Monday, July 14, 2008

பத்திரிகையில் வந்ததொரு அப்பட்டமான பொய்ச்செய்தி?

இது இலங்கையிலையிருந்து வெளிவாற பேப்பர், தினக்குரலிலை 2008-07-13 ஞாயிற்றுக்கிழமை வெளிவந்த செய்தியொண்டு. அதென்னெண்டால், இங்கை தலைநகர் கொழும்பிலை நடந்த ஒரு தாலியறுப்பு பற்றினது. இதை வாசிச்ச உடனை எனக்கெண்டால் நம்ப ஏலாமல் போயிட்டுது.

இதை வாசிச்ச உடனை என்ரை மனசிலை எழும்பின கேள்வி என்னெண்டால், வேறையாருக்கெண்டாலும் பரவாயில்லை, என்ன இந்த பத்திரிகையாசிரியர்களுக்கும் மண்டைக்குள்ளை ஒண்டும் இல்லாமல் போயிட்டுதே எண்டுதான்.

சரி, நான் சொல்லிறதை நம்ப ஏலாட்டில், நீங்களும் ஒருக்கால் அதை வாசிச்சு பாருங்கோ கீழை. அதுவும் பட்டப்பகலிலை, இப்பிடியொண்டு நடக்கமுடியுமா என்று..



அதுவும், கடவுள்(?) கருமாரியம்மனை கும்பிட்டுக்கொண்டிருந்த பொம்பிளையொண்டின்ரை கழுத்திலையிருந்த தாலிக்கொடியை ஆட்டோவிலை வந்த மூண்டுபேர் அறுத்துக்கொண்டு ஓடுறது எண்டால் அதென்ன நடக்கக்கூடிய காரியமே? கருமாரியம்மனுக்கு என்ன கண்தெரியாதே? அப்பிடி நடந்திருந்தால், கருமாரியம்மன் அந்தநேரம் என்ன செய்துகொண்டிருந்தவா?

அவ கடவுளெல்லே! கையிலை சூலம், கத்தி, பொல்லு எண்டு கனக்க ஆயுதம் வச்சிருகிறதையும் கண்டனான். (இலங்கையிலை கடவுள்மாரெல்லாம் கனரக துவக்குகள், பீரங்கிகள் வச்சிருந்தாலும் ஆச்சரியமில்லை தான் ஏனெண்டால், இலங்கையிலை சும்மா கண்டவன் நிண்டவன் எல்லாமெல்லோ துவக்கு வச்சிருக்கிறாங்கள்). அப்ப அப்பிடி இருக்கேக்கை, கருமாரியம்மன், ஆயுதங்களை பாவிச்சு காப்பாத்தியிருக்கவேண்டாமே?

அந்தப் பொம்பிளை, அப்ப ஏன் அந்த ஒண்டுக்கும் உதவாத கடவுள் கருமாரியம்மனை கும்பிட்டதோ தெரியாது. நீங்கள் சொல்லுங்கோ, உங்களுக்கு முன்னாலை, அப்பிடியொரு வழிப்பறி நடந்திருந்தா, அதை தடுக்கிறதுக்கு ஏதாவது முயற்சி செய்திருப்பீங்களோ இல்லையோ? அப்ப, உங்களாலை முடிஞ்சதை, ஏன் அந்த, சர்வ வல்லமை பொருந்திய, ஆயுதம் தரித்த கடவுளாலை செய்ய முடியாமல் போனது?

சும்மா, கல்லையும், பொல்லையும் காட்டி, இதுதான் கருமாரி, அதுதான் மொள்ளமாறி, உதுதான் பேமானி எண்டு ஆரும் சுடலைச்சாம்பல் பூசினதுகள், நூல் கட்டினதுகள் சொன்னால், அதை நம்பி, தங்களிலை நம்பிக்கை வைக்காமல், கடைசியிலை உள்ளது எல்லாத்தையும் இழந்தாலும், எங்கடை பேக்குஞ்சுச் சனங்களுக்கு புத்தி வருமே? வராது, ஒரு நாளும் வராது

சரி பகிடியை விட்டுட்டு, கொஞ்சம் பகுத்தறிவா ஆராய்ஞ்சு பார்ப்பம்.

அப்ப, இப்பிடியொரு சம்பவம் நடந்திருக்கெண்டால், காரணம் கீழை வாறதிலை ஒண்டாகத்தான் இருக்கவேணும். ஒண்டொண்டாய் பாருங்கோ.

1. கருமாரியம்மன் அந்தநேரம் கவனிக்காமல் விட்டிருப்பா. அவ எத்தினை பேரையெண்டுதான் கவனிக்கிறது. வயசுபோன நேரம் எல்லாரும்போய் அவவிட்டை அதைச்செய், இதைச்செய், அதைத்தா, இதைத்தா எண்டு அரியண்டம்பிடிச்சால் (லஞ்சம் கூட குடுபினம் பலர்) அந்த மனிசி என்ன செய்யிறது. பாவம்.

2. கருமாரியம்மன் கவனிச்சிருந்தாலும், தாலியறுத்தவங்கள் துவக்கோடை வந்திருப்பாங்கள். அம்மனிட்டை இருந்த பெரிய ஆயுதமெண்டால், சூலம் மட்டும்தான், அதை வச்சுக்கொண்டு ஒண்டுமே செய்யேலாது எண்டதாலை, கண்டும் காணாத மாதிரி இருந்திருப்பா, பாவம். இனியாவது இலங்கையிலை, கடவுள் சிலை செய்யேக்கை, கைகளிலை துவக்கு இருக்கிறமாதிரி செய்தால், கொஞ்சம் நல்லது.

3. ஏதோ விதி எண்டு சொல்லுவாங்கள், அந்த பொம்பிளைக்கு அண்டைக்கு தாலியறுக்கிறது எண்டு விதியாக இருந்திருக்கவேணும். அப்பிடியெண்டால் என்னசெய்யிறது, அனுபவிச்சுத்தான் ஆகவேணும்.

4. பக்தர்களை கடவுள் சோதிக்கிற பல சம்பவங்களும், காலங்காலமாய் நடந்திருக்கு. அதிலையொண்டாய் இதுவும் இருக்கலாம். அப்பிடியெண்டு சொன்னால், அந்த பொம்பிளைக்கு சொல்லவேணும், பொறுமையாய் இருந்து, விடாமல் கருமாரியம்மனை கும்பிட்டுக்கொண்டே இருக்கச்சொல்லி. கடவுள் சோதிக்கிறதெல்லாம், பிறகு கூரையை பிச்சுக்கொண்டு குடுக்கிறதுக்கு தான். அந்த பொம்பிளையை கவனமா கூரையை பாத்துக்கொண்டு இருக்கச்சொல்லுங்கோ. திடீரெண்டு கூரையை பிச்சுக்கொண்டு ஒண்டில்லை, ஒன்பது தாலிக்கொடியும் விழக்கூடும்.

5. இல்லாட்டி, தாலியறுத்தவங்கள் புத்தமதத்து ஆக்களாய்*** இருக்கவேணும். அவங்களுக்கு கடவுள், கிடவுள் எண்டு ஒரு மசிர், மண்ணாங்கட்டியும் இல்லை எண்டு வடிவாய் தெரிஞ்சிருக்கவேணும் (புத்தமதம் அப்பிடி தானே சொல்லுது) . பயப்பிடாமல் அறுத்துக்கொண்டு போயிருப்பாங்கள்.

சரி இனி இதிலை ஆர் புத்திசாலியெண்டு பார்ப்பம். எனக்கெண்டால், இதிலை புத்திசாலியான ஆக்கள் எண்டால், கருமாரியம்மனும் இல்லை, அந்த எங்கடை தமிழ்ப் பொம்பிளையுமில்லை, ஆட்டோவிலை வந்த மூண்டு தாலியறுத்தவங்கள் எண்டு தான் படுது. உங்களுக்கு.....?


*** புத்தமதத்து ஆக்களெல்லாரும் கடவுளை நம்புறேல்லை எண்டு இல்லை. இந்து மதம், சும்மாயில்லை, பவர்ஃபுல்லான மதமெல்லோ! அதாலை இலங்கயிலை புத்தமதத்திலை கொஞ்சப்பேர், இந்துமதக்கடவுள்களை, அவையின்ரை பவர் தெரிஞ்சு, கடத்திக்கொண்டுபோய் புத்தகோயிலுகளுக்குள்ளை அடைச்சு வச்சு, தங்களுக்கு தேவையானதுகளை பெற்றுக்கொள்ளினம். ஆனாலும் புத்தரின்ரை உண்மையான போதனைகளை, உண்மையா பின்பற்றுறாக்களும் இங்கை புத்தமதத்திலை இருக்கினம். இங்கையிருந்து விமானமேறி, இந்தியாவிலை திருப்பதிகோவிலிலை கும்பிடுற புத்தமதத்து ஆக்களும் இருக்கினம். தெரியாட்டில், இலங்கை இந்திய பேப்பருகளை நீங்கள் பாக்கிறேலை எண்டு தான் அர்த்தமாகும். படம்போட்டெல்லாம் என்னாலை விளங்கப்படுத்தமுடியாது.

ஆதாரம்:
தினக்குரலில் வந்த செய்தி

Saturday, July 12, 2008

பசுமை வெளியில் ஒரு பட்ட மரம்

மனிதனை மனிதனாக
மதிக்கும்
மாண்புமிகு நாட்டில் வேலை..
சீக்கிரம் செல்!
சகதியில் நின்றபடி அன்னை...

கடமையை மறவாதே!
கடந்த பாதையில்
கயர் படிந்த கல்லுகளின்
காயங்களை மற!
கலங்கரையாக நின்றபடி தந்தை...

எதிர் நீச்சல் செய்!
எதிரே ஓங்கிய மதில் தோன்றின்
ஏறிப்பாய ஏணியாய் என்னை அழை!
எதிர்கால நினைவுகளுடன் சக உதிரங்கள்...

சாதிக்க..
சிந்திக்க தொடங்கியவன்..
சாகசங்கள் படைக்க
நினைத்தவன்..
இன்று
கசப்பான அனுபவங்களால்
கடல் கடக்கிறான்..

பசுமையான இனம்
சுமையான மனம்..
பிறர் ரசிக்கும் வனம்
பிரிவால் தவிக்கும் மனம்..
நாழிகை முன்னே நகர.. நினைவுகள் பின்னே நகர..
பசுமை வெளியில் ஒரு பட்ட மரமாக நின்றான்

சிந்தித்தான்..
ஒடுங்கியிருக்க பிறந்தவனல்ல
பிடுங்கியெறிந்தான் களையெனும் வடுக்களை!!
ஊன்றினான் முயற்சி விதைகளை!!
பட்ட மரம் துளிர்த்தது
பசுமை வெளியில்...

Thursday, June 26, 2008

தமிழ் தேசியப்போராட்டத்தில் சாதியத்தின் நிலைப்பாடு.

சாதியம் ப்ற்றிய விவாதம் நிர்ஷனின் பதிவில் காரசாரமாக நடந்துகொண்டிருக்கிறது. அதையிட்டே இப்பதிவை இடுகிறேன். "சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும்" நூலின் ஒரு அத்தியாயத்தின் ஒளிநகல்களை நூலாசிரியரின் அனுமதியுடன் இங்கே தருகிறேன். இதுசம்பந்தமாக கொங்கொங் ஈழவனின் பதிவையும் பாருங்கள். அவரது பதிவுக்கு இது பதிலாக அமையுமென நம்புகிறேன்.


1

2

3

4

5
6
7
8
9
10
11
12
13

Tuesday, June 24, 2008

அவிவேக பூரண புஷ்ஷும் அமெரிக்க மக்களும்....

அமெரிக்கா இவ்வளவு அட்டூழியமும் செய்ய, அமெரிக்க மக்கள் என்ன செய்கிறார்கள் எண்டு நெடுக யோசிக்கிறனான். இப்பத்தான் ஒரு நண்பர் அதுக்கு விடையை இ-மெயில் அனுப்பியிருந்தார். அதை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்....

Tuesday, June 17, 2008

ஹா.. ஹா.. ஹா.. சத்திய சாயிபாபா ஆச்சிரமத்திற்கு தீவிரவாதிகள் மிரட்டல்!

இது எப்படி இருக்கு? மக்களை காக்கிறானாம் மடைப்பயல். இப்ப இந்த மூதேவிக்கு பொலிஸ் பாதுகாக்கு கொடுக்கவேண்டியிருக்கு. சனத்துக்கு எப்பதான் புத்தி வருமோ?

தீவிரவாதிகளே, தயவுசெய்து இந்த ஏமாற்றுக்காரனை கொன்றுபோடுங்கள். நாட்டுக்கு நல்லதை செய்தவர்களாவீர்கள். இதுவரைக்கும் எவ்வளவு அப்பாவி மக்களை ஏமாற்றிக்கொண்டு திரிகின்றான், இந்த ஏமாற்றுக்காரன், செப்படி வித்தைக்காரன், ஓரினச்சேர்க்கையாளன், சிறுவர் துஷ்பிரயோகி.

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=3961


வீரகேசரி நாளேடு 6/16/2008 9:30:31 PM - ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் உள்ள பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் ஆச்சிரமத்திற்கு தீவிரவாதிகள் விடுத்துள்ள மிரட்டலையடுத்து மத்திய உட்துறை அமைச்சர் சிவராஜ் பட்டீல் பகவானைச் சந்தித்து அவரது பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

மேற்படி ஆச்சிரமத்தில் எதிர்வரும் 22ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை இராமாயண நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் பல நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இந் நிலையில் தீவிர வாதிகள் சாய்பாபாவின் ஆச்சிரமத்தை குறி வைத்திருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையடுத்து அங்கு பொலிஸ் பாதுகாப்பை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி ஆச்சிரமத்தை சுற்றிலும் ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். ஆச்சிரமத்திற்கு வரும் பக்தர்கள் தீவிர சோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னரே உட்செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் நேற்று மத்திய உட்துறை அமைச்சர் சிவராஜ் பட்டில் சாய்பாபா ஆசிரமத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவர் சாய் பாபாவை நேரில் சந்தித்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விளக்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கருத்துத் தெரிவிக்கையில்: சாய்பாபாவுக்கு தீவிர வாதிகள் மிரட்டல் இருப்பதால் பாதுகாப்பை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். தற்போது சாய்பாபாவுக்கு அளிக்கப்பட்டு வரும் பாதுகாப்பு பற்றி நேரில் ஆய்வு செய்தேன்
என்றார்


மேலதிக தகவல்களுக்கு

Monday, June 16, 2008

விஞ்ஞானத்தை தாண்டி வித்தை இல்லை...

முன்குறிப்பு: இப்பதிவை வாசிக்கமுன், இதற்குமுன் இடப்பட்ட ”இங்கிருந்தால் இவரும் கடவுளாயிருக்கலாம்” என்ற பதிவை வாசித்துவிட்டு வாருங்கள். அப்பதிவுக்கு விளக்கமளிப்பதாகவே இப்பதிவு அமைகின்றது.

விஞ்ஞானத்தை தாண்டி வித்தை இல்லை... இந்த வீதி வித்தைக்காரரின் பெயர் Johan Lorbeer, ஒரு ஜேர்மனியர். பெளதிகத்துக்கு ஒவ்வாத நிலைகளில் நின்று வித்தை காட்டுவதே இவரது தொழில்.

இவரது பல்வேறு நிலைகளையும் இறுதியில் அதற்குப்பின்னால் நிற்கும் விஞ்ஞான விளக்கத்தையும் பாருங்கள்.







சுவரிலே பிடித்துக்கொண்டிருப்பது அவரது கையல்ல. அதுவே அவரை தாங்கிநிற்கும் சட்டம்(frame).

அமானுஷ்யம் என்று எதுவுமில்லை... ஏதோ ஒன்று எமக்கு விளங்கவில்லையெனின், அதன் விஞ்ஞானம் மறைக்கப்பட்டிருக்கிறதென்பதே ஒழிய வேறில்லை.

Thursday, June 12, 2008

இங்கிருந்தால் இவரும் கடவுளாயிருக்கலாம்

வீதியில் சாகசம் நிகழ்த்திக்காட்டும் இவர் அந்தரத்தில் நிற்கும் காட்சிகளை காணுங்கள்... வெறும் விபூதி குளிகை வித்தையைகாட்டுபவர்களே கடவுளாகும்போது இவர் அவர்களுக்கும் மேல் கடவுளாகலாம்...





இச்சாகசங்களுக்கு பின்னாலிருக்கும் தந்திரம் என்னவென்று அடுத்த பதிவில் தருகிறேன். அதற்கு முன் முடிந்தால் கண்டுபிடியுங்கள்...