Saturday, October 24, 2009

கோவில் பிரைவட் லிமிட்டட் களும் பஞ்சாங்க சுத்துமாத்துக்களும்....



என்னுடய வீட்டிலே கடந்த சில நாட்களாக பேசப்பட்ட hot toppic சூரன் போர் 23ம் திகதியா 24ம் திகதியா என்பதுதான். இந்த திகதிகளை தீர்மானிக்கும் பஞ்சாங்கத்தில் திருக்கணிதம் வாக்கியம் என்டு இரண்டு இருக்குதாம்.வாக்கியம் 24 என்டுதாம், திருக்கணிதம் 23 என்டுதாம். புதுசா திருவிஞ்ஞான பஞ்சாங்கம் என்டு ஒன்டு வந்தாலும் ஆச்சரியப்படத்தேவையில்லை. எனக்கு கனகாலமா ஏன் இந்த பஞ்சாங்க குழப்பம் என்டு விளங்கேலை. பேமஸ் சாத்திரி மாரிட்டையும் கேட்டு பார்த்தன். ஏதோ திருக்கணிதம் வான் வெளியை ஒரு பாகை பிந்தி அளக்குது என்டு சொல்லிச்சினம். எனக்கு தெரிஞ்ச Geomatery யின் படி, ஒரு கோளத்தை எத்தினை பாகை திருப்பி வச்சு அளந்தாலும் குறிப்பிட்ட புள்ளி வாற நேரம் மாறாது. உன்மையா சாத்திரி சொல்லுறது எதுவும் எனக்கு விளங்குறேலை. வீடு, பார்வை அது இது என்டு கனக்க சொல்லுவினம். எனக்கு எதுவும் விளங்குறேலை. சூரன் எப்ப செத்தவன் என்டு அவன்ட dead certificate ஐ வாங்கிப்பாக்கலாமென்டா கச்சேரியில பழைய records ஒன்டும் இல்லயாம். சூரன் எப்ப செத்தவன் என்டு சரியா சொல்லேலாத படியால நாங்கள் ஏதாவது ஒரு பஞ்சாங்கத்தை சரி என்டு எடுப்பம். ஒன்டு சரி என்டா மற்றது பிழை தானே. அப்ப அரைவாசி கோயிலுகள் பிழையானதை தான் follow பண்ணினம் என்ன?

முதல்ல நான் நினைச்சது என்னன்டா எங்கையாவது கோஸ்டி பூசல் என்டாத்தான் புதுப் புது பிரிவினைகளும் வரும். இதுவும் எங்கட ஐயர்மாருக்கிடையிலை கோஸ்டி பூசல் அதுதான் இரண்டா பிரிஞ்சிட்டினம் என்டு நினைச்சன்.

பிறகு தான் கவனிச்சன் வீட்டில பெண்டுகள் எல்லாரும் இவிரண்டு உடுப்புகள் ready பண்ணுறதை. ஏன் என்டு கேட்டா, இன்டைக்கு இந்தக்கோவிலில சூரன் போர், நாளைக்கு அந்தக்கோவிலில சூரன் போர். இரண்டுக்கும் போக இரண்டு செட் உடுப்பு என்டு சொல்லிச்சினம். அப்பத்தான் எனக்கு ஒன்டு விளங்கிச்சுது. இந்த பஞ்சாங்க புலுடா எல்லாம் வெறும் calculation குழப்பங்களில்லை. கோவில்களின் வியாபார தந்திரங்கள் என்டு. ஒரே நாளில சூரன் போர் என்டா, வார சனம் பிரிஞ்சு பிரிஞ்சு போகும். வெவ்வேறை நாளென்டா முழுச்சனமும் இரண்டு கோவிலுக்கும் போகும்.

சரி கோட சனம் கோவிலுக்கு போறதாலை என்ன லாபம் என்டு கேக்கிறிங்களோ?

ஒரு சின்ன calculation
இந்தமுறை மயூரபதி அம்மன் கோவிலில பால் குடம் எடுத்தது 3000 பேர்.
தலைக்கு 650 ரூபா
மொத்த வருமானம் = 650 x 3000 = 1,950,000.00
ஒரே நாளில் 2 மில்லியன் ரூபா.
இதை விட, ஒவ்வொருவரும் 3 அல்லது 5 அல்லது 7 லீட்டர் பால். சராசரியா 4 லீட்டர் என்டு வச்சா மொத்தப்பால் = 3000 x 4 = 12,000
பாலுக்கு செலவான மொத்த தொகை = 12,000 x 60 = 720,000.00
இவ்வளவு பாலும் சாக்கடையில் தான் ஊத்தப்பட்டது.
So called தன்மானத்தமிழர்களின் ஒரு கூட்டம் தண்ணிக்கே கஸ்டப்பட்டு முகாம்களுக்குள் இருக்கேக்க தான் இந்த கூத்து.

இதை விட புது குடம், புது சீலை - அதுவும் யூனிபோம் மாதிரி - கோவிலிலை தான் வாங்க வேணும். ஒரு பால்குடம் எடுக்க குறைந்தது 5000 ரூபா ஆவது செலவாகும். தயவு செய்து 5000 x 3000 என்ட கணக்கை செய்து பார்க்க வேண்டாம். heart attack வந்துடும்.

9 பின்னூட்டங்கள்:

Yoga said...

unmaiyil naam eezhaththil iruntha poathu elzhupathukazhukazhil enru ninaikkirean appothu than intha kuzhappankazh;pulampeyar mannilum anmaiyil naan keadda oru vidayam puraddathi sanikku ezh ennai erikka koodaathu enru oru iyar sonnaraam; naan sonnean oru vezhai avarudaiya koavilil athatkaana vasathi illaamal irukkalaam enru;

Kajan said...

இந்த calculation பார்க்கும் நேரத்தை வேறு நல்ல விடயத்துக்காய் உபயோகித்தால் உமக்கு நன்மை உண்டாகும். உதாரணமாக முகாம் மக்கள் படும் வேதனைகளைப் பற்றி மும்மொழிகளிலும் எழுதி எல்லா இனத்தவருக்கும் வெளியிடும்.

Unknown said...

//இதை விட புது குடம், புது சீலை - அதுவும் யூனிபோம் மாதிரி - கோவிலிலை தான் வாங்க வேணும். ஒரு பால்குடம் எடுக்க குறைந்தது 5000 ரூபா ஆவது செலவாகும். தயவு செய்து 5000 x 3000 என்ட கணக்கை செய்து பார்க்க வேண்டாம். heart attack வந்துடும். //

ஹா ஹா...

தமிழர்கள் இப்படியே அழிந்து போகிறார்கள்....

கோவில் என்ற பெயரில் பயங்கரமாக வியாபாரம் செய்கிறார்கள்....

நிசான் said...

இது பரவாயில்ல.... கனடாவில ஒரு கோயிலில பிரசாதம் வாங்கிறதுக்கும் பணம் செலுத்தவேண்டும். அதற்கு அவர்கள் GST, PST ஓட பற்றுச்சீட்டும் தருவார்கள்! கேட்டால் இது private company ஆக பதிவு செய்யப்பட்டிருக்காம்!!!!

Ganeshananth said...

there r shortcomings in everywhere, kovils no exceptions, if u want, help em do better, no point in criticizing And panchangam U should kno how old they are one is thousands years ago well b4 the scientific , but but accurate to higher degree, see some youtubes

மதுவர்மன் said...

கஜன்,

எல்லாப் பிரச்சினைகளும் அவ்வப்போது பேசப்படத்தான் வேண்டும். சண்சுதா இதைப்பற்றி இப்போது எழுதியுள்ளார், ஏன் நீங்கள் முகாம் மக்கள் படும் வேதனைகளை பற்றி எழுதக்கூடாது. நீங்களும் ஒரு வலைப்பதிவை வைத்துள்ளீர்கள் தானே..

ஒன்றை மட்டும் இப்போது கவனிப்பம், மற்றப் பிரச்சினைகலை இது தீர்ந்தாப்பிறகு கவனிப்பம் என்று இருந்ததால் தான் இன்றைக்கு 300 000 அளவான மக்கள் முகாம்களுக்கே வரவேண்டியிருந்ததே.

பிரதான பிரச்சினையும், ஏனைய பிரச்சினைகளும் ஒருங்கே கவனிக்கப்படவேண்டியவை.

மதுவர்மன் said...

Ganeshananth,

இன்று அச்சடிக்கப்பட்டு விற்கப்படுகின்ற எல்லா பஞ்சாங்கங்களுமே, இன்றுவரை உள்ள விஞ்ஞான கண்டுபிடிப்புக்களின் துணைகொண்டே உருவாகின்றன. அவற்றிலுக்க நேரக்கணிப்புக்களெல்லாம் அறிவியலின் துணைகொண்டே நடைபெறுகின்றன.

ஒரு கோவில் திருவிழாவை எடுத்துக்கொள்ளுங்கள், போகட்டும் ஒரு காலப் பூசையை எடுத்துக்கொள்ளுங்கள் மின்சாரம் முதல் எத்தனையோ விஞ்ஞானக்கண்டுபிடிப்புக்களின் துணையின்றேல் அவை நடைபெறா.

தேவைப்படும்போதெல்லாம் மதவிடயங்களில் விஞ்ஞானத்தை பாவிப்போம், மதத்தின் அடிமடியில் விஞ்ஞானம் கைவத்து உலுக்கும்போது மட்டும் விஞ்ஞானத்துக்கு எதிரிப்பட்டம் கட்டிவிடுவோம், நன்றாக இருக்கின்றது..

எவற்றை முட்டாள் தனங்கள் என்கின்றோமென்றால், கிரகங்கள், கிரகங்களல்லாத கிரகங்கள் (சூரியன், சந்திரன், ராகு, கேது), எண்ணிக்கை மாறாத கிரகங்கள் (பல புதிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும், நவக்கிரகங்களில் மட்டும் மாற்றமேற்படா) இந்த பூமியின் மனித வாழ்க்கையில் செல்வாக்குச்செலுத்துகின்றது என்று முடிவு கட்டியிருபது தான் மகா முட்டாள்தனம்.

அப்படிப்பார்த்தால், உங்கள் வீட்டுக்கு பக்கத்திலிருக்கு, 8 மாடிக்கட்டடம் உங்கள் மீது அதிக செல்வாக்கு செலுத்தவேண்டுமே. பௌதிக சம்ன்பாடுகளி பாவித்து கணித்துப்பாருங்கள்.

இயற்கை நிகழ்வுகள் எவற்றுக்குமே பதிலளிக்கவேண்டியது அறிவியலேயன்றி மதங்களும், மூட நம்பிக்கைகளுமல்ல..

Anonymous said...

//இவ்வளவு பாலும் சாக்கடையில் தான் ஊத்தப்பட்டது//

பால் என்பது மனிதருக்கோ கடவுளுக்கோ உரியது அல்ல, அது பசுவின் இரத்தம். அதை மனிதர்கள் திருடுவதே அயோக்கியத்தனம்... கடவுளுக்கு வேறயா.... மூடர்களை எப்படி திருத்துவது

Anonymous said...

nice

Post a Comment

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம். அனைவரும் இந்த வலைப்பூவை வாசிப்பார்கள். எனவே நல்ல வார்த்தைப் பிரயோகங்களைப் பாவியுங்கள். அத்துடன் இடுகையின் மேற்புறத்தில் உங்கள் நட்சத்திர வாக்கையும் இட்டுவிட்டு செல்லுங்கள்.
நன்றி