ஜெனீவா: உலகே மிக ஆர்வமாக எதிர்நோக்கியிருக்கும் புரோட்டான் மோதல் சோதனை இன்று தொடங்கியது.
27 கிலோ மீட்டர் சுரங்கப் பாதைக்குள் அமைக்கப்பட்டுள்ள டனலில் முதல் புரோட்டான் கதிர்வீச்சு இன்று சோதனைரீதியில் பாய்ச்சப்பட்டது.
ஜெனீவாவுக்கு அருகே உள்ள CERN அணு ஆராய்ச்சி மையத்தில் இந்த சோதனை தொடங்கியது.
இந்த சோதனையால் உலகமே அழியப் போகிறது என்று கூக்குரல்கள் ஒரு பக்கம் எதிரொலிக்க இந்த முயற்சி வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளது.
இந்த சோதனையால் எந்த ஆபத்தும் வராது என்று நம் காலத்திய மாபெரும் இயற்பியல் விஞ்ஞானியாகக் கருதப்படும் ஸ்டீபன் ஹாக்கின்ஸ் கூறியுள்ளார்.
ஸ்டீபன் ஹாக்கின்ஸ், ஒரு தலைசிறந்த எடுத்துக்காட்டான ஒரு பொளதிகவியளார்
இந்த புரோட்டான் கதிர்வீச்சு கட்டுப்படுத்த முடியாத அளவுக்குப் போனால், அதிகபட்சமாக அது 27 கிலோ மீட்டர் வட்டப் பாதையில் அமைந்துள்ள Large Hadron Collider ஆய்வுக் கருவியைத் தான் சிதறடிக்கும். மற்றபடி பிளாக் ஹோல் எல்லாம் ஏற்பட்டுவிடாது என்று கூறியிருக்கிறார்.
அதே நேரத்தில் இந்த சோதனை மூலம் 'Higgs Boson' என்ற சப்-அடாமிக் பார்ட்டிக்கிளை கண்டுபிடித்துவிட முடியும் என CERN விஞ்ஞானிகளின் முயற்சி எந்த அளவுக்கு பலனளிக்கும் என்று தெரியவில்லை. ஆனால், மானுடத்தின் அடுத்தகட்ட வளர்சிக்கு இந்த சோதனை மிக மிக அவசியம்.
எல்லோரையும் போலவே நானும் இந்த ஆய்வின் முடிவுகளை தெரிந்து கொள்ள ஆர்வமாய் காத்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
இன்று இந்த சோதனைகள் தொடங்கினாலும் கூட புரோட்டான்கள் முழு வேகம் பிடித்து ஒன்றோடு ஒன்று மோதிச் சிதற பல மாதங்கள் ஆகும். ஒரு வருடம் கூட ஆகலாம் என்கிறார்கள்.
இன்றைய சோதனையில் புரோட்டான் கதிர்வீச்சு கடிகார சுற்றுக்கு எதிர்சுற்றில் பாய்ச்சப்பட்டது. இந்த கதிர்வீச்சு 27 கி.மீ. நீள Large Hadron Collider-ல் சரியாக பயணித்தால், அடுத்ததாக எதிர் திசையில் இருந்து இன்னொரு புரோட்டான் கதிர் பாய்ச்சப்படும்.
இன்று நடப்பது வார்ம்-அப் சோதனை தான். முழுமையான சோதனை 6 வாரத்தில் தொடங்கும்.
அப்போது எதிரெதிர் திசையில் தலா 2,808 புரோட்டான் கதிர்கள் எதிரெதிரே பாய்ச்சப்படும். அதாவது பல பில்லியன் புரோட்டான்கள் ஒன்றுடன் ஒன்று ஒளியின் வேகத்தில் மோதிச் சிதறும்.
அதன் பின்னர் தான் பிளாக் ஹோல் வருகிறதா அல்லது Big Bang தியரிப்படி உலகம் எப்படித் தோன்றியது என்பதற்கான விடையும் கடவுளின் அணுத் துகள்கள் என்று சொல்லப்படும் 'Higgs Boson' தெரிகிறதா என்பதும் தெரியும்.
நன்றி தட்ஸ்தமிழ் ஆசிரியர்
Wednesday, September 10, 2008
புரோட்டான் 'மோதல்' சோதனை ஆரம்பம்! கடவுளின் துணிக்கை ?
பூக்களின் வகைகள்
விஞ்ஞானம்
Subscribe to:
Post Comments (Atom)
7 பின்னூட்டங்கள்:
//இன்று இந்த சோதனைகள் தொடங்கினாலும் கூட புரோட்டான்கள் முழு வேகம் பிடித்து ஒன்றோடு ஒன்று மோதிச் சிதற பல மாதங்கள் ஆகும். ஒரு வருடம் கூட ஆகலாம் என்கிறார்கள்.///
hummmmmmmmmmmmmmmmmmm
:(((
but can wait for this
சில விசயங்களை அவசரப்பட்டு சொய்தல் நல்லது அன்று.சிறிய தவறுகள் பெரிய அழிவுகளை தரக்கூடும்.மற்றும் அந்த களத்தில் சுமார் 5000 சிறந்த விஞ்ஞானிகள் வேலை செய்கிறார்கள்..
//5000 சிறந்த விஞ்ஞானிகள் வேலை செய்கிறார்கள்.//
frailer ஆனா சிறந்த விஞ்ஞானிகள் இல்லை.
:)))))
இந்த மற்றும் முந்தைய பதிவுகள் அழகான தெளிவான அறிவியல் விளக்கங்கள் நன்றி.! ரிஸல்ட் வெளியாகும் போது மறக்காமல் பதிவெழுதுங்கள், இருந்தால்.. நாங்களும் ஆர்வமாக இருக்கிறோம் படிக்க, இருந்தால்..!
உலகம் அழிதல் என்றால் என்ன?
கொஞ்ச நாளாகவே ஏதோ 'கடவுள் துகள்' காணும் சோதனை, அதனால் உலகமே அழியப் போகிறது
என்று வலைகளில் வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
எனக்கு ஒரு சந்தேகம்: 'உலகம் அழிதல்' என்றால் என்ன?
உலகத்தில் உள்ள மக்கள் எல்லோரும் இல்லாமல் போய் விட்டால் உலகம் அழிந்து போய் விட்டதாக
ஆகி விடுமா?
அப்படி என்றால் இதுவரை பிறந்து/இறந்து விட்ட மக்கள் போய் விட்டதால் உலகம் இல்லாமல்
போய் விட்டதா?
இல்லை, முதல் மனிதன் பிறந்த பின் தான் உலகம் தோன்றியதா? அதற்கு முன் உலகமோ, அண்டமோ
பால் வழியோ, பேரண்டமோ இல்லவே இல்லையா?
மனித இனம் போய் விட்டால், வேறு உயிரினங்களோ, தாவரங்களோ இந்த உலகத்தில் இருக்காதா இல்லை
இருக்கக் கூடாதா?
அல்லது, நாம் இல்லாவிட்டால் உலகமே இல்லை என்று அர்த்தமா?
எதுவுமே நிரந்தரமாக இருக்கக் கூடிய வாய்ப்பில்லை என்ற போது, இந்த மனிதன் மட்டும் ஏன் நிரந்தரமாக
இருக்க ஆசைப்படுகிறான்?
ஒரு சின்ன 27 கி.மீ வட்டப் பாதையில் தோன்றிய துகள் இந்த உலகத்தை அழிக்கும் சக்தி உடையதாகி விடுமா?
விஞ்ஞான கணக்குப் படி 4,000,000,000 வருடங்கள் முன் தொன்றிய உலகம், ஒரு சின்ன துகள் மூலம் அழிந்து
விடுமா?
இது எல்லாம் இருக்கட்டும், நாம் எல்லோரும் போன பிறகு இந்த உலகம் இருப்பதை யார் காணப் போகிறார்கள்?
அப்படி யாராவது கண்டால், உலகம் அழிந்து விட்டது என்பது பொய்யாகி விடுமே?
யாராவது ஏதாவது சொல்லுங்களேன், ப்ளீஸ்.
ரங்குடு,
இது ஒரு பாதுகாப்பான, மிக்கபெரிய விஞ்ஞான சோதனை அவ்வளவு தான்.
யார் யாரோ ஏதோதேவெல்லாம் கற்பனை பண்ணிக்கொண்டு, உலகம் அழியப்போகுது என்று பிதற்றினார்கள். நீங்கள் ஏன் பயப்படுகின்றீர்கள்.
இந்த சோதனையின் வெற்றி, உலக மதங்களின் மேல விழப்போகின்ற இன்னொரு அடி. அதனால் தான் அப்படியெல்லாம் மக்களை பயப்படுத்துகின்றார்கள். நிறுத்துவதற்கு வழக்கு தாக்கல் கூட செய்திருக்கின்றார்களாம் என்றும் கேள்வி.
//ஒரு சின்ன 27 கி.மீ வட்டப் பாதையில் தோன்றிய துகள் இந்த உலகத்தை அழிக்கும் சக்தி உடையதாகி விடுமா?
விஞ்ஞான கணக்குப் படி 4,000,000,000 வருடங்கள் முன் தொன்றிய உலகம், ஒரு சின்ன துகள் மூலம் அழிந்து
விடுமா?//
நீங்கல் கேட்பது சரி, அப்படி தான் இந்த பரிசோதனையில் எதிர்பாராது ஏதாவது நடந்தாலும், அந்த சுரங்கத்தொகுதிக்கே அழிவேற்படுமொழிய உலகத்துக்கு ஒன்றும் நடவாது என்று விஞ்ஞானிகள் சொல்லியிருகின்றார்கள். விஞ்ஞானத்தை பற்றி விஞ்ஞானம் தான் கருத்து சொல்லமுடியுமேயொழிய, விஞ்ஞனம் தெரியாத முட்டாள்களல்ல.
LHC Project Leader, Lyn Evans calls the LHC a machine of discovery. He says physicists believe they will find an elusive elementary particle called the Higgs Boson, which should explain why other particles obtain mass.
And, even if the Higgs is not found, he says the effort will not have been in vain.
"The quest for human knowledge is never a bust," Evans noted. If the Higgs is not there - there are many theorists that say that the most interesting thing of all is if the Higgs is not there. The nightmare scenario for this machine is that we find the Higgs and nothing else....If the Higgs is there, we will find it. If the Higgs is not there, we will have to find out why it is not there and what is replacing it."
இந்த மோதுகை பரிசோதனை குழுமத்தின் தலைவர் திரு Lyn Evans சொல்லுகிறார் சில வேலைகளில் நாம் இறைவனின் துணிக்கையை காணக்கூடலாம் அல்லது அந்த துணிக்கை இல்லாமல் இருக்கலாம் அதற்க்காக இது பயன் இல்லாத ஒரு பரிசோதனை என்று கருதக்கூடாது.
Post a Comment
உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம். அனைவரும் இந்த வலைப்பூவை வாசிப்பார்கள். எனவே நல்ல வார்த்தைப் பிரயோகங்களைப் பாவியுங்கள். அத்துடன் இடுகையின் மேற்புறத்தில் உங்கள் நட்சத்திர வாக்கையும் இட்டுவிட்டு செல்லுங்கள்.
நன்றி