Showing posts with label குட்டிக் கவிதை. Show all posts
Showing posts with label குட்டிக் கவிதை. Show all posts

Monday, April 21, 2008

காதலியே

காத்திருக்கும் நேரமெல்லாம் - நான்
கவிதை எழுதுகிறேன் உனை நினைத்து
இன்னொரு வைரமுத்துவை உருவாக்கி
இருக்கும் வைரமுத்துவுக்கு ஆப்பு வைக்காதே

Thursday, April 17, 2008

இந்திய சினிமா

தமிழ் சினிமா

காதல்
பாடல்
சண்டை
சுபம்

ஹிந்தி சினிமா

கலர் பூசப்பட்ட
தமிழ் சினிமா

மலையாள சினிமா

தள தள ஹீரோயின்களை உருவாக்கும்
ஹீரோயின் ஊற்று

தெலுங்கு சினிமா

தமிழ் சினிமாக்கு கடன் கொடுக்கும் சேட்டு
அப்பப்ப கடன் வாங்கும் கேட்டு

Friday, April 4, 2008

வெறுப்பு

பேரூந்து இருக்கையில் அவனும் நானும் ஒரே சட்டையில்
அவனைப்பார்த்து எனக்கு வெறுப்பு
என்னைப்பார்த்து அவனுக்கு வெறுப்பு

Friday, March 28, 2008

மௌனம்

நீ சொல்லாமல் மறைக்கிறாய்
நான் சொல்ல முயன்று தோற்கிறேன்
கண்ணீரோடு காதல்

Thursday, March 20, 2008

சபாஷ் சரியான கேள்வி

மூன்று மாததில் மூன்றாவது மொபைல் மாற்றிய
என்ன பார்த்துக்கேட்டாள் மொபைல் மட்டும் தானா?

Monday, February 25, 2008

அவள் ஒரு கொலையாளி....

ஆயுதம் இல்லாமல் என்னை கொல்கின்றாள்
என்னைப்பார்த்து சிரிக்கும் போது

Saturday, December 29, 2007

சுவரொட்டி

இங்கே சுவரொட்டி ஒட்ட வேண்டாம் என ஒரு சுவரொட்டி

இலங்கையில் இன்று

மதகுருமார்களுக்கான இருக்கை
பிக்கு வந்தார் குருக்கள் எழுந்தார்

Friday, December 28, 2007

எ(ஜ)ம(ா)ன்

எ(ஜ)ம(ா)னை கூவி எழுப்பியது
மதியம் கறியாக போகும் சேவல்