Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Thursday, December 3, 2009

நானும் காரில்...




பதினாறே வயது நிரம்பிய
பருவப் பெண் நான்.
அழகான சொகுசுக் காரிலேயே
அனுதினமும் செல்கின்றேன்.

பின்னிருக்கையில் நான்,
பக்கத்திலே குழந்தை,
ஐயா காரை ஓட்டுகின்றார்,
அம்மா அவருக்கு பக்கத்தில்

ஐயாவும் அம்மாவும்
வெளிச்செல்லும் போதெல்லாம்
அவர்களுடன் நானும்
குழந்தையை கவனிப்பதற்காய்...

பதினாறே வயதான - மலையகத்துப்
பருவ மங்கை நான்
அழகான சொகுசுக்காரிலேயே
அனுதினமும் செல்கின்றேன்


(உண்மையாக கண்டகாட்சியை வைத்து எழுதியது, 2009-12-01)

Tuesday, January 6, 2009

என் இனிய நண்பனே.....

















































































































நன்றி e-mail நண்பர்

Wednesday, July 16, 2008

"சீரியல்" அலை

மதி தோன்றும் மலை உச்சி!!
மதி மயங்கி மேகங்கள் உரச
மதி தயங்கி.. விதி குழம்பி
அவள் மட்டும் தனியே
நின்றாள்..

மான்விழி ஓரத்தில்
நீர்த்துளி புரள..
மனத்திரை முழுதும்
போராட்டம் உருள..
எங்கும் மயான அமைதி

சட்டென்று அவள் நகர
பட்டென்று "தொடரும்.." தோன்ற
பதறினர்..
எம் தொடர் ரசிகர்கள்..
எம் தொலைகாட்சி கைதிகள்..
கருகியது காலம்
கத்தரி குழம்போடு சேர்த்து..

அருமையான நேரம்
வெறுமையாக ஓடுகிறது..
சிந்தனை அலையை தவிர்த்து
"சீரியல்" அலையில் மூழ்கின்றனர்..
தொடரின்
சதி கற்பனையால்..
தெளிந்த குட்டையும்
சகதியாகிறது..

என்செய்வது..
நம்மவருக்கு கிடைத்த ஒரே அமைதியும்
இதுவல்லோ!!!

Saturday, July 12, 2008

பசுமை வெளியில் ஒரு பட்ட மரம்

மனிதனை மனிதனாக
மதிக்கும்
மாண்புமிகு நாட்டில் வேலை..
சீக்கிரம் செல்!
சகதியில் நின்றபடி அன்னை...

கடமையை மறவாதே!
கடந்த பாதையில்
கயர் படிந்த கல்லுகளின்
காயங்களை மற!
கலங்கரையாக நின்றபடி தந்தை...

எதிர் நீச்சல் செய்!
எதிரே ஓங்கிய மதில் தோன்றின்
ஏறிப்பாய ஏணியாய் என்னை அழை!
எதிர்கால நினைவுகளுடன் சக உதிரங்கள்...

சாதிக்க..
சிந்திக்க தொடங்கியவன்..
சாகசங்கள் படைக்க
நினைத்தவன்..
இன்று
கசப்பான அனுபவங்களால்
கடல் கடக்கிறான்..

பசுமையான இனம்
சுமையான மனம்..
பிறர் ரசிக்கும் வனம்
பிரிவால் தவிக்கும் மனம்..
நாழிகை முன்னே நகர.. நினைவுகள் பின்னே நகர..
பசுமை வெளியில் ஒரு பட்ட மரமாக நின்றான்

சிந்தித்தான்..
ஒடுங்கியிருக்க பிறந்தவனல்ல
பிடுங்கியெறிந்தான் களையெனும் வடுக்களை!!
ஊன்றினான் முயற்சி விதைகளை!!
பட்ட மரம் துளிர்த்தது
பசுமை வெளியில்...

Thursday, May 1, 2008

ஏக்கம்

முந்தைய இரவுகளில் நிலவில் முழங்கி வந்த
தந்தையர் தம் முரசங்கள்தாம் அடங்கிப் போயினவே!!
ஓங்கி எரி தணலில் ஒளியில் விடுதலையில்
நாங்கள் களித்தாடும் நடனம் என்று வருமோ??

இது நம் விடுதலையை எதிர்பார்க்கும் அனைவருக்கும் சமர்ப்பணம்!!!!!

---------------------------------------------------------------------------------

நான் நீயல்ல!!
ஆனால் நான் நானாக இருப்பதற்கு
நீ ஒரு சந்தர்ப்பம் தருகிறாயில்லை!!!

Wednesday, April 30, 2008

சாதி

இவன் காதிலும் விழுந்திருக்குமோ ?
ஈனப்பிறவிகள்-
காலாவதியான கட்டுப்பாடுகள்,
தொலைந்துபோன சம்பிரதாயங்கள்,
சில கற்பனைக் கோடுகள்-
இவற்றைப் பிடித்துக்கொண்டு,
படி தாண்டாத
அல்லதுதாண்டவிரும்பாத’வீரர்கள்’-
குரங்காயிருந்தபோது உறைக்காதவைகள்-
அப்படியே இருந்திருக்கலாம்.
நண்பனின் இலையில்
சோற்றை எறிந்துவிட்டு
குசினிக்குளிருந்து
குசுகுசுத்த வார்த்தைகள்-
‘என்ன எளிய சாதியோ தெரியாது’
இவன் காதிலும் விழுந்திருக்குமோ ?

Friday, April 25, 2008

கனவுக் கோட்டை

நீ சிந்தித்துக்கொள்ளும் பொழுதுகள்
எல்லாம் சுருங்கிவிட்டன
இன்னும் சிறிது நேரத்தில் - நீ
சிந்திப்பதையே நிறுத்திவிடுவாய்
அதன்பின்
உன் சிந்தனை வெளிகள்
எரிந்த
ரோமைப்போல்
சாம்பல் மேடாகவே -
காட்சியளிக்கும்.
எப்படித்தான் எரிந்தாலும்,
நீரோவைப் போல
நீயும்
பிடிலைத்தான் பிடித்திருப்பாய்.
அங்கு - உன் சிந்தனைகள்
சுருங்கிச் சூக்குமம் ஆகிவிடுவதால்
கனவுக் கோட்டைகளை
கட்டியழுதபடி
மீதிக்காலத்தை கழித்துவிட்டு -
கடைசியில்
விழித்துக்கொள்வாய்.
அப்போது
காலம் மிகக் கடந்திருக்கும்.....

Thursday, April 24, 2008

இதுவும் காதல் தான்....

அவளை முதலில் பார்த்தபோது பரவசமடைந்தேன்....
ஆனால் பட்டாம்பூச்சிகள் பறக்கவில்லை....

அவள் அழகானவள் உண்மை....
ஆனால் தேவதை என்னும் அளவுக்கு இல்லை....

அவள் அருகில் இல்லாதபோது தவித்தேன்....
ஆனால் நிமிடங்கள் வருடங்களாகுவதில்லை....

அவள் பிரிந்தபோது தவித்தேன்....
ஆனால் உயிர் நீக்க துணியவில்லை....

நம்பினால் நம்புங்கள்.... என் காதல் உண்மையானது....
புனிதமானது....

Tuesday, April 22, 2008

சகியே

கயல் மீனோடும் விழிகளினால் வீணைமீட்டி மனதில்

காதல் இராகமிசைத்து என்

விழி வழியே உலாவி எனை

பாடாய் படுத்திய உயிர் வலியே


பார்வையினாலே எனைப் பருகி இன்று

பார்த்தும் பார்க்காமல் போக நம்

காதலையும் விதி போல்டு செய்ததா

கண்களை காண இமைகளே மறுப்பதா


கண்கள் கலங்கி சிவக்கின்றனவே அந்த

கரைகின்ற மாலைப்பொழுதினைப்போல

எனைப்போல் காதல் வலியால் தவிக்கின்றதோ

அந்த மாலைப்பொழுதும்


Monday, April 14, 2008

என்னைச் சுற்றிப் பெண்கள்(மெயிலில் வந்தது)

அம்மா
உயிர் உலுக்கி
உலகுக்குள் கொண்டு வந்தாள்..
ஊனை உருக்கிப்பருகத்தந்தாள்..
என்னைச் செதுக்கித்
தமிழனாய் செய்தாள்!..


தங்கை
எனக்காக அழுவாள்..
என்னையும் அழவைப்பாள்..
என் எச்சம் அருந்தியவள்..
ஆருயிர் நண்பியாயும்
அழகிய உறவாயும்
வந்த...என்
தாய்வீட்டுக் கடமை.


நண்பி
அவசரமாய் வரும்
ஆறுதல் வார்த்தைக்கு
சொந்தக்காரி..என் வெற்றிக்கு
குதூகலிக்கும் முதல் நலன்விரும்பி..
கல்யாணமான பின்தான் காணாமல்
போய்விட்டாள்!!


காதலி
வற்றாத தமிழ்
வார்த்தைககடலில்
குதித்தாள்;..கரைந்து போகாத
என் காதலை
கவிதையாய் கண்டெடுத்தாள்..
தான் மட்டும் படித்து
பெரும் சுயநலவாதியானாள்!!


மச்சாள்
அனுமதி இல்லாமல்
என்அறைக்குள் நுழையும்
அழகிய திமிர்..சின்ன
சூறாவளி..அப்பப்போது
என் சட்டையையும்
அணிந்துகொள்ளும்!.


மனைவி
எழுத இதழ் தந்தாள்..
கோர்க்க விரல் தந்தாள்..
மூச்சுக்காற்றில் பாட்டுத் தந்தாள்
இளைப்பாற இடம் தந்தாள்..
இவள் என்னைக் குழந்தையாயும் தந்து
தந்தவர்கள் பட்டியலில்..தாய்க்குப்
பின் தரமாய் நிற்கிறாள்!!


அத்தை
உபசரிப்பில் கூட
உபத்திரபவம் தரக்கூடாதென்று
நினைத்து..மெதுவாக
பேசும் இன்னொரு அம்மா!..


சித்தி
தொலைதூரத்தில்
வாழ்ந்து..சுகம்
விசாரித்துக்கொண்டிருந்தாலு
நல்லது கெட்டதிற்கு
ஓடோடி வருவாள்
பக்கத்துவீட்டுக்காரி போல்!!


பாட்டி
திட்டித்திட்டி தீர்த்தாலும்
தேவைக்கு பாக்குப் பெட்டி
திறந்து பணம் தரும்..
வயதான தனலட்சுமி..


மகள்
பிறந்ததும்
பிஞ்சுப்பாதங்களால்
முகத்தில் மிதித்தாள்
இதத்தில் செத்தேன்..
வளர்கையில்
பிஞ்சு விரல்களால்
கன்னம் கிழித்தாள்
சுகத்தில் செத்தேன்..
பருவத்தில் காதல் மோகத்தில்
இதயத்தில் மிதித்தாள்..
நிஜமாய் செத்தேன்!!


மருமகள்
காலைக்கட்டிக்கொள்ளவும்
தோளில்தொற்றிக்கொள்ளவும்
அக்காபெற்ற அழகிய பொம்மை!!


பேத்தி
என்மூக்குக்
கண்ணாடியில் மோகம்
கொண்டவள்..கிழ
முதுகேறி சவாரி
செய்யும் சந்ததி
முத்திரை!...


நன்றி
-முகம் தெரியா படைப்பாளி-

Thursday, April 10, 2008

கேட்டதில் பிடித்தது......





















நட்பை சொல்ல
ஒரு நிமிடம் போதும்.....
அதை நிரூபிக்க
ஒரு வாழ்க்கை வாழவேண்டும்.....

Monday, April 7, 2008

அற்புதமேதும் நிகழாதோ! - கவிதை




















மருதமடு கருணைமாதா
இடம்பெயர்க்கப் பட்டபின்பு
இருதய நாதருக்கு
இடதுகையும் ஒடிந்ததுவோ.

அன்னைமாதா பெயர்ந்ததனால்
அநாதையாக ஆகிப்போன
மன்னுலகின் மைந்தனுக்கும்
மார்பிலும்ஷெல் பாய்ந்ததுவோ!

அருளளித்தவர் கரத்திலொன்றை
அறுத்துவீழ்த்திய பாவிகள் யார்?
கருணைநாதர் நெஞ்சினில்கூட
காயம்படுத்திய வஞ்சகர் யார்?

மனிதரிடை சண்டைகளில்
மனிதர்கள் மட்டுமல்ல
கடவுளரும் காயம்பட்டு
காணாமல்போகும் காலமிது.

மனிதமிங்கே மாண்டுபோக
இனிதெம்வாழ்வு இருண்டுபோக
புனிதநிறை பதியின்வாசலிலும்
மனிதக்கொலைகள் மலிந்துபோயின.

பொன்னப்பல வாணேச்சரத்தில்
பொன்னம்பவாணர் முன்னிலையில்
என்னமாய் கொல்லப்பட்டார்
எங்கள் எம்பி மகேஸ்வரன்

எங்கே போனார் அம்பலவாணர்?

சிவபக்தனாம் மகேஸ்வரன்...
சிவபூசையிலே கொல்லப்பட
சிவனெங்கே போயிருந்தார்
செத்துத்தான் தொலைந்தாரோ!

சிவன் தான் வேண்டாமே
கரடியாவது புகுந்திருந்தால்
கொலையாளி ஒருகணம்
குறிதவறிப் போயிருப்பான்.

அழித்தல் தொழில்தான்
உன்தொழிலானால் - சிவனே
அழிக்கவருபவரையாதல்
அழித்துத்தான் தொலையேன்.

நத்தார் நாளொன்றின்போது
நடந்துகொண்டிருந்த திருப்பலியில்
நரபலியெடுக்கப் பட்டாரே
நம்ஜோசப் பரராஜசிங்கம்.

உன்பிறந்த தினத்தினிலே
உன்னுடைய விசுவாசி
உன்னிரண்டு கண்முன்னே
உயிர் பறிக்கப் பட்டபோது

எங்கேயாண்டவா பார்த்திருந்தாய்,
ஏன் நீவந்து தடுக்கவில்லை?

சிவராத்திரி தினத்தினை
சிறப்பாக அனுஷ்டிக்க
அவசரமாய் சென்றவேளை
அய்யகோ சிவனே...!

சிவனேசனை காத்திட - நீ
சிறிதேனும் முயன்றாயா?
இல்லையே சிவனே - உனக்கு
இல்லையா இதயமே!

காத்தான்குடிப் பள்ளியி(வாசலி)ல்
கொத்துக்கொத்தாய் உன்னவர்கள்
கொலைசெய்யப் பட்டபோது
காப்பாற்ற வில்லையே நீ...

அல்லாவே உன்கிருபை
இல்லையோ இலங்கைமண்ணில்?

யாகப்பர் கோவிலிலும்
நவாலிசென் பீட்டரிலும்
ஏனப்பா யேசப்பா
எம்மவரை கைவிட்டாய்?

யாரிடமவர்கள் வந்தார்கள்?
உன்னிடம்தானே அடைக்கலமாய்!

உன்னிடமே அடைக்கலமாய்
ஓடிவந்து புகுந்தவரை
ஏன்காக்க மறந்தனையோ
இன்றில்லை அவருலகில்.

நல்லூரானே!
உன் தேர்த்திருவிழாவென்றால்,
உன் தேர்வடம் பிடிக்காத கைகள்
உள்ளனவா யாழ்ப்பாணத்தில்?

இல்லையே!

உன் தேர்பிடித்தகைகளெல்லாம்
குருதிதோய்ந்து போகும்போது
என்னையா செய்கின்றாய்
ஒருக்காலும் தடுத்திலையே

தேரோடிய வீதியிலும்
பிணவாடை அடித்தபோதும்
பாராமல் இருந்தாயே
பயந்திட்டாயோ நீயுமங்கே!

இல்லை.

எங்கள் மண்ணில் மட்டும்.
எந்தவித அற்புதமும்
இதுவரை நடந்ததில்லை.
இனியும் நடக்கப்போவதில்லை.

ஆண்டவனின் அற்புதம்
இனிமேலும் நிகழுமென்று
வீண்பொழுது போக்கிடில்
வீழ்ச்சிதவிர மீட்சியில்லை

கடவுளர்கள் இனியுமெம்மை
காப்பாற்றப் போவதில்லை
இடர்களைய நாங்களாய்
எழுந்தால்தான் உண்டுவழி.

ஆண்டவன் பெயரில் அரசியல் செய்வோரும்
கடவுளின் பெயரில் காசுபணம் உழைப்போரும்
இறைவன் பெயரில் வெறிபிடித் தலைவோரும்
மதத்தின் பெயரில் மக்களை ஏய்ப்போரும்

இருக்கும் வரைக்கும் இறைவனும் இல்லை
அற்புதம் நிகழ்ந்திட வழியும் இல்லை

பின்னணி: அண்மைக்காலமாக (2008, மார்ச் இறுதிப்பகுதியிலிருந்து) மடு தேவாலயப்பகுதியை கைப்பற்றுவதற்காக அரச படைகளும், அதை தடுப்பதற்காக விடுதலைப்புலிகளும் தீவிரமாக போரிட்டுக்கொண்டிருக்கும்போது, மடுமாதா (சீமெந்து சொரூபம்) பரிதாபகரமாக இடையில் அகப்பட்டுக்கொள்ளவேண்டியதாயிற்று. கடவுளை காப்பாற்றவேண்டிய பாரிய வரலாற்றுக்கடமை இப்போது மனிதர்கள் முன். அப்பகுதி கத்தோலிக்க ஆயர்கள் ஒன்றுசேர்ந்து, மடுமாதாவை பாதுகாப்பான ஒரு இடத்துக்கு நகர்த்தவேண்டியதாயிற்று. மடுமாதா பாதுகாக்கப்பட்டாலும் இருதய நாதர் பதுகாக்கப்படவில்லை. மடுமாதா சென்றபின்பு, மடு இருதய நாதர் கோவில் ஷெல் தாக்குதலுக்கு இலக்கானது. அத்தாக்குதலில், அக்கோவில் பலத்தசேதமடைந்ததுடன், இருதயநாதர் சிலையும் சேதமடைந்தது. இருதயநாதரின் இடக்கையொன்று உடைந்துபோக, அவர் நெஞ்சிலும் சன்னம் துளைத்திருந்தது. இவற்றின் பின்னணியில், சாதாரண ஒரு குடிமகனாக, என் முன் எழும் கேள்விகள் மேலே கவி வடிவில்................
தொடர்புபட்ட தகவல்கள்:
மடு இருதயநாதர் கோவில் மீது சிறிலங்காப் படையினர் எறிகணை வீச்சு

Tuesday, April 1, 2008

ஊர்க்குருவி ஒன்று பருந்தாக முயற்சிகிறது

எவனோ ஒருவனின் கைக்கூ வகை கவிதையை பார்த்தவுடன் என் மனதில் எங்கோ வாசித்து மறந்திடாத ஒரு சில

மாற்றங்கள் மார்தட்டி பெறப்பட வேண்டியவை!
மண்டியிட்டல்ல!!

பகலில் சூரியன்
இரவில் நிலா,
தங்கிட ஒரே கிணறு.

இரண்டு லாரிகள் மோதல்
இரண்டின் முகப்பிலும்
அம்மன் துணை.

அவளுக்கு வயது 30

மணமாகாத அவளுக்கு வயது 30
gtalkஇல் குழந்தையின் புகைப்படம்

இன்பம்

அலறி அடித்த alarm மணியை

அணைக்காமல்

அடுத்தவனை எரிச்சல் படுத்தி

தூங்கும் சுகம் வேறெங்கும் உண்டோ?

Sunday, March 30, 2008

ஓரிரண்டு மாதம் உருண்டோடி விட்டால்..


காலை உணவு உண்ணும் போது ..
அவளுக்கும் எனக்கும் ஆறேழு கதிரை
இடைவெளி இருந்தாலும்
ஆனந்தத்தில் நிறைந்தது என் மனது.

இன்னும் ஓரிரண்டு மாதங்கள்
உருண்டோடிவிட்டால் ..
பல்கலைகழக வாழ்க்கைக்குப்
பதவி இழப்பு - அவளுக்கு
இன்னும் ஒருவருடம் மிச்சம்.

காலம் தாழ்த்தாமல் காதல்
சொல்வோம் என்று காலடி வைக்க..
விட்டில் பூச்சிக் காதலடா ,விட்டுவிடு
என்கின்றது என் சகபாடி.

இன்னும் ஒரிரண்டு மாதம்..
காலைப்பொழுது , கன்டீன் ...
சுகந்தமாக இருக்கும் என்பொழுதுகள்
-பிறை

Wednesday, March 26, 2008

வணக்கம்

எல்லோருக்கும் வணக்கம்
நான் அபிமன்யு
இதோ எனது சிறு கிறுக்கல்

வறுமையின் நிறம் சிவப்பு

புது வருடம் சிவப்பு மற்றும் பச்சையில் பிறக்குதாம்.....
முதலாளியம்மா மனமுவந்து தரும் பாவித்த உடுப்புகளில் இருந்தால் எனக்கும்.....
சிவப்பு எமக்கு சொந்தமான நிறம்... பச்சைக்கு எங்கே போவது?


நான் காதலித்ததால்...........

கவிதை எழுத தொடங்கினேன்
நான் காதலித்ததால்

இளையராஜாவின் குரல் பிடிக்காமல் போனது
நான் காதலித்ததால்

குறுஞ்செய்தி அனுப்புவதில் விண்ணணாணேன்
நான் காதலித்ததால்

தட்டச்சு வேகம் கூடியது கணணி உரையாடல் மூலம்
நான் காதலித்ததால்

பொண்களிடம் கூச்சம் இன்றி பேசத்தொடங்கினேன்
நான் காதலித்ததால்

ஆகமொத்ததில் இன்பதின் வலி உணர்ந்தேன்
நான் காதலித்ததால்

Tuesday, March 25, 2008

எரிச்சல்

தேவயானவர்களை
தேவயற்ற நேரத்தில் பார்க்கும் போது
ஏற்படும் உஷ்ண பிரசவம்...!

Wednesday, March 19, 2008

உன் நினைவில்

பழைய உன் Photo பார்த்தபோதுதான்
காலத்தின் வேகமும் அதனால் கழுவிச்சென்ற
நிஜங்களும் மனதை தொடுகிறது..!