Monday, July 21, 2008

Yahoo Mobile இன் குரல்வழி தேடல்


சமீபத்தில் Yahoo Mobile ஆனது குரல் வழி மூலமான தேடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் உள்ள சிறப்பு அம்சம் என்னவெனில் உங்கள் தேடலை குரல் மூலமான கட்டளைகளை உங்கள் Mobileக்கு பிறப்பிப்பதன் மூலம் இலகுவாக்கிக்கொள்ளலாம். உதாரணத்துக்கு http://mobile.yahoo.com/ என்பதை உங்களின் Mobile WAP Browser தட்டச்சு செய்து tamilgarden என குரல் எழுப்பினால் போதும் தமிழ் பூங்கா சம்பந்தப்பட்ட அனைத்து தரவுகளையும் உங்கள் Browser ல் தரும்.

தகவல் தொழில் நுட்ப்பத்தின் வளர்ச்சியில் இது ஒரு முக்கிய பங்கினை வகிக்கும் என்பதில் எந்தவிதமான மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை. Google உடன் போட்டி போடுவதற்கு பல வழிகளில் Yahoo முயற்சி செய்கின்றது. அதன் ஒரு வெளிப்பாடே இந்த Yahoo One Search. எது எவ்வாறாயினும் நமக்கு நல்ல சேவை கிடைத்தால் போதும் தானே (ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் தானே :).

2 பின்னூட்டங்கள்:

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

இது எவ்வளவு தூரம் சிறப்பாக இருக்குமோ தெரியவில்லை. ஆனா முன்னோடியாக இருக்கும்.

எவனோ ஒருவன் said...

மதுவதனன் அவ்ர்களே இது ஜப்பானியர்களின் கண்டுபிடிப்பு,அவ்ர்களின் ஆங்கில உச்சரிபிலேயே இது நன்றாக வேலை செய்கின்றதாம்.

நிச்சயம் முன்னோடியாக அமையும்.

Post a Comment

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம். அனைவரும் இந்த வலைப்பூவை வாசிப்பார்கள். எனவே நல்ல வார்த்தைப் பிரயோகங்களைப் பாவியுங்கள். அத்துடன் இடுகையின் மேற்புறத்தில் உங்கள் நட்சத்திர வாக்கையும் இட்டுவிட்டு செல்லுங்கள்.
நன்றி