Wednesday, February 20, 2008

அவளுக்காக.....

கவிதை எழுத தெரியுமா எனக்கேட்டாள்
எழுத தெரியும் என்று பொய் சொன்னேன்
அவள் பெயரை எழுதி கவிதை என்றேன்
பல சினிமாவில் பார்த்துவிட்டேன் என்றாள்
பின்னால் என் பெயரையும் சேர்த்துக்கொண்டேன்
அருமையான ஹைகூ என்றாள்
அன்று தான் தெரியும் ஹைகூ இரண்டு வரி என்று

2 பின்னூட்டங்கள்:

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

உங்கள் பெயருக்கேற்றவாறு கவிதை புனைகிறீர்கள். நல்ல கவிதை..

(ஒரு இடக்கு மடக்கு:~ அவள் பெயரின் பின்னால் உங்கள் பெயரைச் சேர்த்தவுடன் அவள் ஹகூ என்றதாக கூறுகிறீர்கள். ஆகமொத்தம் உங்கள் அவளுக்கு ஹைகூ என்றால் என்னவென்றோ, எத்தனை வரிகளென்றோ தெரியவில்லை [அவளின் பெயருக்குப் பின்னால் உங்கள் பெயரைச் சேர்த்தால் இன்னும் அது ஒரு வரிதான்][அல்லது அவளுக்கு ஒன்று, இரண்டு சொல்லிக்கொடுங்கள்]. அத்துடன் அவள் சும்மா தெரியாம பீலா விட நீங்கள் அதை புரிதலின்றி வேதவாக்காகக் கொண்டு ஹகூ..இரண்டுவரி என்றெல்லாம் இயம்புகிறீர்கள் [உண்மையான அதாவது ஜப்பானியக் ஹகூகள் இரண்டுவரிதான்]. முடிவாக உங்களுக்கும் அவளுக்குமிடையான் புரிதலின்மையையும், எதிர்காலத்தில் இப்புரிதலின்மையால் இருவரும் ஒருமித்து ஒரே பாதையில் செல்லமாட்டீர்கள் என்பதையும்தான் காட்டுகிறது) [ஹீ ஹீ..எப்படி என்னுடைய கவிதைக்குப் பொருள்கூறும் திறமை?]

காதல் கிறுக்கன் said...

மது அவர்களே உங்கள் கவிதைக்குப் பொருள்கூறும் திறமை மெய்சிலிர்க்கவைக்கின்றது :)(எப்படி சார் உங்களால் இப்படி எல்லாம் முடியுது.இருந்து room போட்டு யோசிப்பிங்களோ)
நான் ஒன்றும் 20 பெண்களை காதலித்த பாக்கியசாலியும் இல்லை கவிதைகளில் இடக்கு மடக்கு கண்டுபிடிக்கும் அளவுக்கு சாணக்கியனும் இல்லை :)

Post a Comment

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம். அனைவரும் இந்த வலைப்பூவை வாசிப்பார்கள். எனவே நல்ல வார்த்தைப் பிரயோகங்களைப் பாவியுங்கள். அத்துடன் இடுகையின் மேற்புறத்தில் உங்கள் நட்சத்திர வாக்கையும் இட்டுவிட்டு செல்லுங்கள்.
நன்றி