இன்றுடன் ஐந்து வருடங்களும் ஏழு மாதமும் ஆகிறது திருமணம் செய்து. வாய்த்த கணவரால் குறை என்று எதுவும் இல்லை. வீட்டை நான் கவனித்துக்கொள்வேன். அவர் சாப்ட்வெயர் கம்பனி ஒன்றில் கைநிறைய காசுடன்...
காலையில் எழுந்தால் எனக்கு இயலுமானவரை ஒத்தாசை செய்வார். வார இறுதிகளில் விழுந்து விழுந்து உதவிசெய்வார். பகலென்றல்ல எநத நேரமும் எனக்கு அவர் குறை வைத்தில்லை.
இன்று ஞாயிற்றுக் கிழமை, மணி ஆறரைக்கே காப்பியைக் கொண்டு பெட்ரூமிற்குச் சென்றேன். காப்பியை அருகில் வைத்துவிட்டு எழுப்பப் போனேன்.
"ஆகா, திரும்பவுமா? இரவு நடு ஜாமத்தில ஒருமுறை...இப்போ திரும்பவுமா?"
இரவு நடுஜாமம் தான் உடுப்பெல்லாம் மாத்திப்போட்டுப் படுத்தது. இப்போ என்னால மீண்டும் மாத்தமுடியாது.
விடிஞ்சு ஒரு மணியாச்சு இந்த நேரத்திலயுமா?...சலித்துக்கொண்டேன்.
"இஞ்சை ஒருக்கா வாறீங்களா...." சிறிது சத்தமாகக் கூப்பிட்டேன்.
"ஏன் என்ன நடந்தது?..." ஓடி வந்தார் கிச்சனிலிருந்து.
"பாருங்கோ மகன் செய்திருக்கிற வேலையை, இரவுதான் எல்லாம் மாத்திப்போட்டுவிட்டது, இப்ப திரும்பவும் பெட்ல யூரின் போய்ட்டான்"
"சரி விடுங்கோ, கிச்சனில காப்பி போட்டபடி இருக்குது போய்ப் பாருங்கோ நான் இவனை எழுப்பி எல்லாம் செய்யுறன்"
இன்றுடன் ஐந்து வருடங்களும் ஏழு மாதமும் ஆகிறது திருமணம் செய்து. வாய்த்த கணவரால் குறை என்று எதுவும் இல்லை.
- மதுவதனன் மௌ. -
Sunday, July 20, 2008
இரவில பரவாயில்லை, விடிஞ்ச பின்னாலுமா?
Subscribe to:
Post Comments (Atom)
15 பின்னூட்டங்கள்:
யாரோ ஒரு அநாமதேயம் பின்னூட்டம் போட்டிருந்தார், பதிவை மீளமைக்கும்போது போய்விட்டது. :-(
குழந்தைங்க படிக்கிற கதையா இது, மது?
மற்றபடி டெம்ப்ளேட் ரொம்ப நேர்த்தியா இருக்கு.
//செல்வ கருப்பையா said...
குழந்தைங்க படிக்கிற கதையா இது, மது?
மற்றபடி டெம்ப்ளேட் ரொம்ப நேர்த்தியா இருக்கு.
//
ஏதோ தோணிச்சு, எழுதிட்டன். வாற பின்னூட்டங்களிலதான் தெரியும்..நாம் எழுதியிருக்கிறது ஏற்றுக்கொள்ளலாமா இல்லையான்னு..:-))
ம்ம்ம்..சென்டிமென்டா இங்க ஒரு கதை போட்டிருக்கிறேன். பிடிச்சிருக்கா என்று பாருங்கோ.
நல்ல குடும்பக் கதை....
//
தமிழ்ப்பறவை said...
நல்ல குடும்பக் கதை....
//
ஆகா..அர்த்தங்கள் பொதிந்த வார்த்தை..இதை நான் எப்படி எடுத்துக்கொள்ளுறது..:-)))
ம்ம்ம்ம் நல்ல ட்விஸ்ட் .
ஓகே !
சூடான இடுகையில் வர வாழ்த்துக்கள் !
கண்டிப்பாக வரும் !
அன்புடன்,
அருப்புக்கோட்டை பாஸ்கர்
//
ARUVAI BASKAR said...
ம்ம்ம்ம் நல்ல ட்விஸ்ட் .
ஓகே !
சூடான இடுகையில் வர வாழ்த்துக்கள் !
//
இல்லைங்க, அப்படியெல்லாம் எண்ணி இதப் போடவில்லை. கதை எழுதுவம் எனறு இருந்தா வரமாட்டேன் என்கிறது. கரு ஒன்று கிடைச்சது. அதை இரண்டு கதையா மாத்தி ஒன்றை இங்கே போட்டுட்டேன். மற்றதை என்னோட நாவில போட்டுட்டேன். பிடிக்கவில்லையென்றால் சொல்லிவிடுங்கள்..
நல்லாத்தாங்க இருக்கு. இப்படியே 'சஸ்பென்ஸா' எழுதுங்க மதுவதனன்...
(அப்பாடா, பேரை ஒழுங்கா எழுதிட்டேன்!!!)
வாங்கோ சின்னப்பையன்,
முயற்சி பண்ணுவோம்.
//
(அப்பாடா, பேரை ஒழுங்கா எழுதிட்டேன்!!!)
//
:-)))
ரண்டுதரம்தான பிழையா எழுதினீங்க, இன்னொருக்கா பிழையா எழுதலாம். தண்ணிகூட மூண்டுதரம்தான் பொறுக்குமாமே..:-)))))
ஆஹா இதுக்கு பெயர்தான் குடும்ப த்ரில்லர் கதையா :):):)
நான்கு வயது பையனுக்கு காலையிலே காப்பி..
அதுவும் 'bed' காப்பி..
அம்மணிக்கு சொல்லுங்கோ எனி காப்பி பொடி கலக்காத பாலை மட்டும் கொடுங்கோ என்று...
அடடா....
அதுக்கிடையிலை, வயசெல்லாம் கணிச்சு, வயசுக்கேத்த ஆரோக்கிய ஆலோசனையெல்லாம் சொல்லக் கிளம்பிட்டாங்கையா....!
கலியாணம் கட்டி 5 வருடமும் 7 ப்மாதமும் எண்டால், பையனுக்கென்ன 4 வயசாகத்தான் இருக்கவேணுமோ?
//
sentha said...
நான்கு வயது பையனுக்கு காலையிலே காப்பி..
//
திருமணம் செய்யது 5 வருடமென்றால் பையனுக்கு நாலு வயது இருக்கிறதெல்லாம் அந்தக்காலம்.
அடுத்த வருடம்தான் குழந்தை கிடைக்கப்போவுது என்பதுதான் இந்தக்காலம்.
வாழ்க்கை வாழ்வதற்கே :-)))
rapp மற்றும் மதுவர்மன் வருகைக்கு நன்றி
Post a Comment
உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம். அனைவரும் இந்த வலைப்பூவை வாசிப்பார்கள். எனவே நல்ல வார்த்தைப் பிரயோகங்களைப் பாவியுங்கள். அத்துடன் இடுகையின் மேற்புறத்தில் உங்கள் நட்சத்திர வாக்கையும் இட்டுவிட்டு செல்லுங்கள்.
நன்றி