இவை 2008-05-16 இல் இலங்கை, கொழும்பு கோட்டை தற்கொலை குண்டுவெடிப்பின் பின்னான புகைப்படங்கள். அவை பற்றி நான் விபரிக்கவேண்டியதில்லை. தற்கொலை குண்டுதாரி குண்டு பொருத்திய மோட்டார் சைக்கிளை ஒட்டிவந்து, கலகமடக்கும் பொலிசார் ஏற்றப்பட்டு தயாராகநின்ற பேருந்தொன்றில் மோதினார் என்று தெரியவருகின்றது. அண்மைய தகவலக்ளின் படி 9 பொலிசாரும் 4 பொதுமக்களும் உட்பட 13 பேர் கொல்லப்பட்டார்கள். 80 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருந்தனர். அவர்களுள் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரியவருகின்றது.
தங்கள் பொலிஸ் சகாக்கள் கொல்லப்பட்டும், காயமடைந்தும் போயுள்ளதை பார்த்து, இங்கே படத்தில் பெண் பொலிஸார்கள் என்னமாய் உடைந்துபோயுள்ளார்கள் பாருங்கள். இது பெண்களுக்கேயுரித்தான பண்பு. பெண்கள் பெண்கள் தான்.
ஏனைய புகைப்படங்களும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. போர் என்றுமே வலிகள் நிறைந்ததுதான்.
நன்றி: Daily Mirror (www.dailymirror.lk)
மதுவர்மன் - mathuvarman (2008-05-17)
2 பின்னூட்டங்கள்:
ஐயா இப்படி எத்தனை தமிழ்ப்பெண்கள் கதறி அழுதிருப்பார்கள். அவற்றை ஏன் பிரசுரம் செய்யமுடியவில்லை உங்களால்?
பெயரிலி,
உங்கள் ஏக்கம் புரிகின்றது. நான் பிரசுரித்த இவ்விடயத்தை பெண்கள் என்ற ரீதியில் பார்த்தேனேயொழிய இனம் பிரித்துப் பார்க்கவில்லை.
அதாவது, ஒருவனோ ஒருத்தியோ இராணுவ சீருடையிலோ அல்லது பொலிஸ் சீருடையையோ அணிந்தவுடன் அவரது இயல்பான சாதாரண உணர்வுகள், நடத்தைகளை தள்ளிவைத்துவிட்டு, அச்சீருடைக்கேற்ப நடந்துகொள்ள எதிர்பார்க்கப்படுகின்றார்.
ஆண் பொலிசார்கள் இப்படி அழுவதை நான் பார்த்ததில்லை. ஆனால் பெண்கள் பொலிஸாக இருந்தாலும் இலகுவில் உடைந்துபோய்விடுகின்றார்கள் என்பதையே சொல்லவந்தேன்.
இதில் தமிழ் சிங்களம் என்று நான் பார்க்கவில்லை.
முக்கியமாக நான் இங்கு கருத்தில் கொண்டது, முதலில் பொலிஸ் சீருடை, பின்பு அதை அணிந்திருக்கும் மனிதர்கள் பெண்கள் என்ற இரண்டையும் தான்.
இந்நாட்டில் அன்றாடம் தமிழ்ப்பெண்கள் படும் அல்லல்களையும், உள்ளாகும் வன்முறைகளையும் நானறிவேன். சந்தர்ப்பம் கிடைக்கும்போது அவை சம்பந்தமாகவும் எழுதுவேன்.
உங்கள் உணர்வுகளை மதிக்கின்றேன் நண்பரே!
Post a Comment
உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம். அனைவரும் இந்த வலைப்பூவை வாசிப்பார்கள். எனவே நல்ல வார்த்தைப் பிரயோகங்களைப் பாவியுங்கள். அத்துடன் இடுகையின் மேற்புறத்தில் உங்கள் நட்சத்திர வாக்கையும் இட்டுவிட்டு செல்லுங்கள்.
நன்றி