Friday, August 8, 2008

சுத்தமான குடிதண்ணீர், தாகம்தீர்க்க மட்டும்தானா?

தாகம்தணிக்க சுத்தமான குடிநீரை அருந்தும் நாங்கள், எங்களுக்கு தெரியாமல், வேறெந்த வழிகளில் அசுத்தமான நீரை உள்ளெடுக்கின்றோம் என்பது பற்றி இங்கே ஆராயப்படுகின்றது.

இப்போதெல்லாம் குடிப்பதற்கான தண்ணீர், சுத்தமாக, கிருமிகளற்று இருக்கவேண்டுமென்பதில் பரவலான விழிப்புணர்வு இருப்பது மனதுக்கு ஆறுதலளிக்கும் விடயம். குடிக்கின்ற தண்ணீரில் கவனமெடுப்பதன்மூலம், எத்தனையோவிதமான நோய்களின் தொற்றுக்களுக்கு ஆளாவதிலிருந்து எம்மை தவிர்த்துக்கொள்ளலாம். ஆனால் நான் இங்கு சொல்லவருவது என்னவென்றால், சுத்தமான குடிநீரை, குடிப்பதற்கு மட்டுமே பாவிப்பது சரியா என்பது பற்றி.

குடிக்கின்ற தண்ணீர் சுத்தமாக இருக்கவேண்டுமென்பதற்காக, குழாய் நீரை, கிணற்று நீரையோ கொதித்தாறிய நீராகவோ, இன்னும் வடிகட்டும் சாதனங்கள்மூலம் வடிகட்டியோ பருகுவதுண்டு. அதைவிடவும் இப்போது, பரவலாக போத்தல்களில் அடைத்துவிற்கப்படும் நீரை வாங்கி குடிப்பதற்கு பாவிக்கும் வழக்கமும் உண்டு. எதை செய்வதென்பது, அவரவர் பொருளாதார நிலையை பொறுத்தது. இன்னுமே குழாய்நீரையோ, கிணற்று நீரையோ அப்படியே குடிதண்ணீராக அருந்துபவர்களும் உண்டு. கிணற்று நீரையோ, குழாய் நீரையோ, அல்லது இயற்கையில் எவ்வழியிலாவது கிடைக்கும் நீரை அப்படியே அருந்தும்போது நோய்க்கிருமிகளின் தொற்றுக்களுக்கு ஆளாகநேரிடுவதோடு, அசுத்தநீரினால் மேலும்பல பிரச்சினைகள் ஏற்பட வழியுண்டு.

சரி, சுத்தமான, கிருமிகளற்ற குடிநீரை அருந்துகின்றோமென்றால், அதில் எங்கள் நோக்கம், நாங்கள் உள்ளெடுக்கும் நீருடன் அசுத்தப் பொருட்களோ, நோய்க்கிருமிகளோ உடலினுட்சென்று, நோயேற்படக்கூடாது என்பதுவே. அருந்தும் நீரில் மட்டுமல்ல, உண்ணும் எத்தகைய உணவிலும் இந்தக் கவனம் இருக்கவேண்டிய தேவையிருக்கின்றது.

ஆனால், சிலவிடயங்களில் எவ்வளவுதான் நாம் கவனமாக இருந்தாலும், மேலும் சிலவிடயங்களில் முட்டாள்தனமாக நடந்துகொள்வதால், முன்னையதுகூட பயனற்றுப்போய்விடுகின்றது.

தாகத்துக்கு குடிப்பதற்கு சுத்தமான தண்ணீரருந்தும் நாம், வாய் கொப்பளிப்பதற்கு, உணவு உண்ணமுன் வாய்கழுவுவதற்கு சுத்தமான குடிநீரை பாவிக்கின்றோமா? கைகளால் உணவுண்ணுபவர்கள் உணவுண்ணமுன் கைகளை கழுவுவதற்கு சுத்தமான குடிநீரை பாவித்து கைகழுவுகின்றார்களா? அல்லது உணவுண்ணும் பாத்திரங்களை கழுவும்போதுதான் சுத்தமான குடிநீரை பாவிக்கின்றோமா? இன்னும், அப்பிள், திராட்சை போன்ற பழங்களை உண்ணமுன் சுத்தமான நீரில் கழுவுகின்றோமா?இல்லை.

குடிப்பதற்கு உகந்ததல்ல என்று நீங்கள் ஒதுக்கிய குழாய்வழிவரும் நீரில்தானே மேற்படி வேலைகளையெல்லாம் செய்கின்றீர்கள். வாய்கொப்பளித்தபின்பு உங்கள் வாய்க்குள் இருக்கப்போவது சுத்தமற்ற குழாய்வழி தண்ணீர்தானே. கைகளை கழுவிவிட்டு உணவுண்ணுகின்றீர்களென்றால், கைகளிலிருந்து உங்கள் உணவுடன் சேரப்போவதும் அதே அசுத்த குழாய்நீர்தானே. அப்பிள், திராட்சை பழங்களை கழுவிவிட்டு உண்ணும்போது, அதே குழாய் நீரைத்தானே உள்ளெடுக்கின்றீர்கள்.

உங்களையே கேட்டுப்பாருங்கள். இவையனைத்தையும், எப்போதாவது நீங்கள் நினைத்துப்பார்த்ததுண்டா? இவைகளிலும் கவனமாக இருப்பதன்மூலம், இன்னும் உங்களுக்கு ஏற்படக்கூடிய, நீர்மூலம் பரம்பலடையக்கூடிய தைபோயிட்டு, கொலரா போன்ற இன்னும் பல நோய்களையும் தடுக்கலாமல்லவா.

குடிப்பதற்கே, சுத்தமான தண்ணிரை பெற்றுக்கொள்வதற்கு படாதபாடுபடும்போது, கைகழுவுவதற்கும், பாத்திரம் கழுவுவதற்கும், பழங்களை கழுவுவதற்கும் சுட்டாறிய, வடிகட்டிய தண்ணீருக்கு எங்கேயையா போவது, என்று நீங்கள் கேள்வியெழுப்பக்கூடும். ஏற்றுக்கொள்கின்றேன், நடைமுறைச்சிக்கல்கள் நிறைய இருக்கின்றன தான். ஆனாலும், வசதியுடையவர்கள், வீட்டிலிருப்பவர்கள், முடிந்தவரை முயற்சிக்கலாமே. ஆகக்குறைந்தது வாய் கொப்பளிப்பதற்கு, வய்கழுவுவதற்கேனும் சுத்தமான குடிதண்ணீரையே பாவியுங்கள். ஆகக்குறைந்தது வாய்வரையாவது சுத்தத்தை பேணலாமே. அதனால் உங்களுக்கு விளையப்போவது நன்மை தானே!

பிற்குறிப்பு: மூன்றாமுலக நாடுகளுக்கு பயணம்செய்யும் மேற்குலகநாட்டவருக்கு வழங்கப்படும் பயண அறிவுரைகளில் முக்கியமான ஒன்று, இந்த அருந்தும் நீரின் சுத்தம் பற்றி. போத்தலில் அடைக்கப்பட்ட அல்லது கொதித்தாறிய நீரையே அருந்தும்படி அவர்கள் கேட்கப்படுகின்றார்கள்.

அத்துடன், வாய்கொப்பளிப்பதற்கும், கைகழுவுவதற்கும் அதே நீரையே பயன்படுத்துமாறும் கேட்கப்படுகின்றார்கள். ஏனென்றால், இத்தகைய மூன்றாமுலக நாடுகளில், நீர்மூலம் தொற்றுநோய்கள் பரவக்கூடிய சாத்தியப்பாடுகள் அதிகம்.

3 பின்னூட்டங்கள்:

Anonymous said...

hiiiii,
i was thinking to write abt this in one of my site.. surprised to see it here.

I only drink boiled water. so i carry it in a bottle where ever i go. i wash fruits & my hand with that water only.

To wash veges or vessels we use filtered water. filter is not tat expensive. just connect them to ur pipe line.

The same filtered water to brush or wash ur mouth.

Its better to have a big filter at ur mail line. at least u would get better water to wash up.

You cant believe those water mineral water bottles available in Sri Lanka.

I must point out something. When I was back home, we used the normal filter to filter ole cream soda. we got tiny particles on the filter. Just imagine what we have been drinking.

Then we check coke & pepsi (1.5l bottle). Those also got tiny particles. As we are Sri Lankan Tamils we are not able to take those companies to the Court. One day I am waiting to sue those companies (b4 i die)

If you go to food courts or any restaurants would you know that they are using boiled water. Even the Elephant hse icecream. Do they use properly purified water. Who knows.

We used to complain when our parents didnt take us to have icecream outside. they make at home with boiled water. After seeing particle in those soft drinks we decided to reduce (avoiding is not possible-tiredness makes u consume them) taking soft drinks or icecreams. or even juices. I rarely take drinks outside. I eat outside. but drink means tats my boiled water :-)

But if we tend to be neat freak then we will have tough time. We even dont know how they cook in those food places.

There are (multinational) food shops here. Few of my friends working there. I was surprised to see them giving expired coke (they get coke powder). They give excuses tat they dont give for kids. They use for a month after the date given in those packs. That place is one of the most expensive restaurant. After seeing that we cant even come to a conclusion tat those expensive places would provide clean food. Dont know how many expired ingredients are used in those shops.

I do eat outside. just with a hope tat iam consuming boiled water so wont get sick tat soon...

Good post anyways...

மதுவர்மன் said...

நீங்கள் குறிப்பிட்டிருப்பவை அனைத்தும் மிக்க பொருத்தமானவையே. இன்னுமின்னும் தவறாது உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.

நானும் கடந்தபல வருடங்களாக, இன்று வரை, வீட்டிலன்றி வெளியிடங்களில் உணவை உண்பவன் தான். கல்வி, வேலை என்று வீட்டை விட்டு தூர இருக்கும்போது இந்நிலமை தவிர்க்கமுடியாததே.

நீங்கள் கேட்டிருக்கும் கேள்வி நியாயமானது. நாம் உணவுண்ணும் கடைகளில் சுத்தம் பேணப்படுகின்றது என்பதை எவ்வாறு உறுதிசெய்துகொள்வது. சிக்கலான விடயம் தான்.

நானும் இங்கே, பல உணவகங்களில் சாப்பிடுவதே இல்லை. அதுவும் இங்கே இலங்கையில் சுத்தம் சுகாதாரம் சம்பந்தமான விழிப்புணர்வு என்பது சுத்தம் மோசம்.

எங்கள் சாதாரண கண்ணுக்கு தெரியாத ஒரு பயங்கர உலகம் ஒன்று உண்டென்பதை எவருமே நினைத்துப்பார்ப்பதில்லை. அது கண்ணுக்கு தெரியாததால அவர்கள் பார்வையில் படாமலேயே போய்விடுகின்றது.

வெளியிடங்களில், கடைகளில் உணவுண்ணுபவர்கள், முடிந்தவரை நோய்த்தாக்கத்தை தவிர்க்க பின்வருவனவற்றி செய்யலாம்.

1. நீங்கள் உணவுண்ணச்செல்லும் கடையில், உணவுப்பொருட்கள் எவ்வாறு கையாளப்படுகின்றன, எவ்வாறு சேமித்து வைக்கப்படுகின்றன, எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன, உணவு பரிமாறுபவர்களின் நடத்தைகள் என்பவைகளை அவதானிப்பதன் மூலம், சுத்தம் சம்பந்தமான மதிப்பீடொன்றை செய்யுங்கள். சுத்தம், சுகாதாரம் மோசமாக இருந்தால் அக்கடையில் உணவுண்பதை தவிருங்கள்.

2. ஓரளவு சுத்தமாக உணவை கையாளும் கடைகலை தெரிவு செய்துவிட்டீர்களாயில், மேலுல் சுத்தத்தை பேணவிரும்பின், எப்போதும் சூடாக இருக்கின்றன், அல்லது குளிரூட்டப்பட்ட உணவுகளையே வாங்குங்கள். சூடாக இருக்கின்ற அல்லது மிகக்குளிராக இருக்கின்ர உணவுப்பொருட்களில் நோய்க்கிருமிகள் உயிர்வாழவதற்கான சந்தர்ப்பம் மிக குறைவு. உடனடியாக ஆக்கித்தரப்படுகின்ற உணவுகள் ஒப்பீட்டளவில் சுத்தமாக (நோய்ய்கிருமிகளற்று) இருக்கும்.

இவை தவிர்த்து, ஏனைய வழிகளில்

மதுவர்மன் said...

இவை தவிர்த்து, ஏனைய வழிகளில் சுத்தத்தை பேணுவதற்கு நாங்கள் நாங்கள் தனிப்பட்ட முறைகளில் தான்முயற்சிக்கவேண்டும்.

Post a Comment

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம். அனைவரும் இந்த வலைப்பூவை வாசிப்பார்கள். எனவே நல்ல வார்த்தைப் பிரயோகங்களைப் பாவியுங்கள். அத்துடன் இடுகையின் மேற்புறத்தில் உங்கள் நட்சத்திர வாக்கையும் இட்டுவிட்டு செல்லுங்கள்.
நன்றி