Friday, April 11, 2008

உயிர் வாழும் மேற்க்கிந்திய தீவுகள் அணி......

1976 இல் இருந்து 1983 வரை கிரிக்கெட்டில் super start யார் என்று கேட்டால் சின்னப்பிள்ளையும் சொல்லும் மேற்க்கிந்திய தீவுகள் அணி என்று.இப்ப அவுசஸ்திரேலியா எப்படியோ அப்ப மேற்க்கிந்திய தீவுகள் அணி தான் கிரிக்கெட் ஜாம்பவான்களாக திகழ்ந்தனர் என்று உங்களுக்கு நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.அப்படிப்பட்ட மேற்க்கிந்திய தீவுகள் அணி 1983 இல் இந்தியா உலக கோப்பை கைப்பறிய பின்னர் சற்று தழம்ப ஆரம்பித்து கடந்த 10 வருங்களாக செயற்க்கை சுவாசம் கொண்டே உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றது என்றால் மிகையில்லை.செயற்க்கை சுவாசத்தின் மிகப்பெரிய சிலிண்டர் சற்று முன்னர் தான் தீர்ந்து போயிற்று(வேற யாரு லாரா என்னும் ஜாம்பவானைத்தான் குறிப்பிடுகின்றேன்).அப்படியிருக்க எனி மேற்க்கிந்திய தீவு அணியின் எதிர்காலம் என்ன என்று எல்லாரும் யோசிச்சுக்கொண்டிருக்க நேற்று இலங்கை அணிக்கு தக்க பதிலடி கொடுத்து இப்ப நான் தான் அணியின் சுவாச சிலின்டர் என்று நிருபித்துள்ளார் சந்திரப்போல்.சர்வான்,கெயில்,பிராவோ போன்ற சின்ன சின்ன சிலின்டரின் மூலம் உயிர் வாழ்ந்து கென்னியா,சிம்பாவே போன்ற நாடுகளுடன் போட்டி போட்டுக்கொண்டிருந்த மேற்க்கிந்திய அணி மீண்டும் விஸ்பரூபம் எடுக்க ஆரம்பித்திருப்பதை நேற்றைய இலங்கைக்கு எதிரான ஆட்டம் பறைசாற்றுவதாக அமைந்துருந்தது. 2 பந்துகளில் 10 ஓட்டங்கள்.49.4ஆவது பந்துக்கு 4 ஓட்டங்கள் எடுத்த சந்திரப்போலுக்கு கடைசி பந்துக்கு 6 ஓட்டங்கள் எடுக்க வேண்டிய நிலை.சந்திரப்போலுக்கு மட்டும் அல்ல கிரிகெட் தெரிந்த அனைவருக்கும் தெரிந்திருக்கும் அந்த கடைசி பந்து வாஸ் low full toss ஆக வீசப்போறார் என்று.வழமாக நின்ற சந்திரப்போலுக்கு அந்த low full toss பந்து வெற்றிக்கனியாக தெரிய 6 ஓட்டங்களைப்பெற்று வெற்றிக்கனியை பறித்துக்கொண்டார்.



இதுவரைகும் கடைசிப்பந்துக்கு 6 ஓட்டங்களை பெற்று தமது அணிக்கு வெற்றியை தேடித்தந்தவர்கள் ஜாவிட் மியன்டாட்,லான்ஸ் குளுஸ்னர்.ஆனால் ஜாவிட் மியன்டாட் வெற்றிக்கு 5 ஓட்டங்கள் தேவை என்ற நிலையிலும் லான்ஸ் குளுஸ்னர் வெற்றிக்கு 4 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் 6 ஓட்டங்களை கடைசிப்பந்தில் பெற்று தமது அணிக்கு வெற்றியை தேடித்தந்துள்ளனர்.ஆனால் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக கடைப்பந்ந்துக்கு 6 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் அதைப்பெற்ற சாதனையாளராக சந்திரப்போலே திகழ்கிறார்.அவருக்கும் மேற்க்கிந்திய தீவுகள் அணிக்கும் வாழ்த்துவோம்.











0 பின்னூட்டங்கள்:

Post a Comment

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம். அனைவரும் இந்த வலைப்பூவை வாசிப்பார்கள். எனவே நல்ல வார்த்தைப் பிரயோகங்களைப் பாவியுங்கள். அத்துடன் இடுகையின் மேற்புறத்தில் உங்கள் நட்சத்திர வாக்கையும் இட்டுவிட்டு செல்லுங்கள்.
நன்றி