Showing posts with label வீடியோ. Show all posts
Showing posts with label வீடியோ. Show all posts

Sunday, August 30, 2009

சரளமான ஆங்கில அறிவு அவசியம், சக்தி தொலைக்காட்சி நேயராக இருப்பதற்கு - இலங்கை

ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 7:30 மணிக்கு, இலங்கை சக்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும், Zorro தொலைக்காட்சித் தொடரை என்றாவது ஒரு நாள் பார்த்தவர்களுக்கு, அல்லது சனி, ஞாயிறு தினங்களில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் Grand Master நிகழ்ச்சியை பார்த்தவர்களுக்கு புரியும், இந்தப் பதிவின் தலைப்பு ஏன் அவசியம் என்று.

Zorro தொலைக்காட்சித் தொடர் - ஞாயிறு காலை 7:30

இது முக்கியமாக சிறுவர்களை
இலக்கு வைத்து ஒளிபரப்பப்படும் தொலைக்காட்சித் தொடராக இருக்கவேண்டும், காலை நேர தொடர்கள் அநேகமாக சிறுவர்களை இலக்காக கொண்டவை.

சக்தி தொலைக்காட்சியின் இந்த தொடர் அப்படியே ஆங்கில மொழியிலேயே ஒளிபரப்பப்படுகின்றது. தமிழ் மொழியில் ஒலி மாற்றம் இலங்கையிலே பெரும்பாலும் செய்யப்படுவதில்லை என்பது காரணமாக இருக்கலாம். ஆனாலும் ஆச்சரியப்படவும், ஆதங்கப்படவும் வைக்கும் விடயம் என்னவென்றால், இத்தொடரில் உபதலைப்புக்கள் சிங்கள மொழியில் வழங்கப்படுவது, தமிழில் எதுவுமே இல்லாமை.

சக்தி தொலைக்காட்சியின் அநேக தமிழ் மொழியிலமைந்த நிகழ்ச்சிகள் சிங்கள உப தலைப்புக்களுடன் வழங்கப்படுவது வழமை, அது வரவேற்கத்தக்கதும் கூட. ஆனால், ஆங்கில மொழியிலமைந்த தொடரொன்றுக்கு, தமிழ் பேசும் மக்களை நேயர்களாக கொண்ட தொலைக்கட்சி, தமிழ் மொழியை தவிர்த்து சிங்கள மொழியில் உபதலைப்புக்களை வழங்குவது வேதனையளிக்கின்றது.

என்னுடைய நண்பர் வீடொன்றில் நடந்த சம்பவமே என்னை இதை எழுதத்தூண்டியது. மூன்று பத்து வயதிற்கு கூடாத சிறுவர்க்ள் இத்தொடரை பார்த்துக்கொண்டிருந்தபோது, நானும் அவர்களுடன் இணைந்துகொண்டேன், அப்போது அவர்களில் ஒரு சிறுவன் என்னிடம் கேட்டான் ‘மாமா, அந்த எழுத்துக்களை சிங்களத்தில போடுகினமே, தமிழில போடமாட்டினமா?’ என்று. எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அதற்கு நான், அச்சிறுவனுக்கு ‘உவங்கள் உப்பிடித்தான்’ என்று பதிலளிக்கவேண்டியதாயிற்று.

பெரியவர்களையாவது பரவாயில்லை, அச்சிறுவர்களையும் ஆங்கில தெரிந்திருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது எவ்வளவு நியாயம். தமிழ் மொழியிலான தொலைக்காட்சியான சக்தி, எம்மொழியில் முக்கியமாக இங்கு உபதலைப்புக்களை கொடுத்திருக்கவேண்டும்? அல்லது தமிழ் மொழிபெயர்த்து உபதலைப்புக்களை போடுவதற்கான வசதி சக்தி நிறுவனத்திடம் இல்லையா?

சக்தியின் Grand Master - சனி, ஞாயிறு இரவு 8 மணி

இங்கேயும் ஒரு ஆங்கில மேலாதிக்கம் நிலவுகின்றது, இந்நிகழ்ச்சியை தொடர்ச்சியாக பார்த்து வருபவர்களுக்கு இந்நிலைமை புரியும். இந்நிகழ்ச்சியை நாடாத்தும் பிரதீப் என்ற இந்தியர் ஒரு மலையாளி என்று அறியக்கிடைத்தது, ஆனாலும் அவர் தமி மொழியில் கணிசமான புலமையோடு உரையாடுகின்றார்.

அவ்வப்போது இந்நிகழ்ச்சியில் பங்குபற்றுபவர்கள் பிரதீப் கேட்கும் கேள்விகள் புரியாமல் ஆமா, இல்லையா என்று விடையளிக்க முடியாமல் சங்கடப்படுவதை கண்டிருக்கின்றேன். கேட்கப்பட்ட கேள்வி தொடர்பான விடயம் சம்பந்தமாக போதிய அறிவில்லாமை என்ற காரணம் போக, என்னை ஆத்திரப்பட வைத்த இன்னொரு காரணம் இருக்கின்றது.

அதாவது, பிரதீப் அநேகமாக, அதிகமாக, வேகமாக கதைக்கும் ஆங்கிலத்தை புரிந்துகொள்ளாமல், என்ன கேட்கின்றார் என்று புரியாமல் ஆம் அல்லது இல்லை என்று ஏதோ ஒன்றை விடையளித்து தடுமாறியவர்களை கண்டிருக்கின்றேன். அந்நிலைமைகளில் பிரதீப் நிகழ்ச்சியில் பங்குபற்றுபவர்களை ஒரு ஏளனத்தனமையோடு நடத்துவதையும் அவதானிக்கலாம். நிகழ்ச்சியில் பங்குபற்றுபவர்கள் சங்கடப்பகுகின்றார்கள்.

இந்நிகழ்ச்ச்சியில் பங்குபற்றும் அனைவரும் காட்டாயம் ஆங்கிலத்தில் சிறப்பு புலமை பெற்றிருக்கவேண்டும் என்ற நிபந்தனையை சக்தி தொலைக்கட்சி விதித்திருக்கின்றதா? தமிழ் தெரிந்த பிரதீப் தமிழ் மொழி பேசுபவர்களிடம் தமிழ் மொழியில் கேள்விகளை கேட்கலாம் தானே.



இலங்கை நேயர்களை பிரதீப் இந்திய நேயர்கள் போன்று எண்ணுகின்றாரோ தெரியவில்லை. இந்திய நேயர்கள் போன்றன்று, இலங்கை நேயர்கள் மிகக்குறைந்த அளவிலேயே ஆங்கிலச் சொற்களை பாவிப்பவர்கள். மாறாக இந்தியாவில் அவர்களுக்கேயுரிய, உச்சரிப்புடன்கூடிய தமிழ் கலந்த ஆங்கிலம் பேசுவார்கள், ஆனால் இலைகையில் தமிழர்கள் பெரும்பாலும் அப்படியில்லை.

பிரதீப் அதிகம் ஆங்கிலத்தை பாவிப்பது, மேலும் பங்குபற்ற விருப்பும் நேயர்களை கொஞ்சம் பின்நிற்கச்செய்யும் என்பதை சக்தி தொலைக்கட்சி விளங்கிக்கொள்ளவேண்டும். ஏனென்றால் ஆங்கிலம் சரளமாக தெரியாவிட்டால், பிரதீப் கேட்கும் கேள்விகளை புரிந்துகொள்ள முடியாதென்ற நிலை காணப்படுகின்றது. இவற்றை கவனித்து, சக்தி நிர்வாகம் முடிந்தவரை இந்நிகழ்ச்சிகளில் தமிழ் பாவனையை ஏற்படுத்தலாம்.

’தமிழ் மொழியின் சக்தி’ என்று சொல்லிக்கொள்பவர்கள் அதற்றாற்போல் நடக்காமல், தமிழர்களை ஆங்கில மயப்படுத்தவேண்டும் என்ற குறிக்கோளோடு இயங்குகின்றார்களோ என்று எண்ணத்தோன்றுகின்றது. ஏற்கனவே சிங்கள மயமாக்கலால் தமிழ்மொழி பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கையில், இலங்கையின் பிரதான தமிழ் தொலைக்காட்சியான சக்தியில், ஆங்கிலத்தின் ஆதிக்கம் அசாதாரணமாக அதிகமாகவே காணப்படுவது கொஞ்சம் மனவேதனையளிப்பதாகவே இருக்கின்றது.

கொசுறுத்தகவல்: சக்தி தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநராக இருப்பவர் ஒரு இந்தியர்

பிரதீப் தொடர்பாக ஏனைய இடங்களில்
http://nkashokbharan.wordpress.com/2008/05/02/a-moment-with-grand-master/
http://www.thehindu.com/fr/2007/06/08/stories/2007060851630400.htm
http://www.hindu.com/mp/2006/06/05/stories/2006060500050702.htm

Sunday, August 17, 2008

எனது சமூகத்தின் ஒரு கோரப்பக்கம்

உலக மதங்களில் இந்து மதம் மட்டுமே வலியுறுத்துகின்ற சமத்துவமின்மையை வெளிச்சம் போட்டுக்காட்டுகின்ற ஆவணப்படம் இது. இந்து மதத்தின் சாதி முறைமையின் (சதுர் வர்ணம்) கோரமுகத்தை வெளிப்படுத்துகின்ற படம். இதை இந்து மதத்தின் ஒரு கோரப்பக்கம் என்றே சொல்லவேண்டியிருக்கின்றது ஏனென்றால், இந்த சாதியமைப்பு முறையென்பது, நாளாந்தம் (முக்கியமாக இந்தியாவில்) பல கோர சம்பவங்களுக்கு முற்றுமுழுதான காரணமாக அமைகின்றது.

இதை எனது சமூகத்தின் ஒரு கோரப்பக்கம் என்று தலைப்பிடவேண்டியதாயிற்று. ஏனென்றால், நான் பிறந்து வளர்ந்த மதமும் இந்த மதம் தான். என்னுடைய, பெற்றோர், சகோதரர்கள், நண்பர்கள், உறவினர்கள் பலர் பின்பற்றும் மதமும் இதுதான்.



வெறும் மூடநம்பிக்கைகள், ஒரு கூட்டத்தார் இன்னொரு கூட்டத்தாரை அடக்கியாள உருவாக்கப்பட்ட வரைமுறைகள், எவ்வளவு கோரத்தாண்டவமாடுகின்றது என்பதற்கு இப்படம் சாட்சி.

நானறிந்தவரையில், வேறு எந்தமதமும் சமமின்மையை வலியுறுத்திச்செல்லவில்லை. வேறு எந்த மதமும், பிறப்பால் ஒரு கூட்டத்தாரை உயர்ந்தவர்களென்றும், இன்னொரு கூட்டத்தாரை தாழ்ந்தவர்களென்றும் சொல்லுவதை காணமுடியவில்லை.

கடவுள் இல்லை என்பதற்கு உள்ள ஏனைய ஆதாரங்களுடன், கடவுளின் மதம் என்று சொல்லப்படுகின்ற இந்த இந்து மதத்திலுள்ள கேவலம் இன்னொரு உறுதியான ஆதாரமாகும். இன்னும் தன்னை ஒரு இந்து என்று சொல்லிக்கொள்கின்ற ஒவ்வொருவனும் வெட்கப்படவேண்டும்.

அடிமைக்குணமும், அறியாமையாலும் ஆட்கொள்ளப்பட்டிருக்கின்ற நம்மவர்களில் பலர், இன்னும் இந்து மதம், உயரிய பண்புகளை வலியுறுத்துகின்றமதம், உலகின் தலை சிறந்த மதம் என்று பெருமையடித்துக்கொள்வதில் ஒன்றும் ஆச்சரியமில்லை தான்.

பாரபட்சமும், கொடுமைகளும், பாலியல் வக்கிரங்களும், ஏமாற்று வித்தைகளும் நிறையப்பெற்றதே இந்த இந்து மதம். இன்றைக்கும், பல பிழைக்கவழியில்லாத மனிதர்கள் (சாயி பாபா, அம்மா, கல்கி பகவான், மேல்மருவத்தூர் அம்மா, அமிர்தானந்த மயி, இன்னும் பலர்) பலர், பல ஏமாற்று வித்தைகளை புரிந்து, மக்களை மயக்கி, தம்மை கடவுள்கள் என்று சொல்லி, ஏமாற்றுகின்றார்களென்றால், அதுவும் இந்து மதத்தில் காணக்கூடிய ஒரு சிறப்பே.

உதவி.
http://sinnakuddy1.blogspot.com/2008/07/blog-post_9318.html

Monday, July 21, 2008

ஜப்பானியர்கள் நடனமாடுகின்றார்கள் - தமிழ்சினிமா பாடல்களுக்கு!

தமிழ்சினிமா பாடல்களுக்கு ஜப்பானிய இளைஞர், யுவதிகள், சிறுவர், சிறுமிகள் நடனமாடும் சில வீடியோக்களை இங்கே பாருங்கள்.

இவை, தமிழ் மொழிக்கும், ஜப்பான் மொழிக்கும் உள்ள தொடர்புகள் சம்பந்தமாக இணையத்தில் தேடி ஆராய்ந்தபோது அகப்பட்டவை. அத்தொடர்பு சம்பந்தமாக ஆராய்ச்சிகள் செய்துவந்த ஜப்பானிய பேராசிரியரொருவர் அண்மையில் காலமான செய்தி அனைவரும் அறிந்ததே.

வீடியோ 1


வீடியோ 2


வீடியோ 3


வீடியோ 4


வீடியோ 5


வீடியோ 6

Saturday, July 19, 2008

டபிள் ஏ (அடல்ஸ ஒன்லி இல்லைங்க)

வீடியோ சாமாச்சாரம்தான் ஆனா அடல்ஸ் ஒன்லி இல்லைங்க. இது எனக்கும் எனக்கு நெருக்கமான காகிதம் பற்றியதுமான ஒரு சிலாகிப்பு. டபிள் ஏ காகிதத்தின் மேல் எனக்கு ஏதோவொரு ஈடுபாடு. இந்த சலனப்படங்களைப் பார்த்து வந்ததல்ல அதன் முன்னமே வந்தது. அதன் மேலுறையின் வடிவமும் உள்ளே பால்வெண்மையும் எழுதினா அதன்மேல்தான் எழுதுவேன் என்று பல்கலைக்கழக காலம் முழுவதும் பந்தாவில பணத்தைச் செலவழிச்சது கூட அதன் மேலான கவர்ச்சிதான்.

கீழே இருக்கிற வீடியோக்களைப் பாருங்கோ. சூழலும் வருகின்றவர்களும் கூட டபிள் ஏ யின் வண்ணங்களுடன் சம்பந்தமாகத்தான் வருகிறார்கள்.

வீடியோ ஒன்று.



வீடியோ இரண்டு



வீடியோ ஒன்றைப் பார்த்து மீளப் பார்க்க விரும்புகிறவர்கள் இதைப்பார்க்கலாம்.விடயம் ஒன்றுதான் ஆட்கள் வேற. :-)



இல்ல அதே விடயம் இன்னும் வேற ஆட்களோட பாக்கவேணும் என்றவர்கள் இந்த யூடியூப் சுட்டிக்குப் போங்கோ.

- மதுவதனன் மௌ. -

Tuesday, June 24, 2008

அவிவேக பூரண புஷ்ஷும் அமெரிக்க மக்களும்....

அமெரிக்கா இவ்வளவு அட்டூழியமும் செய்ய, அமெரிக்க மக்கள் என்ன செய்கிறார்கள் எண்டு நெடுக யோசிக்கிறனான். இப்பத்தான் ஒரு நண்பர் அதுக்கு விடையை இ-மெயில் அனுப்பியிருந்தார். அதை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்....

Sunday, April 20, 2008

மகளின் டிப்ளோமா பட்டத்திற்கு மாற்றாக தாயிடம் செக்ஸ்

அமெரிக்காவில், ஒரு பிரபல்யமான கிறிஸ்தவக்கல்லூரியின் தாபகரின் உண்மைமுகம்!

அமெரிக்காவில் Parkway கிறிஸ்தவக் கல்லூரியின் தாபகர் LaVern Jordan, தன்னுடைய மகளை டிப்ளோமா கல்விக்கு அக்கல்லூரியில் அனுமதிக்கவேண்டிய தாயிடம் கைமாற்றாக செக்ஸ் வைத்துக்கொள்ள இணங்குமாறு கேட்பது இரகசியமாக கமராவில் பாதியப்பட்டபின், அச்செய்தி அமெரிக்காவின் செய்தி நிறுவனமான ABC News 13 இனால் வெளிப்படுத்தப்பட்டு பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றது.

கல்லூரியின் பட்டமளிப்பு நிகழ்வுகளில் போது கடவுளை பற்றி கதைக்கும் அம்மனிதர், இங்கே செக்ஸை பற்றி கதைப்பது மட்டுமல்ல, செக்ஸ் வைத்துக்கொள்ள கேட்பதும் ஒலி/ஒளி நாடாக்களில் பதியப்பட்டுள்ளது.

இப்படியான ஏமாற்றுக்காரர்களுக்காக தானே மதமும், கடவுள்களும்!

ABC News 13 இல் ஒளிபரப்பாகிய செய்தி கீழே.



ABC 13 இன் செய்தி வீடியோவுடன் (பதியப்பட்ட உரையாடல்கள் எழுத்தில்) கீழே

Sex for diplom
a offer caught on tape
http://abclocal.go.com/ktrk/story?section=news/13_undercover&id=6085999

Thursday, April 17, 2008 | 9:57 PM

HOUSTON (KTRK) -- The founder of a Christian school is confronted after 13 Undercover catches him soliciting sex from a parent, who's trying to get her daughter a high school diploma.

At graduation ceremonies he talks about God, but you'll hear the founder of a Houston-area Christian school not only talk about sex, but ask for it on tape.

It's the middle of the day when a white pickup truck pulls into the back of a motel on 1960. Then it goes to the very back to park for a long while. We already know who the driver is. His name is LaVern Jordan and he runs Parkway Christian School.

Dolcefino: "What were you doing there at the La Quinta."

Jordan: "I wasn't doing anything at the La Quinta sir."

Dolcefino: "Were you there?"

Jordan: "I was there."

Dolcefino: "What were you doing there?"

Jordan: "I was just driving around. Why?"

Of course when Mr. Jordan was parked all that time, we were undercover just a couple of cars away.

Dolcefino: "Were you going there to get lucky?"

Jordan: "No, absolutely not."

Dolcefino: "You weren't going there for sex?"

Jordan: "No."

The woman getting in Jordan's passenger seat is a parent who's been trying to get her 18 year daughter enrolled in Jordan's school.

"She hadn't passed the TAKS test and she hasn't got all her credits, that's the reason we are going to that school," the mother told us.

A fee to the school and some course work can get students a diploma without passing the required state test at Parkway Christian School, where the Web site boasts, "a program based on Christian character, morals, values and integrity."

Dolcefino: "How long were you talking to him before sex came into it?"

Mother: "No longer than five or ten minutes."

Dolcefino: "What were you thinking?"

Mother: "This man has got to be crazy."

Now back to Jordan.

Dolcefino: "There's no tape?"

Jordan: "Will you get out of my way please?"

Dolcefino: "There's no tape of you and this woman?"

Jordan: "No. Wayne will you please move? No."

Dolcefino: "Well, you're going to hear it."

And so are you.

Jordan on tape: "Do you have sexual relationships often anymore? Are you seeing a man now?"

Mother: "No. Nuh-uh."

Jordan had already promised to waive the $300 school enrollment fee for a much different kind of payment.

Jordan: "For the uh, enrollment fee and stuff like that, maybe you and I can do something, you think?"

Mother: "Yeah, what, I mean what, what, you gonna wipe out all the fees?"

Jordan: "All the enrollment fees."

Mother: "All the enrollment fees?"

Jordan: "Three hundred dollars."

Mother: "So you gonna wipe everything if me and you get together?"

Jordan: "The enrollment fee, yeah."

Mother: "Ok."

Jordan: "If you and I get together."

Mother: "What you mean? I mean, what?

Jordan: "Excuse me and I don't mean to be so blunt but I am talking about f------ you."

Mother: "You talking about what?"

Jordan: "F------ you."

"I couldn't believe someone was saying such things like that," the mother told us. "I couldn't believe it."

And the tape shows Jordan wasn't just talking about a one time thing.

Jordan: "For the $300 I would expect maybe we could get together several times, you think?"

Mother: "Several times, whatcha mean several times?"

Jordan: "Well I don't know, you might like whatcha getting."

Jordan was ready for action right then.

Jordan: "If you're not in like just a great big hurry, I know uh, of a place not too far that we can go and I can just do that we can just do some play around a little bit. Would you like that?"

Jordan: "We could go and we could do some t--ty play."

Jordan wanted to make sure no one else would know.

Jordan: "Nobody else will know nothing?"

Mother: "Nuh-uh."

Jordan: "Can I touch you?"

But our parent will make Mr. Jordan wait for his sexual rendezvous and this time she'll be carrying our hidden camera and microphone.

"I was meeting with him specifically for y'all to expose him to the world and to those parents sending their kids up there," the mother told us.

Thursday at 10pm, the rendezvous we caught on tape. You won't hear it anywhere else.

பிந்திய செய்திகள்:
பாதிக்கப்பட்ட தாயார் தன் அனுபவத்தை சொல்கின்றார் (வீடியோவுடன்)

Sex offer caught on tape on ABC 13
http://abclocal.go.com/ktrk/story?section=news/13_undercover&id=6090312

ABC 13 இன் இன்னொரு ஒளிபரப்பும் செய்தியும்
Sex offer caught on tape on ABC 13
http://abclocal.go.com/ktrk/story?section=news/13_undercover&id=6088286

Saturday, April 19, 2008

சாயிபாபா: காற்றில் தங்கச்சங்கிலி, வாயில் தங்கலிங்கம். இந்தியாவில் ஏழைகள்?

பிரிக்க முடியாதது எதுவோ. பாபாவும், திருநீறும், தங்கசங்கிலியும், தங்கலிங்கமும். சில பேர் இந்த மேஜிக் ஷோவை ஏற்கனவே பார்த்திருக்கலாம். பார்த்திருக்காவிட்டால் இதோ இங்கே!

சாய்பாபா தங்க லிங்க வாந்தி எடுப்பது தான் இருப்பதிலே கடினமான மேஜிக் ஷோ என்று நினைக்கிறேன். வாயிலிருந்து லிங்கம் துப்புவது அப்படியே எங்க வீட்டில் கோழி மூட்டை போடுவது போலவே இருக்கிறது.

விபூதி, தங்கச்சங்கிலி மேஜிக் ஷோ மிக எளிதானவை. இருந்தாலும் மிகுந்த கவனம் தேவை.


(ஒளிப்படத்தை பெரிய அளவில் பார்க்க விரும்பினால், இவ்விணைப்பை சொடுக்குங்கள்)
http://video.google.com/videoplay?docid=2318659536095967739&hl=en

  • ஏழை பாழை, மிடில் கிளாஸ்களுக்கு - விபூதி மேஜிக்
  • அரசியல்வாதி, அப்பர் கிளாஸ்களுக்கு - செயின் மேஜிக்
  • MASS ATTRACTION-க்கு - லிங்க வாந்தி மேஜிக்
விபூதி மேஜிக்: விபூதி மஜிக்கில், அதை கையிலிருந்து கொட்டுவதற்கு முதல், பாபாவின் வலக்கை, கடிதங்கள் வைத்திருக்கும் மற்ற கையை துழாவுவதையும் (மற்றக்கையில் திண்மமாக்கப்பட்ட விபூதி வில்லைகளை வைத்திருப்பார்) அக்கையிலிருந்து விபூதி வில்லையொன்றை எடுத்த பின்னர் வலக்கையை காற்றில் அசைத்து (அசைக்கும்போது வில்லைகளை உதிர்த்தி விடுவார்) விபூதியை கொட்டுகின்றார்.

தங்க ஆபரண மேஜிக்: இதற்கு பலவித டெக்னிக்குகள் பாவிக்கப்படுகின்றன. சிலைகளில் பின்னால் ஒளித்து வைத்து தெரியாமல் எடுத்து காற்றிலே கையசைத்து எடுப்பது போல் பாவனை செய்வது, இன்னொருவர் இரகசியமாக பாபாவின் கைகளிலே போட்டுவிட்டு போவது, பாபா தன்னுடைய இருக்கையின் மெத்தையின் கீழிருந்து எடுப்பது எப்பவை அவற்றில் ஒருசில.

லிங்க மேஜிக்: இதற்கும் பலவித டெக்னிக்குகளை பாவிக்கின்றார். ஆரம்பகாலங்களில் லிங்கம் எடுப்பதற்கு கொஞ்சநேரம் முதல் லிங்கத்தை வயிற்றினுள் விழுங்கிவிடுவார், பின்பு வாந்தியெடுத்து அதை தன் வாயிலிருந்து எடுப்பது போல பாவனை செய்வார்.
ஆனால் இப்போது பாபா வயதாகி தளர்ந்து போய்விட்டதால், இப்போதெல்லம் விழுக்குவதில்லை, மாறாக
1. மேசைமீதிருக்கும் கைக்குட்டைகளில் ஒன்றுள் லிங்கத்தை மறைத்து வைத்து, கைக்குட்டையால் வாயை துடைப்பது போல பாவனை செய்து, கைக்குட்டையை வாய்க்கு கிட்ட கொண்டுசென்று பின்பு கைக்குட்டைக்குள் இருந்து லிங்கத்தை எடுத்துகாட்டுவார் (மக்கள் நினைப்பார்கள், பாபா வாய்க்குள் இருந்து கைக்குட்டைக்குள் துப்பியுள்ளார் என்று)
2. மேலே கூறியமாதிரி, மேசையில் ஒரு கைக்குட்டைக்குள் லிங்கத்தை வைத்திருப்பார், பின்பு கைக்குட்டைகளால் வாயை துடைப்பது மாதிரி பாவனை செய்து, சிவலிங்கம் உள்ள கைக்குட்டையை வாய்க்கு கிட்ட கொண்டுசென்று, மறைவாக லிங்கத்தை வாய்க்குள் எடுத்துக்கொள்வார், பின்பு கைக்குட்டையை எடுத்துவிட்டு, வாயிலிருந்து மேசைமீது லிங்கத்தை துப்புவார்.

நீங்கள் யாராவது இம்மூன்று மேஜிக்குகளையில் இலாவகமாக செய்யக்கூடியவராக இருந்தால் நீங்களும் பாபாவாகலாம் :)

காற்றில் தங்கசங்கிலி, வாயில் தங்கலிங்கம் சாய்பாபா வரவழைத்தால் இந்தியாவில் ஏன் இன்னும் ஏழைகள் இருக்கிறார்கள?

இதே வலைப்பதிவில் Secret Swami என்ற
சாயிபாபாவின் லீலைகளை வெளிப்படுத்தும் BBC யின் செய்திப்படம் தமிழ் மொழிபெயர்ப்புக்களுடன்.
http://tamilgarden.blogspot.com/2008/04/blog-post_09.html



நன்றி
http://halwacity.com/blogs/?p=239

Friday, April 18, 2008

September 11 இன் உண்மை என்ன?

September 11 தாக்குதல் அனைவருக்கும் நினைவிருக்கும். அது பற்றிய பல அதிர்ச்சி தரும் உண்மை நிலைகளும் யாரால் திட்டமிடப்பட்டது என்பது பற்றிய விவரண சித்திரமே இந்த வீடியோ. சற்று நீளமான ஒளிப்படம்தான் இருந்தாலும் நேரம் கிடைத்தால் பாருங்கோவன்.

இதில் கூறப்பட்ட முக்கிய குறிப்புகள் (ஆர்வத்திற்காக...)

* Pentagon தாக்கப்பட்டது விமானம் ஒன்றினால் அல்ல.
* வர்த்தக் மையகத்தை தாக்கியது பயணிகள் எதுவுமில்லாத விமானமே!
* வர்த்தக மையம் விமானத்தாக்குதலால் விழவில்லை (குண்டு வெடிப்பாக இருக்கலாம்?)


Wednesday, April 16, 2008

அமெரிக்கா பற்றி அசத்தலான ஒரு பாடல்

நகைச்சுவையான வீடியோ, பார்த்து சிரியுங்கோ


Tuesday, April 15, 2008

வெளிவேஷம்............


ம்ம் பார்த்து ரசியுங்கோ........................

11 வயது நங்கையின் நடனம்

இந்த வீடியோவைப்பார்த்து வியந்து போனன்.நீங்களும் கொஞ்சம் பாருங்களன்


Wednesday, April 9, 2008

சாயிபாபாவின் உண்மை முகம் - விவரணச் சித்திரம் (தமிழில்)

இது 2004 ஆம் ஆண்டு BBC யினால் தயாரிக்கப்பட்ட ஒரு விவரணச்சித்திரம். இந்தியாவின் மிக்கபெரிய ஆன்மீக குரு(?) சத்திய சாயி பாபாவினை பற்றியது. சாயிபாபாவுக்கு உலகம் முழுவதும் அண்ணளவாக 30 மில்லியன் பக்தர்கள் உள்ளனர்.

ஆனால், அதேநேரம் அதிகரிக்கும் எண்ணிக்கையிலான முன்னை நாள் பக்தர்கள், குற்றஞ் சாட்டுகின்றார்கள், சாயிபாபா அவர்களையும், அவர்களது குடும்பத்தவர்களையும் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்துள்ளதாக.

இவ்விவரணச்சித்திரம் அவை சம்பந்தமாக ஆதாரங்களுடன் ஆராய்கின்றது. அவரால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டவர்களின் நேரடி பேட்டிகள் இடம்பெறுகின்றன. சாயிபாபாவின் தற்போதைய வயது 82.

இது ஆங்கிலத்தில் 'Secret Swami' என்ற பெயரில் BBC Two அலைவரிசையில், 2004 - ஜூன் - 17 வியாழக்கிழமை, பிரித்தானியாவில் ஒளிபரப்பப்பட்டது.

இதிலே அவரது பாலியல் துஷ்பிரயோகங்கள் மட்டுமல்லாது, விபூதி உருவாக்குதல், வாய்க்குள்ளிருந்து சிவலிங்கம் எடுத்தல் மற்றும் காற்றிலிருந்து ஆபரணங்கள் எடுத்தல் என்பவற்றுக்கு பின்னாலுள்ள ஏமாற்று வித்தைகளும் வெளிப்படுத்தப்படுகின்றன.

பகுதி 1


SAI BABA 1
Uploaded by PERIYAR


பகுதி 2

SAI BABA 2
Uploaded by PERIYAR


பகுதி 3

SAI BABA 3
Uploaded by PERIYAR

இவ்விவரண படம் சம்பந்தமாக ஒரு விமர்சனம் (ஆங்கிலத்தில்)
http://barrypittard.wordpress.com/2007/04/04/the-bbcs-the-secret-swami-a-revision/

பி.பி.சி இணையத்தளத்த்தில் இப்படம் சம்பந்தமான தகவல் (ஆங்கிலம்)
http://news.bbc.co.uk/2/hi/programmes/this_world/3791921.stm

Google Video தளத்த்தில் இவ்விவரண சித்திரம் ஆங்கிலத்தில் (மூலம்)
http://video.google.com/videoplay?docid=-3767740320034777862

'Secret Swami' விவரணம் ஆங்கிலத்தில் wmv கோப்பில்
http://www.rfjvds.dds.nl/thesecretswami/thesecretswami.wmv

இது மற்றொரு விவரணப்படமான 'Seduced' டென்மார்க்கில் டென்மார்க்கின் தேசிய தொலைக்காட்சி, வானொலி அலைபரப்பாளரான DR இனால் ஒளிபரப்பப்பட்டது
http://www.rfjvds.dds.nl/seduced/seduced.wmv

இவை இரண்டும் சம்பந்தமான் தகவல்
http://india.indymedia.org/en/2004/09/209770.shtml

Sunday, March 30, 2008

என்ன கொடுமை சார் இது?

நான் YouTube இல் அலைந்தபோது இந்த வீடியோவை பார்த்து வயிறு புண்ணாகிவிட்டது. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகமும். இந்த வீடியோவை ஒலி வசதிகளுடன் கேட்டபதே நல்லது. இறுதியில் வரும் சூப்பர்ஸ்ராரின் முகபாவத்தை வடிவா பாருங்கோ.