என் காதலி என்னைப் பார்த்து "ஏன் நீ என்னைக் காதலிக்கிறாய்?" எனக் கேட்டால், காரணங்களை அடுக்கிக் கொண்டே போவேனல்லவா. அவ்வாறே பயர்பாக்ஸை நான் காதலிக்க ஆயிரம் காரணங்களுண்டு.
பயர்பாக்ஸின் நீட்சிகள் தரும் சந்தோசமும், இலகுத்தன்மையும் மற்றும் தேவையான செயற்பாடுகளும் அவற்றுள் சில. உதாரணத்திற்கு கீழே இரண்டு படங்கள். படங்களே பேசும் நான் ஒன்றும் சொல்வதாயில்லை.
(படங்களின் மேல் சொடுக்கி பெரிதாக்கிப் பாருங்கள்)
இது நீட்சிகளால் நிறைந்த பயர்பாக்ஸ்
6 பின்னூட்டங்கள்:
கௌபாய் மது நீங்களுமா?நானும் கொஞ்ச காலமா பயர்பாக்ஸுக்கு அடிமை.அதன் நீட்சீகளில் அருமையானது பிலாக் ரோவர்[blogrovr]
செல்ல நாய்க்குட்டி ஐகானோடு இருக்கும் அது கூகில் ரீடரை தூக்கிச் சாப்பிட்டு விட்டது.அதில் சப்ஸ்கிரைப் பண்ணியிருக்கும் பிலாகுகளை முழு வடிவில் படிக்கமுடிவதோடு பின்னூட்டவும் முடிகிறது.
வாங்கோ கண்மணி,
அதன் நீட்சீகளில் அருமையானது பிலாக் ரோவர்[blogrovr]
பயர்பாக்ஸ் நீட்சிகளில் எது சிறந்தது எனக் கேட்டால் தீர்வெதுவும் கிடைக்காது சண்டைதான் தோன்றும். அவரவர் தனக்குத் தேவையானதை பெற்றுக் கொள்ளலாம்.
நானும் BLOGROVR உடைய விசிறிதான். blogrovr நீட்சியானது பயர்பாக்ஸினால் சிபாரிசு(recommended) செயப்பட்டவற்றுள் ஒன்று.
அது பயர்பாக்ஸ்3beta5 இற்கு வேலை செய்யுதில்லை. விரைவில் சரிசெய்து விடுவார்கள்.
காதலிக்கிறப்ப கொஞ்சம் செலவு அதிகமாகுமாமே!! ஆனால் இதில் அப்படி தெரியவில்லை. :-)))
ஏனுங்க..இதை மொத்தமா எங்கயாச்சும் இறக்கி அப்படியே நிறுவ முடியும்மா..?
வாங்கோ வடுவூர் குமார்,
காதலிக்கிறப்ப கொஞ்சம் செலவு அதிகமாகுமாமே!!
அதிகமாகுமாமே என்று ஏங்க மற்றவங்களிட்ட விட்டுவிடுறீங்க. உண்மைய சொல்லுங்கோ, அனுபவம்தானே. :)))
இந்தக் காதலில பிரச்சினையே இல்ல. நான் Internet Explorer, Opera என்று வேற உலாவிகளைப் பாவிச்சாலும் பயர்பாக்ஸ் கோவிச்சுக் கொள்ளாது. அதுக்கு ஈகோ எல்லாம் இல்லைங்கோ.
வாஙகோ TBCD,
ஏனுங்க..இதை மொத்தமா எங்கயாச்சும் இறக்கி அப்படியே நிறுவ முடியும்மா..?
பயர்பாக்ஸ்காரங்க நினைச்சா செய்ய முடியும். ஆனா எத்தனை பேர் விரும்புவாங்களோ தெரியவில்லை.
TBCD மொத்தமா எல்லா நீட்சிகளோட பயர்பாக்ஸை விரும்புறார் என்று அவங்களுக்கு அஞ்சல் அனுப்பியிருக்கிறன். பாப்பம்..:)))
காதலி சகல சௌபாக்கியங்களோடும் வந்தாதான் ஏற்றுக்கொள்ளுவீங்களா? :-)))
Post a Comment
உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம். அனைவரும் இந்த வலைப்பூவை வாசிப்பார்கள். எனவே நல்ல வார்த்தைப் பிரயோகங்களைப் பாவியுங்கள். அத்துடன் இடுகையின் மேற்புறத்தில் உங்கள் நட்சத்திர வாக்கையும் இட்டுவிட்டு செல்லுங்கள்.
நன்றி