Saturday, August 16, 2008

எனக்குள் எழும் கேள்விகள்

வணக்கம்! எப்படி இருக்கிறியள்...?

என்னுடைய பிரார்த்தனையும் எல்லோரும் சுகமாக இருக்க வேணுமென்றுதான். சுகம் விசாரிக்கின்ற இவன் யாரென்று நீங்கள் கேட்டீர்கள் என்றால், என்னுடைய அனுமானமும் சரியாகவே இருக்கின்றது என்று அர்த்தம் பாருங்கோ...

நான் ஒன்றும் வெளியூர்க்காரனல்ல. இப்ப எல்லாம் போறாங்களே சந்திரன், செவ்வாய், வியாழனென்று... அங்க இருந்து வரவில்லை. ஏன் அமெரிக்கா என்ன நிறமென்று கூட எனக்கு சத்தியமாக தெரியாது பாருங்கோ. உங்களில் ஒருத்தனாக உங்களில் இருந்தே வருகின்றேன்.

எனக்கு சில விசயங்களை நீங்கள் 'கிளியர்' பண்ண வேண்டும். இல்லாட்டில் தலை வெடித்துவிடும் போல இருக்கு. அதுதான் நீங்கள் மணித்தியாலக்கணக்காக தூங்கிக் கொண்டிருக்கும் தொ(ல்)லைக்காட்சி நாடகங்களில் வந்து கேட்பம் என்றால், என்னுடைய முகத்துக்கு அது 'கொஞ்சம்' ஓவராம்! அதுதான் இந்த புளொக்கில தரிசனம் தாறன்.

சரி, என்ர டவுட்டுக்களை சொல்லிறன். தெரிஞ்சால் 'கொமென்ட்' அடிச்சு பதில் தாங்கோ... அதி கூடின smsகளை அனுப்பி அதிபெறுமதியான பரிசில்களை வெல்லுங்கள். மன்னிக்கவும்... வானொலி கேட்கிற பழக்கம் தன்னாலே வந்திட்டுது...

மைக்கல் பெல்ப்ஸ், இவரை உங்கள் எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கும் என்று நம்புறன். அதுதான் அவருடைய நண்பரே அவருக்கு 'உன்னுடைய கேவலமான முகத்தை எத்தனை தடவையடா ரி.வியில பார்க்கிறது' என்று sms அனுப்பியும் திருந்தாத ஜென்மம். அவர் இன்றைக்கு எத்தனை தங்கத்துக்கு சொந்தம் சொல்லுங்கோ. ஒன்று..? இரண்டு..? இல்லை எட்டுக்கு குறி வைத்திருக்கிறார். நல்லதுதான். வாழ்த்துக்கள். ஆனால், எங்கட பள்ளிக்கூடத்தில படிக்கும்போது ஒருத்தர் மூன்று போட்டிக்கு மேல் பங்குபற்றமுடியாது என்று எழுதப்படாத சட்டமொன்று இருக்கல்லோ..? அப்படியிருக்கும்போது, ஒலிம்பிக்கில் எப்படி ஒருத்தரால் இத்தனை போட்டிகளில் பங்குபற்ற முடியும்? அமெரிக்க ஜனநாயகப் பத்திரிகைகளே... சீனாவின் ஒலிம்பிக்கில் நடைபெறும் இந்த தில்லுமுல்லுகளையும் வெளிக்கொணர்வீர்களாக. ஓ... மறந்திட்டேனே....
மைக்கல் பெல்ப்ஸ் அமெரிக்கனா..? அதுதானே மெளனம்!

அடுத்த டவுட்டு என்னென்றால், அந்த நாரதரைப்பற்றினது. விளங்கியிருக்கும் என்று நினைக்கின்றேன். நடந்து வந்த பாதை தன்னை திரும்பியும் பார்க்காதவர்... ஆயிரக்கணக்கில் பாதுகாப்புக்கு வருவம் என்டினம்... கடலில் பீரங்கிக்கப்பல் நிற்கும் என்டினம்... மாநாட்டுக்கு முதல் வந்து பாதுகாப்பை ஒழுங்கு பண்ணினவரே காற்று வாங்க ஒய்யாரமாக நடக்கும் போது...................

போன வெள்ளிக்கிழமை இந்தியாவின் சுதந்திர தினமாம். ஒருத்தர் சொன்னார் இந்தியாவையும் அகிம்சையையும் பிரிக்க முடியாதாம். எனக்கு ஏனென்று இன்னும் விளங்கவில்லை. நான் நினைக்கின்ற இந்தியாவும் அவர் சொன்ன இந்தியாவும் வேறுவேறாக இருக்குமோ? எங்களிட்ட சாப்பாட்டுப் பொட்டலங்களுடன் வந்து... பிறகு தில்லுமுல்லு செய்து... நல்லூரில் நடந்த நீராகாரமின்றிய உண்ணாநோன்புப் போராட்டத்திலேயும், மட்டு-மாமாங்கத்தில் நடந்த அகிம்சைப் போராட்டத்திலேயும் தோற்று... பின்னர் கந்தகப் பலப்பரீட்சையில் சொந்த நாடு திரும்பின இந்தியாவைத்தான் நான் நினைக்கின்றேன். அவர் யாரை நினைக்கின்றார்..?

உங்களில் யாருக்கும் தமிழ்நாட்டுடன் 'கனெக்சன்' இருக்கா? இருந்தால் தயவுசெய்து இப்ப தமிழ் பேப்பரில வருகுதே... வன்னியில் எங்கட பிஞ்சுகள் பசிக்கொடுமையால் துடிக்கிற படங்கள்... அதைக் கத்தரிச்சு நெடுமாறன் ஐயாவுக்கும் மாண்புமிகு முதல்வர் கருணாநிதி ஐயாவுக்கும் அனுப்பிவையுங்கோ. முதலாமவர் உணவு சேகரிப்பார்... இரண்டாமவர் அதை தடுத்து விட்டு நல்லதொரு கவிதை சமைப்பார்....

அப்ப நான் போய் வரட்டா..........................?

5 பின்னூட்டங்கள்:

மதுவர்மன் said...

ஆதிரை,

நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் பூங்காவிலை எழுதியிருக்கிறியள்.

அருமையான கருத்துக்கள்.

//மாநாட்டுக்கு முதல் வந்து பாதுகாப்பை ஒழுங்கு பண்ணினவரே காற்று வாங்க ஒய்யாரமாக நடக்கும் போது...................//

எங்கடை, பாதுகாப்பு சம்பந்தமான பேச்சாளர் இது சம்பந்தமாக பாராளுமன்றத்திலை தெரிவிச்ச கருத்துக்கள் தான் சரியெண்டு எனக்கு படுது ;).

ஒரு வெளிநாட்டு இராஜதந்திரி ரோட்டாலை ஒய்யாரமா, காத்து வாங்கிக்கொண்டு நடந்துபோற அளவுக்கு, தலை நகர் கொழும்பிலை பாதுகாப்பு ஒழுங்கமைப்பு செய்யப்பட்டிருக்கு.

இதை பத்திரிகையில் படித்துவிட்டு, வாசகரொருவர் கேட்டிருந்தார் 'நாரதரே அப்பிடி போகமுடியுமெண்டால், அப்ப எங்கடை உந்த மினிஸ்ரர் மாருக்கெல்லாம், ஏன் உந்த குண்டு துளைக்காத வாகனங்களும், ஆயுதப்படை பாதுகாப்பும்' எண்டு. அவர் கேட்டதும் சரிமாதிரி தான் கிடக்குது.

//போன வெள்ளிக்கிழமை இந்தியாவின் சுதந்திர தினமாம். ஒருத்தர் சொன்னார் இந்தியாவையும் அகிம்சையையும் பிரிக்க முடியாதாம். எனக்கு ஏனென்று இன்னும் விளங்கவில்லை. நான் நினைக்கின்ற இந்தியாவும் அவர் சொன்ன இந்தியாவும் வேறுவேறாக இருக்குமோ?//

அதெல்லாம் அந்த காந்தியின்ரை காலம், இப்ப எங்கை தான் அஹிம்சை வழிப்போராட்டங்கள், அணுகுமுறைகள் மதிக்கப்படுது. காலம் மாறிப்போச்சு.

அஹிம்சை இந்தக்காலத்திலை சரிப்பட்டு வராது எண்டுதானோ, உலகமெல்லாம் ஆயுத வன்முறைகள் தலைவிரிச்சாடுது.

ஆதிரை தொடர்ந்து எகழுதுங்கோ.

Anonymous said...

ஆதிரை என்ன உங்களுக்கு உது தெரியாதே??
அமெரிக்கன் இல்லை, ஆப்கானிஸ்தான் காரன் எண்டாலும் 8 போட்டிகளிலதான் பங்குபற்ற முடியும்.
ஒருத்தன் சாதிதால் பாராட்ட வேண்டாம் சும்ம இன வெறி, அல்லது அமெரிக்க முதலாலித்துவம் எண்டு நாமும் அரசியல் வாதிகள்போல் பேச வேண்டாம்.

மதுவர்மன் said...

rooto சொல்லுறது சரி.

எங்கடை ஆக்களுக்கு கனபேருக்கு எதுக்கெடுத்தாலும், இனவாதம், தேசியவாதம், அமெரிக்க எதிர்ப்பு எண்ட ரீதியில் கதைக்காட்டி சரிவராது.

சண்சுதா said...

எனக்கு விளையாட்டு என்டா கொஞ்சம் ஆர்வம் குறைவு பாருங்கோ...
ஆனா அடுத்தவை கதைக்கேக்க வடிவா கேப்பன். ஒருத்தர் சொன்னார், இந்தமுறை அமேரிக்காவுக்கு பதக்கங்கள் குறையுமாம். வெஸ்ட் இன்டீசில இருக்கிற நாடுகளுக்கு கொஞ்சம் கூடுமாம். ஏனென்டால் வழமயா West Indies காறர்தான் அமெரிகாவுக்கு போய் அமேரிகாவுக்காக விளையாடுறதாம். இந்தமுறை கனபேர் அப்பிடி போகேலயாம். போனமுறையும் பதக்கம் வாங்கின கனபேர் West Indies காரர் என்டு கொஞ்சப்பேற்ற விள்ங்காத பெயர் சொன்னவர். ஆருக்கும் தெரிஞ்சா பேருகளை சொல்லுங்கோ....

Anonymous said...

America is a country which should be destroyed completely for poking their heads on other countries matters. Who the hell are they to punish sadam. no matter what he is a dictator or not america does not have the right to punish sadam. they said they wanted to protect the ppl there as how the india said in 87. all both countries did was ruined the entire structure. raped the gals, murdered the innocents.

I would do anything to teach those idiots a lesson.

Post a Comment

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம். அனைவரும் இந்த வலைப்பூவை வாசிப்பார்கள். எனவே நல்ல வார்த்தைப் பிரயோகங்களைப் பாவியுங்கள். அத்துடன் இடுகையின் மேற்புறத்தில் உங்கள் நட்சத்திர வாக்கையும் இட்டுவிட்டு செல்லுங்கள்.
நன்றி