இந்த சில பத்திரிகைகள், விளம்பரத்துக்காக எப்படியெல்லாம் வாசகர்களை ஏமாற்றுகின்றார்கள் என்று பாருங்கள். இலங்கையிலிருந்து வெளிவரும் வீரகேசரி பத்திரிகையை அவதானித்து வருபவர்களுக்கு தெரியும், அப்பத்திரிகை யாரையாவது பிரபலங்களை பேட்டியெடுத்து, அப்பேட்டி பத்திரிகையில் வருமாயின், அப்பேட்டிப்பக்கத்தில் பேட்டியளிப்பவர் வீரகேசரி பத்திரிகையின் பதிப்பொன்றை வாசித்துக்கொண்டிருப்பதாக ஒரு படம் போட்டு அசத்திவிடுவார்கள்.
அது இலங்கை, இந்திய தமிழ் பிரபலங்களாக இருந்தால் என்ன, அல்லது வேற்றுமொழி பிரபலங்களாக இருந்தாலென்ன அதை செய்ய தவறமாட்டார்கள். அப்படங்களை பார்க்கும் வாசகர்களும், ‘ஆகா, அவர்களே வாசிக்கின்றார்களே, வீரகேசரியின் பெருமை தான் என்னே!' என்று ஆச்சரியப்பட்டுப்போய்விடுகின்றார்கள்.
மேலே உள்ள படம், 2008-04-06 ஞாயிறு வீரகேசரியில் இடம்பெற்ற பிரபலமொருவரின் பேட்டியுடன் பிரசுரிக்கப்பட்டிருந்தது. படத்தை வடிவாக உற்றுப்பாருங்கள், பேட்டியளிப்பவர் வீரகேசரி பத்திரிகையை வாசித்துக்கொண்டிருப்பதாக கணனியில் மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
வாசித்துக்கொண்டிருப்பவரின் கைவிரல்களை உற்றுப்பாருங்கள், அத்தோடு பத்திரிகை என்னமாய் மடியாமல், குத்திட்டுக்கொண்டு நிற்கின்றது என்று பாருங்கள். அத்துடன் அளவு பரிமாணங்கள் கூட பிழைத்திருக்கின்றன.
வீரகேசரிக்கு ஆரோக்கியமான ஒரு ஆலோசனை, இனிமேல் இவ்வாறு படங்களை கணினியில் எடிட் செய்து பிரசுரிக்கும்போது, மேற்படி தவறுகள் இடம்பெறாமலோ, வேளித்தெரியாமலோ கனகச்சிதமாக எடிட் செய்யவும். அப்போது வாசகர்கள் நிச்சயமாக நம்பிவிடுவார்கள், அப்புகைப்படங்கள் நிஜமாக உங்களால் எடுக்கப்பட்ட படங்கள் என்று.
கீழே அப்பேட்டியின் முழுவடிவமும், விளக்கங்களுடன் படமும் தரப்பட்டுள்ளன. படங்களின் கிளிக் செய்து பெருப்பித்து பார்க்கவும்.
Sunday, April 6, 2008
என்னமாய் ஏமாற்றுகின்றார்கள்? வீரகேசரியின் நம்பகத்தன்மை!
Subscribe to:
Post Comments (Atom)
6 பின்னூட்டங்கள்:
ஆமாம் மதுவர்மன்
இது இன்று நேற்று அல்ல பல காலமாக இந்த சித்து விளையாட்டு அரங்கேறுகின்றது.இதை தமிழ் பூங்காவில் சுட்டிகாட்டியதற்கு நன்றிகள்.இனியாவது வீரகேசரி போன்ற நாளிதழ்கள் திருந்தட்டும்
வேலூர் சடடமன்ற உறுப்பினரான ஞானசேகரனை தினகரனையோ அல்லது ஹிந்தையோ வாசிக்கவிட்டு புகைப்படம் எடுத்திருப்பார்கள். இங்க கொண்டுவநது கணினியில சித்து விளையாட்டு, வேறென்ன.
பத்திரகைச் சுதந்திரத்துக்கமைய இது ஏற்றுக்கொள்ளலாம் :-)))))
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
பலரும், இப்படியான விடயங்களை வெளிக்கொணரவேண்டும் என்பது எனது விருப்பம்.
ஏமாற்றுக்களை வெளிப்படுத்துவோம்.
Romba mukkiyam.............
Reader said
--Romba mukkiyam.............--
உங்களையெல்லாம் எந்த வகையறாக்குள் சேரப்பதென்றே விளங்கவில்லை.
முதலாவது ரொம்ப முக்கியம் எழுதுறதுக்கு அனானியாகவா வரவேண்டும்?
இரண்டாவது, இதுல முக்கியமில்லாத எத்தன்மையை நீங்கள் கண்டீர்கள்? உங்களைப் போன்ற ஆட்கள்தான் இவ்வாறான விடயங்களின் முக்கியத்துவங்களை விட்டு விட்டு அனைவரிடமும் ஏமாறித் திரிபவர்கள்.
இந்தா அதியசம் காட்டுகிறேன் பேர்வழி என சிலர் உங்களைப் பேக்காட்ட(ஏமாற்ற) இப்பிடியான விடயங்களை கவனியாது விழுந்து கும்பிடுற ஆட்கள் நீங்கள்தான்.
முதலில் சின்ன சின்ன விடயங்களையே பகுத்தறியத் தெரிந்தால்தான் பின்னர் பெரிய விடயங்களுக்குப் போக முடியும்.
Asaththalana pathil
Kalakeetinga ponga...
-
Post a Comment
உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம். அனைவரும் இந்த வலைப்பூவை வாசிப்பார்கள். எனவே நல்ல வார்த்தைப் பிரயோகங்களைப் பாவியுங்கள். அத்துடன் இடுகையின் மேற்புறத்தில் உங்கள் நட்சத்திர வாக்கையும் இட்டுவிட்டு செல்லுங்கள்.
நன்றி