Sunday, March 30, 2008

ஓரிரண்டு மாதம் உருண்டோடி விட்டால்..


காலை உணவு உண்ணும் போது ..
அவளுக்கும் எனக்கும் ஆறேழு கதிரை
இடைவெளி இருந்தாலும்
ஆனந்தத்தில் நிறைந்தது என் மனது.

இன்னும் ஓரிரண்டு மாதங்கள்
உருண்டோடிவிட்டால் ..
பல்கலைகழக வாழ்க்கைக்குப்
பதவி இழப்பு - அவளுக்கு
இன்னும் ஒருவருடம் மிச்சம்.

காலம் தாழ்த்தாமல் காதல்
சொல்வோம் என்று காலடி வைக்க..
விட்டில் பூச்சிக் காதலடா ,விட்டுவிடு
என்கின்றது என் சகபாடி.

இன்னும் ஒரிரண்டு மாதம்..
காலைப்பொழுது , கன்டீன் ...
சுகந்தமாக இருக்கும் என்பொழுதுகள்
-பிறை

11 பின்னூட்டங்கள்:

Anonymous said...

தம்பி பிறைதீசன் உனக்கு ஓரிரண்டு மாதங்கள் ( 1 2 மாதங்கள் ) இருக்கு பல்கலைகழக வாழ்க்கை முடிய. அவளுக்கும் இன்னும் ஒருவருடம் மிச்சம். அப்படி என்றால் யாருக்கும் உனக்கும் ஆறேழு கதிரை
இடைவெளி ? எப்படி என்றாலும் கவிதை சூப்பர்.

Anonymous said...

சொல்லவே இல்லை பிறைதீசன்
யாரது final year????
still u r in 3rd year so final year means senior அக்காவா?????

Unknown said...

நண்பர்களே!
எனக்கு பல்கலைக்கழகம் முடிய இன்னும் ஒருவருடம் இருக்கிறது. ஆகவே இது என்னைபற்றிய கவிதை அல்ல.. கவிதையில் குறிப்பிட்ட சகவாடி நானாக இருக்கலாம்.. ஆனால் அந்த காதல் மன்னன் நானல்ல..

Anonymous said...

சகவாடி அவர்களே,
அந்த Final Year காதல் மன்னன் யார் என்பதையும் சொல்லுறது...

Anonymous said...

பிறைதீசன் அவர்களே,

சகவாடி இல்லை சகபாடி. அதெப்படி பிறைதீசனும் உங்கள் நண்பியும் ஒரேமாதிரியே பிழை விடுறானுகள். ம்ஹீம்..நடக்கட்டும் நடக்கட்டும்

Unknown said...

கெளபாய்(immediate senior :)),
ஒத்துக்கிறேன் நான் ஒத்துகிறேன், பிழை என்று ஒத்துக்கிறேன்(வடிவேலுபானியில)

Anonymous said...

கடைசி பின்னூட்டல் எனக்கு பலத்த சந்தேகத்தை ஏற்ப்படுத்துகிறது,
ஒரு வேளை இது அந்த immediate senior பற்றியதாக இருக்குமோ?????
எது எப்படியாயினும் வாழ்க்கை சுகந்தமாக இருந்தால் எல்லாருக்கும் மகிழ்ச்சி தான்.

Anonymous said...

சகபாடி அவர்களே....
//விட்டில் பூச்சிக் காதலடா ,விட்டுவிடு
என்கின்றது என் சகபாடி.

நீங்கள் எங்கிருந்து பெற்ற அனுபவம் இது???

உங்கள் முடிவை - இயலாமை என்று கூடச் சொல்லலாம் அதை அந்த ந்ண்பனிடம் திணித்தது போலாகி விடாதா?

Anonymous said...

நட்பு அவர்களின் ஆதங்கம் புரிகிறது...
அந்த காதல் மன்னனுக்கு ஆதரவு கூடுகிறது போல் இருக்கிறதே...
எல்லாம் சுகந்தமானவளின் கையிலே தான்...

Unknown said...

நண்பர்களே! ,
இக்கவிதை(nicz joke) எனது கற்பனையில் உதித்த ஒன்றே. யாரையும் குறிப்பிட்டு எழுதவில்லை.நான் அந்த சகபாடியும் இல்லை, காதல் மன்னர் எனது சீனியரும் இல்லை :)

Anonymous said...
This comment has been removed by a blog administrator.

Post a Comment

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம். அனைவரும் இந்த வலைப்பூவை வாசிப்பார்கள். எனவே நல்ல வார்த்தைப் பிரயோகங்களைப் பாவியுங்கள். அத்துடன் இடுகையின் மேற்புறத்தில் உங்கள் நட்சத்திர வாக்கையும் இட்டுவிட்டு செல்லுங்கள்.
நன்றி