Monday, July 14, 2008

பத்திரிகையில் வந்ததொரு அப்பட்டமான பொய்ச்செய்தி?

இது இலங்கையிலையிருந்து வெளிவாற பேப்பர், தினக்குரலிலை 2008-07-13 ஞாயிற்றுக்கிழமை வெளிவந்த செய்தியொண்டு. அதென்னெண்டால், இங்கை தலைநகர் கொழும்பிலை நடந்த ஒரு தாலியறுப்பு பற்றினது. இதை வாசிச்ச உடனை எனக்கெண்டால் நம்ப ஏலாமல் போயிட்டுது.

இதை வாசிச்ச உடனை என்ரை மனசிலை எழும்பின கேள்வி என்னெண்டால், வேறையாருக்கெண்டாலும் பரவாயில்லை, என்ன இந்த பத்திரிகையாசிரியர்களுக்கும் மண்டைக்குள்ளை ஒண்டும் இல்லாமல் போயிட்டுதே எண்டுதான்.

சரி, நான் சொல்லிறதை நம்ப ஏலாட்டில், நீங்களும் ஒருக்கால் அதை வாசிச்சு பாருங்கோ கீழை. அதுவும் பட்டப்பகலிலை, இப்பிடியொண்டு நடக்கமுடியுமா என்று..அதுவும், கடவுள்(?) கருமாரியம்மனை கும்பிட்டுக்கொண்டிருந்த பொம்பிளையொண்டின்ரை கழுத்திலையிருந்த தாலிக்கொடியை ஆட்டோவிலை வந்த மூண்டுபேர் அறுத்துக்கொண்டு ஓடுறது எண்டால் அதென்ன நடக்கக்கூடிய காரியமே? கருமாரியம்மனுக்கு என்ன கண்தெரியாதே? அப்பிடி நடந்திருந்தால், கருமாரியம்மன் அந்தநேரம் என்ன செய்துகொண்டிருந்தவா?

அவ கடவுளெல்லே! கையிலை சூலம், கத்தி, பொல்லு எண்டு கனக்க ஆயுதம் வச்சிருகிறதையும் கண்டனான். (இலங்கையிலை கடவுள்மாரெல்லாம் கனரக துவக்குகள், பீரங்கிகள் வச்சிருந்தாலும் ஆச்சரியமில்லை தான் ஏனெண்டால், இலங்கையிலை சும்மா கண்டவன் நிண்டவன் எல்லாமெல்லோ துவக்கு வச்சிருக்கிறாங்கள்). அப்ப அப்பிடி இருக்கேக்கை, கருமாரியம்மன், ஆயுதங்களை பாவிச்சு காப்பாத்தியிருக்கவேண்டாமே?

அந்தப் பொம்பிளை, அப்ப ஏன் அந்த ஒண்டுக்கும் உதவாத கடவுள் கருமாரியம்மனை கும்பிட்டதோ தெரியாது. நீங்கள் சொல்லுங்கோ, உங்களுக்கு முன்னாலை, அப்பிடியொரு வழிப்பறி நடந்திருந்தா, அதை தடுக்கிறதுக்கு ஏதாவது முயற்சி செய்திருப்பீங்களோ இல்லையோ? அப்ப, உங்களாலை முடிஞ்சதை, ஏன் அந்த, சர்வ வல்லமை பொருந்திய, ஆயுதம் தரித்த கடவுளாலை செய்ய முடியாமல் போனது?

சும்மா, கல்லையும், பொல்லையும் காட்டி, இதுதான் கருமாரி, அதுதான் மொள்ளமாறி, உதுதான் பேமானி எண்டு ஆரும் சுடலைச்சாம்பல் பூசினதுகள், நூல் கட்டினதுகள் சொன்னால், அதை நம்பி, தங்களிலை நம்பிக்கை வைக்காமல், கடைசியிலை உள்ளது எல்லாத்தையும் இழந்தாலும், எங்கடை பேக்குஞ்சுச் சனங்களுக்கு புத்தி வருமே? வராது, ஒரு நாளும் வராது

சரி பகிடியை விட்டுட்டு, கொஞ்சம் பகுத்தறிவா ஆராய்ஞ்சு பார்ப்பம்.

அப்ப, இப்பிடியொரு சம்பவம் நடந்திருக்கெண்டால், காரணம் கீழை வாறதிலை ஒண்டாகத்தான் இருக்கவேணும். ஒண்டொண்டாய் பாருங்கோ.

1. கருமாரியம்மன் அந்தநேரம் கவனிக்காமல் விட்டிருப்பா. அவ எத்தினை பேரையெண்டுதான் கவனிக்கிறது. வயசுபோன நேரம் எல்லாரும்போய் அவவிட்டை அதைச்செய், இதைச்செய், அதைத்தா, இதைத்தா எண்டு அரியண்டம்பிடிச்சால் (லஞ்சம் கூட குடுபினம் பலர்) அந்த மனிசி என்ன செய்யிறது. பாவம்.

2. கருமாரியம்மன் கவனிச்சிருந்தாலும், தாலியறுத்தவங்கள் துவக்கோடை வந்திருப்பாங்கள். அம்மனிட்டை இருந்த பெரிய ஆயுதமெண்டால், சூலம் மட்டும்தான், அதை வச்சுக்கொண்டு ஒண்டுமே செய்யேலாது எண்டதாலை, கண்டும் காணாத மாதிரி இருந்திருப்பா, பாவம். இனியாவது இலங்கையிலை, கடவுள் சிலை செய்யேக்கை, கைகளிலை துவக்கு இருக்கிறமாதிரி செய்தால், கொஞ்சம் நல்லது.

3. ஏதோ விதி எண்டு சொல்லுவாங்கள், அந்த பொம்பிளைக்கு அண்டைக்கு தாலியறுக்கிறது எண்டு விதியாக இருந்திருக்கவேணும். அப்பிடியெண்டால் என்னசெய்யிறது, அனுபவிச்சுத்தான் ஆகவேணும்.

4. பக்தர்களை கடவுள் சோதிக்கிற பல சம்பவங்களும், காலங்காலமாய் நடந்திருக்கு. அதிலையொண்டாய் இதுவும் இருக்கலாம். அப்பிடியெண்டு சொன்னால், அந்த பொம்பிளைக்கு சொல்லவேணும், பொறுமையாய் இருந்து, விடாமல் கருமாரியம்மனை கும்பிட்டுக்கொண்டே இருக்கச்சொல்லி. கடவுள் சோதிக்கிறதெல்லாம், பிறகு கூரையை பிச்சுக்கொண்டு குடுக்கிறதுக்கு தான். அந்த பொம்பிளையை கவனமா கூரையை பாத்துக்கொண்டு இருக்கச்சொல்லுங்கோ. திடீரெண்டு கூரையை பிச்சுக்கொண்டு ஒண்டில்லை, ஒன்பது தாலிக்கொடியும் விழக்கூடும்.

5. இல்லாட்டி, தாலியறுத்தவங்கள் புத்தமதத்து ஆக்களாய்*** இருக்கவேணும். அவங்களுக்கு கடவுள், கிடவுள் எண்டு ஒரு மசிர், மண்ணாங்கட்டியும் இல்லை எண்டு வடிவாய் தெரிஞ்சிருக்கவேணும் (புத்தமதம் அப்பிடி தானே சொல்லுது) . பயப்பிடாமல் அறுத்துக்கொண்டு போயிருப்பாங்கள்.

சரி இனி இதிலை ஆர் புத்திசாலியெண்டு பார்ப்பம். எனக்கெண்டால், இதிலை புத்திசாலியான ஆக்கள் எண்டால், கருமாரியம்மனும் இல்லை, அந்த எங்கடை தமிழ்ப் பொம்பிளையுமில்லை, ஆட்டோவிலை வந்த மூண்டு தாலியறுத்தவங்கள் எண்டு தான் படுது. உங்களுக்கு.....?


*** புத்தமதத்து ஆக்களெல்லாரும் கடவுளை நம்புறேல்லை எண்டு இல்லை. இந்து மதம், சும்மாயில்லை, பவர்ஃபுல்லான மதமெல்லோ! அதாலை இலங்கயிலை புத்தமதத்திலை கொஞ்சப்பேர், இந்துமதக்கடவுள்களை, அவையின்ரை பவர் தெரிஞ்சு, கடத்திக்கொண்டுபோய் புத்தகோயிலுகளுக்குள்ளை அடைச்சு வச்சு, தங்களுக்கு தேவையானதுகளை பெற்றுக்கொள்ளினம். ஆனாலும் புத்தரின்ரை உண்மையான போதனைகளை, உண்மையா பின்பற்றுறாக்களும் இங்கை புத்தமதத்திலை இருக்கினம். இங்கையிருந்து விமானமேறி, இந்தியாவிலை திருப்பதிகோவிலிலை கும்பிடுற புத்தமதத்து ஆக்களும் இருக்கினம். தெரியாட்டில், இலங்கை இந்திய பேப்பருகளை நீங்கள் பாக்கிறேலை எண்டு தான் அர்த்தமாகும். படம்போட்டெல்லாம் என்னாலை விளங்கப்படுத்தமுடியாது.

ஆதாரம்:
தினக்குரலில் வந்த செய்தி

4 பின்னூட்டங்கள்:

வி.சபேசன் said...

சும்மா கலக்கிப் போட்டியள்

Tamil said...
This comment has been removed by the author.
மதுவர்மன் said...

சபேசன் வருகைக்கு நன்றி.

Anonymous said...

அருமையான பதிவு.

Post a Comment

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம். அனைவரும் இந்த வலைப்பூவை வாசிப்பார்கள். எனவே நல்ல வார்த்தைப் பிரயோகங்களைப் பாவியுங்கள். அத்துடன் இடுகையின் மேற்புறத்தில் உங்கள் நட்சத்திர வாக்கையும் இட்டுவிட்டு செல்லுங்கள்.
நன்றி