Showing posts with label பூங்காவிற்காக. Show all posts
Showing posts with label பூங்காவிற்காக. Show all posts

Wednesday, February 13, 2008

எல்லாப் பூக்களுக்காக...ஒரு பூங்கா

நான் ஒரு பராமரிப்பாளன். தமிழ்ப்பூங்கா உரிமையாளரால், பறந்து வரும் வண்டுகள் இளைப்பாறித் தேனுண்டு களிக்க ஓரிரண்டு பூச்செடிகள் நட்டு பூவரும்வரை அதைப் பராமரிக்க அழைக்கப்பட்ட ஒருவன்.

என்போல் சிலபல பராமரிப்பாளர்கள் இப்பூங்காவில...ஆனால் ஏன் எல்லோரும் ஒரே பூச்செடியை நட்டு ஒரே பூக்களையே தரவேண்டும்? வரும் வண்டுகள் சலிப்படையுமல்லவா...சலிப்படையும் வண்டுகள் மீளவர மறுக்குமல்லவா...

வண்டுகள் வகை பல. நான் இந்தப் பூவில் மட்டும்தான் தேனுண்பேன் என்றியம்பும் வகை சில; எல்லாப் பூக்களிலும் நானமர்வேன் என்றியம்பும் வகை சில.

நான் இனி நடப்போகும் செடிகள் ஒருவகைக்குள் மட்டும் ஒதுங்கிக் கிடக்காது. ஒற்றைச் செடியிலும் இனி வண்டுகள் வந்தமர வகைவகையாயப் பூவிருக்கும். உரிமையாளரைக் கேட்காது உரத்தைப் போடப்போகிறேன்; உங்களது தயவோடு செடியை ஊன்றப்போகிறேன்.