Thursday, June 26, 2008

தமிழ் தேசியப்போராட்டத்தில் சாதியத்தின் நிலைப்பாடு.

சாதியம் ப்ற்றிய விவாதம் நிர்ஷனின் பதிவில் காரசாரமாக நடந்துகொண்டிருக்கிறது. அதையிட்டே இப்பதிவை இடுகிறேன். "சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும்" நூலின் ஒரு அத்தியாயத்தின் ஒளிநகல்களை நூலாசிரியரின் அனுமதியுடன் இங்கே தருகிறேன். இதுசம்பந்தமாக கொங்கொங் ஈழவனின் பதிவையும் பாருங்கள். அவரது பதிவுக்கு இது பதிலாக அமையுமென நம்புகிறேன்.


1

2

3

4

5
6
7
8
9
10
11
12
13

9 பின்னூட்டங்கள்:

இறக்குவானை நிர்ஷன் said...

உங்களுடைய பதிவால் நிறைய தகவல்களை அறிந்தேன். ஆரம்பத்தில் சில விடயங்களை வாசிக்கும்போது சந்தோஷமாக உணர்ந்தாலும் நிறைவுப்பகுதியில் நெஞ்சில் சோகமே குடிகொண்டிருந்தது. இவ்வாறான தகவல்கள் ஒடுக்குமுறைகள் இளம் சமுதாயத்தினரையும் சென்றடையவேண்டும். அதனூடாக புதியதொரு இலக்குப்பாதைக்கு வழிவகுக்கவேண்டும் என்பதே எனது ஆசையாக இருக்கிறது.


//இயக்கங்களின் துப்பாக்கிகளுக்கு முன்பாக சாதியம் பதுங்கிக்கொண்டதுபோல் காட்டிக்கொண்டது. சில சமயங்களில் பின்வாங்கியிருப்பினும் அதே துப்பாக்கிகள் மறைமுகமாகச் சாதியத்துக்கு துணைநின்று பாதுகாத்த சந்தர்ப்பங்களும் இடம்பெற்றன.
//

ஆனாலும் சாதி என்ற விஷச்சொல் ஓரளவுக்கேனும் மறைவதற்கு போராட்டம் காரணமாயிருக்கலாம் தானே?

//இவ்வாறான சந்தர்ப்பங்களில் வடக்கு கிழக்கில் குறிப்பாக வடபுலத்தில் சாதியம் தீண்டாமை பகிரங்கமாக வெளிப்படுத்தப்படுவது குறைவடைந்துள்ள போதிலும் சமூக கருத்தியல் சிந்தனைகளில் இருந்து சாதியம் அகற்றப்படவில்லை.//

உண்மைதான். இதனை இன்றுகூட பார்க்க முடிகிறது.

(கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் வாசித்து குறிப்பெடுத்துக்கொண்டேன் )நன்றிகள் பல.

HK Arun said...

உங்களின் இணைப்பின் ஊடாக மேலும் பல நிகழ்வுகளை அறியக்கூடியதாக இருந்தது.

இணைப்பிற்கு நன்றி!

-அருண்

சண்சுதா said...

நன்றி நிர்ஷன்,
//இவ்வாறான தகவல்கள் ஒடுக்குமுறைகள் இளம் சமுதாயத்தினரையும் சென்றடையவேண்டும். அதனூடாக புதியதொரு இலக்குப்பாதைக்கு வழிவகுக்கவேண்டும் என்பதே எனது ஆசையாக இருக்கிறது.//
புலம்பெயர் நாடுகளில் சாதியம் வேகமாக மீள்கட்டியமைக்கப்படுவதாக கூறுகிறார்கள். முன்னர் அடக்கியாளப்பட்ட தாழ்த்தப்பட்டோர் பொருளாதாரத்தில் முன்னிலை வகிப்பதை பொறுக்கமாட்டாத மேற(்? ) சாதியினர் அவர்களை மட்டந்தட்ட சாதியத்தை மீள அழைக்கிறார்கள். உடனடியாக இது தடுக்கப்படாவிட்டால் 30 வருடப்போராட்டம்வீணாகிவிடும்...

சண்சுதா said...

வாருங்கள் அருண். தங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி.

இறக்குவானை நிர்ஷன் said...

//முன்னர் அடக்கியாளப்பட்ட தாழ்த்தப்பட்டோர் பொருளாதாரத்தில் முன்னிலை வகிப்பதை பொறுக்கமாட்டாத மேற(்? ) சாதியினர் அவர்களை மட்டந்தட்ட சாதியத்தை மீள அழைக்கிறார்கள். உடனடியாக இது தடுக்கப்படாவிட்டால் 30 வருடப்போராட்டம்வீணாகிவிடும்...
//

நிச்சயமாக. கனடா,சுவிஸ் போன்ற நாடுகளில் இவ்வாறான அடக்குமுறைகள் எம்மவர்களால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிந்தேன்.
போராட்டம் என்பது இருப்பை தக்கவைத்துக்கொள்ளல் மட்டுமன்று. மனிதநிலையை அவ்வாறே தக்கவைத்துக்கொள்ளலும் போராட்டமே.

தன்னுள் உள்ள விஷத்தை அடக்க முதலில் போராட்டம் செய்யுங்கள். பின்னர் இயல்பாகவே உங்களில் போராட்டம் ஆரம்பிக்கும் என்கிறார் சேகுவேரா.

எம்மவர்களில் மாற்றம் ஏற்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மதுவர்மன் said...

இன்னொரு இனத்துடன் சமத்துவம் கேட்டுப்போரடும் தமிழினம், தனக்குள் சமத்துவமாக இருக்கின்றதா என்று தமிழர்கள் அனைவரும் தொடர்ச்சியாகவே தங்களைப்பர்த்து கேள்வி கேட்கவேண்டியவர்களாக இருக்கின்றார்கள்.

இதைப்பார்த்து வெட்கப்படவேண்டும். தமிழினத்துக்குள்ளே சரியான சமத்துவம் கட்டியெழுப்பப்பட்டால், சிலவேளை இனப்பிரச்சினை எப்போதோ தீர்ந்துபோயிருக்கலாம்.

எங்களுக்குள்ளே சரியான சமத்துவம் கட்டியெழுப்பப்பட்டிருந்தால, தமிழ்த்தேசியம் இன்னும் பலமடங்கு பலமாக ஒங்கியொலித்திருக்கும்.

அதைத்தீர்த்துவிட்டு இதைத்தீர்ப்பது என்பது, எவ்வளவுக்கு சரியானது என்பதில் எனக்கு சந்தேகமே.

தமிழனின் மண்டையில் ஊறிப்போன இந்த அசமத்துவங்களையும், பிரிவினைகளையும் அகற்றுவதென்பது உடனடியாக நடைபெறக்கூடிய காரியமுமில்லைதான்.

ஆனாலும், காத்திரமான நடவடிக்கைகளை இன்னும் எடுக்கவேண்டிய தேவையிலுள்ளோம்.

உதாரணத்துக்கும், யாழ்ப்பாண மேலதிக்க சிந்தனையை இன்னும் நாங்கள் அன்றாடம் காணக்கூடியதாகவே உள்ளது.

Anonymous said...

பலர் விடும் அதே தவறை நீங்களும் விட்டுள்ளீர்கள்.
யாழ்.நூல் நிலையம் செல்லன் கந்தையனால் திறக்கப்படுவதாக ஏற்பாடு இல்லை.
ஆனந்தசங்கரி தான் முதன்தை விருந்தினராகக் கலந்துகொண்டு நூல்நிலையத்தைத் திறப்பதாக ஏற்பாடு. திறப்பு விழா செல்லன் கந்தையனின் தலைமையில் நடைபெற இருந்தது. அத்தோடு நூலகக் கல்வெட்டிலும் கந்தையனின் பெயர் பொறிக்கப்பட்டது.

தொடக்கம் முதலே இதுதான் திட்டமாகவும் அறிவிப்பாகவும் இருந்தது. நூலகங்களில் அப்போதைய பத்திரிகைகள் எடுத்தால் இதை அறியலாம். கூட்டணியினரின் விளம்பரங்கள்கூட வந்திருந்தன.

ஆனந்தசங்கரிகூட, தான் திறப்பதை விரும்பாத சக்திகள் இதைத் தடுக்க முற்படுகின்றன என தொடக்கத்தில் புலம்பியிருக்கிறார். பிறகு செல்லன் கந்தையனின் 'தாழ்த்தப்பட்டவர்' என்ற பிரச்சினையை முதன்மைப்படுத்தினார்.

சண்சுதா said...

வாங்கோ பெயரிலி.
//யாழ்.நூல் நிலையம் செல்லன் கந்தையனால் திறக்கப்படுவதாக ஏற்பாடு இல்லை.
ஆனந்தசங்கரி தான் முதன்தை விருந்தினராகக் கலந்துகொண்டு நூல்நிலையத்தைத் திறப்பதாக ஏற்பாடு. திறப்பு விழா செல்லன் கந்தையனின் தலைமையில் நடைபெற இருந்தது. அத்தோடு நூலகக் கல்வெட்டிலும் கந்தையனின் பெயர் பொறிக்கப்பட்டது.

தொடக்கம் முதலே இதுதான் திட்டமாகவும் அறிவிப்பாகவும் இருந்தது. நூலகங்களில் அப்போதைய பத்திரிகைகள் எடுத்தால் இதை அறியலாம். கூட்டணியினரின் விளம்பரங்கள்கூட வந்திருந்தன.//
இது சம்பந்தமாக ஒருமுறை அறிந்துகொண்டு பதிலளிக்கிறேன். தகவலுக்கு நன்றி...

சண்சுதா said...

வாங்கோ மதுவர்மன், கருத்துக்கு நன்றி
//இன்னொரு இனத்துடன் சமத்துவம் கேட்டுப்போரடும் தமிழினம், தனக்குள் சமத்துவமாக இருக்கின்றதா என்று தமிழர்கள் அனைவரும் தொடர்ச்சியாகவே தங்களைப்பர்த்து கேள்வி கேட்கவேண்டியவர்களாக இருக்கின்றார்கள்.//
தன்னை தானே கேள்விகேட்டிருந்தால் எப்பவோ தமிழினம் உருப்பட்டிருக்கும்...

Post a Comment

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம். அனைவரும் இந்த வலைப்பூவை வாசிப்பார்கள். எனவே நல்ல வார்த்தைப் பிரயோகங்களைப் பாவியுங்கள். அத்துடன் இடுகையின் மேற்புறத்தில் உங்கள் நட்சத்திர வாக்கையும் இட்டுவிட்டு செல்லுங்கள்.
நன்றி