இது பி.பி.சி தமிழோசையில் 2008-04-19 அன்று ஒலிபரப்பப்பட்ட பெட்டகம்.
|
அமெரிக்காவின் பயங்கரவாதத்துக்கு எதிரான போரின் விளைவாக இடம்பெயர்ந்து, சதாம் ஹூசைன் கைதுசெய்யப்பட்டு 5 ஆண்டுகளாகியும் இன்னும் சிரியாவில் அகதிகளாக வாழ்ந்துகொண்டிருக்கும் 15 இலட்சத்துக்கும் அதிகமான ஈராக்கிய மக்களின் அவலநிலை இதிலே ஆராயப்படுகின்றது.
சிரிய அரசாங்கத்தினால், இவ்வீராக்கிய மக்கள் சிரியாவிலே வேலை செய்வது சட்டபூர்வமாக தடைசெய்யப்பட்டுள்ளது. அதனால் பெருமளவான குடும்பங்களில் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டு குடும்பங்களை காக்கவேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.
இது தான் இம்மக்களுக்கு அமெரிக்கா அளித்த விமோசனமோ என்று எண்ணத்தோன்றுகின்றது. ஆகக்குறைந்தது, சிரியா ஏன் அவர்களை வேலைசெய்து வயிற்றுப்பிழைப்பை பார்க்க அனுமதிக்கக்கூடாது?
15 இலட்சம் மக்கள் பிழைப்புக்கு அல்லலுற, அவர்கள் வேலை செய்யும் உரிமையை சட்டம் போட்டு தடுக்கும் இந்த சிரிய அரசாங்கத்திலுள்ளவர்களுக்கு என்ன இதயமே இல்லையா?
மனிதாபிமான செத்துவிட்டது என்பது மட்டும் உண்மை.
பி.பி.சி தமிழோசையின் செய்தியும், ஒலிபரப்பு பெட்டகமாகவும்.
உயிர் வாழ உடல் விற்றல்
0 பின்னூட்டங்கள்:
Post a Comment
உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம். அனைவரும் இந்த வலைப்பூவை வாசிப்பார்கள். எனவே நல்ல வார்த்தைப் பிரயோகங்களைப் பாவியுங்கள். அத்துடன் இடுகையின் மேற்புறத்தில் உங்கள் நட்சத்திர வாக்கையும் இட்டுவிட்டு செல்லுங்கள்.
நன்றி