1995 ஆம் ஆண்டு துரதிஸ்டவசமாக யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற வேண்டி வந்துட்டுது:(. அதுக்கு பிறகு சுமார் 13 வருடங்களாக சந்தர்ப்பம் சூழ்நிலையால் யாழ்பாணம் பக்கம் போக முடியாமல் போய்விட்டது என்பதை நினைக்கும் போது கவலையாத்தான் இருக்கு. எனியும் போக முடியுமோ என்பது சந்தேகமே. யாழ்ப்பாணத்தில் என்னுடைய சிறுவயதில் நிகழ்ந்த சம்பவங்களை அசைபோடும் போது ஏற்படும் சுகமே அலாதி தான். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுவோம் என்ற நோக்கமே இந்த இடுகை
மு.கு:- இதில் நான் குறிப்பிடப்போகும் அனைத்தும் 1995 ஆம் ஆண்டளவில் யாழ்ப்பாணம் என்னுடைய பார்வையில். அதற்க்கு பின்னர் யாழ்ப்பாணம் என்ன நிறத்தில் இருக்கு என்று எனக்கு தெரியாது. மற்றும் சிலருக்கு இந்த இடுகை சுவாரசியம் குறைந்ததாக இருக்கும். காரணம் பல வட்டார வழக்கங்களை நான் பாவிக்க முற்படுகிறேன். அது உங்களுக்கு விளங்காமல் இருந்தால் தயவு செய்து மன்னிச்சு கொள்ளுங்கோ.
1995 இல் யாழ்ப்பாணம் என்னுடைய பார்வையில்.................
அது என்னுடைய சிறுபராயமாக இருந்தாலும் நிகழ்ச்சிகள் எல்லாம் பசுமரத்து ஆணிபோல மனசுல பதிந்துள்ளது. எங்கட lane இரண்டு கோயில்களுக்கு மத்தியில் இருக்கு. So நான் கோயில் வீதிகளில் தான் என்னுடைய பெரும்பாலான பொழுதை களித்தேன். ஒரு அரைகால்சட்டை மேலே கஞ்சி போட்டு துவைத்த shirt போட்டுக்கொண்டு பொடியலோட பிள்ளையார் கோயில் வீதியில் விண் கட்டிய 8 மூலை பட்டம் விட்டது galle face beach இல் யாரோ பட்டம் விடுவதை பார்த்து ரசிப்பத்ற்க்கு இணையாகுமா???? நல்லூர் கந்தன் கோயில் வருடாந்த உற்சவத்துக்கு போய் கந்தனைத்தரிசிக்காமல் லிங்கம் cool bar ல ice cream குடிக்கிறது queens cafe ல submarine சாப்பிட்டுட்டு உப்புக்கு சப்பையா எதோ ice cream குடிக்கனும் என்று குடிக்கிறதுக்கு ஈடு இணையாகுமா?????
அந்தநேரத்தில் தான் காதலன் படம் release. so பிரபுதேவா தான் அண்ணாமர்களின் role model.பெரிய பெரிய துளைகள் போட்ட உள்பனியன் வெளியில்தெரியத்தக்க கண்ணறயான மார்டின் shirt, பின் pocket ல கிளியின் உருவம் அல்லது இதயத்துக்குள்ளால அம்பு பாயும் உருவம் போட்ட baggy jeans,சோலாபுரி செருப்பு இவைதான் பெரும்பாலான இளைஞர்களின் costume ஆக இருந்துச்சு(நாங்களும் பெரிய ஆள வந்த பேந்து இப்படி எல்லாம் வெளிக்கிடனும் என்டு கனவுவெல்லாம் கண்டது வேறகதை:)). அண்ணாமார் சைக்கிள்ல doubles போடுற அழகே தனிதான்.doubles என்டா என்ன என்டு நீங்க கேக்குறது விளங்குது. doubles போடுறது என்றால் சைக்கிள்ல இருவர் போகும் போது முன்னால் இருப்பவர் சைக்கிள் ஒடுபவருக்கு உறுதுனையாக சைக்கிளின் இடப்பக்க பெடலை இருவரும் சேர்ந்து மிதிப்பது.அப்படி மிதிக்கும் போது செருப்பின் அரைவாசிக்கும் மேல் காலுக்கு வெளியே இருக்கும் வண்ணம் மிதிக்கும் அழகே அழகுதான்:)
புதுவருடப்பிறப்புக்கு சீன வெடி எல்லாம் அப்ப கிடையாது. நம்மட ஆக்கள் தானே புத்திசாலிகளுக்கு பிறந்த அதி புத்திசாலிகள்.so நம்மட ஆக்கள் கண்டு பிடிச்ச ஒரு வெடி இருந்துச்சு. சைக்கிள் ரிங் கம்பியின் நுனியில் உள்ள துவாரத்துக்குள் தீக்குச்சி மருந்தை உட்செலுத்தி தரையில் பலமாக அடிக்க பெருசா வெடிக்கும். அந்த நேரத்தில் அது தான் எங்கட சீன வெடி.
இப்படி கனக்க விசயங்கள் கிடக்கு பாருங்கோ. tution center ல அண்ணாமார் அடிக்கிற லூட்டிய பற்றி எல்லாம் பேந்து ஒரு நாளைக்கு சாகவாசமா சொல்லுறன். project வேலையா கொஞ்சம் busya இருக்கிறன்.இப்ப போய்ட்டு வராட்டா...........
அடுத்த பதிவில சந்திப்போம்........
Thursday, July 17, 2008
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே...........
பூக்களின் வகைகள்
உணர்வுகள்
Subscribe to:
Post Comments (Atom)
3 பின்னூட்டங்கள்:
ம்ம்ம..பழைய நினைவுகளை மீட்டிப்பாக்குறதில ஒரு தனியான சுகம் இருக்குதுதான். நான் யாழ்ப்பாணம் இல்லையெனினும் சம்பவங்கள் அனைவருக்கும் பொதுவானவையே..
தொடர்ந்து எழுதுங்கோ.
மதுவதனன் மௌ.
எங்கடை இடங்களிலை, கிரமப்புறங்களிலை பெற்ற அனுபவங்கள் என்பவை எப்போதும் வித்தியாசமானவை தான்.
95 இல் கொழுப்புக்கு வந்துவிட்டீர்கள் என்றால், நல்ல சின்னப்பையனாகத்தான் இந்த அனுபவங்களை பெற்றிருப்பீர்கள் என்றூ நினைக்கிறேன்.
எண்டாலும் 13 வருட நகர வாழ்க்கையிலை, மறக்காமல் இருக்கிறது, அனுபவங்களின் ஆழத்தை தெரியப்படுத்துது.
மதுவதனன் சொன்னமாதிரி, இடங்கள் வேறாக இருக்கலாம், அனுபவங்கள் பெரும்பாலும் ஒரே மாதிரியானைவையே.
வாசிக்கும்போது என்னுடைய சொந்த அனுபவங்கள், அவதானிப்புக்கள் மாதிரியும் இருக்கு.
தொடர்ந்து எழுதுங்கோ!
ada pavi... start panittu ipadiya nipadirathu....
Post a Comment
உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம். அனைவரும் இந்த வலைப்பூவை வாசிப்பார்கள். எனவே நல்ல வார்த்தைப் பிரயோகங்களைப் பாவியுங்கள். அத்துடன் இடுகையின் மேற்புறத்தில் உங்கள் நட்சத்திர வாக்கையும் இட்டுவிட்டு செல்லுங்கள்.
நன்றி