Tuesday, June 24, 2008

அவிவேக பூரண புஷ்ஷும் அமெரிக்க மக்களும்....

அமெரிக்கா இவ்வளவு அட்டூழியமும் செய்ய, அமெரிக்க மக்கள் என்ன செய்கிறார்கள் எண்டு நெடுக யோசிக்கிறனான். இப்பத்தான் ஒரு நண்பர் அதுக்கு விடையை இ-மெயில் அனுப்பியிருந்தார். அதை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்....

5 பின்னூட்டங்கள்:

புரட்சி தமிழன் said...

இந்த கொடுமையெல்லாம் பார்த்து இவ்வளவு கேவலமான அறிவிலி மக்களை வைத்துக்கொண்டு மற்ற நாடுகளை மிரட்டும் இவர்களைப் பார்த்தால் என்னவென்று சொல்வது தன் நாட்டைப்பற்றியும் அருகில் நடக்கும் நடப்புகள் பற்றியும் கூட தெறியாத மக்களா. எனக்குத்தெறிந்த வரை தமிழ் நாட்டில் ஒருவர்கூட இந்த அளவு அறிவிலிகளாக இருக்க வாய்ப்பில்லை. இவர்களைக் கண்டெல்லாம் நாம் பயப்படுகிறோம் அஞ்சுகிறோம். என்ன கொடும சார் இது.
இதான் எல்லாரும் ஆ ஊனா இளிச்சவாயன்களை ஏமாற்ற அமெரிக்கா போய் செட்டில் ஆயிடிராங்களோ.
இருந்தாலும் அணு சக்த்தி ஒப்பந்ததுல இவங்களுக்கு அடிமையா சத்தியமா நான் ஒத்துக்க மாட்டேன்.
இந்த லின்க் கொஞம் பிரதமருக்கும் சோனியாவுக்கும் அனுப்புங்களேன்

சண்சுதா said...

வாங்கோ புரட்சித்தமிழன். அமேரிக்க மக்கள் இப்படி அறிவிலிகளாய் இருப்பதால்தான் அமேரிக்கா இந்த ஆட்டம் ஆடுது. இல்லாட்டி சனமே அரசாங்கத்தை கண்டிச்சு திருத்தி எடுத்துப்போடும்.
//இருந்தாலும் அணு சக்த்தி ஒப்பந்ததுல இவங்களுக்கு அடிமையா சத்தியமா நான் ஒத்துக்க மாட்டேன். //
எனக்கெண்டா இந்தியா தெற்காசியாவின் இஸ்ரேலாக மாறிக்கொண்டிருப்பதாகதான் தெரிகிறது.
//இந்த லின்க் கொஞம் பிரதமருக்கும் சோனியாவுக்கும் அனுப்புங்களேன்//
:-}}}

மதுவர்மன் said...

சண்சுதா,

ஒருவிடயத்தின் உண்மைத்தன்மையை அறிந்துகொள்ளும் அடிப்படை விதிகளையே மறந்துவிட்டோமோ என்று எனக்கு எண்ணத்தோன்றுகின்றது.

இந்த ஒளிக்காட்சியில் காணப்படும் பேட்டிகள் உண்மையானவையா என்பதற்கு என்ன ஆதாரம்.

இங்கே இவ்வீடியோவில் காணக்கிடைப்பதுபோன்று இது அவுஸ்ரேலியாவிலிருந்து தயாரிக்கப்படும் CNNNN தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றின் பகுதியாகவே எனக்குப்படுகின்றது.

இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமே CNN, Fox News போன்ற செய்தி நிறுவனங்களை பிரதிசெய்து, கேலிசெய்வதே.

அவ்வாறிருக்கையில், மேற்படி அமெரிக்கர்களின் அடிப்படை பொது அறிவு சம்பந்தமான நிகழ்ச்சி, ஒரு நகைச்சுவைக்காக தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சியாகவே எனக்குப்படுகின்றது

அமெரிக்க எதிர்ப்புணர்வை ஒரு கணம் புறந்தள்ளி வைத்துவிட்டு, இவ்வாறான விடயங்கள் சம்பந்தமாக ஆராய வேண்டிய தேவைகள் உள்ளனவாகவே எனக்கு படுகின்றது.

CNNNN அதிகாரபூர்வ இணையத்தளம்

மதுவர்மன் said...

இதைப்பாருங்கள், இது "Americans are NOT stupid" என்ற வீடியோவுக்கு, பதிலாக எடுக்கப்பட்ட “British are also NOT stupid”

http://www.youtube.com/watch?v=w_mkwB9ayK4

சண்சுதா said...

வாங்கோ மதுவர்மன், ,எங்கேனும் அடக்குமுறையை பிரயோகிக்கும் அரசு, மக்களை அறிவிலிகளாக வைத்திருப்பதையே விரும்பும். வியட்னாமிலிருந்து அமேரிக்கா பின்வாங்கியதின் முக்கிய காரனமே US மக்கள் கொடுத்த அழுத்தமே. அதன்பின் அமேரிக்க அரசு தன் மக்களின் அரசியலறிவு சம்மந்தமாக மிகத்தெளிவாகவே உள்ளது.
கனக்க வேண்டாம், சக்தி டிவி பாக்குறதிலேயே வாழ்க்கையை கொண்டுபோற எங்கட அம்மாமாரிட்டை இதேமாதிரி நாலு கேள்வியை கேட்டுப்பாருங்கோ அப்ப புரியும்.

Post a Comment

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம். அனைவரும் இந்த வலைப்பூவை வாசிப்பார்கள். எனவே நல்ல வார்த்தைப் பிரயோகங்களைப் பாவியுங்கள். அத்துடன் இடுகையின் மேற்புறத்தில் உங்கள் நட்சத்திர வாக்கையும் இட்டுவிட்டு செல்லுங்கள்.
நன்றி