Wednesday, July 16, 2008

"சீரியல்" அலை

மதி தோன்றும் மலை உச்சி!!
மதி மயங்கி மேகங்கள் உரச
மதி தயங்கி.. விதி குழம்பி
அவள் மட்டும் தனியே
நின்றாள்..

மான்விழி ஓரத்தில்
நீர்த்துளி புரள..
மனத்திரை முழுதும்
போராட்டம் உருள..
எங்கும் மயான அமைதி

சட்டென்று அவள் நகர
பட்டென்று "தொடரும்.." தோன்ற
பதறினர்..
எம் தொடர் ரசிகர்கள்..
எம் தொலைகாட்சி கைதிகள்..
கருகியது காலம்
கத்தரி குழம்போடு சேர்த்து..

அருமையான நேரம்
வெறுமையாக ஓடுகிறது..
சிந்தனை அலையை தவிர்த்து
"சீரியல்" அலையில் மூழ்கின்றனர்..
தொடரின்
சதி கற்பனையால்..
தெளிந்த குட்டையும்
சகதியாகிறது..

என்செய்வது..
நம்மவருக்கு கிடைத்த ஒரே அமைதியும்
இதுவல்லோ!!!

8 பின்னூட்டங்கள்:

மதுவர்மன் said...

உங்கள் சிந்தனைகள் வித்தியாசமாக, அருமையாக இருக்கின்றன செந்தா!

என்னை அதிகம் கவர்ந்தவை இந்தவரிகள் தான்
//சட்டென்று அவள் நகர
பட்டென்று "தொடரும்.." தோன்ற
பதறினர்..
எம் தொடர் ரசிகர்கள்..
எம் தொலைகாட்சி கைதிகள்..
கருகியது காலம்
கத்தரி குழம்போடு சேர்த்து..//

அதிலும்...
//கருகியது காலம்
கத்தரி குழம்போடு சேர்த்து..//

மதுவர்மன் said...

என்னை கவர்ந்த வரிகளாக இதையும் சொலித்தான் ஆகவேண்டும்.

//என்செய்வது..
நம்மவருக்கு கிடைத்த ஒரே அமைதியும்
இதுவல்லோ!!!//

உண்மை...

ராமலக்ஷ்மி said...

நல்ல கவிதை. நறுக் என சொல்லியிருக்கிறீர்கள்.

//என்செய்வது..
நம்மவருக்கு கிடைத்த ஒரே அமைதியும்
இதுவல்லோ!!!//

என நினைத்து நினைத்து கதாபாத்திரங்களுக்காகக் கவலைப் பட்டு அமைதியோடு நேரத்தையும் அல்லவா தொலைத்துக் கொண்டுருக்கிறார்கள். என் மெகா முதலைகளும் இதைத்தான் சொல்கிறது, நேரம் கிடைக்கையில் பாருங்கள்:
http://tamilamudam.blogspot.com/2008/05/blog-post_384.html

sentha said...

மனிதனும் நேரமும் விலைமதிப்பற்றது.. அதை வீணக தொடர்களில் செலவதிப்பதை பார்க்கும் போது மனது பொறுக்கவில்லை.. அதன் வெளிப்பாடே இந்த ஆக்கம்..
கருத்துள்ள தொடர்களை பாருங்கோ!!
கண்ணீர் வடித்து மட்டும் பார்க்காதையுங்கோ!!

sentha said...

ராமலக்ஷ்மி அவர்களே! நமது கவிதைகள் வேறுபடலாம்.. ஆனால் கருத்து ஒன்றே... மெகா முதலையை முரத்தால் வெருட்டுவோம்..

க‌ர‌த்தை said...

க‌விதை ந‌ன்றாக‌ ந‌றுக்கென்று சொல்ல‌ப‌ட்டுள்ள‌து. ஆனால் எல்லார்க்கும் இந்த‌க்க‌விதை போய்ச்சேர‌வேண்டும் என்ப‌து என‌து அவா.. என்னாலான் முய‌ற்சியை நான் செய்கிறேன்.

ந‌ன்றி sentha.

sentha said...

உங்கள் முயற்சி செய்யும் மனமே!! எங்கள் கவிதைக்கு கிடைத்த பெரும் உயர்ச்சி...
நன்றி கரத்தை...

Anonymous said...

கவிதை நன்றாக உள்ளது!!

Post a Comment

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம். அனைவரும் இந்த வலைப்பூவை வாசிப்பார்கள். எனவே நல்ல வார்த்தைப் பிரயோகங்களைப் பாவியுங்கள். அத்துடன் இடுகையின் மேற்புறத்தில் உங்கள் நட்சத்திர வாக்கையும் இட்டுவிட்டு செல்லுங்கள்.
நன்றி