Monday, April 14, 2008

நிர்ணயக்கப்பட்ட இந்திய அணியின் வெற்றி.....

நேற்று நடைபெற்று முடிந்த இந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டி முன்னதாகவே நிர்ணயிக்கப்பட்டுவிட்டது என்பது எனது தாழ்மையான கருத்து.நீங்களே பார்த்திருப்பீர்கள் ஆட்டம் சப்பையாக இருந்திருக்கும்.பலருக்கும் தெரியும் கடைசி டெஸ்சில் இந்தியா வெல்லும் என்று.காரணம் இரண்டாவது டெஸ்சில் தோற்ற இந்தியாவுக்கு கடைசி டெஸ்சில் கட்டாயமாக வெல்லும் நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது.ஆகவே ground man சுழல் பந்துக்கு சாதகமான பிட்சை தாயாரிப்பார் என்று கிரிக்கெட் தெரிந்த அனைவருக்கும் தெரிந்திருக்கும்.காரணம் தென்னாபிரிக்க அணியின் அனுபவம் குறைந்த சுழல்பந்து side இந்திய அணியின் அனுபவம் மிக்க சுழல்பந்து side. ground man ஜ நான் குற்றம் சொல்லவில்லை,அவருக்கு மேலிடத்தில் இருந்து உத்தரவு போடப்பட்டிருக்கும் அவரும் தனது வேலையை பக்கவாக செய்து இந்திய அணி வெற்றிக்கு பெரும் பங்காற்றிருந்தார்.


இது ஒரு பிழையான காரியம் என்று நான் குறிப்பிடவில்லை.எந்த அணியும் தமது சொந்த மண்ணில் விளையாடும் போது தங்களுக்கு ஏற்றவாறு பிட்சை மாற்றிக்கொள்வது கிரிக்கெட்டில் எழுதப்படாத விதி.பொதுவாக தெற்காசிய நாடுகள் spin bowling pitch ஆகவும், அவுஸ்திரேலியா,மேற்க்கிந்திய தீவுகள்,தென்னாபிரிக்கா அணிகள் fast bowling pitch ஆகவும் தங்கள் சொந்த மண்ணில் சோதனைகள் வரும் போது மாற்றிக்கொள்வது வாடிக்கையாகிவிட்டது.

4 பின்னூட்டங்கள்:

Anonymous said...

பேசாமல் இரண்டாவது டெஸ்ட்டுக்கே இப்படி செய்திருக்கலாம். மானம் போய்விட்டது இன்னிங்ஸ் தோல்வியால் ;)

எவனோ ஒருவன் said...

வாங்கோ அனாமி

இரண்டாவது டெஸ்டில் இந்திய அணிக்கு அந்த கட்டாயம் இருக்கவில்லை.காரணம் முதலாம் டெஸ்டில் வெலுத்துவாங்கிச்சினம் இல்லயா.

எவனோ ஒருவன் said...

கேட்டிங்களோ செய்தியை டோனி ground man க்கு 10000 ரொக்க பணம் பரிசாக கொடுத்தாராம்.நல்லா பிட்ச் செய்ததுக்காக.


என்ன கொடுமை சார்???????

Anonymous said...

ம்ம்ம்ம் கேட்டன் கேட்டன்
icc warning letter கொடுத்திருப்பதையும் கேள்விப்பட்டன்,
எவனோ ஒருவன் அவர்களே ஒரு வேளை icc உங்கன்ட பதிவை வாசிச்சுட்டுதோ :+)

Post a Comment

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம். அனைவரும் இந்த வலைப்பூவை வாசிப்பார்கள். எனவே நல்ல வார்த்தைப் பிரயோகங்களைப் பாவியுங்கள். அத்துடன் இடுகையின் மேற்புறத்தில் உங்கள் நட்சத்திர வாக்கையும் இட்டுவிட்டு செல்லுங்கள்.
நன்றி