Wednesday, May 28, 2008

நீங்கள் வாழ்கின்றீர்களா?

இலத்திரனியல் ஊடகங்களை கட்டியழுதுகொண்டிருக்கும் மக்களே....
நீங்கள் வாழ்வதாக நினைத்திருக்கும் வாழ்க்கை கணக்கை பாருங்கள்.

ஒரு நாளின் 24 மணிநேரத்தை
நித்திரை 8 மணித்தியாலம்,
வாழத்தேவையான பணத்தை சம்பாதிக்க 8 மணித்தியாலம்,
ஆக, உங்கள் வாழ்க்கை என்பது மீதியுள்ள 8 மணி நேரம் என்று பிரிக்க‌லாம்.

அதாவது, மொத்த வாழ்வில் மூன்றிலொரு பங்கை நித்திரையிலும் இன்னொரு மூன்றிலொரு பங்கை உழைப்பிலும் செலவிடும் நீங்கள், உண்மையாக வாழக்கூடியது மூன்றிலொரு பங்கு காலம்தான்.

கொழும்பில் வாழும் சராசரி மனிதனை உதாரண‌த்துக்கு எடுத்துக்கொள்வோம்.
அவர் தினமும் சக்தி TV பார்க்கிறார்.
அதிலே 13 தொடர் நாடகங்கள், ஒரு திரைப்படம் என்பன காட்டப்படுகின்றன.

அதைவிட Good Morning Sri Lanka என்று அரை வேக்காடுகளின் அலம்பல் நிகழ்சசி, cine Choice நெஞ்ச‌ம் மர(ற‌)ப்பதில்லை, புத்தம் புதுசு...போன்றனவும் காட்டப்படுகின்றன.


இவ‌ற்றுக்கான‌ மொத்த‌ நேர‌ம்

13 நாட‌க‌ங்க‌ள் = 6.5 ம‌ணித்தியால‌ங்க‌ள்
1 திரைப்ப‌ட‌ம்= 3 ம‌ணித்தியால‌ங்க‌ள்
செய்தி த‌விர்ந்த‌ ஏன‌ய‌ நிக‌ழ்ச்சிக‌ள் = 2.5 ம‌ணித்தியால‌ங்க‌ள்

ஆக மொத்த‌ம் 10 ம‌ணித்தியால‌ங்க‌ள்.

இதில் வேலைக்கு செல்ப‌வ‌ர் அரைவாசியைதான் பார்ப்பார் என்று வைத்துக்கொள்வோம்.

அவ‌ர‌து வாழ்க்கையில் மீத‌மிருப்ப‌து 3 மணித்தியால‌ங்க‌ள். அதிலும் இய‌ற்கைத்தேவைக‌ளான குளித்த‌ல், காலைக்க‌ட‌ன்க‌ள், உண்ணுத‌ல் போன்ற‌வ‌ற்றிற்கு 2 ம‌ணி நேர‌த்தை செல‌விடுகிறார் என்றும் வைத்துக்கொள்ளுவோம்.

ப‌ய‌ண‌த்தில் செல‌விடும் நேர‌த்தை 30 நிமிட‌ம் என்று வைத்துகொள்ளுவோம்.

ஆக‌வே அவ‌ர் வாழும் நேர‌ம் நாளொன்றுக்கு 30 நிமிட‌ம்.அதாவ‌து 1/48 நாள்.

48 வ‌ய‌தான‌ ஒருவ‌ர் வாழ்ந்த‌ கால‌ம் 1 வ‌ருட‌ம்...

எனவே நீங்கள் வாழ்வதாக நினைக்கிறீர்களா?


எடுகோள்க‌ள்‍‍ : ச‌ராச‌ரி ம‌னித‌னின் வாழ்வு தின‌மும் ஒரேமாதிரியாக‌த்தான் க‌ழிகிற‌து.
மீத‌மிருந்த‌ அரை ம‌ணி நேர‌த்துக்கு அவ‌ர் TV பார்க்க‌வில்லை.

2 பின்னூட்டங்கள்:

இறக்குவானை நிர்ஷன் said...

காலத்துக்குத் தேவையான பதிவு. நல்லதொரு தலைப்பும் கூட. எம்மவர்கள் தொலைக்காட்சியில் மூழ்கியிருப்பதன் விளைவை காலம் கடந்த பின்னர்தான் யோசிக்கிறார்கள். அதன் பிரதிகூலங்களைச் சிந்திக்கும் தன்மையை தொலைக்காட்சி ஈர்த்துக்கொள்கிறது போல.

இது பற்றிய எனது பதிவினையும் பாருங்கள்
http://puthiyamalayagam.blogspot.com/2008/03/blog-post_31.html

மதுவர்மன் said...

சுதா,

நீங்கள் சொல்வது சரிதான், பிரயோசனமாக கழியும் நேரம் என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலுமே விருமியோ விரும்பாமலோ குறைந்துகொண்டு தான் செல்கின்றது..

ஆனாலும் இந்த காலக்கணிப்புக்களில் (நீங்கள் மட்டுமல்ல பலரும் எழுதக்கண்டிருக்கின்றேன்) எனக்கு சில சந்தேகங்கள் இருக்கின்றன.

ஒரு மனிதன் 30 வருடங்கள் வாழ்தான் என்றால், அவனுடைய வயது இப்போது 30.

அதிலே மூன்றிலொரு பங்கு நித்திரையென்றால், இல்லையில்லை 30 வருடங்களில்லை அவன் 20 வருடங்கள் (ஆனால் வயது 30) மாத்திரமே வாழ்ந்தான் என்று சொல்லவது சரியாகுமா?

வாழ்தல் என்பதில் உறக்கம், உழப்பு, ஒய்வு அனைத்தும் அடக்கம் தானே.

சரி அவன் நாளொன்றிற்கு 8 மணித்தியாலங்கள் வாழ்ந்தானென்றால். இல்லையில்லை 10 வருடங்கள் தான் வாழ்ந்தானென்பது எவ்வகையில் சரியாகும்.

உழைப்ப என்பது உயிர்வாழ்வுக்கு அத்தியாவசியமாக இருக்கையில், அதைத்தவிர்த்து எவ்வாறு பேசமுடியும்.

நீங்கள் கணித்தெடுத்திருக்கும் வாழும் நேரமென்பது, எனக்கென்னவோ சும்மாவிருக்கும் நேரமாகவே படுகின்றது.

இந்த வித்தியாசத்தை பாருங்கள்.

1. மூனறு நாட்கள் வாழும் ஒருவர், ஒரு நாளை நித்திரையில் கழிக்கின்றார். (இரண்டு நாள் தான் வாழ்கின்றார்)

2. மூன்று நாட்கள் வாழும் ஒருவர் 24 மணித்தியாலங்களை (ஒரு நாள் அளவான நேரத்தை) நித்திரையில் கழிக்கின்றார். (மூன்று நாள் வாழ்கின்றார், அம்மூன்று நாள் நேரத்தில் 24 மணித்தியால நேரம் நித்திரை கொள்கின்றார்)

என்ற இரண்டு வக்கியங்களும் வெவ்வேறு கருத்துக்களை தரவில்லையா?

Post a Comment

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம். அனைவரும் இந்த வலைப்பூவை வாசிப்பார்கள். எனவே நல்ல வார்த்தைப் பிரயோகங்களைப் பாவியுங்கள். அத்துடன் இடுகையின் மேற்புறத்தில் உங்கள் நட்சத்திர வாக்கையும் இட்டுவிட்டு செல்லுங்கள்.
நன்றி