Saturday, July 12, 2008

பசுமை வெளியில் ஒரு பட்ட மரம்

மனிதனை மனிதனாக
மதிக்கும்
மாண்புமிகு நாட்டில் வேலை..
சீக்கிரம் செல்!
சகதியில் நின்றபடி அன்னை...

கடமையை மறவாதே!
கடந்த பாதையில்
கயர் படிந்த கல்லுகளின்
காயங்களை மற!
கலங்கரையாக நின்றபடி தந்தை...

எதிர் நீச்சல் செய்!
எதிரே ஓங்கிய மதில் தோன்றின்
ஏறிப்பாய ஏணியாய் என்னை அழை!
எதிர்கால நினைவுகளுடன் சக உதிரங்கள்...

சாதிக்க..
சிந்திக்க தொடங்கியவன்..
சாகசங்கள் படைக்க
நினைத்தவன்..
இன்று
கசப்பான அனுபவங்களால்
கடல் கடக்கிறான்..

பசுமையான இனம்
சுமையான மனம்..
பிறர் ரசிக்கும் வனம்
பிரிவால் தவிக்கும் மனம்..
நாழிகை முன்னே நகர.. நினைவுகள் பின்னே நகர..
பசுமை வெளியில் ஒரு பட்ட மரமாக நின்றான்

சிந்தித்தான்..
ஒடுங்கியிருக்க பிறந்தவனல்ல
பிடுங்கியெறிந்தான் களையெனும் வடுக்களை!!
ஊன்றினான் முயற்சி விதைகளை!!
பட்ட மரம் துளிர்த்தது
பசுமை வெளியில்...

4 பின்னூட்டங்கள்:

மதுவர்மன் said...

தமிழ் பூங்காவுக்கு உங்கள் முதல் படைப்பு, முதல் கவிதை அருமை செந்தா!

உண்மையான உணர்வுகள் எழுதப்படும்போது, அவற்றுக்கு நிகர் வேறொன்றுமில்லை.

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

நல்லா இருக்குது.

sentha said...

இளமை பூங்காவில் தேனெடுக்க
இந்த கவி வண்டுக்கும்
இடமளித்த காவலர்களுக்கு..
இருகரம் கூப்பி நன்றிகள்..

மதுவர்மன் said...

ஆஹா! அருமை..

கவிதையிலான பின்னூட்டமொன்றை, தமிழ் வலைப்பதிவுலகம் இங்கேதான் முதல் முதலில் அறிந்திருக்கும். வாழ்த்துக்கள்.

கலக்குங்க!

Post a Comment

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம். அனைவரும் இந்த வலைப்பூவை வாசிப்பார்கள். எனவே நல்ல வார்த்தைப் பிரயோகங்களைப் பாவியுங்கள். அத்துடன் இடுகையின் மேற்புறத்தில் உங்கள் நட்சத்திர வாக்கையும் இட்டுவிட்டு செல்லுங்கள்.
நன்றி