Monday, July 28, 2008

கொசோவோவும் பிச்சை அரசியலும்

இருப்புக்காக எதையாவது சொல்லியாகவேண்டும் என்று ஆகியபிறகு எதைச்சொன்னால் என்ன. இந்த நிலையில் தான் இருக்கின்றது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. அடிக்கடி கொசோவோவை உதாரணம் காட்டி சர்வதேச சமூகம் இதே நடைமுறை மூலம் இந்தியாவின் உதவியுடன் உதவவேண்டும் என்ற ஓலம் இன்னமும் ஒய்ந்தபாடில்லை.

கொசோவோ தனிநாட்டுப் பிரகடனத்தை அறிவித்த நேரத்தில் எழுதிய ஒரு பதிவை பகிர்ந்து கொள்ள விரும்பி.....

(தனிநாட்டுப் பிரகடனம் செய்திருக்கும் கொசோவோவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது வாழ்த்துக்களை உடனேயே தெரிவித்தது. ஆனால் இந்தியா கொசோவோ தனிநாட்டுப் பிரகடனத்தை ஏற்றுக் கொள்ளாமல் எதிர்க்கும் நிலையில் இந்தியா சொன்னால் நாங்கள் சொன்ன மாதிரித் தான் என்று சொல்லும்; இந்தக் கூட்டமைப்பு செய்யப் போவதென்ன?)

கொசோவோ தனிநாட்டுப் பிரகடனத்தை வெளியிட்டவுடன் தனிநாட்டுப் பிரகடனம் செய்திருக்கும் கொசோவோவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது வாழ்த்துக்களை தெரிவித்தது. அதில்
"உயிர்களை உவப்பீகை செய்து சுதந்திரம் இறைமை உரிமைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடி விடுதலையை வென்றெடுத்துள்ள வகையில் தனிநாட்டுப் பிரகடனம் செய்திருக்கும் கொசோவோவுக்கு தமிழர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்" என்று கூறப்பட்டிருந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேண்டுமானால் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளட்டும். தமிழ் மக்களின் வாழ்த்துக்களை தெரிவிக்க இவர்கள் யார்? தமிழ் மொழியின் பெயரால் ஒரு மரபுக் கூட்டம் பிழைப்பு நடத்த தமிழ் மக்களின் பெயரால் இன்னொரு கூட்டம் அரசியல் பிழைப்பு நடத்துகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அறிக்கையில்: "ஒரு விடுதலைப் போராட்டத்தை ஏற்று அந்த மக்களுக்கு இறைமை உண்டு தன்னாட்சி உரிமை உண்டு என்று அதனை அங்கீகரித்து அதன் தனிநாட்டுப் பிரடனத்துக்கும் பாதுகாப்புக்கும் ஒத்துழைத்து செயற்படும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா ஆகியவற்றுக்கும் வாழ்த்துக்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவிக்கின்றது" என்று மேலும் கூறப்பட்டுள்ளது.

"ஒடுக்கப்பட்ட இனம் ஒன்றிற்கான தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை இறைமை என்பவற்றை கொசோவோவில் உலகப் பெரும் நாடுகள் அங்கீகரித்து தனிநாட்டுப் பிரகடனத்துக்கு ஒத்துழைக்கின்றமை தமிழினத்துக்கும் அனைத்துலகத்தின் பால் நம்பிக்கையை தோற்றுவித்துள்ளது" என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

எல்லாவற்றிற்கும் கையேந்திக் கையேந்திப் பிச்சை எடுத்துப் பழகிய கூட்டமைப்பினருக்கு செய்யக் கூடியதெல்லாம் பிச்சை இடுவார்கள் என்று அவர்கள் நம்புகிறவர்களைப் போற்றுவது மட்டுமே. இவர்களால் தமிழ் மக்களுக்கு பயனெதுவும் விளையப் போவதில்லை. அண்டிப் பிழைக்கும் அரசியலை அன்றி வேறெதையும் அறியாதவர்கள் இவ் வகையான பயனற்ற வீர வசனங்களைப் பேசி பிழைப்பு நடத்துவதை விட வேறெதைச் செய்ய முடியும்.

இனி என்ன....
இந்த வாழ்த்துச் செய்தியின் ஆங்கில மொழியாக்கம் கொழும்பில் உள்ள மேற்குலக தூதரலாயங்களுக்கு அனுப்பப் படும். தூதராலய அதிகாரிகளுடன் கூட்டங்களுக்கு செல்லும் போது இந்த வாழ்த்துச் செய்தியை கையோடு எடுத்துச் சென்று தமிழ் மக்கள் எப்போதும் உங்களுடன் தான் இருக்கிறார்கள் என தமிழ் மக்களின் பெயரால் பிச்சையெடுக்க வேண்டியதுதான்.

இதற்கிடையில் இந்தியா கொசோவோ தனிநாட்டுப் பிரகடனத்தை ஏற்றுக் கொள்ளாமல் எதிர்க்கும் பட்சத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்யப் போவதென்ன?

இந்தியா சொன்னால் நாங்கள் சொன்ன மாதிரித் தான் என்று சொல்பவர்கள் இந்த விடயத்தில் யார் பக்கம் நிற்கிறார்கள்?

கொசோவோ தனிநாட்டுப் பிரகடனத்தை வெளியிட்டு மக்கள் மகிழ்ச்சியில் திளைப்பதைப் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த எண்பது வயது மூதாட்டி சொன்னார். "1948 இல் பார்த்த மாதிரியே இருக்கு".

ஐ.நா. பாதுகாப்புச் சபையில் வீட்டோ அதிகாரம் உள்ள ரஷ்யா, சீனா ஆகியன கொசோவோ தனி நாட்டுப் பிரகடனத்தை வன்மையாகக் கண்டித்துள்ள அதே வேளை ஐ.நாவின் 1244 வது தீர்மானத்திற்கு முரணாக மேற்கொள்ளப்பட்ட செயற்பாட்டிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளன. ஸ்பெயின் கொசோவோவை அங்கீகரிக்க மறுத்ததோடு அல்லாமல் ஐரோப்பிய ஒன்றியம் இதை ஆதரிக்கக் கூடாது எனவும் கேட்டுள்ளது. கிரேக்கமும் அனேகமான கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் கொசோவோவை அங்கீகரிக்க மறுத்துள்ளன.

அந்த மூதாட்டி சொன்னது போல இன்னுமொரு இலங்கைக்கான தொடக்க விழா அரங்கேறியுள்ளது. போராடிப் பெறாத சுதந்திரத்திற்கு மாற்றாக மன்றாடிப் பெற்ற சுதந்திரம் எப்படி இருக்கும் என்பதற்கு கொசோவோ ஒரு பாடமாக அமையும்.

15 பின்னூட்டங்கள்:

சண்சுதா said...

ஓம் ஓம் ஏகலைவா, கொசோவாகாரனே சட்டிக்குள்ள இருந்து தப்பி அடுப்புக்குள்ள விழுந்திருக்கிறான் அவனுக்கு அனுதாபம் தெரிவிக்காமல் வாழ்த்து சொல்லினமாம்... உவை தமிழற்றை பிரதிநிதிகளாய் தொடர்ந்தும் இருந்தால் செல்வநாயகம் சொன்னமாதிரி "தமிழரை கடவுள்தான் காப்பாத்த வேணும்".... அல்லது அந்தாள் (சும்மாவே தந்தையெல்லே?) சொன்னதை உண்மையாக்கவேணுமென்டுறதுக்காகத்தான் உப்பிடியெல்லாம் சொல்லினமோ தெரியாது...

மதுவர்மன் said...

//தமிழ் மொழியின் பெயரால் ஒரு மரபுக் கூட்டம் பிழைப்பு நடத்த தமிழ் மக்களின் பெயரால் இன்னொரு கூட்டம் அரசியல் பிழைப்பு நடத்துகிறது.//

அது சரி, தமிழ் மொழியின் பெயரால் பிழைப்பு நடத்தும் அந்த மரபுக்கூட்டம் எது?

Anonymous said...

Dear Ekaliva,

Another useful political comment on our issue, even the Tamil Diaspora has been using the same bandwagon to promote the Sri Lankan Tamils issue in the foreign countries. I have always thought that the people who used to say them as the leaders of the Tamils always forget to learn lessons from past mistakes. When these people talk about Kosovo they always refuse to talk about Camp Bondsteel & AMBO pipeline. It would be better if Ekaliva can write about Bondsteel & AMBO pipeline in Tamil. It will help the Sri Lankan Tamils to know the real story of Kosovo’s independence.

On Mathuwarman’s question, Karunanithi is the one comes to my mind.

Best wishes,
Vinothini kumaran

ஏகலைவா said...

நாங்கள் கவனமாய் இருக்காட்டி, அழிவு நிச்சயம். தமிழ்த் தேசியம் என்று பேசிப்பேசி இவங்கள் எங்களை காசுக்கு வி;த்துப் போடுவாங்கள். Bond-Steelயையும் AMBO எண்ணெய்க் குழாய்த் திட்டத்தையும் பற்றி ஞாபகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி. நிச்சயமாக அவை பற்றி எழுதுவேன். இவ்விடத்தில் Bond-Steelயைப் பற்றிய ஒரு செய்தியை மட்டும் சொல்லிப் போகிறேன்.

செய்மதியில் இருந்து பார்க்கும் போது பூமிக்கோளத்தில் தெளிவாகத் தெரிகின்ற அடையாளம் காணக் கூடிய இரண்டு கட்டடங்கள் தான் உண்டு. ஒன்று சீனப்பெருஞ்சுவர் மற்றையது Bond-Steel இராணுவத்தளம்.

மதுவர்மன்,

எனக்கு கம்பன் கழகத்திலிருந்து கருணாநிதி வரை பலரை நினைக்க முடிகிறது. அதற்கப்பால் தமிழ்க் கலாசாரக் காவலர்கள் எனச் சொல்லிக் கொள்ளும் பலரும் இதில் அடக்கம்.

மதுவர்மன் said...

வினோதினி குமரன்,

ஏன் நீங்கள் 'தமிழ் பூங்கா'வில் எழுதக்கூடாது!

தமிழ் பூங்காவில் பலவேறு பட்டவர்களின், பலவேறு கோணங்களிலிருந்து, பலவேறு பிண்னணிகளிலுமிருந்து வரும் கருத்துக்கள் இடம்பெறவேண்டுமென்று எதிர்பார்க்கின்றோம்.

அந்தவகையில், ஏன் நீங்களும் இதில் எழுதலாமே. முக்கியமாக, வலைப்பதிவுகளில் பெண்கள் எழுதுவது மிக மிக குறவாகவே இருக்கின்றது.

நீங்கள் எழுத விரும்புவீர்களானால், தமிழ் பூங்கா அதை மிக மிக வரவேற்கின்றது. எங்களாலான முடிந்த உதவிகளை நாங்கள் செய்ய தயாராகவுள்ளோம்.

தனித்தனியான வலைப்பதிவுகளை வைத்திருப்பதைவிட, கூட்டுமுயற்சியாக ஒரு கூட்டு வலைப்பதிவை வத்திருப்பது, வாசகர்களுக்கும், பதிவர்களுக்கும் அனுகூலமானது என்பதில் நம்பிக்கை வைத்துள்ளோம்.

எண்ணிக்கையில், பல்கிப்பெருகிப்போயுள்ள வலைப்பதிவுகளில், வாசகர்களுக்கு எதை படிப்பது, எதை விடுவது என்ற சிக்கலை கொஞ்சமேனும் குறைக்கலாமல்லவா!

தமிழ் பூங்கா பராமரிப்பாளர்கள் சார்பில்,
மதுவர்மன்.

மதுவர்மன் said...

//செய்மதியில் இருந்து பார்க்கும் போது பூமிக்கோளத்தில் தெளிவாகத் தெரிகின்ற அடையாளம் காணக் கூடிய இரண்டு கட்டடங்கள் தான் உண்டு. ஒன்று சீனப்பெருஞ்சுவர் மற்றையது Bond-Steel இராணுவத்தளம்.//

ஏகலைவா!

இந்தத் தகவல் உண்மை தானா? செய்மதியிலிருந்து பார்த்தலை சொல்கின்றீர்களா, அல்லது மதியிலிருந்து (சந்திரனிலிருந்து) பார்ப்பதை சொல்கின்றீர்களா?

எனக்கு இதிலே கொஞ்சம் சந்தேகமிருக்கின்றது.

Anonymous said...

Mathuvarman,

Thanks for your kind invitation. I used to write in English, i'm not familiar with Tamil fonts or Unicode, that's why i used to write my comments in English. If anyone of you can translate my articles, i'm happy to send it. I really like Tamil Poonga because the posts are really good, informative & intellectual. Some of the bloggers in this blog have to write more serious stuff. That will make Tamil Poonga much more serious & respected blog. There are several issues to be written to the Tamil audience. But the idea of having a common blog is a great idea. All the very best to all of you.

Best regards,
Vinothini Kumaran

ஏகலைவா said...

மதுவர்மன்,

இணையத்தில் பார்வையிட்ட தகவலின் அடிப்படையிலேயே நான் Bond-Steel பற்றி அவ்வாறு எழுதினேன். அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள் கொசோவோ தொடர்பான அமெரிக்க நலன் பற்றி எழுதும் போது ஒரு குறியீடாக அடிக்கடி பயன்படுத்தும் ஒரு சொற்றொடராக இதை நான் பல இடங்களில் வாசித்திருக்கிறேன். தவறு நேர்ந்திருக்க வாய்ப்பு இல்லாமல் இல்லை. புதிய தகவல் தெரிந்தால் தெரிவிக்கவும்.

ஆங்கில கட்டுரைகளை பூங்கா பராமரிப்பாளர்கள் யாராவது தமிழில் மொழிபெயர்க்க வாய்ப்புக்கள் உண்டா?

எங்கள் பூங்கா பூக்களை மட்டுமல்ல பயனுள்ள மருந்து மூலிகைகளையும் கொண்டிருத்தல் சிறப்பல்லவா.

ஏகலைவா said...

writing and posting comments is very important. But writing and posting articles is vital. So i will encourage people to write & agree totally with Mathuvarman.

at this i remembered a quote of Fidel Castro:

"I began revolution with 82 men. If I had do it again, I'd do it with 10 or 15 and absolute faith. It does not matter how small you are if you have faith and plan of action."

மதுவர்மன் said...

வினோதினி குமரன்,

//I used to write in English, i'm not familiar with Tamil fonts or Unicode, that's why i used to write my comments in English.//

தமிழில் தட்டெழுதுவது தான் உங்களுக்கு பிரச்சினையென்றால், அதற்கு இலகுவான தீர்வுகள் இருக்கின்றன.

ஆங்கில விசைப்பலகை வடிவமைப்புக்கு பழக்கப்பட்டுப்போய்விட்ட எங்களுக்கு குறிப்பிட்டதொரு தமிழ் விசைப்பலகை அமைப்பை பழகுவதென்பது கொஞ்சம் சோர்வுதரும் விடயம் தான்.

தமிழில் தட்டெழுதுவதற்கு இப்போது பலவகையான விசைப்பலகை வடிவமைப்புக்கள் உள்ளன.

அவை
1. Tamil99
2. Phonetic
3. OldTypeWriter
4. Bamini

என்பவை பிரபல்யமானவை. இவற்றுள் 1,3,4 முறைகளில், அவற்றின் புதிய விசையொழுக்குகளை பழகவேண்டியிருக்கும், ஆனால் வேகமான தட்டெழுதலுக்கு அவை சிறந்தன.

முரை 2, அப்படியே ஆங்கில விசைப்பலகை விசைகளை பாவித்து தமிழில் தட்டெழுதும் முறை. ஆங்கில விசைப்பலகை தெரிந்த ஒருவருக்கு உடனடியாக தமிழில் எழுதவேண்டுமாயின் இந்த Phonetic முறையை பாவிக்கலாம்

இதில், ‘அம்மா' என்று தமிழில் தட்டெழுதவேண்டுமாயின், அங்கிலத்தில் ஆங்கிலவிசைகளை 'ammaa' என்று தட்டெழுத, கணினியில் அது தன்பாட்டிலேயே 'அம்மா' என்று தோன்றும்.

மற்ற முறைகள்ய்டன் ஒப்பிடும்போது, இம்முறையில் கொஞ்சம் கூடுதலாக எழுத்துப்பிழைகள் ஏற்பட சந்தர்ப்பம் அதிகம், அத்துடன் வேகம் குறைந்த முறையும் கூட.

அதைத்தான் முதலில் நான் குறிப்பிட்டேன், உங்களால் தமிழ்பூங்காவிற்கு தமிழில் எழுதமுடியுமாயின் சொல்லுங்கள், எப்படி இலகுவாக தமிழில் தட்டெழுதுவது என்பதை நாங்கள் சொல்லித்தருகின்றோம்.

இதில் நீங்கள் நினைப்பதுபோன்று கடினமெதுவும் இல்லை.

நான்கூட தமிழ் பூங்காவில் தமிழில் எழுதுவதற்கு மேற்படி 2வது முறையையே பாவிக்கின்றேன். மாற்று தமிழ் விசைப்பலகை அமைப்பை கற்றுக்கொள்வதற்கு எனக்கும் நேரமில்லைதான். ஆகவே ஆங்கில விசைகளை பாவித்து தமிழை தட்டெழுதுவதையே இப்போதைக்கு செய்கின்றேன்.

உங்களுடன் தொடர்புகொள்ளக்கூடிய ஒரே ஊடகம் தற்போதைக்கு தமிழ் பூங்கா மட்டுமாதலால், எல்லாவற்றையும் இங்கே குறிப்பிடுவது கடினம்.

தமிழில் தட்டெழுதுவது சம்பந்தமாக உதவி தேவைப்படின், tamilgarden (at) gmail (dot) com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். உதவுகின்றோம்.

மதுவர்மன் said...

வினோதினி,

//If anyone of you can translate my articles, i'm happy to send it//

ஆங்கில மொழியிலுள்ள, தமிழர்கள் அறியவேண்டிய விடயங்கள் நிறைய உள்ளன தான். அப்படி நல்ல, பயனுள்ள விடயங்களை மொழிபெயர்க்கும் திட்டமொன்றை ஏற்படுத்தலாமென்றும் சிந்தித்தோம்.

அதாவது, ஆக்க்மொன்றை தனியொருவர் மொழிபெயர்க்காமல், கூட்டுமுயற்சியாக பலர் சேர்ந்து (Wikipedia Style) மொழிபெயர்ப்பது சிரந்ததாக அமையுமென்று நினைக்கின்றேன்.

ஆனாலும், உடனடியாக அது இடம்பெறுமென்பதற்கு உத்தரவாதமில்லை.

என்னுடைய முன்னைய பின்னூட்டத்தை கருத்தில் கொண்டு, முடிந்தால் தமிழிலும் எழுதுங்கள் எழுதுங்கள். உங்கள் சாத்தியப்பாடுகளை பொறுத்தது.

உங்கள் ஆங்கிலத்திலமைந்த கருத்துக்களை மிக மிக வரவேற்கின்றோம். தமிழில் அமைந்தால் இன்னுமின்னும் சிறப்பாக இருக்கும்.

//I really like Tamil Poonga because the posts are really good, informative & intellectual. Some of the bloggers in this blog have to write more serious stuff. That will make Tamil Poonga much more serious & respected blog. There are several issues to be written to the Tamil audience. But the idea of having a common blog is a great idea. All the very best to all of you.//

ஏற்றுக்கொள்கின்றோம், தமிழ் பூங்காவில் அவ்வப்போது சில பிரயோசனம் குறைந்த பதிவுகளும் இடம்பெற்றன தான்.

ஆனால் காலத்தோடு பார்த்தால், பதிவுகளின் தரம் அதிகரித்துச்செல்வதையே காணக்கூடியதாகவுள்ளது.

அதுதானே இயற்கை நியதி. Simple to Complex.
இலகுவிலிருந்து கடினத்துக்கு. பரிணாம் வளர்ச்சியில் நம்பிக்கை வைத்துள்ளோம். இயல்பான மாற்றம் ஒவ்வொருவரையும் மாற்றும்.

தமிழ் பூங்காவின் தரம் அதிகரித்துச்செல்லும்போது, தமிழ் பூங்காவில் பதிவெழுதும் பதிவர்களின் பொறுப்புணர்வும், தராதரம் பேணும் தன்மையும் அதிகரித்துச்செல்கின்றது என்பது அர்த்தம். பதிவர்களின் பொறுப்புணர்ச்சியும், கவனமும் அதிகரித்துக்கொண்டே செல்லவேண்டிய தேவையும் உள்ளது என்று அர்த்தம்.

அது தன்பாடிலேயே இங்கே நிகழ்வதை கண்கூடு காண்கின்றேன். தமிழ் பூங்காவில் நாங்கள் ஒருரையொருவர் கட்டுப்படுத்துவதில்லை. அனைவரும் சமம் என்ற ஜனநாயகக்கொள்கையே பேணப்படுகின்றது. தரக்கட்டுப்பாடென்பது தன்பாட்டிலேயே, புரிந்துணர்தலுடன் நிகழவேண்டுமென்று நினைக்கின்றேன். அது நிகழ்ந்துகொண்டுதானிருக்கின்றது.

உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றிகள்.

Anonymous said...

Mathuvarman,

Thanks for all your comments. I will try my level best to write in Tamil. I appreciate the democratic principal that you follow in the blog. the point which is noteworthy is that "joint responsibility" is the corner stone for any success. One very good post gives each & every one of you the praise & one bad post will make you all responsible for that.

I have introduced your blog to most of my friends, we all use to visit your blog daily, most of the days we are dissapointed because there is no new posts. Ther are about 15 bloggers posting for TamilPoonga. So with a clear plan & vision you can post atleast one post a day.

These kind of things has happened before when you bring out a magazine. In the begining you will find it easy to get new artices, poems, short stories, etc.. but after a while it never happens. That has been the reason for the failure of the most of the Tamil magazines.

You all have the facility to maintain your site even without posting. But don't take that for granted. Keep your site alive & vibrant. This will make TamilPoonga most popular among the audience.

Another thing i noticed is that even the bloggers don't comment, if each of you can comment on a post you will be having atleast 14 comments plus others to add on. This will make it more interactive.

all the very best for your hard work & keep it up.


best regards,
Vinothini Kumaran.

sharevivek said...

வணக்கம் ...
உங்கள் தளம் இன்னும் வளர என் வாழ்த்துக்கள்.தொடருங்கள்.
http://loosupaya.blogspot.com

மதுவர்மன் said...

வினோதினி,

உங்கள் பரிந்துரைகளும், ஆலோசனைகளும் மிக்க பயனுள்ளவை.

அவை தமிழ் பூங்காவின் பதிவர்களின் கவனத்துக்கு நிச்சயம் கொண்டுவரப்படும்.

இன்னுமின்னும் உங்களினதும், மற்றையவர்களினதும் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் எதிர்பார்க்கின்றோம்.

நன்றி.

மதுவர்மன் said...

//I have introduced your blog to most of my friends, we all use to visit your blog daily, most of the days we are dissapointed because there is no new posts. Ther are about 15 bloggers posting for TamilPoonga. So with a clear plan & vision you can post atleast one post a day.//

தற்போதைக்கு, 15 பதிவர்கள் இருந்தாலும், ஏதோ ஐந்தாறு பதிவர்கள் தான் உயிர்ப்புடன் எழுதிக்கொண்டிருக்கின்றார்கள்.

பலர் பல்கலைக்கழகங்களிலே படித்துக்கொண்டிருப்பதாலும், படிப்பை முடித்து பணியாற்றுவதாலும், முற்றுமுழுதான பங்களிப்புக்கு அவர்களுக்கு நேரம் கிடைப்பது அரிது. அங்கே தான் கூட்டு முயற்சியான வலைப்பதிவு, அதை உயிர்ப்பாக வைத்திருக்க உதவுகின்றது.

முடிந்தவரை, எதிர்காலத்தில், ஆகக்குறைந்தது, ஒருநாளுக்கு ஒரு பதிவாவது இடக்கூடிய வழமையை கொண்டுவர முயற்சிக்கின்றோம்.

Post a Comment

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம். அனைவரும் இந்த வலைப்பூவை வாசிப்பார்கள். எனவே நல்ல வார்த்தைப் பிரயோகங்களைப் பாவியுங்கள். அத்துடன் இடுகையின் மேற்புறத்தில் உங்கள் நட்சத்திர வாக்கையும் இட்டுவிட்டு செல்லுங்கள்.
நன்றி