(Mathuvathanan Mou / மதுவதனன் மௌ)
உங்கட வலைப்பதிவின் வார்ப்புருவை அழகாக செய்யதிருப்பீர்கள். ஆனால், தமிழ்மணம் பதிவுப்பட்டை மட்டும் இடது பக்கமா சுளுக்குப் பிடித்த கழுத்துப்போல வந்து நின்று அழகை கெடுத்துக்கொண்டிருக்கும். அந்த பட்டையை நடுவில கொண்டுவந்து விட்டா நல்லாயிருக்குமல்லவா?இதுக்கொன்றும் பகீரதப் பிரயத்தனம் செய்யவேண்டியதில்லை. சும்மா இரண்டு வரியை உங்கட வார்ப்புருவில சேர்த்துவிட்டாச் சரி. அவ்வளவுதான்.
உங்கட வலைப்பதிவில Layout->Edit Html இக்குப் போய் Expand Widget Template இனைச் சொடுக்குங்கள் கீழே படத்தில் காட்டியவாறு.
அந்த HTML வார்ப்புருவில தமிழமணம் பதிவுப்பட்டையின் இரண்டாம் பகுதியை கண்டுபிடியுங்கள். இதுதான் அந்த இரண்டாம் பகுதி.
பிடிச்சிட்டீங்களா? சரி நீங்கள் செய்யவேண்டியது இந்த இரண்டாம் பகுதிக்கு மேல என்பதையும் சேர்த்துவிடுங்கள் கீழே உள்ளவாறு
இப்போது உங்கட வார்ப்புருவில பதிவுப் பட்டை நடுவில வந்து சிரிச்சுக்கொண்டிருக்குமே.
உதாரணத்துக்கு தமிழ்பூங்காவின்ர தமிழ்மணப் பதிவுப்பட்டையை கீழே பாருங்கோ.
தொடர்புபட்ட சுட்டிகள்:
http://www.kuzhali.co.nr/
http://kuzhali.blogspot.com/2007/03/blog-post.html
http://blog.thamizmanam.com/archives/51
http://www.tamilmanam.net/tamilmanam/toolbar/blogger.html
3 பின்னூட்டங்கள்:
கலக்கலா நடுவுல வந்துடுச்சுங்க :)
உங்க உதவிக்கு நன்றி.. அப்படியே கருவி பட்டய எப்படி கீழே கொண்டு வருவது என்பதையும் கூறினால் உங்களுக்கு புண்ணியமா போகும் ;)
வலைப்பதிவன் பதிவின் உதவியுடன் கருவி பட்டையை கீழே கொண்டு வந்து விட்டேன். உங்கள் உதவிக்கும் மிக்க நன்றி.
கிரி வாங்கோ,
கிரி said...
வலைப்பதிவன் பதிவின் உதவியுடன் கருவி பட்டையை கீழே கொண்டு வந்து விட்டேன். உங்கள் உதவிக்கும் மிக்க நன்றி.
வலைப்பதிவனின் பதிவுக்கான சுட்டியை தந்தீர்கள் எனில் வாசகர்களுக்கு உதவுமல்லவா. முடியுமெனில் தந்துவிடுங்கள்.
கிரி, பதிவுப்பட்டையை மேலே கீழே என்றல்ல எங்கேயும் போடமுடியும்.
மதுவதனன் மௌ.
Post a Comment
உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம். அனைவரும் இந்த வலைப்பூவை வாசிப்பார்கள். எனவே நல்ல வார்த்தைப் பிரயோகங்களைப் பாவியுங்கள். அத்துடன் இடுகையின் மேற்புறத்தில் உங்கள் நட்சத்திர வாக்கையும் இட்டுவிட்டு செல்லுங்கள்.
நன்றி