சமீபத்தில் யாரடி நீ மோகினி படம் பார்த்தன்(சத்தியமா தியட்டரில் தான் பார்த்தன்)படம் நல்லா தான் இருந்துச்சு.ஆனால் தமிழ் சினிமாவுக்கே உரிய லாஜிக் ஓட்டைகள் நிரம்ப இருந்தது.எனது சிற்றறிவுக்கு எட்டிய லாஜிக் ஓட்டைகளை இங்கு முன்வைக்கிறன்.
- நயன்தாரா அறிமுக காட்சியில் காரில் இருந்த படி மழை தூறலில் முகத்தை நனைத்து பின்னர் காருக்குள் முகத்தை எடுக்கும் போது ஒரு நீர் துளியையும் முகத்தில் காணவில்லை
- இரண்டாம் நாயகன் கார்த்திக்கு தனது lover,best friend வேலை செய்யும் கம்பனியின் பெயர் தெரியாதாம்.(அதாவது இருவரும் ஒரே கம்பனியில் வேலை செய்யிறது எண்டு தெரியாதாம்)
- hello world print பண்ண தெரியாதவர் ஒரே இரவில் crash பண்ணின சிஸ்டத்த சரிப்படுத்துவாராம்
- தனுஸ் நயந்தாராவிடம் காதலை சொல்லும் காட்சி அவுஸ்திரேலியாவில் படமாக்கப்பட்டது என்று காதில் நல்லாவே பூசுத்தப்பட்டுள்ளது(கிரபிக்ஸ் என்று அப்பட்டமாக தெரியுது)
- கிணற்றில் விழுந்த நயந்தாராவின் தங்கையை காப்பாற்றி வெளில கொண்டுவந்து சிகிச்சை அளிக்கும் போது அவா இப்பதான் குளிச்சு முழுகி தலை துடைச்சு மேக்கப் போட்ட மாதிரி இருக்கிறா
10 பின்னூட்டங்கள்:
படத்தை நானும் பார்த்தேன். ரொம்ப பிடிச்சுருந்துச்சு(நீங்க சொன்ன ஓட்டைகளையும் மீறி)
//ஒரு துளி நீர் துளியையும் முகத்தில் காணவில்லை//
ஒரு வேளை, சிம்புவிட்ட மழையோ. அதான் ஒட்டவே இல்ல!! ஹிஹி..
//இரண்டாம் நாயகன் கார்த்திக்கு தனது lover,best friend வேலை செய்யும் கம்பனியின் பெயர் தெரியாதாம்//
சரியாக சொன்னீங்க..
//தனுஸ் நயந்தாராவிடம் காதலை சொல்லும் காட்சி அவுஸ்திரேலியாவில் படமாக்கப்பட்டது//
ரீப்பீட்டு!!
//ஒரு வேளை, சிம்புவிட்ட மழையோ. அதான் ஒட்டவே இல்ல!! ஹிஹி..//
இருக்கலாம் இருக்கலாம்:) ஹிஹிஹி....
எனக்கு கதைக்கரு உடன்பாடாயில்லை.
அதென்ன, திருமணம் நிச்சயிக்கப்பட்ட பிறகு வேறொருவருடன் காதல்வயப்படுவது? திருமணம்வரை மௌனிப்பது?
நல்லவேளையாக மாப்பிள்ளை முன்னரே கண்டுபிடித்தார். அவர் வாழ்க்கை என்னவாகியிருக்கும்?
குடுத்த காசுக்கு குஷியாக சிரித்துவிட்டு வுந்தீர்கள் என்று நினைக்கிறென் லாஜிக் பார்த்தால் கடைசி வரை லாஜிக் பார்க்க வேண்டியதுதான். "குறைவு கண்டார் குறையே காண்டார்"
அன்புடன்
விஷ்ணு.
ஒரு துளி நீர் துளியையும் முகத்தில் காணவில்லை
நயன்தாரா செம் Hot மச்சி. அப்புறம் எப்படிங்க முகத்துல நீர்த்துளி இருக்கும்..?
நல்லவேளையாக மாப்பிள்ளை முன்னரே கண்டுபிடித்தார். அவர் வாழ்க்கை என்னவாகியிருக்கும்?
என்னவாகியிருக்கும்...அடுத்த படத்துல நடிக்குறதுக்கு தயாராகிக்கொண்டிருப்பார்.:-))
நந்து இவங்களிட்ட சமூகக் கருத்துக்களை எதிர்பார்க்குறது முட்டாள்தனம். ஜஸ்ட் சினிமா..மூன்று மணித்தியாலம் பாத்தமா போனமான்னு இருக்கவேணும்.
அதென்ன, திருமணம் நிச்சயிக்கப்பட்ட பிறகு வேறொருவருடன் காதல்வயப்படுவது? திருமணம்வரை மௌனிப்பது?
இது மட்டும் இல்லைங்கோ, படத்துல வாறதில 90% உண்மையில எங்கட வாழ்க்கையில சரிவராத விடங்கள்தான்.
பி.கு: நான் இன்னும் இந்தப் படம் பாக்கவில்லை
நேற்று நானும் பார்த்தேன். நீங்கள் குறிப்பிட்டவற்றில் மழை நீர் தவிர அடுத்தவை பற்றி அவதானித்த போதும்; படமெல்லா?? எனப் பார்த்து முடித்தேன். பிடித்தது.
அத்துடன் ரகுவரன் மனதில் நிற்கிறார்.
தமிழ் சினிமா என்றால் இப்படித்தான் இருக்கும்.
நீங்க சொல்லுற மாதிரி லாஜிக் ஓட்டைகள் எல்லாம் இல்லாமல் போகவேணுமெண்டால், முதலிலை ஹீரோயிசம் ஒழியவேணும்.
சினிமா கதாநாயகர்களுக்கு கோயில் வைத்து கும்பிட எங்கடை சனங்கள் தயாரா இருக்கும் வரைக்கும் இன்னும் இன்னும் பெரிய பெரிய லாஜிக் ஓட்டைகளெல்லாம் இருக்கும்.
எல்லாரையும் (கம்பர், திருவள்ளுவர் முதலிய எழுத்தாளர்களை, எம்.ஜி.ஆர், ரஜினி முதலான நடிகர்களை, இன்னும் யார் யாரையோ எல்லாம்) கடவுளாக்கி கொண்டாடுற தமிழர் பண்பாடு தான் இதுக்கெல்லாம் காரணம்.
ஆகவே, இந்த சினிமா கதாநாயகர்க் கடவுளர்களிடம் நீங்கள் லாஜிக் எல்லாம் எதிர்பார்ப்பது ரொம்ப தப்பு.
தமிழனுக்கு உள்ள சாபக்கேடய்யா இது!
ஏமாளிகள் நாங்கள் தான்.
i don't know how so many ppl say this movie is good/enjoyable.. it was such a crap that i was waiting for the movie to get over on scene by scene basis..
ஒரு விஷயம் புரிகிறது கௌபாய் மது
எல்லோரும் பல நேரம் ஒரே மாதிரி சிந்திக்கிறோம் எனவே நம் பார்வைகள் சரிதான் என்று தோனுது.
நான் இன்னமும் கொஞ்சம் லாஜிக் ஓட்டை சேர்த்திருக்கேன் அவ்வளவே
ஹீரோயிசம் இல்லாமல் யதார்த்தமான 'பள்ளிக்கூடம்' போல் கதை வந்தா ஓட்டைகள் அடைபடலாம்.
படத்தை நானும் பார்த்தேன். நீங்க சொன்ன ஓட்டைகளையும் வேறு ஓட்டைகளையும் கவனித்தேன்.எங்கேயே பார்த்த மயக்கம் பாடல் காட்சியை தவிர படம் பிடிக்கவில்லை.
Post a Comment
உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம். அனைவரும் இந்த வலைப்பூவை வாசிப்பார்கள். எனவே நல்ல வார்த்தைப் பிரயோகங்களைப் பாவியுங்கள். அத்துடன் இடுகையின் மேற்புறத்தில் உங்கள் நட்சத்திர வாக்கையும் இட்டுவிட்டு செல்லுங்கள்.
நன்றி