இச்செய்தி பலரைச் சென்றடைய வேண்டுமென்பதற்காக ஏற்கனவே நாவில் இடப்பட்டது இங்கே மீள இடப்படுகிறது.
நோக்கியா பயனர்களே!
நோக்கியா தொலைபேசியின் சில மாதிரிகளின் மின்கலம் ஆனது குறித்த எண்ணிக்கையான மின்னேற்றத்தின் பின்னர் அது வெடிப்பதாகவோ அல்லது பிழையான வழியில் செயற்படுவதாகவோ நோக்கியா நிறுவனத்தினர் இப்போது கண்டறிந்துள்ளார்கள்.
இவ்வகை மின்கலங்கள் குறித்தவொரு நிறுவனத்தால் குறித்த காலப்பகுதியில் நோக்கியா நிறுவனத்திற்காக செயப்பட்டவையாகும். இந்தவகை மின்கலங்களை நீங்கள் வைத்திருந்தால் நோக்கியா நிறுவனம் இலவசமாக மாற்றித்தரச் சம்மதித்திருக்கிறது.
முதலில் நீங்கள் பாவிக்கும் நோக்கியா தொலைபேசி கீழ்வரும் மாதிரிகளில் ஏதுமொன்றா என உறுதிப்படுத்துங்கள்.
Nokia 1100, Nokia 1100c, Nokia 1101, Nokia 1108, Nokia 1110, Nokia 1112, Nokia 1255, Nokia
1315, Nokia 1600, Nokia 2112, Nokia 2118, Nokia 2255, Nokia 2272, Nokia 2275, Nokia 2300,
Nokia 2300c, Nokia 2310, Nokia 2355, Nokia 2600, Nokia 2610, Nokia 2610b, Nokia 2626, Nokia
3100, Nokia 3105, Nokia 3120, Nokia 3125, Nokia 6030, Nokia 6085, Nokia 6086, Nokia 6108,
Nokia 6175i, Nokia 6178i, Nokia 6230, Nokia 6230i, Nokia 6270, Nokia 6600, Nokia 6620, Nokia
6630, Nokia 6631, Nokia 6670, Nokia 6680, Nokia 6681, Nokia 6682, Nokia 6820, Nokia 6822,
Nokia 7610, Nokia N70, Nokia N71, Nokia N72, Nokia N91, Nokia E50, Nokia E60
This product advisory also applies to the following accessories:
Nokia Wireless GPS Module LD-1W,
Nokia Wireless GPS Module LD-3W
மேலும் மின்கலத்தின் மேற்புறத்தில் "Nokia" மற்றும் "BL-5C" எனக் குறிப்பிடப் பட்டிருக்கிறதா எனவும் பாருங்கள்.
பின்னர் மின்கலத்தின் பின்புறத்தில் 26 எழுத்துக்களாலான மின்கல அடையாளக் குறியீடு இருக்கிறதா எனப் பாருங்கள்.பின்னர் அந்த 26 எழுத்துக் குறியீட்டை இந்த நோக்கியாவின் இணைய முகவரிக்குச் சென்று கீழே உள்ள எழுத்து வெளியில் போட்டு உங்கள் மின்கலம் மீளப்பெறுவதற்குத் தகுதியானதா என பரிசோதித்து, அண்மையிலுள்ள நோக்கியா வாடிக்கையாளர் நிலையத்தில் போய் மாற்றிக்கொள்ளுங்கள்
Thursday, April 24, 2008
நோக்கியா தனது மின்கலங்களை மீளப் பெறுகிறது - மீளிடுகை
பூக்களின் வகைகள்
உதவி
Subscribe to:
Post Comments (Atom)
2 பின்னூட்டங்கள்:
மதுவதனன்,
நல்ல தகவல்.
'வகையறா' என்ற சொல் எங்களில் பெரும்பாலானவர்களால் தவறான அர்த்தத்தில் பாவிக்கப்படுகின்றது.
'வகையறா' என்ற சொல் 'வகை'யையோ, 'மாதிரி'யையோ(model) குறிப்பதில்லை.
'வகையறா' என்பதன் அர்த்தம், "தொடர்புடைய மற்றவை, முதலியவை, இன்னோரன்ன பிற" என்பதே. அதாவது ஆங்கிலத்தில் "'etc'(et cetera), similar things"
என்ற அர்த்தத்தில் வரும்.
உதாரணம்:
Fish, egg, meat, etc.
மீன், முட்டை, இறைச்சி வகையறா.
ஆதாரம்: கோனார் தமிழ் அகராதி
மதுவர்மன்,
தவறைச் சுட்டிக் காட்டியதற்கு நன்றி. வகையறா என்பதை எங்கெங்கே பாவிக்கவேண்டுமெனவும் அறிந்து கொண்டேன்.
இடுகையிலும் வகையறா எனப் போடப்பட்ட இடங்களில் மாதிரி எனப் போட்டு சரிப்படுத்தி விட்டேன்.
Post a Comment
உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம். அனைவரும் இந்த வலைப்பூவை வாசிப்பார்கள். எனவே நல்ல வார்த்தைப் பிரயோகங்களைப் பாவியுங்கள். அத்துடன் இடுகையின் மேற்புறத்தில் உங்கள் நட்சத்திர வாக்கையும் இட்டுவிட்டு செல்லுங்கள்.
நன்றி