Tuesday, July 22, 2008

ஃபோனில் சார்ஜ் இல்லாட்டி ஜெயில் வாசம்

ஆமிக்காரன்ட செக் பொயின்ற் வருது. எல்லாரும் இறங்கி தங்கட அடையாளங்களை காட்டினம். மன்னிச்சுக்கொள்ளுங்கோ...எல்லாரும் எண்டே சொன்னனான், இல்லை இல்லை...தமிழாக்கள் மட்டும்தான்.

இப்ப மேலதிகமா ஆமிக்காரன் ஆக்களின்ட ஃபோனுகளை வாங்கி #132# எண்டு அடிச்சு கோல் பண்ணுறான். ஃபோனின்ட முகப்பில அந்த ஆளின்ட பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம் எல்லாம் விழுகுது. ஒப்பிட்டுப் பாக்குறான். விடுறான்.

தப்பித்தவறி, உங்கட ஃபோன் பற்றறியில கரண்ட் குறைவாயிருந்து #132# வேலை செய்யாட்டி 1,2,3..எண்டு கம்பி எண்ண வேண்டியதுதான்.

நாங்கள் நல்லாக்கள். எதையும் தாங்குவம் எண்டு இந்த ஃபசிலிட்டியையும் அரசாங்கம் தந்திருக்குது. கீழ சிரிக்கிற பொம்பிளை எங்களைப் பாத்துதான் சிரிக்கிறா, பாருங்கோ.- மதுவதனன் மௌ. -

6 பின்னூட்டங்கள்:

Anonymous said...

Only Dialog? What about Mobitel, Hutch and Tigo?

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

Tigo இப்போதைக்கு ஒரு அடையாள அட்டை வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளது. எனினும் இறுதியில் எல்லா வழங்குநரும் இப்படியான செயற்பாட்டுக்கே வருவார்கள் என்று தோன்றுகிறது.

M.Rishan Shareef said...

இப்படியெல்லாம் கூட வசதிகள் வந்தாச்சுதே மதுவதனன் ?
இனி அவசரத்துக்குக் கூட யாருடைய போனையும் கடன்வாங்கிப் போகேலாது.
பெண்களால் வயதை மறைக்க இயலாது.. :(

உங்கள் பதிவின் எழுத்துக்களைக் கொஞ்சம் பெரிதுபடுத்தினால் நன்றாக இருக்கும் எனத் தோன்றுகிறது நண்பரே !

Anonymous said...

Even though having the charged mobile is not enough. U need to have at least minimum money to make a call or send a sms to retrieve ur information. (at least 3 times for each check point). Its going to be a very good business for the service providers..

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

வாங்கோ ஷெரீப்,
//
பெண்களால் வயதை மறைக்க இயலாது.. :(
//

இப்போ கிடைக்கிற அழகுசாதனப் பொருட்களால கதைக்கிற பெண்களின் வயதே தெரியுறதில்ல. எங்கட ஃபோனில காசு இல்ல உங்கட ஃபோனை தாறீங்களா ஒரு எஸ்எம்எஸ் அனுப்ப என்று வாங்கி வயதை உறுதிப்படுத்திக்கொள்ளலாம்...:-))

ஷெரீப் இது கூட்டுவலைப்பூவாதலால் மற்றவர்களின் கவனத்துக்கு இந்த சிறிய எழுத்து விவகாரத்தை கொண்டுவருகிறேன்.

மதுவதனன் மௌ.

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

ரிஷானுக்குப் பிறகு பின்னூட்டமிட்ட அநாமதேயம்,

உண்மையில அப்படியில்ல, இந்த சேவைகளானவை முற்றிலும் இலவசம். அந்தவகையில தப்பிச்சோம்.

Post a Comment

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம். அனைவரும் இந்த வலைப்பூவை வாசிப்பார்கள். எனவே நல்ல வார்த்தைப் பிரயோகங்களைப் பாவியுங்கள். அத்துடன் இடுகையின் மேற்புறத்தில் உங்கள் நட்சத்திர வாக்கையும் இட்டுவிட்டு செல்லுங்கள்.
நன்றி