்படுத்துகின்ற, குற்றம் புரிந்தவரை சிறைக்குள் தள்ளக்கூடிய இந்த பாலியல் வன்புணர்வு என்ற நடத்தை இயற்கையானதா, அல்லது மனிதனால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்ற ஒரு நடவடிக்கையா?

இலகுவாக சொல்லப்போனால், மனிதனை மறந்துவிட்டு மற்ற விலங்கினங்களை அவதானித்துப்பருங்கள். பெரும்பாலும் அவை பாலியல் வன்புணர்விலேயே ஈடுபடுகின்றன. அதாவது ஆண்விலங்கு, பெண்விலங்கை வலிந்தே உடலுறவு கொள்கின்றது. உதாரணத்துக்கு, நாம் அன்றாடம் அவதானிக்கக்கூடிய, நாய்கள், கோழிகள், மாடுகள், ஆடுகள், பூனைகள் போன்ற விலங்குகளை பார்த்தீர்களானால், வன்புணர்வே இடம்பெறுவதை அவதானிக்கலாம். அங்கே பெண்விலங்கு முடிந்தவரை உடலுறவை தவிர்க்கவே முயற்சிக்கும், ஆனாலும் ஆண்விலங்கின் ஆதிக்கத்தால் இறுதியில் வன்புணர்வுக்கு உள்ளாகின்றது. ஆடு, மாடு, நாய், கோழி, பூனை போன்ற விலங்குகள் மட்டுமல்ல, அநேகமாக எல்லாவிலங்குகளிலுமே இந்த உடலுறவுக்கு முந்திய போராட்டம் நிகழ்வதை காணலாம்.

கலாச்சார மாற்றத்தில், சொத்துடைமை என்ற கண்ணோட்டத்தில், ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற வரையறையை மனிதன் என்ற விலங்கு ஏற்படுதிக்கொண்டது. ஆனால் இந்நிலைமை மற்ற விலங்கினங்களில் காணப்படுவதில்லை. பெரும்பாலும் ஒரு பெண்விலங்குடன் எந்த ஆண்விலங்கு உடலுறவு கொள்வதென்பதில், ஆண்விலங்குகளிற்கிடையில் ஒரு பெரும் போட்டியே (சண்டையே) இடம்பெறும். நாய்களிலும், பூனைகளிலும் இந்த போட்டி உச்சக்கட்டமாக இருக்கும். அந்த போட்டியில் முன்னிற்கும் ஆண்விலங்கு, பின்னர் பெண்விலங்கை அடக்கி வன்புணர்வை மேற்கொள்ளும். ஆனாலும் எல்லாநேரத்திலும் ஆண்விலங்கே உடலுறவை தீர்மானிப்பதில்லை. ஆகக்குறைந்தது எந்த ஆண்விலங்குகளுடன் உடலுறவு கொள்ளக்கூடாது என்பதை பெண்விலங்குகளும் தீர்மானிக்கின்றன தான். அதாவது, பாலியல் உறவுக்கான ஜோடியை தெரிவுசெய்தல் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானதாகவே இருக்கின்றது. ஏனென்றால், பெண்நாய்கள், சில ஆண்நாய்களை முற்றுமுழுதாக எதிர்ப்பதையும், சில ஆண்நாய்களுக்கு ஓரளவு இடம்விட்டுக்கொடுப்பதையும், சில ஆண்நாய்களுக்கு எந்தவித எதிர்ப்பை காட்டாதிருப்பதையும் அவதானித்தால், இந்நிலைமை புலப்படும்.

அதிலும், சில சமூக விலங்குகளில் (Social Animals) நிலைமை கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். கூட்டம் கூட்டமாக அவை வாழ்வதால், பெரும்பாலும் வலிமையுள்ள ஒரு ஆண்விலங்கு கூட்டத்துக்கு தலைமை தாங்குவதை காணலாம். கூட்டத்திலுள்ள பெரும்பாலான பெண்விலங்குகளுடன் உடலுறவு கொள்வது இந்த தலைமை தாங்கும் ஆணாகத்தான் இருக்கும். அதுவும் வன்புணர்வாக தான் இருக்கும். ஏனைய ஆண்விலங்குகள், பெரும்பாலும் அந்த கூட்டத்துக்கு பணிபுரிபவையாகவே இருக்கும். இந்த சமூக கட்டமைப்புகளுக்கிடையில் சிறிது சிறிது மாற்றங்கள் காணப்படலாம். எவ்வாறாக இருந்தாலும், இறுதியாக பெண்விலங்கு மீது புரியப்படுவது, வன்புணர்வாகவே இருக்கும். இந்த சமூக கட்டமைப்புக்களை பல்வேறு குரங்கு வகைகள், சிங்கம், புலி போன்ற விலங்குகளில் அவதானிக்கலாம்.

மனித இனத்தின் ஆரம்பகட்ட வளர்ச்சியில்கூட (உதாரணத்துக்கு எமது மூதாதை மனித இனங்கள்) இந்த மேற்படி அடிப்படை சமூகக்கட்டமைப்பே காணப்பட்டது. அப்போதும் ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற முறை இருக்கவில்லை. வலிமையுள்ள ஆண், தனக்கு பிடித்த பெண்ணுடன் உடலுறவு கொள்ளும் நிலைமையே காணப்பட்டது. அந்த உடலுறவை தீர்மானிப்பது ஆணாகவே பெரும்பாலும் இருக்கும். அதாவது ஒரு வன்புணர்வு நிலையே காணப்பட்டது.

மனிதனைப்போலன்றி ஏனைய விலங்குகளில், பாலியல் வேட்கையென்பது சிந்தித்து வருவதல்ல, முற்றுமுழுதாக ஓமோன்களில் (Hormones) ஆதிக்கத்தாலேயே அவ்விலங்குகளில் பாலியல் நடத்தை என்பது கட்டுப்படுத்தப்படுகின்றது. காலநிலை மாற்றங்கள் போல, ஆண்டின் சில பகுதிகளிலேயே விலங்குகள் பெரும்பாலும் உடலுறவு கொள்கின்றன. ஆண்விலங்கும், பெண்விலங்கும் இனப்பெருக்க உடலுறவில் ஈடுபடுவதற்கான ஒரு காலப்பகுதி இருக்கும், அக்காலப்பகுதியில் அவற்றில் உடல்ரீதியான(அக, புற) மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஆணிற்கு வேட்கையேற்படும்போது, பெண்விலங்குமீது வன்புணர்விலீடுபடுகின்றது. ஏனென்றால் அவ்விலங்குகள், சிந்தித்து, ஒன்றையொன்று புரிந்து, புரிந்துணர்வினடிப்படையில் புணர்ச்சியிலீடுபடுவதில்லை. உடலுறவை, மனிதனைபோல (டொல்பினயும் சேர்த்து) கிளர்ச்சியூட்டம் விடயமாக அவை புரிவதில்லை. மாறாக அவற்றின் உடலுறவு நடத்தை ஓமோன்களாலேயே கட்டுப்படுத்தப்படுகின்றன.

மனிதனிலோ, நினைத்தவுடன் உடலுறவு கொள்ளக்கூடிய தன்மை காணபடும். பகுத்தறிவு, சிந்தித்து செயலாற்றல் என்ற பண்புகளால் இது சாத்தியமாகின்றது. அதை பெரும் கிளர்ச்சியூட்டும் விடயமாகவும் மனிதன் பார்க்கின்றான். டொல்பின்களும் இவ்வாறே நடந்துகொள்கின்றன என்று ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன.

விலங்கு இராச்சியத்தை பார்த்தால், ஆணாதிக்க நிலைமையையே எங்கும் காணலாம். அதனால் தான், மனித இனத்தில் கூட, அண்மைக்காலம்வரை, ஆணாதிக்கம் அதிகமாகவே காணபட்டது. இற்றைக்கு இருநூறு முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு, பெண்கள் எவ்வளவுக்கு ஆண்களால் அடக்கியொடுக்கபட்டார்கள், எவ்வளவுக்கு உரிமைகள் மறுக்கபட்டார்கள் என்பது வரலாற்று நிகழ்வுகளையும், நூல்களையும் அறிந்தவர்களுக்கு புரியும். விலங்குகளில் காணப்படும் இந்த ஆணாதிக்கநிலைமை கூட, பரிணாம வளர்ச்சியில் பெற்றுக்கொண்ட ஒரு நடத்தையோ என்று எண்ணத்தோன்றுகின்றது.

ஏனென்றால், பரிணாம வளர்ச்சிக்கு உடலுறவு என்பதே அடிப்படை. ஆண் பெண் உடலுறவினூடாகவே பரிணாமம் என்ற மாற்றம் நிகழ்ந்துகொண்டிருக்கின்றது. நான், நீங்கள், நாய், பூனை, மரம், செடி என்பனவெல்லாம் இந்த ஆண்-பெண் உறவின்மூலமே உருவாகியிருக்கின்றன. ஆகவே இந்த ஆண்-பெண் உடலுறவை நிச்சயப்படுத்திகொள்ள, ஒருசாரார் (ஆண்) ஆதிக்கசக்தியாக உருப்பெறவேண்டிய தேவையேற்பட்டிருக்கின்றது. அதாவது ஒரு செயல் நடைபெறுவதை உறுதிப்படுத்திக்கொள்ள ஆதிக்கம் ஒரு ஆயுதமாக பாவிக்கப்பட்டிருக்கின்றது. ஏனென்றால், சிந்தித்து செயலாற்றல், பகுத்தறிவு என்பவையெல்லாம், பரிணாமத்தின் மிக மிக பிற்பட்ட காலப்பகுதியிலேயே ஏற்பட்டவை. அதனால் தான், மனித இனத்துக்கு மட்டும் இந்த ஆதிக்கம் (ஆணாதிக்கம்) இறுதியில் ஒரு பெரும் பிரச்சினையாகிவிட்டது.

ஆதிக்கம் செலுத்தி, வன்புணர்வில் ஈடுபடக்கூடிய ஆண்விலங்கே, தன்னுடைய சந்ததியை உருவாக்கிக்கொள்ள அதிக சாத்தியக்கூறுகள் காணப்பட்டது. அடுத்து உருவாகும் சந்ததிகூட ஆதிக்கம்செலுத்திய ஆண்விலங்கினதும், அடங்கிப்போன பெண்விலங்கினதும் இயல்புகளைக்கொண்டதாகவே இருக்கும். அவ்வகையில் அடுத்து வரும் சந்ததியிலுள்ள ஆண்விலங்குகள், இன்னும் ஆதிக்க தன்மையுடையவைகளாக இருக்கும். இவ்வாறே ஆண்விலங்குகள், ஆதிக்கத்துக்கான உடற்கூறுகளை பெற்றுகொண்டன என்று எண்ணத்தோன்றுகின்றது. பரிணாமத்தின் அடிப்படையான ‘தக்கன பிழைத்தல், இயற்கை தேர்வு' என்பது இந்த ஆண்பெண் வேறுபாடுகளுக்கு வழிசமைத்தது.

ஆகவே பாலியல் வன்புணர்வு என்பது, அடிப்படையில் மிக மிக இயற்கையான ஒரு நடத்தை. விலங்கினங்களின் பரிணாம வளர்ச்சிப்பாதையில் இந்நடத்தை ஒரு அவசியமான நடத்தையாகவும் இருக்கின்றது. பாலியல் வன்புணர்வு, மனிதனை தவிர ஏனைய விலங்கினங்களில் ஒரு குற்றமாகவோ, பிரச்சினையாகவோ நோக்கப்படுவதில்லை. அவைக்கு அது ஒரு பிரச்சினையான விடயமுமல்ல.

நாகரிகத்தில் வளர்ச்சியடைந்துவிட்ட மனிதர்கள் நாம், பாலியல் வன்புணர்வை ஒரு பாரிய குற்றமாகவே சடடப்புத்தகங்களில் கூட எழுதிவைத்துவிட்டோம். ஆண்-பெண் சம்த்துவம் என்பது நாகரிக நிலையில் நல்ல நிலையை அடைந்துகொண்டே வந்திருக்கின்றது. இன்னும் முழுமையான ஆண்-பெண் சமத்துவத்தை காண்முடியவில்லை தான். ஆண்-பெண் சமத்துவம் மிக மோசமாக உள்ள நாடுகளில், பெண்களுக்கெதிரான பாலியல் வன்புணர்வு அதிக அளவில் இடம்பெறுவதை அவதானிக்கலாம். அதாவது ஆணாதிக்கம் அதிகமாகவுள்ள சமுதாயங்களில் பெண்களுக்கெதிரான பாலியல் வன்புணர்வுகள் அதிகமாக இருக்கும்.

ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற முறைமைகள் ஏற்படுத்தப்பட்டு, திருமண முறைகளை ஏற்படுத்திய பின்பு, சந்ததியை பெருக்க்கிக்கொள்ள பாலியல் வன்புணர்வு என்ற நடத்தைக்குரிய தேவை இல்லாமலேயே போய்விட்டது. மனித இனத்தில், புரிந்துணர்வினடிப்படையிலான உறவுமுறைகள் என்றானபின்பு, வன்புணர்வுக்கு வேலையில்லாமல் போய்விட்டது தான். ஆனாலும் அடிமனதிலுள்ள வன்புணர்வு என்னும் அபரிமித இச்சை இன்னும் பலரை விட்டு போய்விடவில்லை.

சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம், பெண்களுக்கெதிரான பாலியல் வன்புணர்வுகள் இடம்பெற்றுகொண்டிருக்கின்றன. முக்கியமாக, பாதுகாப்பற்ற சூழ்நிலைகளில் பெண்கள் அகப்படும்போது ஆண்களால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள். அத்த்துடன், உலகெங்கும் மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கைகளில், பெண்களுக்கெதிரான ஒரு வன்முறை ஆயுதமாக, ஒரு இன அழிப்பு ஆயுதமாக இராணுவ வீரர்களால் பெண்கள்மீது பாலியல் வல்லுறவுகள் நிகழ்த்தப்படுகின்றன. இத்தகையதொரு நிலைமையை இலங்கையிலும் காணலாம். இலங்கையில் நடைபெறும் பாலியல் வல்லுறவுக்குற்றங்களில் அதிகமானவை ஆயுதம் தாங்கியவர்களாலேயே (இராணுவம், பொலிஸ், ஆயுதக்குழுக்கள்) நிகழ்த்தப்படுகின்றன.

அறிமுகமில்லாதா ஆணினாலோ/ஆண்களினாலோ பெண்களின்மீது புரியப்படும் உடலுறவு மட்டுமல்ல பாலியல் வன்புணர்வு. கட்டிய கணவனால் கூட எத்தனையோ மனைவிகள் (பெண்கள்) பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள். அதாவது, கணவன் மனைவியாக இருந்தால் கூட, பெண்ணின் விருப்பத்திற்கெதிராக ஆண் உடலுறவிலீடுபடுவானாயின் அதுவும் பெண்ணின்மீது புரியப்படும் பாலியல் வல்லுறவு தான், குற்றம்தான். இத்தகைய குற்றங்களுக்கும் நீதிபெற்றுக்கொள்ள சட்டத்தில் இடமிருக்கின்றது.

மனித சமுதாயம் இன்னுமே ஆணாதிக்க சமூகக்கட்டமைப்பிலிருந்து விடுபடுவதாயில்லை. அதனால் தான், இன்று எண்ணுக்கணக்கற்ற பெண்கள், தங்கள் கட்டிய கணவனாலேயே வல்லுறவுக்குட்படுத்தப்படுகின்றார்கள். இன்று எத்தனை ஆண்கள், தங்களுடைய மனைவிக்கு, கட்டிலிலாவது சமபங்கு வகிக்கும் உரிமையை வழங்கக்கூடிய புரிந்துணர்விலிருக்கின்றார்கள். அல்லது அத்தகை உரிமையை எடுத்துக்கொள்ள எத்தனை பெண்கள் துணிவுடன் தயாராயிருக்கின்றார்கள். கட்டிலிலும் ஆணாதிக்கத்தின் அரசாட்சி தான். ஆணாதிக்க சமுதாயத்தில் வாழ்ந்து பழகிவிட்ட ஆண்களும், அதே சமுதாயத்தில் வாழ்ந்து பழகிவிட்ட பெண்களுமே இந்நிலைமைகளுக்கு காரணம். ஆகக்குறைந்தது கட்டிய கணவனால் பெண்கள் வல்லுறவுக்குள்ளாக்கப்படுவதேனும் இல்லாமல் செய்யப்படலாமே.

பரிணாம வளர்ச்சியில் மனித இனம் தோன்றாதவரை [சிந்தித்து செயலாற்றும் தன்மை (Rationality, Setting up goals and working towards them) அமையப்பெறாதவரை], பாலியல் வன்புணர்வு ஒரு இயற்கையான, அவசியமான நடத்தை தான். இருப்புக்கு இன்றியமையாததொன்றாக அது இருந்தது, ஆனால், இன்று மனித இனத்துக்கு அது தேவையில்லாததொன்று, பிரச்சினையானதொன்று. ஆண்-பெண் சமத்துவம் பேணப்படவேண்டிய தேவையிருக்கின்றது. பெண்ணினதும், ஆணினதும் உரிமைகள், உணர்வுகள் சமமாக மதிக்கப்படவேண்டிய தேவையிருக்கின்றது. பெண்ணை ஆணின் அரைவாசியென்றும், தரம் குறைந்தவளென்றும், ஆணிற்கு அடங்கிநடக்கவேண்டுமென்றும், பெண்களின் குரல்வளையை நசுக்கிய மதநூல்களை ஒருபுறம் தூக்கிப்போட்டுவிட்டு, எது நீதி, எது சரி என்று ஆராய்ந்தொழுகவேண்டிய காலமிது. பாலியல் வன்புணர்வின்மூலம் இனத்தை பெருக்கவேண்டிய தேவை மனித இனத்துக்கு என்றோ இல்லாமல் போய்விட்டது. அதற்கான உரிய சமூகக்கட்டமைப்புக்களை நாங்கள் வளர்த்தெடுத்துவிட்டோம். பாலியல் வன்புணர்வு, மனித இனத்தில் அடக்குமுறையின் சின்னமாக மாறிவிட்டது. வெட்கக்கேடான விடயமாக மாறிவிட்டது. ஆகவே இந்த பாலியல் வன்புணர்வு என்ற துர்நடத்தையை, குற்றத்தை மனித இனத்திலிருந்து முற்றுமுழுதாக அகற்றுவதற்கு, ஆண், பெண் வேறுபாடின்றி அனைவருமே பாடுபடவேண்டிய தேவையிருக்கின்றது.

Sunday, August 17, 2008

எனது சமூகத்தின் ஒரு கோரப்பக்கம்

உலக மதங்களில் இந்து மதம் மட்டுமே வலியுறுத்துகின்ற சமத்துவமின்மையை வெளிச்சம் போட்டுக்காட்டுகின்ற ஆவணப்படம் இது. இந்து மதத்தின் சாதி முறைமையின் (சதுர் வர்ணம்) கோரமுகத்தை வெளிப்படுத்துகின்ற படம். இதை இந்து மதத்தின் ஒரு கோரப்பக்கம் என்றே சொல்லவேண்டியிருக்கின்றது ஏனென்றால், இந்த சாதியமைப்பு முறையென்பது, நாளாந்தம் (முக்கியமாக இந்தியாவில்) பல கோர சம்பவங்களுக்கு முற்றுமுழுதான காரணமாக அமைகின்றது.

இதை எனது சமூகத்தின் ஒரு கோரப்பக்கம் என்று தலைப்பிடவேண்டியதாயிற்று. ஏனென்றால், நான் பிறந்து வளர்ந்த மதமும் இந்த மதம் தான். என்னுடைய, பெற்றோர், சகோதரர்கள், நண்பர்கள், உறவினர்கள் பலர் பின்பற்றும் மதமும் இதுதான்.



வெறும் மூடநம்பிக்கைகள், ஒரு கூட்டத்தார் இன்னொரு கூட்டத்தாரை அடக்கியாள உருவாக்கப்பட்ட வரைமுறைகள், எவ்வளவு கோரத்தாண்டவமாடுகின்றது என்பதற்கு இப்படம் சாட்சி.

நானறிந்தவரையில், வேறு எந்தமதமும் சமமின்மையை வலியுறுத்திச்செல்லவில்லை. வேறு எந்த மதமும், பிறப்பால் ஒரு கூட்டத்தாரை உயர்ந்தவர்களென்றும், இன்னொரு கூட்டத்தாரை தாழ்ந்தவர்களென்றும் சொல்லுவதை காணமுடியவில்லை.

கடவுள் இல்லை என்பதற்கு உள்ள ஏனைய ஆதாரங்களுடன், கடவுளின் மதம் என்று சொல்லப்படுகின்ற இந்த இந்து மதத்திலுள்ள கேவலம் இன்னொரு உறுதியான ஆதாரமாகும். இன்னும் தன்னை ஒரு இந்து என்று சொல்லிக்கொள்கின்ற ஒவ்வொருவனும் வெட்கப்படவேண்டும்.

அடிமைக்குணமும், அறியாமையாலும் ஆட்கொள்ளப்பட்டிருக்கின்ற நம்மவர்களில் பலர், இன்னும் இந்து மதம், உயரிய பண்புகளை வலியுறுத்துகின்றமதம், உலகின் தலை சிறந்த மதம் என்று பெருமையடித்துக்கொள்வதில் ஒன்றும் ஆச்சரியமில்லை தான்.

பாரபட்சமும், கொடுமைகளும், பாலியல் வக்கிரங்களும், ஏமாற்று வித்தைகளும் நிறையப்பெற்றதே இந்த இந்து மதம். இன்றைக்கும், பல பிழைக்கவழியில்லாத மனிதர்கள் (சாயி பாபா, அம்மா, கல்கி பகவான், மேல்மருவத்தூர் அம்மா, அமிர்தானந்த மயி, இன்னும் பலர்) பலர், பல ஏமாற்று வித்தைகளை புரிந்து, மக்களை மயக்கி, தம்மை கடவுள்கள் என்று சொல்லி, ஏமாற்றுகின்றார்களென்றால், அதுவும் இந்து மதத்தில் காணக்கூடிய ஒரு சிறப்பே.

உதவி.
http://sinnakuddy1.blogspot.com/2008/07/blog-post_9318.html

Saturday, August 16, 2008

எனக்குள் எழும் கேள்விகள்

வணக்கம்! எப்படி இருக்கிறியள்...?

என்னுடைய பிரார்த்தனையும் எல்லோரும் சுகமாக இருக்க வேணுமென்றுதான். சுகம் விசாரிக்கின்ற இவன் யாரென்று நீங்கள் கேட்டீர்கள் என்றால், என்னுடைய அனுமானமும் சரியாகவே இருக்கின்றது என்று அர்த்தம் பாருங்கோ...

நான் ஒன்றும் வெளியூர்க்காரனல்ல. இப்ப எல்லாம் போறாங்களே சந்திரன், செவ்வாய், வியாழனென்று... அங்க இருந்து வரவில்லை. ஏன் அமெரிக்கா என்ன நிறமென்று கூட எனக்கு சத்தியமாக தெரியாது பாருங்கோ. உங்களில் ஒருத்தனாக உங்களில் இருந்தே வருகின்றேன்.

எனக்கு சில விசயங்களை நீங்கள் 'கிளியர்' பண்ண வேண்டும். இல்லாட்டில் தலை வெடித்துவிடும் போல இருக்கு. அதுதான் நீங்கள் மணித்தியாலக்கணக்காக தூங்கிக் கொண்டிருக்கும் தொ(ல்)லைக்காட்சி நாடகங்களில் வந்து கேட்பம் என்றால், என்னுடைய முகத்துக்கு அது 'கொஞ்சம்' ஓவராம்! அதுதான் இந்த புளொக்கில தரிசனம் தாறன்.

சரி, என்ர டவுட்டுக்களை சொல்லிறன். தெரிஞ்சால் 'கொமென்ட்' அடிச்சு பதில் தாங்கோ... அதி கூடின smsகளை அனுப்பி அதிபெறுமதியான பரிசில்களை வெல்லுங்கள். மன்னிக்கவும்... வானொலி கேட்கிற பழக்கம் தன்னாலே வந்திட்டுது...

மைக்கல் பெல்ப்ஸ், இவரை உங்கள் எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கும் என்று நம்புறன். அதுதான் அவருடைய நண்பரே அவருக்கு 'உன்னுடைய கேவலமான முகத்தை எத்தனை தடவையடா ரி.வியில பார்க்கிறது' என்று sms அனுப்பியும் திருந்தாத ஜென்மம். அவர் இன்றைக்கு எத்தனை தங்கத்துக்கு சொந்தம் சொல்லுங்கோ. ஒன்று..? இரண்டு..? இல்லை எட்டுக்கு குறி வைத்திருக்கிறார். நல்லதுதான். வாழ்த்துக்கள். ஆனால், எங்கட பள்ளிக்கூடத்தில படிக்கும்போது ஒருத்தர் மூன்று போட்டிக்கு மேல் பங்குபற்றமுடியாது என்று எழுதப்படாத சட்டமொன்று இருக்கல்லோ..? அப்படியிருக்கும்போது, ஒலிம்பிக்கில் எப்படி ஒருத்தரால் இத்தனை போட்டிகளில் பங்குபற்ற முடியும்? அமெரிக்க ஜனநாயகப் பத்திரிகைகளே... சீனாவின் ஒலிம்பிக்கில் நடைபெறும் இந்த தில்லுமுல்லுகளையும் வெளிக்கொணர்வீர்களாக. ஓ... மறந்திட்டேனே....
மைக்கல் பெல்ப்ஸ் அமெரிக்கனா..? அதுதானே மெளனம்!

அடுத்த டவுட்டு என்னென்றால், அந்த நாரதரைப்பற்றினது. விளங்கியிருக்கும் என்று நினைக்கின்றேன். நடந்து வந்த பாதை தன்னை திரும்பியும் பார்க்காதவர்... ஆயிரக்கணக்கில் பாதுகாப்புக்கு வருவம் என்டினம்... கடலில் பீரங்கிக்கப்பல் நிற்கும் என்டினம்... மாநாட்டுக்கு முதல் வந்து பாதுகாப்பை ஒழுங்கு பண்ணினவரே காற்று வாங்க ஒய்யாரமாக நடக்கும் போது...................

போன வெள்ளிக்கிழமை இந்தியாவின் சுதந்திர தினமாம். ஒருத்தர் சொன்னார் இந்தியாவையும் அகிம்சையையும் பிரிக்க முடியாதாம். எனக்கு ஏனென்று இன்னும் விளங்கவில்லை. நான் நினைக்கின்ற இந்தியாவும் அவர் சொன்ன இந்தியாவும் வேறுவேறாக இருக்குமோ? எங்களிட்ட சாப்பாட்டுப் பொட்டலங்களுடன் வந்து... பிறகு தில்லுமுல்லு செய்து... நல்லூரில் நடந்த நீராகாரமின்றிய உண்ணாநோன்புப் போராட்டத்திலேயும், மட்டு-மாமாங்கத்தில் நடந்த அகிம்சைப் போராட்டத்திலேயும் தோற்று... பின்னர் கந்தகப் பலப்பரீட்சையில் சொந்த நாடு திரும்பின இந்தியாவைத்தான் நான் நினைக்கின்றேன். அவர் யாரை நினைக்கின்றார்..?

உங்களில் யாருக்கும் தமிழ்நாட்டுடன் 'கனெக்சன்' இருக்கா? இருந்தால் தயவுசெய்து இப்ப தமிழ் பேப்பரில வருகுதே... வன்னியில் எங்கட பிஞ்சுகள் பசிக்கொடுமையால் துடிக்கிற படங்கள்... அதைக் கத்தரிச்சு நெடுமாறன் ஐயாவுக்கும் மாண்புமிகு முதல்வர் கருணாநிதி ஐயாவுக்கும் அனுப்பிவையுங்கோ. முதலாமவர் உணவு சேகரிப்பார்... இரண்டாமவர் அதை தடுத்து விட்டு நல்லதொரு கவிதை சமைப்பார்....

அப்ப நான் போய் வரட்டா..........................?

Friday, August 8, 2008

சுத்தமான குடிதண்ணீர், தாகம்தீர்க்க மட்டும்தானா?

தாகம்தணிக்க சுத்தமான குடிநீரை அருந்தும் நாங்கள், எங்களுக்கு தெரியாமல், வேறெந்த வழிகளில் அசுத்தமான நீரை உள்ளெடுக்கின்றோம் என்பது பற்றி இங்கே ஆராயப்படுகின்றது.

இப்போதெல்லாம் குடிப்பதற்கான தண்ணீர், சுத்தமாக, கிருமிகளற்று இருக்கவேண்டுமென்பதில் பரவலான விழிப்புணர்வு இருப்பது மனதுக்கு ஆறுதலளிக்கும் விடயம். குடிக்கின்ற தண்ணீரில் கவனமெடுப்பதன்மூலம், எத்தனையோவிதமான நோய்களின் தொற்றுக்களுக்கு ஆளாவதிலிருந்து எம்மை தவிர்த்துக்கொள்ளலாம். ஆனால் நான் இங்கு சொல்லவருவது என்னவென்றால், சுத்தமான குடிநீரை, குடிப்பதற்கு மட்டுமே பாவிப்பது சரியா என்பது பற்றி.

குடிக்கின்ற தண்ணீர் சுத்தமாக இருக்கவேண்டுமென்பதற்காக, குழாய் நீரை, கிணற்று நீரையோ கொதித்தாறிய நீராகவோ, இன்னும் வடிகட்டும் சாதனங்கள்மூலம் வடிகட்டியோ பருகுவதுண்டு. அதைவிடவும் இப்போது, பரவலாக போத்தல்களில் அடைத்துவிற்கப்படும் நீரை வாங்கி குடிப்பதற்கு பாவிக்கும் வழக்கமும் உண்டு. எதை செய்வதென்பது, அவரவர் பொருளாதார நிலையை பொறுத்தது. இன்னுமே குழாய்நீரையோ, கிணற்று நீரையோ அப்படியே குடிதண்ணீராக அருந்துபவர்களும் உண்டு. கிணற்று நீரையோ, குழாய் நீரையோ, அல்லது இயற்கையில் எவ்வழியிலாவது கிடைக்கும் நீரை அப்படியே அருந்தும்போது நோய்க்கிருமிகளின் தொற்றுக்களுக்கு ஆளாகநேரிடுவதோடு, அசுத்தநீரினால் மேலும்பல பிரச்சினைகள் ஏற்பட வழியுண்டு.

சரி, சுத்தமான, கிருமிகளற்ற குடிநீரை அருந்துகின்றோமென்றால், அதில் எங்கள் நோக்கம், நாங்கள் உள்ளெடுக்கும் நீருடன் அசுத்தப் பொருட்களோ, நோய்க்கிருமிகளோ உடலினுட்சென்று, நோயேற்படக்கூடாது என்பதுவே. அருந்தும் நீரில் மட்டுமல்ல, உண்ணும் எத்தகைய உணவிலும் இந்தக் கவனம் இருக்கவேண்டிய தேவையிருக்கின்றது.

ஆனால், சிலவிடயங்களில் எவ்வளவுதான் நாம் கவனமாக இருந்தாலும், மேலும் சிலவிடயங்களில் முட்டாள்தனமாக நடந்துகொள்வதால், முன்னையதுகூட பயனற்றுப்போய்விடுகின்றது.

தாகத்துக்கு குடிப்பதற்கு சுத்தமான தண்ணீரருந்தும் நாம், வாய் கொப்பளிப்பதற்கு, உணவு உண்ணமுன் வாய்கழுவுவதற்கு சுத்தமான குடிநீரை பாவிக்கின்றோமா? கைகளால் உணவுண்ணுபவர்கள் உணவுண்ணமுன் கைகளை கழுவுவதற்கு சுத்தமான குடிநீரை பாவித்து கைகழுவுகின்றார்களா? அல்லது உணவுண்ணும் பாத்திரங்களை கழுவும்போதுதான் சுத்தமான குடிநீரை பாவிக்கின்றோமா? இன்னும், அப்பிள், திராட்சை போன்ற பழங்களை உண்ணமுன் சுத்தமான நீரில் கழுவுகின்றோமா?இல்லை.

குடிப்பதற்கு உகந்ததல்ல என்று நீங்கள் ஒதுக்கிய குழாய்வழிவரும் நீரில்தானே மேற்படி வேலைகளையெல்லாம் செய்கின்றீர்கள். வாய்கொப்பளித்தபின்பு உங்கள் வாய்க்குள் இருக்கப்போவது சுத்தமற்ற குழாய்வழி தண்ணீர்தானே. கைகளை கழுவிவிட்டு உணவுண்ணுகின்றீர்களென்றால், கைகளிலிருந்து உங்கள் உணவுடன் சேரப்போவதும் அதே அசுத்த குழாய்நீர்தானே. அப்பிள், திராட்சை பழங்களை கழுவிவிட்டு உண்ணும்போது, அதே குழாய் நீரைத்தானே உள்ளெடுக்கின்றீர்கள்.

உங்களையே கேட்டுப்பாருங்கள். இவையனைத்தையும், எப்போதாவது நீங்கள் நினைத்துப்பார்த்ததுண்டா? இவைகளிலும் கவனமாக இருப்பதன்மூலம், இன்னும் உங்களுக்கு ஏற்படக்கூடிய, நீர்மூலம் பரம்பலடையக்கூடிய தைபோயிட்டு, கொலரா போன்ற இன்னும் பல நோய்களையும் தடுக்கலாமல்லவா.

குடிப்பதற்கே, சுத்தமான தண்ணிரை பெற்றுக்கொள்வதற்கு படாதபாடுபடும்போது, கைகழுவுவதற்கும், பாத்திரம் கழுவுவதற்கும், பழங்களை கழுவுவதற்கும் சுட்டாறிய, வடிகட்டிய தண்ணீருக்கு எங்கேயையா போவது, என்று நீங்கள் கேள்வியெழுப்பக்கூடும். ஏற்றுக்கொள்கின்றேன், நடைமுறைச்சிக்கல்கள் நிறைய இருக்கின்றன தான். ஆனாலும், வசதியுடையவர்கள், வீட்டிலிருப்பவர்கள், முடிந்தவரை முயற்சிக்கலாமே. ஆகக்குறைந்தது வாய் கொப்பளிப்பதற்கு, வய்கழுவுவதற்கேனும் சுத்தமான குடிதண்ணீரையே பாவியுங்கள். ஆகக்குறைந்தது வாய்வரையாவது சுத்தத்தை பேணலாமே. அதனால் உங்களுக்கு விளையப்போவது நன்மை தானே!

பிற்குறிப்பு: மூன்றாமுலக நாடுகளுக்கு பயணம்செய்யும் மேற்குலகநாட்டவருக்கு வழங்கப்படும் பயண அறிவுரைகளில் முக்கியமான ஒன்று, இந்த அருந்தும் நீரின் சுத்தம் பற்றி. போத்தலில் அடைக்கப்பட்ட அல்லது கொதித்தாறிய நீரையே அருந்தும்படி அவர்கள் கேட்கப்படுகின்றார்கள்.

அத்துடன், வாய்கொப்பளிப்பதற்கும், கைகழுவுவதற்கும் அதே நீரையே பயன்படுத்துமாறும் கேட்கப்படுகின்றார்கள். ஏனென்றால், இத்தகைய மூன்றாமுலக நாடுகளில், நீர்மூலம் தொற்றுநோய்கள் பரவக்கூடிய சாத்தியப்பாடுகள் அதிகம்.

Wednesday, August 6, 2008

நம்பிக்கைகள் பற்றி ஒரு ஆய்வு

முற்குறிப்பு: இக்கட்டுரை, 1.கட்டுரைக்கான காரணம், 2.நம்பிக்கை என்றால் என்ன, 3.மூடநம்பிகை என்றால் என்ன என்று மூன்று பகுதிகளாக எழுதப்பட்டுள்ளது. '1.கட்டுரைக்கான காரணம்', இலங்கை, கொழும்பில் நடந்த தமிழ் நிகழ்வொன்று பற்றியது. அதுவே இக்கட்டுரையை எழுதத்தூண்டியது. நிகழ்வை தவிர்த்து, நம்பிக்கைகள், மூடநம்பிக்கைகள் பற்றிய ஆய்வை மட்டும் படிக்கவிரும்புபவர்கள் 2 ஆம் 3ஆம் பகுதிகளுக்கு தாவுங்கள்.

1. கட்டுரைக்கான காரணம்

அண்மையில் கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நிகழ்ந்த, இலங்கையின் கவிஞர், கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை மொழிபெயர்த்த அரபுக்கவிஞர் ஒமர் ஹையாமின் (உமர் கையாம்,
Omar Khayyam) கவிதைகள் பற்றிய ஒரு கலந்துரையாடலிலே, மதங்களிலுள்ள மூடநம்பிக்கைகள் பற்றியும் கருத்துக்கள் கூறவேண்டியதாயிற்று.

ஏனென்றால், ஒமர் ஹையாம், இஸ்லாம் கூறிய மதமூடநம்பிக்கைகளையும், கடவுள், சொர்க்கம் என்ற கொள்கைகளையும் சாடிய, பதினோராம் நூற்றாண்டில் அரேபியாவில் வாழ்ந்த ஒரு அரபுக்கவிஞர். அத்துடன் அவர் ஒரு, கணிதவியலாளரும், வானிலையாளரும், தத்துவஞானியும் கூட. ஆனால் அவரது சில கவிதைகளை தேசிகவிநாயகம்பிள்ளை மொழிபெயர்த்திருந்த விதமோ (ஆகக்குறைந்தது அன்றைய நிகழ்வில் பேச்சாளர் நயந்த விதமோ), இந்து மத கருத்துக்களை வலியுறுத்துவதாக, ஒமர் ஹையாமின் கருத்துக்களுக்கு முரணாக இருக்கவே, ஒமர் ஹையாமை காப்பாற்ற வேண்டியதாகி, பின்பு அது மத மூடநம்பிக்கைகள் பற்றிய கலந்துரையாடலாயிற்று. பிரதான உரையை (கவிமணியில் மொழியாக்க கவிதைகளை நயந்தவர்) வழங்கியவரோ, இலண்டனிலிருந்து வந்திருந்த, இலண்டன் தமிழ்சங்கத்தில் உறுப்பினரொருவர்.

நிகழ்வுக்கு தலைமை தாங்கியிருந்தவர் ஒரு சட்டத்தரணி. வழக்கமாக பிரதான பேச்சாளர் உரையாற்றி முடிய, அவையினர் கலந்துரையாடலுக்கான சந்தர்ப்பம் வழங்கப்படும். அவையினர் தங்கள் கருத்துக்களையும், சந்தேகங்களையும் தெரிவித்தபின்பு, இறுதியில் பிரதான பேச்சாளர் அவையினரின் கருத்துக்கள், கேள்விகள், சந்தேகங்களுக்கு பதிலளிப்பார். ஆனால் பலமுறை, அவையினரின் கேள்விகளாலும், கருத்துக்களாலும், பிரதான பேச்சாளர், அவரின் உரை மறுதலிக்கப்பட்டு, தர்மசங்கடமான நிலைக்கு உள்ளாகும்போது, அவரை காப்பாற்றிவிடுவது நிகழ்வின் தலைமையின் கடமையாக இருக்கும். இக்கட்டான இச்சந்தர்ப்பங்களில், அவையினரின் கருத்துக்களுக்கு பின்பு, பிரதான பேச்சாளரை பதிலளிக்கவிடாது, தலைவரே உரிமையெடுத்து, அவரே தனுடைய கருத்துக்களை தெரிவித்து, அவையினரை மடக்கி, பேச்சாளரை காப்பாற்றிவிடவேண்டிய பரிதாபநிலையும் ஏற்பட்டிருக்கின்றது.

அவ்வாறே, கடந்த இந்த ஒமர் ஹையாம் பற்றிய நிகழ்விலும்கூட, மத மூடநம்பிக்கைகள் பற்றிய பேச்செழுந்த்போது, அவையினரை மடக்கவே தலைவர், ‘மூடநம்பிக்கைகள் என்று ஒன்றில்லை, அவ்வாறு சொல்வது பிழை. கண்ணதாசனே ஒரு தரம் சொல்லியிருக்கின்றார். நம்பிக்கை என்றாலே அது மூடம் தான். மூடியது. அதென்னய்யா பிறகு அதற்குள் மூட நம்பிக்கை. மூடநம்பிக்கை என்று குறிப்பிடுவது பிழையானது' என்று போட்டார் ஒரு போடு. (அத்தோடு இன்னும் பல பேசினார், ஆனாலும் நம்பிக்கை என்ற விடயம் சம்பந்தமாகவே இங்கே அலசவேண்டியிருப்பதால் நடந்த சம்பவத்தை இத்துடன் நிறுத்தி விடயத்துக்கு வருகின்றேன்) ஆகவே நம்பிக்கைகள், மூடநம்பிக்கைகள், மூடமற்ற நம்பிக்கைகள் பற்றி தெளிவுபடுத்தவேண்டிய ஒரு தேவையிருப்பதை உணர்ந்தேன். அதன் பயனாக தேடிப்படித்தறிந்த விடயங்கள் இங்கே தரப்படுகின்றன.

2. நம்பிக்கை (Belief) என்றால் என்ன?
தமிழில் வருவதுக்கு முதல், ஆங்கிலத்தில் Oxford Concise Dictionary (ஆங்கிலேயர்களுக்கென்றே வெளியிடப்படுவது) நம்பிக்கை (Belief) என்றால் எப்படி வரைவிலக்கணபடுத்துகின்றது என்று பார்ப்போம்.

Belief (n): 1. An acceptance that something exists or is true, especially one without proof.
                     * A firmly held openion or convicton
                     * A religious conviction
                 2. (belief in) trust or confidence in

Believe(v): 1. feel sure that (something) is true.
                      * accept the statement of (someone) as true.
                      * have religious faith
                   2. (believe in) Have faith in the truth or existence of
                   3. (believe in) have confidence in
                   4. think or suppose
                      * (believe in) think that (something) is right or acceptable.

ஆகவே மேற்படி ஆங்கில வரைவிலக்கணங்களிலிருந்து நம்பிக்கை என்றால் என்னவென்று பார்ப்போம்.

அதாவது, ஒரு விடயம் உண்மை என்றோ, அல்லது அது இருக்கின்றது என்றோ, நிறுவப்படாமல், ஏற்றுக்கொள்ளப்படுதல் நம்பிக்கை. இவற்றுள் மதவிசுவாசம், ஒருவரின் கருத்தை சரியென்று ஏற்றுக்கொள்ளல், ஒருவிடயம் சரியென்றோ, ஏற்றுக்கொள்ளத்தக்கதென்றோ நினைத்தல், கருதுதல், ஒருவரை, அவரின் பேச்சை, எதிகால நிகழ்வுகளை நம்புதல் என்பனவும் நம்பிக்கை என்பதற்குள் அடங்கும்.

அதாவது. மத, கடவுள் நம்பிக்கைகள் மட்டுமல்ல, நம்பிக்கை என்பதில் தான் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் ஓடுகின்றது. அதாவது நாளை பற்றிய நம்பிக்கை தான், இன்றைய நாளை மகிழ்ச்சிப்படுத்துகின்றது. விஞ்ஞானம் கூட இந்த நம்பிக்கைக்கு விதிவிலக்கல்ல. விஞ்ஞானத்திலுள்ள எடுகோள்களெல்லாம் (Hypothesis) ஒருவித நம்பிக்கைகள் தாம். விஞ்ஞானிகளும் பலவிடயங்களை நம்புகின்றார்கள், நம்பிக்கை வைத்துள்ளார்கள். விஞ்ஞான எடுகோள்களென்ற அந்த நம்பிக்கைகள் நிரூபிக்கப்பட்ட ஆதாரங்களையும், உண்மைகளையும் அடிப்படையாகக்கொண்டவை. விஞ்ஞான முறையிலமைந்தவை.

எவ்வாறாகினும், நம்பிக்கை எனப்படுவது ஒரு நிரூபிக்கப்படாத விடயமென்று விளங்குகின்றது. ஒரு விடயம் நிரூபிக்கபடாது, சரியென ஏற்றுக்கொள்ளப்படும்போது அது நம்பிக்கை, அதுவே நிரூபிக்கபடும்போது (விஞ்ஞானரீதியில்) அது ஒரு 'உண்மை' ஆகின்றது. இவுண்மைகளே விஞ்ஞானத்தில் விஞ்ஞான் கண்டுபிடிப்புக்களாகின்றன. இவ்விஞ்ஞான கண்டுபிடிப்புக்களுக்கு வழிவகுப்பவை பெருமளவில் விஞ்ஞான எடுகோள்கள் தாம்.

3. மூடநம்பிகை (Superstitious Belief) என்றால் என்ன?

அப்படியானால், நம்பிக்கை என்ற விடயம் நிரூபிக்கப்படாததொன்றாக இருக்கும்போது, மூடநம்பிக்கை, மூடமற்ற நம்பிக்கை என்ற வார்த்தைப்பிரயோகங்கள் சரியானவையா. அப்படி நம்பிக்கைகளுக்குள்ளும் வகைகள் இருக்கின்றனவா?

சரி, மூடநம்பிக்கை என்றால் என்னவென்று பார்ப்பதற்கு முன்னால், மூடம் (மூடத்தனம், stupidity) என்றால் என்னவென்று பார்க்கவேண்டும். மூடத்தனம் என்றால், அறிவின்மை, அறியாமை (ignorance), முட்டாள்தனம் (foolishness) என்று பல பொருள் காணலாம். ஆகவே இதிலிருந்து மூடநம்பிக்கை என்றால் அறியாமையால் ஏற்பட்ட நம்பிக்கை அல்லது முட்டாள்தனத்த்தால் ஏற்பட்ட நம்பிக்கை என்று பொருள்கொள்ளலாம்.

அப்போ, மூடமற்ற நம்பிக்கைகள் என்றால் என்ன? இதை வரைவிலக்கணப்படுத்துவதை விட உதாரணங்களுடன் பார்ப்போம். போர்க்களத்துக்கு போரிடச்சென்ற தன்னுடைய மகன், உயிருடன் திரும்பிவருவான் என்று தாயொருத்தி நம்பிக்கை வைத்திருந்தால் அத்தாயின் நம்பிக்கையை பார்த்து அது ‘மூடநம்பிக்கை' என்று சொல்வீர்களானால், நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கைகள் அனைத்தும் .மூடநம்பிக்கைகள்' என்று அறுதியிட்டு கூறுகின்றேன். எனக்கு கீழ் வேலைசெய்பவனின் செலவு கணக்கறிக்கையை நம்புகின்றேன், அதை மூடநம்பிக்கை என்று சொல்லமுடியுமா? 'இக்கட்டுரையை வாசிக்கும் நீங்கள் ஒரு சமூக ஆர்வமுள்ளவர் என்று நான் நம்புகின்றேன். அதை மூடநம்பிக்கை என்று சொல்லமுடியுமா? இலங்கையில் தமிழர்களுக்கு ஒரு விடிவுகாலம் பிறக்கும் என்ற நம்பிக்கை ஒரு மூடநம்பிக்கையாகுமா? பூமிதவிர்ந்த கிரகங்களில் உயிர்கள் வாழலாம், இன்னும் ஐந்தாண்டுகள் கழித்தும் நான் உயிர்வாழ்வேன், என்னுடைய காதல் வெற்றிபெறும் என்றெல்லாம் நம்புவது மூடநம்பிக்கையாகாது தானே.

ஆகவே இப்போது உங்களுக்கு விளங்கியிருக்கும். எப்படியான நம்பிக்கைகள் மூடநம்பிக்கைகள், எப்படியான நம்பிக்கைகள் மூடமற்ற நம்பிக்கைகள் என்று. பூமிதோன்றி 4.5 பில்லியன் ஆண்டுகள், பிரபஞ்சம் உருவாகி 14.5 பில்லியன் ஆண்டுகள் என்று விஞ்ஞான முறையில் நிறுவியபிறகும், இல்லையில்லை கிறிஸ்தவ பைபிளின்படி, இந்த பூமியும், பிரபஞ்சமும் உருவாக்கப்பட்டு 6000 ஆண்டுகள் தான் என்று நம்புவது அறியாமையால் விளைந்த நம்பிக்கையல்லவா. அது மூடநம்பிக்கையல்லவா. ஆணின் விந்தணுவும், பெண்ணின் முட்டையும் உடலுறவின் மூலம் சேர்ந்துதான் குழந்தை உருவாகமுடியும் என்றானபின்பு, அவ்வாறுதான் இயற்கைமுறையில் கருத்தரிக்கமுடியாவிட்டாலும், இன்று விஞ்ஞான் மருத்துவமுறைகளில் எப்படியாவது குழந்தைப்பேறை அடைந்துகொள்ளலாம் என்றானபின்பும், அறியாமையால், சில ஏமாற்றுக்காரரின் சொல்கேட்டு, விரதமிருந்து, விக்கிரகங்களை வழிபட்டால் தான் குழந்தை கிடைக்கும் என்று நம்பினால், அதை மூடநம்பிக்கை என்று சொல்லாமல் வேறு என்னவென்பது.

(விஞ்ஞானத்தை துணைக்கழைத்தால்) ஈர்ப்புவிசைதான் காரணமென்றால், நீ அன்றாடம் கடந்துசெல்லும் ஒவ்வொரு மாடிக்கட்டடமும் உன்மீது ஏற்படுத்தும் ஈர்ப்புவிசையுடன் ஒப்பிடும்போது, புறக்கணிக்கத்தக்க, மிக மிக தூரத்திலுள்ள கோள்கள் உன்மீது ஏற்படுத்தும் தாக்கத்தால் உனது வாழ்க்கை நிர்ணயிக்கப்படுகின்றதென்றால் இதைவிடவுமா மூடநம்பிகை வேண்டும். அதற்குள் பௌர்ணமி தினத்தில் பைத்தியம் கூடுகின்றது என்ற மூடநம்பிக்கை வேறு.

சூரியன் ஒரு கிரகமல்ல, அது ஒரு நட்சத்திரம், சந்திரனும் ஏனைய கிரகங்கள் போல ஒரு கிரகமல்ல, அது பூமியின் உபகோள் என்று நிறுவியபின்பும், இல்லையில்லை அவையிரண்டும் நவக்கிரகங்களும் அடங்கும் என்று நீ நம்புவாயானால், அது அறியாமையால் ஏற்பட்ட மூடநம்பிக்கை.

பூமி கோளவடிவானது, பூமியும் ஏனைய கோள்களும் சூரியனேயே சுற்றிவருகின்றன, நாமிருக்கும் இந்த சூரியத்தொகுதி அகண்ட பிரபஞ்சத்தின் சிறியதொரு பகுதி என்று நிரூபணமானபின்பும், இல்லையில்லை பூமி தட்டையானது, சூரியனும், சந்திரனும் பூமியையே சுற்றிவருகின்றன, பிரபஞ்சத்தின் மையம் பூமியே என்று, மதநூல்கள் சொல்வதுபோல் நம்புவாயானால் அது அறியாமையால் வரும் நம்பிக்கை, மூடநம்பிக்கை.

அகவே இப்போது சொல்லுங்கள், நம்பிக்கைகளில், மூடநம்பிக்கைகள், மூடமற்றநம்பிக்கைகள் என்று உள்ளன தானே! ஒரு நம்பிக்கை அறிவுபூர்வமாக ஏற்பட்டால் அது மூடத்தனமற்ற நம்பிக்கை, அதுவே அறியாமையால் ஏற்பட்டால் அது மூடநம்பிக்கை. விஞ்ஞான எடுகோள்கள் (Hypothesis) அறிவுபூர்வமான நம்பிக்கைகள். உதாரணத்துக்கு, பூமிதவிர்ந்த அண்டத்தின் மற்றைய பகுதிகளிலும் உயிரினங்கள் வாழலாம் என்ற எடுகோள் (நம்பிக்கை) பூமியில் எப்படி உயிரினங்கள் தோன்றின, பரிணாமமடைந்தன என்பன பற்றிய ஆராய்ச்சிகளில் முடிவிலும், அண்டம் பற்றிய ஆராய்ச்சியின் முடிவிலும் ஆதாரங்களின்மேலும் எடுக்கப்பட்ட எடுகோள். அவற்றை உண்மையென்று நிரூபிப்பதற்கான ஆராய்ச்சிகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படுகின்றன.

ஆகவே மூடநம்பிக்கைகள் கட்டிக்காக்கப்படுவதற்கும், கட்டியெழுப்பப்படுவதுக்கும் காரணம் மனிதர்களின் அறியாமையே. மக்களை அறிவுடையவர்களக்குவதன்மூலம் மூடநம்பிக்கைகள் இலகுவில் ஒழிக்கப்படலாம். முடிந்தவரை, ஒவ்வொருவரும் உங்கள் அருகிலிருப்பவர்களின் அறியாமைகளை நீக்கி நல்லதொரு, மூடநம்பிக்கைகளற்ற, மூடநம்பிக்கைகள் குறைந்த, ஆரோக்கியமான சமுதாயத்தை கட்டியெழுப்புவோம்.

பிற்குறிப்பு
மூடநம்பிக்கை என்பதற்கு தமிழ் அகராதியொன்றில் கிடத்த வரைவிலக்கணம்.

மூடநம்பிக்கை: அறிவுக்கு பொருந்தாத, பழக்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்து அல்லது கோட்பாடு. Superstitious belief, widly held but unjustified belief about man and nature.

Pals Tamil e-Dictionary

உதவி
1. Concise Oxfor Dictionary.
2. Pals Tamil e-Dictionary
3.
Omar Khayyám on Wikipedia
4. Rubaiyat of Omar Khayyam
5. http://en.wikipedia.org/wiki/Universe
6. http://en.wikipedia.org/wiki/Earth
7. http://en.wiktionary.org/wiki/hypothesis
8. http://www.merriam-webster.com/dictionary/hypothesis
9.Young Earth creationism
10. Lunar Effect 
11. Planets in Astrology 
12. Flat Earth