Thursday, December 3, 2009
நானும் காரில்...
பதினாறே வயது நிரம்பிய
பருவப் பெண் நான்.
அழகான சொகுசுக் காரிலேயே
அனுதினமும் செல்கின்றேன்.
பின்னிருக்கையில் நான்,
பக்கத்திலே குழந்தை,
ஐயா காரை ஓட்டுகின்றார்,
அம்மா அவருக்கு பக்கத்தில்
ஐயாவும் அம்மாவும்
வெளிச்செல்லும் போதெல்லாம்
அவர்களுடன் நானும்
குழந்தையை கவனிப்பதற்காய்...
பதினாறே வயதான - மலையகத்துப்
பருவ மங்கை நான்
அழகான சொகுசுக்காரிலேயே
அனுதினமும் செல்கின்றேன்
(உண்மையாக கண்டகாட்சியை வைத்து எழுதியது, 2009-12-01)
Subscribe to:
Post Comments (Atom)
8 பின்னூட்டங்கள்:
நன்றாயிருக்கு
நல்ல கவிதை....
காதற்கவிதை என்று தான் ஆரம்பத்தில் நினைத்து வந்தேன்...
அருமையான சமூகப்பொறுப்புள்ள கவிதை....
சத்தியமான வார்த்தைகள் இப்படித்தான் நம்மினம் அற்ப சுகங்களுக்காக தம் எதிர்காலத்தையே அடகு வைத்து விடுகின்றனர்
யோகா, கோபி, தர்ஷன்,
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. மனதில் பட்டதை எழுதினேன்... நன்றாகக இருந்தால் சந்தோசமே!
ஓஓஓஓ கண்ணில் கண்ட காட்சி படத்துடன் கூடிய கவிதையாக மலர்ந்ததா - நல்ல சிந்தனை
நல்வாழ்த்துகள்
வாழ்த்துகள்
சைந்தவியின் கடைசி கடிதம்...(என் நண்பன் ரெட்டைவால்ஸின் எழுத்தில்...)
http://rettaivals.blogspot.com/2010/03/wo.html#comments
http://shayan2614.blogspot.com/2010/03/blog-post_9245.html
உங்கள் பின்நூட்டங்களிட்கான பதில்கள் அகசியம் எதிர்ப்பு குழுவால் வழங்கப்பட்டுள்ளன....மேலேயுள்ள முகவரியில் படிக்கவும்.
Post a Comment
உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம். அனைவரும் இந்த வலைப்பூவை வாசிப்பார்கள். எனவே நல்ல வார்த்தைப் பிரயோகங்களைப் பாவியுங்கள். அத்துடன் இடுகையின் மேற்புறத்தில் உங்கள் நட்சத்திர வாக்கையும் இட்டுவிட்டு செல்லுங்கள்.
நன்றி