உலக மதங்களில் இந்து மதம் மட்டுமே வலியுறுத்துகின்ற சமத்துவமின்மையை வெளிச்சம் போட்டுக்காட்டுகின்ற ஆவணப்படம் இது. இந்து மதத்தின் சாதி முறைமையின் (சதுர் வர்ணம்) கோரமுகத்தை வெளிப்படுத்துகின்ற படம். இதை இந்து மதத்தின் ஒரு கோரப்பக்கம் என்றே சொல்லவேண்டியிருக்கின்றது ஏனென்றால், இந்த சாதியமைப்பு முறையென்பது, நாளாந்தம் (முக்கியமாக இந்தியாவில்) பல கோர சம்பவங்களுக்கு முற்றுமுழுதான காரணமாக அமைகின்றது.
இதை எனது சமூகத்தின் ஒரு கோரப்பக்கம் என்று தலைப்பிடவேண்டியதாயிற்று. ஏனென்றால், நான் பிறந்து வளர்ந்த மதமும் இந்த மதம் தான். என்னுடைய, பெற்றோர், சகோதரர்கள், நண்பர்கள், உறவினர்கள் பலர் பின்பற்றும் மதமும் இதுதான்.
வெறும் மூடநம்பிக்கைகள், ஒரு கூட்டத்தார் இன்னொரு கூட்டத்தாரை அடக்கியாள உருவாக்கப்பட்ட வரைமுறைகள், எவ்வளவு கோரத்தாண்டவமாடுகின்றது என்பதற்கு இப்படம் சாட்சி.
நானறிந்தவரையில், வேறு எந்தமதமும் சமமின்மையை வலியுறுத்திச்செல்லவில்லை. வேறு எந்த மதமும், பிறப்பால் ஒரு கூட்டத்தாரை உயர்ந்தவர்களென்றும், இன்னொரு கூட்டத்தாரை தாழ்ந்தவர்களென்றும் சொல்லுவதை காணமுடியவில்லை.
கடவுள் இல்லை என்பதற்கு உள்ள ஏனைய ஆதாரங்களுடன், கடவுளின் மதம் என்று சொல்லப்படுகின்ற இந்த இந்து மதத்திலுள்ள கேவலம் இன்னொரு உறுதியான ஆதாரமாகும். இன்னும் தன்னை ஒரு இந்து என்று சொல்லிக்கொள்கின்ற ஒவ்வொருவனும் வெட்கப்படவேண்டும்.
அடிமைக்குணமும், அறியாமையாலும் ஆட்கொள்ளப்பட்டிருக்கின்ற நம்மவர்களில் பலர், இன்னும் இந்து மதம், உயரிய பண்புகளை வலியுறுத்துகின்றமதம், உலகின் தலை சிறந்த மதம் என்று பெருமையடித்துக்கொள்வதில் ஒன்றும் ஆச்சரியமில்லை தான்.
பாரபட்சமும், கொடுமைகளும், பாலியல் வக்கிரங்களும், ஏமாற்று வித்தைகளும் நிறையப்பெற்றதே இந்த இந்து மதம். இன்றைக்கும், பல பிழைக்கவழியில்லாத மனிதர்கள் (சாயி பாபா, அம்மா, கல்கி பகவான், மேல்மருவத்தூர் அம்மா, அமிர்தானந்த மயி, இன்னும் பலர்) பலர், பல ஏமாற்று வித்தைகளை புரிந்து, மக்களை மயக்கி, தம்மை கடவுள்கள் என்று சொல்லி, ஏமாற்றுகின்றார்களென்றால், அதுவும் இந்து மதத்தில் காணக்கூடிய ஒரு சிறப்பே.
உதவி.
http://sinnakuddy1.blogspot.com/2008/07/blog-post_9318.html
Sunday, August 17, 2008
எனது சமூகத்தின் ஒரு கோரப்பக்கம்
Subscribe to:
Post Comments (Atom)
25 பின்னூட்டங்கள்:
உங்கள் பதிவு நன்றாக இருக்கிறது . நானும் உங்களின் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
"நாங்கள் இந்துக்கள் அல்ல...யாருக்கும் அடிமை இல்லை" - முழக்கம் அருமை ! அவர்கள் சொல்வதெல்லாம் ஹிந்து என்று சொல்லிக் கொள்பவர்களை செருப்பால் அடிப்பதாகவே இருந்தது ! அருமை அருமை !
வாருங்கள் றிசாந்தன், கோவிகண்ணன்.
உங்கள் வருகைக்கு நன்றி.இந்த பாரிய, நிறுவனமயப்பட்டுப்போய்விட்ட மதங்களை எதிர்த்து, எப்படித்தான் இந்த் அப்பாவி மக்கள் தங்கள் உரிமைகளை நிலைநாட்டப்போகின்றார்களோ...
ஆனால் மாற்றம் நடந்துகொண்டுதானிருக்கின்றது.. ஆனால் கொடுக்கவேண்டிய விலை தான் கொஞ்சம் அதிகமாக இருக்கின்றது.
//////நானறிந்தவரையில், வேறு எந்தமதமும் சமமின்மையை வலியுறுத்திச்செல்லவில்லை. வேறு எந்த மதமும், பிறப்பால் ஒரு கூட்டத்தாரை உயர்ந்தவர்களென்றும், இன்னொரு கூட்டத்தாரை தாழ்ந்தவர்களென்றும் சொல்லுவதை காணமுடியவில்லை.////
நீங்கள் அறிந்தவரை, சமமின்னையை இந்து மதம் எங்கு வலியுறுத்துகிறது என்றும் சொன்னால் சிறப்பாய் இருக்கும்.
//////கடவுள் இல்லை என்பதற்கு உள்ள ஏனைய ஆதாரங்களுடன், கடவுளின் மதம் என்று சொல்லப்படுகின்ற இந்த இந்து மதத்திலுள்ள கேவலம் இன்னொரு உறுதியான ஆதாரமாகும். இன்னும் தன்னை ஒரு இந்து என்று சொல்லிக்கொள்கின்ற ஒவ்வொருவனும் வெட்கப்படவேண்டும்.
//////
அந்தக் கேவலங்களை ஆதாரத்துடன் பதிவிட்டால், நானும் வெட்கப்படுகிறேன். அதுவரை, வெட்கமில்லாமல்தான் திரிவேன் ;)
எனக்குத் தெரிந்தவரை, மதங்கள், காட்டு மிராண்டிகளாய் நெரியில்லாமல் வாழ்ந்தவர்களை நெரிப்படுத்த உருவாக்கப்பட்ட code-of-conduct. இந்து மதமும் சரி, கிருத்தவமும் சரி, இஸ்லாமியமும் சரி, காலப்போக்கில், சிலரின் தவறான புரிதலால் ஒன்று இன்னொன்றை விட பெரியது/சிரியது என்ற சாயங்கள் பூசப்பட்டு இன்று இந்த நிலையை அடைந்துள்ளது.
நீங்கள் இந்து மதத்தின் மீது கூறும் குற்றச்சாட்டு என்னால் ஏற்க முடியவில்லை, ஏனென்றால், நானும் என்னைச் சுற்றியிருக்கும் சில ஆயிரம் பேர்களும், என் சொந்தங்களும் நண்பர்களும், இந்து மதத்தைச் சார்ந்தவர்கள். யாரும், இதுவரை, மதத்தின் பெயரால் எந்தக் கேவலத்தையும் நிகழ்த்தாதவர்கள்.
ஓரு பாசப்பிணைப்புடன், சட்டத்துக்கும்,தெய்வத்துக்கும் பயந்து, அடுத்தவருக்கு துன்பம் தரா, நல்ல வாழ்வை வாழ்பவர்கள்.
SurveySan,
//நீங்கள் அறிந்தவரை, சமமின்னையை இந்து மதம் எங்கு வலியுறுத்துகிறது என்றும் சொன்னால் சிறப்பாய் இருக்கும்.//
சதுர் வர்ண முறையப்பற்றி தானே என்னுடைய இந்த வலைப்பதிவே பேசுகின்றது. இந்து மதத்தால் ஏற்பட்ட சாதியமைப்பு முறையின் கொடுமைகளை தானே மேற்படி ஆவணப்படமும் காட்டுகின்றது.
// அந்தக் கேவலங்களை ஆதாரத்துடன் பதிவிட்டால், நானும் வெட்கப்படுகிறேன். அதுவரை, வெட்கமில்லாமல்தான் திரிவேன் ;)//
இந்து மதம் சொல்லுகின்ற இந்த சதுர் வர்ண முறையை தான் கேவலம் என்று சொன்னேன். ஏற்றத்தாழ்வை போதிப்பதால் இதை கேவலம் என்று சொல்லாமல் வேறு எவ்வாறு சொல்வது. கொடுமைகளுக்கு காரணமாக இருப்பதால் இதை கேவலம் என்று சொல்லாமல் வேறு எவ்வாறு தான் அழைப்பது. ஒரு கூட்டத்தார், இன்னொரு கூட்டத்தாரை அடக்கியாள வழிசமைப்பதால் இதை கேவலம் என்று சொல்லாமல், வேறு எவ்வாறு சொல்வது. இது மட்டுமல்ல, இன்னும் எத்தனையோ வெட்கப்படவேண்டிய விடயங்கள் என்னுடைய மதத்தில் இருப்பது கண்டு நான் வெட்கித்தலைகுனிகின்றேன். உங்களால் அது முடியவில்லை. முடிந்தால் ஆதாரங்களுடன் பதிவிடுகின்றேன். ஆனால், ஆர்வமிருந்தால், அன்றாடம் எங்கும் எதிலும் ஆதாரங்களை நீங்களே தேடிப்பெற்றுக்கொள்ள முடியும்.
// எனக்குத் தெரிந்தவரை, மதங்கள், காட்டு மிராண்டிகளாய் நெரியில்லாமல் வாழ்ந்தவர்களை நெரிப்படுத்த உருவாக்கப்பட்ட code-of-conduct. இந்து மதமும் சரி, கிருத்தவமும் சரி, இஸ்லாமியமும் சரி, காலப்போக்கில், சிலரின் தவறான புரிதலால் ஒன்று இன்னொன்றை விட பெரியது/சிரியது என்ற சாயங்கள் பூசப்பட்டு இன்று இந்த நிலையை அடைந்துள்ளது. //
உண்மை, காட்டுமிராண்டிகளாய் இருந்தோம், அறிவு குறைந்தவர்களாக இருந்தோம், முகியமாக பகுத்தறிவு மிக மிக குறைந்தவர்களாக இருந்தோம். அதனால் என்ன செய்தோம் தெரியுமா? எங்களைச்சூழ கண்ணுக்கெட்டிய தூரம் பார்த்தோம், ஏன் மலமுகட்டின் மீதும் ஏறி சுற்றிவரப்பார்த்தோ. பூமி தட்டையாகத்தான் தெரிந்தது. ஆகவே பூமி தட்டையானது என்று மதநூல்களில் எழுதிவைத்தோம்.
மேலே அண்ணாந்து பார்த்தோம். சூரியன் ஒரு அந்தத்திலிருந்து இன்னொரு அந்தத்துக்கு பயணம் செய்கின்றது. அவ்வாறே சந்திரனும் பயணிக்கின்றது. அவ்வாறே ஏனை சில நட்சத்திரங்களும், கோள்களும் பயணிக்கின்றன. மீண்டும் மத நூல்களில் எழுதினோம் 'பூமியை சுற்றியே சூரியனும், சந்திரனும், ஏனைய சில கோள்களும் சுற்றிவருகின்றன. பூமிதான் பிரபஞ்சத்தின் மையம்; என்றெல்லாம் எழுதினோம்.
இன்னும், திடீரென்று மரங்களெல்லாம் பேயாட்டம் ஆடுவதை பார்த்தோம். அத்தோடு எம்மையெல்லாம் பிடித்து தள்ளுவது போலவும் இருந்தது. ஆகவே ஏதோ ஒரு சக்தி தான் இந்த மரங்களை எல்லாம் ஆட்டுகின்றது என்று நினைத்து, அதை வணங்கினோம். வாயு பகவான்.
மலையிலிருந்து ஆறு வேகமாக அடிவாரத்தை நோக்கி ஓடி வருவதை பார்த்தோம். அதுவே ஒறு பாறையாக இருந்தால், நாம் யாராவது தள்ளிவிட்டால் தானே மேலேயிருந்து கீழே வருகின்றது. ஆகவே இந்த ஆற்று தண்ணீர் வருகின்றதென்றால் யாரோஒருவர் மேலேயிருந்து தள்ளிவிடவேண்டும். அதையும் வணங்கினோம்.
வானத்திலேயிருந்தும், நீர்வருகின்றது. அவ்வப்போது வானத்திலே பெரும் வெடியோசையெல்லாம் கேட்கின்றது, பெருவெளிச்சம் மின்னுகின்றது. இதெல்லாம் ஏதோ ஒரு சக்தியின் வேலையாகத்தான் இருக்கவேண்டும். பயந்தோம், விழுந்து வணங்கினோம்.
பகலில், வானத்திலிருந்து வெளிச்சம் வருவதும் (சூரியன்) பின்பு திடீரென்று அது இல்லாமல் போய் அரைவாசி நாள் கும்மிருட்டாய் போய்விடுவது, எமக்குள் ஒரு வித பீதியை ஏற்படுத்தியது. இயற்கை நிகழ்வுகளுக்கான காரணங்களேதுவும் எமக்கு தெரிந்திருக்கவில்லை. எல்லாம் ஒரு வித பீதியை பயத்தை ஏற்படுத்தியது. ஏதேதோவெல்லாம் கற்பனை பண்ணிக்கொண்டோம்.
எல்லாவற்றுக்கும் மேலாக, நாங்கள் மட்டும் இங்கில்லை, எங்களுக்கு மேற்பட்ட ஏதோ ஒரு சக்தி எல்லாவற்றையும் ஆட்டுவிக்கின்றது என்று கற்பனை பண்ணிக்கொண்டோம்.
கண்டதுக்கும் காரணமின்றி பயந்து, கடவுள்கள், மதங்கள் என்று உருவாக்கிகொண்டோம். மனம் அமைதியானது.
நான் என்ன சொல்கின்றேனென்றால், நாமெல்லாம், அறிவு மிக மிக குறைந்தவர்களாக இருந்தபோது, இந்த மதம், கடவுள் என்றெல்லாம் உருவாக்கினோம், இன்று நாம் அறிவியலின் உச்சக்கட்டத்தில் நிற்கும்போதும், மூடநம்பிக்கைகளை பெரும்பாலும் கொண்ட இந்த மதங்களும், மத சம்பிரதாயங்களும் தேவைதானா என்பது.
// நீங்கள் இந்து மதத்தின் மீது கூறும் குற்றச்சாட்டு என்னால் ஏற்க முடியவில்லை, ஏனென்றால், நானும் என்னைச் சுற்றியிருக்கும் சில ஆயிரம் பேர்களும், என் சொந்தங்களும் நண்பர்களும், இந்து மதத்தைச் சார்ந்தவர்கள். யாரும், இதுவரை, மதத்தின் பெயரால் எந்தக் கேவலத்தையும் நிகழ்த்தாதவர்கள்.
ஓரு பாசப்பிணைப்புடன், சட்டத்துக்கும்,தெய்வத்துக்கும் பயந்து, அடுத்தவருக்கு துன்பம் தரா, நல்ல வாழ்வை வாழ்பவர்கள். //
நீங்கள் சொல்வது சரி, இந்து மதத்தில் மட்டுமல்ல, எல்லா மதங்களிலும் மிதவாதிகளே அதிகம். அநேகமானவர்கள் மதத்தை தேவைக்கேற்ப மட்டுமே பாவித்துவிட்டு நல்ல வாழ்க்கை வாழுகின்றார்கள்.
ஆனால், மதங்களின் பெயரில் நடக்கும் அநியாயங்களை நாங்கள் பார்க்கின்றோம். உலகின் பயங்கரவாத அமைப்புக்களில் அதிகமானவை மதம் சார்பான அமைப்புக்கள் தான். தீவிரவாதிகள் பலருக்கு மதபோதனைகளே சித்தாந்தமாக அமைந்துவிடுகின்றது.
இந்த மேற்பவி வீடியோ விபரிக்கும் சாதிக்கொடுமைகள் இந்து மதத்தின் விளைவே. இன்றைக்கு கண்டவனெல்லாம் தன்னை கடவுளென்று ஏமாற்று வித்தை செய்து மக்களை ஏய்க்கின்றானென்றால், அது இந்து மதத்திலுள்ள ஒரு ஓட்டை.
பல நல்ல அப்பாவி, மக்களின் பணம், நேரம் எல்லாம் அநியாயமாக விரையமாகின்றதென்றால், ஒரு சில கூட்டத்தார், அப்பாவி மக்களை ஏமாற்றி கோயில், குளம், மதம் என்று ஒரு வியாபாரமே செய்துகொண்டிருப்பதால் தான்.
நான் மத மிதவாதிகள் தப்பாக நடக்கின்றார்களென்று சொல்லவில்லை.. ஆனால் மத தீவிரவாதிகள் மதபோதனைகளையே தங்கள் கைகளிலெடுத்துக்கொள்கின்றார்கள். மதத் தீவிரவாதிகள், மத மிதவாதிகள் மத்தியிலேயே ஒளிந்துகொள்கின்றார்கள். மத தீவிரவாதிகளின் உருவாக்கத்துக்கு பொறுப்பு கூறவேண்டியவர்கள் உங்களை போன்றும், உங்கள் நன்பர்கள், உறவினர்களை போன்றுமுள்ள மிதவாதிகள் தான்.
உங்கள் மத்தியிலிருந்து தான் மத தீவிரவாதம் உருப்பெறுகின்றது. உங்களுக்கு தெரியாமலேயே.
இஸ்லாத்துக்கு நபி,கிருத்துவத்திற்கு ஏசு,புத்தத்திற்கு புத்தர் ஆகியோர் வழிகாட்டிகளாக அல்லது மார்க்கத்தை போதிப்பவர்களாக இருந்து மக்களை வழிநடத்தியிருப்பதாக அவர்களின் மதநூல்கள் சொல்கிறது.ஆனால் இந்து மதத்தில்(?)இம்மாதிரியான கட்டமைப்பு எக்காலத்திலும் இருந்தது கிடையாது.மக்களை, தங்களின் சுயநல சுரண்டித்திங்கும் ஆசைக்கு அடிமைப்படுத்த ஒரு கும்பலால் ஏற்படுத்தப்பட்ட அமைப்புதான் நாம் இப்போது சொல்லிக்கொண்டிருக்கும் இந்துமதம்.
நெஞ்சு பொறுக்குதில்லையே .
கோவை சிபி,
வருகைக்கு நன்றி.
இஸ்லாத்தின் நபியையும், கிறிஸ்தவத்தின் ஏசுவையும், புத்தத்தின் புத்தரையும் ஒரே பெட்டிக்குள் போட்டுவிட்டீர்கள்.
மூவரும் வேறுவேறானவர்கள்.
இஸ்லாத்தின் நபி, தனை கடவுளின் தூரதென்று சொன்னார், அல்லது அவ்வாறு நம்பப்படுகின்றார்.
கிறிஸ்தவத்தின் ஏசு கடவுளின் மகன் (பிதா, சுதன் பரிசுத்த ஆவி என்றூ வருகின்ற திரித்துவத்தின் சுதன். கடவுள் மூன்றாக இருப்பதின் ஒன்று ஏசு), கடவுள்.
புத்தத்தின் புத்தர், சாதாரண மனிதர் தானே. த்ன்னை சாதாரண மனிதனாக அவர் சொல்லிக்கொண்டார்.
இந்து மதத்தில் என்னவென்றால், கண்டவன், நின்றவனெல்லாம் தன்னை கடவுளென்றும், கடவுளின் அவதாரமென்றும் இன்று வரைக்கும் வருகின்றான்.
//ஆனால் இந்து மதத்தில்(?)இம்மாதிரியான கட்டமைப்பு எக்காலத்திலும் இருந்தது கிடையாது.மக்களை, தங்களின் சுயநல சுரண்டித்திங்கும் ஆசைக்கு அடிமைப்படுத்த ஒரு கும்பலால் ஏற்படுத்தப்பட்ட அமைப்புதான் நாம் இப்போது சொல்லிக்கொண்டிருக்கும் இந்துமதம்.//
முற்றிலும் சரி. ஒரு கூட்டத்தாரின் சுயநல, சுரண்டலுக்கு சழிசமைப்பதற்கே இந்து மதம் உருவாக்கப்பட்டிருக்கின்றது. என்னுடைய மதம். பெருமைப்பட்டுக்கொள்கின்றேன். ;)
ஜோ,
உங்களுக்கு மட்டுமல்ல, உங்களோடு சேர்த்து எங்களுக்கும் தான்.
ஒட்டு மொத்த சிந்தனை மாற்றத்தால் தான் இந்த் ஆநியாயங்களை இல்லாதொழிக்கமுடியும்.
//SurveySan said...
நீங்கள் இந்து மதத்தின் மீது கூறும் குற்றச்சாட்டு என்னால் ஏற்க முடியவில்லை, ஏனென்றால், நானும் என்னைச் சுற்றியிருக்கும் சில ஆயிரம் பேர்களும், என் சொந்தங்களும் நண்பர்களும், இந்து மதத்தைச் சார்ந்தவர்கள். யாரும், இதுவரை, மதத்தின் பெயரால் எந்தக் கேவலத்தையும் நிகழ்த்தாதவர்கள். //
அதாவது ஒருவர் ஒரு கொள்கையைச் சார்ந்தவராக இருக்கவேண்டும் என்றால் எப்படி இருக்க வேண்டும்? அதை முழுமையாக பின்பற்றக்கூடியவராக இருக்க வேண்டும். அதை விட்டு விட்டு பாதி கிணறு தாண்டுவது கொள்கைவாதியாகவோ அல்லது அந்த மதத்தைச் சேர்நவராகவோ இருக்க முடியாது.
நீங்கள் மற்றும் உங்களைச் சேர்ந்தவர்கள் நல்லவர்களாக இருக்கின்றோம் அதனால் எங்கள் மதம் நல்லது என்று கூறினால்? உங்களின் செயற்கள் எந்தவிதத்தில் உங்களின் மதக் கருத்துக்களோடு ஒன்றிப் போகின்றது எனக் கூற இயலுமா? உதாரணமாக... நீங்கள் உண்ணும் உணவு, உடுத்தும் உடை இவைக்களுக்காண வழிகாட்டி யார்? நீங்கள் பல்வேறுபட்ட மத,சாதி மக்களுடன் நெருக்கமாக பழகுகுன்றீர்கள் இதற்காண காரணம் எந்தவிதத்தில் உங்களின் இந்து மதம் உங்களை வழிநடத்துகின்றது என்பதை கூற இயலுமா?
நீங்கள் இந்து கடவுளை வணங்குவதால் மட்டும் அந்த மதத்தை சேர்ந்தவராக முடியாது. உங்களின் ஒவ்வொரு செயலுக்கும் அடைப்படை உங்களுடைய இந்து மதமாக இருந்தால் உங்களின் செயற்களைக் கொண்டு இந்து மதத்துடன் ஒப்பிடலாம். அதுதான் சரியான காரணமாகவும் இருக்கமுடியும்.
நீங்கள் என்ன சொல்கின்றீர்கள்?
அப்துல் குத்தூஸ்,
அதைத்தான் நான் சொன்னேன், அநேகர் மத மிதவாதிகளாகத்தான் இருக்கின்றார்கள் என்று.
பெயருக்கு ஒரு மதம் என்ற வரையறைக்குள் இருப்பார்கள், ஆனால் நடமுறை வாழ்க்கையோ மதம் சொல்வது போல் இருக்காது.
இந்நிலைமை, ஒரு நல்ல போக்கும் கூட. எல்லோரும் மத தீவிரவாதிகளாக் இருந்தால் நிலைமையை நினைத்துப்பாருங்கள்.ஆளுக்காள் அடிபட்டுக்கொண்டு இருக்கவேண்டியதுதான்.
நான் ஒரு இந்துவாக இருந்தாலும், என்னால் புலாலுண்பதை நிறுத்தமுடியாது. இஸ்லாமியர்களாக இருந்துகொண்டு மதுபானம் அருந்திக்கொண்டிருக்கும் நண்பர்கள் பலர் எனக்கு இருக்கிந்றார்கள். அவ்வாறே ஏனைய மதங்களுக்கும் பொருந்தும்.
அதாவ்து, எங்களுக்கு எது இலகுவாக இருக்கின்றதோ, எது வசதியாக இருக்கின்றதோ, எது மகிழ்ச்சியளிக்கின்ரதோ அதை செய்கின்றோமேயொழிய, அதை மதம் தடைசெய்கின்றதா இல்லையா என்று அநேகர் கவனிப்பதேயில்லை. அவர்களை தான் மிதவாதிகளென்றேன். தொட்டுக்கொள்ள மட்டும் மதத்தை பாவிப்பார்கள்.
இன்னொரு சாரார் (பிராமணீயம்) தங்கள் சொந்த நலனுக்காக மத விடயங்கள் என்ற போர்வையில் காட்டுமிராண்டித்தனங்களை அறிமுகப்படுத்துவார்கள். அப்படியொரு காட்டுமிராண்டித்தனம் தான் இந்த் சதுர் வர்ணமுறை.
அப்துல் குத்தூஸ்,
///அதாவது ஒருவர் ஒரு கொள்கையைச் சார்ந்தவராக இருக்கவேண்டும் என்றால் எப்படி இருக்க வேண்டும்? அதை முழுமையாக பின்பற்றக்கூடியவராக இருக்க வேண்டும்.////
எனக்குத் தெரிந்து இந்து மதத்தில் எனக்குப் பிடித்தது அதன் flexibility. நீ இதச் செய் இதச் செய்யாத, வாரம் தவறாம கோயிலுக்குப் போ, ஒரு நாள் கடவுளுக்குக் குடு என்பது போன்ற பெரிய விதிகள் கிடையாது.
நீங்க சொல்ற மாதிரி 'கண்ணை மூடிக்' கொண்டு யாரும் எந்த ஒரு கொள்கையையும் பின் பற்றக் கூடாது. சிலர் அப்படிச் செய்வதால்தானே தீவிரவாதம் தலையெடுக்குது?
ப்ராக்டிக்கலா, அடுத்தவனுக்கு கஷ்டம் கொடுக்காத கொள்கைப் பிடிப்புதான் முக்கியம். உலகம் தட்டைன்னு சில கொள்கைவாதிகள் அடிச்சு சொல்லி அழிச்சாட்டியம் செஞ்சாங்க. ப்ராக்டிக்கலா, விஷயம் புரிஞ்சவுடன், காலப் போக்கில் எல்லாரும் ஒத்துக்கிட்டு ஒழுங்க இருந்தோம்ல. அப்படிதான், ஒவ்வொரு கசட்டு கொள்கைக்கும் சாவு மணி அடிக்கணும்.
நான் மதவாதியோ மிதவாதியோ தெரியல. ஆனா, எனக்குத் தெரிஞ்ச இந்துமதம் யாரையும் தூக்கவோ எறக்கவோ சொல்லல. அட்லீஸ்ட் எனக்கு யாரும் அப்படிச் சொல்லிக் கொடுக்கலை.
:)
மதுவர்மன்,
///இன்னொரு சாரார் (பிராமணீயம்) தங்கள் சொந்த நலனுக்காக மத விடயங்கள் என்ற போர்வையில் காட்டுமிராண்டித்தனங்களை அறிமுகப்படுத்துவார்கள். அப்படியொரு காட்டுமிராண்டித்தனம் தான் இந்த் சதுர் வர்ணமுறை.////
:) என்ன காட்டுமிராண்டித்தனம்? கோயில்ல காசு பிடுங்கி விபூதி தராங்களே? அதுவா?
ஒரு மதத்தின் கொள்கைகள் அடித்தளம் என்பது கடலைப் போல் பெரிய விஷயம். இந்து மதத்தின் அடித்தளம் நான்கு வேதங்கள்(னு நெனைக்கறேன்).
எல்லா வேதத்தையும் கரைச்சு குடிச்சவங்க, இது சரியா தப்பான்னு அலசலாம்.
நானெல்லாம், வேதத்தின் ஒரு வரிகூட தெரியாதவன்.
நாமறிந்த விக்கிபீடியாவிலே என்ன சொல்லிருக்காங்கன்னா. (கடைசி வரி ரொம்ப முக்கியம் படிச்சு பாருங்க. அதாகப்பட்டது, இந்துமதக் கொள்கைகளில் பிறப்பை வைத்து ஏற்றத்தாழ்வு செய்னு சொல்லலியாம்) எனக்குத் தெரிந்தது கடுகளவு.
Hindu society has traditionally been categorized into four classes, called Varnas (Sanskrit: "colour, form, appearance");[43]
the Brahmins: teachers and priests;
the Kshatriyas: warriors, nobles, and kings;
the Vaishyas: farmers, merchants, and businessmen; and
the Shudras: servants and labourers.
Hindus and scholars debate whether the caste system is an integral part of Hinduism sanctioned by the scriptures or an outdated social custom.[104] Although the scriptures, since the Rigveda (10.90), contain passages that clearly sanction the Varna system, they contain indications that the caste system is not an essential part of the religion. Both sides in the debate can find scriptural support for their views. The oldest scriptures, the Vedas, strongly sustain the division of society into four classes (varna) but place little emphasis on the caste system, showing that each individual should find his strengths through different ways such as his astrological signs, actions, personality, and appearance, and do his job for the good of that individual as well as society. Being casted into a class because of what parents he was born from was a political problem and not from the actual science of the religion. A verse from the Rig Veda indicates that a person's occupation was not necessarily determined by that of his family:
“ "I am a bard, my father is a physician, my mother's job is to grind the corn." (Rig Veda 9.112.3)[105] ”
சொல்ல மறந்துட்டேன்.
நீங்கெல்லாம் சொல்ற மாதிரி கோரப் பக்கம் இந்து மதத்துக்கு உண்மையாவே இருந்திருந்தா, 8000 வருடங்கள் எல்லாம் நிலைத்து நின்னிருக்க முடியாது என்பது என் கருத்து.
Hindu religious practices (http://en.wikipedia.org/wiki/Hinduism#History)
Hindu practices generally involve seeking awareness of God and sometimes also seeking blessings from Devas. Therefore, Hinduism has developed numerous practices meant to help one think of divinity in the midst of everyday life. Hindus can engage in pūjā (worship or veneration),[43] either at home or at a temple. At home, Hindus often create a shrine with icons dedicated to their chosen form(s) of God. Temples are usually dedicated to a primary deity along with associated subordinate deities though some commemorate multiple deities. Visiting temples is not obligatory,[89] and many visit temples only during religious festivals. Hindus perform their worship through icons (murtis). The icon serves as a tangible link between the worshiper and God.[90] The image is often considered a manifestation of God, since God is immanent. The Padma Purana states that the mūrti is not to be thought of as mere stone or wood but as a manifest form of the Divinity.[91] A few Hindu sects, such as the Ārya Samāj, do not believe in worshiping God through icons.
Hinduism has a developed system of symbolism and iconography to represent the sacred in art, architecture, literature and worship. These symbols gain their meaning from the scriptures, mythology, or cultural traditions. The syllable Om (which represents the Parabrahman) and the Swastika sign (which symbolizes auspiciousness) have grown to represent Hinduism itself, while other markings such as tilaka identify a follower of the faith. Hinduism associates many symbols, which include the lotus, chakra and veena, with particular deities.
Mantras are invocations, praise and prayers that through their meaning, sound, and chanting style help a devotee focus the mind on holy thoughts or express devotion to God/the deities. Many devotees perform morning ablutions at the bank of a sacred river while chanting the Gayatri Mantra or Mahamrityunjaya mantras.[citation needed] The epic Mahabharata extols Japa (ritualistic chanting) as the greatest duty in the Kali Yuga (what Hindus believe to be the current age).[citation needed] Many adopt Japa as their primary spiritual practice.[citation needed
more details here. http://www.boloji.com/hinduism/036.htm
thanks - you made me read and get to know some new stuff. but, overall, இந்து மதம் நல்ல விஷயங்களைச் சொல்லித்தரும் மதம். இடையில் சில விஷமிகள், ( மனு மாதிரி?) ஏதாவது இடைச்செறுகல் செஞ்சிருக்கலாம். ஆனா, அது இந்து மதத்தின் குற்றமல்ல. மனிதனின் குற்றம்.
==
What is Caste System?
There is nothing in Hinduism as complex as caste system. It emerged as a part of division of labor among people during the days of Rig Veda. The greatest apostle of caste system, was Sage Manu. He laid down all provisions governing caste system in Manu-Smriti.
Brahmins – Priests
Kshatriyas – Fighters and warriors
Vaisya – Business men
Shudras – helpers of every one
Unlike in the Holy Bible, where Slavery is discussed and accepted even by St. Paul (Holy Bible verses Col. 4:11; Exodus 21:21 1: Lev. XXV:44- 55 Thessalonians 3:22), there is no statement in the entire Hindu scriptures to ill-treat lower castes, except Sage Manu's Code, where punishments of lower castes are severe comparing to punishments for the higher castes for the same offense. There is no word "untouchable" in the entire Hindu scriptures. Still caste system degenerated in India. It is indeed the greatest curse on Hinduism. It attacks the core of Hinduism. It resulted in large scale conversion of Hindus to other religions. I sincerely pray and hope, caste system eventually will go away, making it a relic of the history. Hindus should do what Christians did. Even though slavery is mentioned and accepted as a practice in the Holy Bible, even though during Civil war many such as Jefferson Davis, President of the Confederate States of America quoted from the Bible to support slavery, Christians took it upon their chin and eliminated slavery completely.
Once upon a time, India had 3,000 castes and 25,000 sub-castes. Even there were 1,800 Brahmin castes in India. Even different Brahmin castes did not mingle themselves socially or otherwise, in ancient times. Last of all, ancient India, persecuted a large group of people called untouchables. Mahatma Gandhi said: "Untouchability is a crime against God and men." Ambedkar once wrote out of his own experience, "To the untouchables, Hinduism is a veritable chamber of horrors."
இதற்கு நான் என்ன சொல்வது என்று தெரியவில்லை நண்பர் சர்வேசா!
இந்து தர்மம் தோன்றிய பெருமையுடைய நாட்டில் இப்படியான கொடுமையா?
ஏற்கனவே அறிந்திருந்தாலும் இது மிகவும் வேதனையைத் தருகிறது.
இதற்காக நான் எனது சமயத்தைக் குறை சொல்லவில்லை. மகாத்மா காந்தியினுடைய கொள்கைகள் சுவாமி விவேகானந்தருடைய கருத்துக்கள் முன்னெடுத்துச் செல்லப்பட்டால் இப்படியான அநீதிகளுக்கும் அக்கிரமங்களுக்கும் முடிவு காணப்படும் என்று திடமாக நம்புகின்றேன்
இதற்கு கண்டிப்பாக ஒரு முடிவு காண நாம் முயற்சிக்க வேண்டும். இந்தப் பிரச்சனை எமது நாட்டில் பெரிதாக இல்லாவிட்டாலும் சாதிப் பிரச்சனை இருக்கிறது. இனப் பிரச்சனைதான் எமக்கு முக்கிய பிரச்சனையாக இருக்கிறது.
உங்கு சாதியால் நடக்கும் கொலைகள் போல இங்கு மொழியாலும் இனவேறுபாட்டாலும் நடக்கும் கொடுமையை நான் எங்கு யாரிடம் முறையிடுவது?.
சர்வேசா! நீதான் துணையப்பா!!!
எமக்கும் உங்கு நடைபெறும் அக்கிரமங்களுக்கும் ஒரு முடிவைக் காட்டப்பா!!!
திருவருள் செய்யப்பா!!!
தங்க.முகுந்தன்,
//இதற்காக நான் எனது சமயத்தைக் குறை சொல்லவில்லை. மகாத்மா காந்தியினுடைய கொள்கைகள் சுவாமி விவேகானந்தருடைய கருத்துக்கள் முன்னெடுத்துச் செல்லப்பட்டால் இப்படியான அநீதிகளுக்கும் அக்கிரமங்களுக்கும் முடிவு காணப்படும் என்று திடமாக நம்புகின்றேன்//
ஏன் நீங்கள், உங்கள் எங்கள் சமயத்தை குறைகூறமாட்டீர்கள். குறைகள், பிரச்சினைகள் உண்டென்றால், பிறகென்ன அதில், உங்கள், எங்கள் என்றெல்லாம் பார்ப்பது.
உங்களுடைய, அம்மா பிழைசெய்தால், அது பிழை இலை என்றாகிவிடுமா?
விவேகனந்தரின் உண்மை முகம் எங்களில் எத்தனை பேருக்கு தெரியும். விவேகானந்தரை ஒரு இந்து மத வாதியாகவல்லவா எங்களுக்கு காட்டப்பட்டிருக்கின்றது.
அவ்வாறல்லாமல், விவேகானந்தர், ஒரு பகுத்தறிவுவாதி, கடவுள் சிலை வழிபாடு, புரோகிதம் என்ற இந்துமதவிடயங்கலை மறுத்துரைத்தவர், மனிதர்களுக்கிடையிலான அன்பையே வலியுறுத்தியவர் (ஞானதீபம்) என்ற விடயம் எங்களில் எத்தனை பேருக்கு தெரியும்? விவேகானந்தரை பற்றி பதிவு எழுத எண்ணம்.
எனுடைய மதத்தில் காணப்படுகின்ற, என்னுடைய மதம் என்ற போர்வையில் நடத்தப்படுகின்ற எத்தனையோ காட்டுமிராண்டித்தனங்களை என்னால் பட்டியலிடமுடியும்.
இன்று பார்வையிட்ட உமது வலைத்தளம் என் மனதை மிகவும் பாதித்து விட்டது. நான் இலங்கையிலிருந்து வரும்போது எடுத்துவந்த மதுரை காந்திய இலக்கியச் சங்கம் வெளியிட்ட அண்ணலின் நிர்மாணத் திட்டம் (மகாத்மா காந்தியின் 18 அம்சத் திட்டம்) என்ற நூலை மீண்டும் இன்று ஒரு தடவை வாசித்துவிட்டு அதிலிருந்த சில சில குறிப்புக்களை ஒரு மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற ஆதங்கத்தில் பதிவிடுகிறேன். (எனது கிருத்தியம் வலைப்பதிவில் தனியாக ஹிந்துக்களுக்;கு ஒரு வேண்டுகோள் என்ற தலைப்பிட்டு இதைப் பதிவு செய்துள்ளேன்.)
இந்நூலில் மகாத்மா காந்தி தனது முகவுரையில்
……ஹிம்சை முறையில் முதன்முதலாக அழிவது சத்தியம்தான். அஹிம்சை முறையிலோ என்றும் சத்தியமே வெல்கிறது. மேலும் அரசாங்கத்தில் பதவிபெற்று வேலை செய்பவர்களை விரோதிகள் என்று கருதலாகாது. அப்படிக் கருதுவது அஹிம்சைத் தத்துவத்துக்கே முரணாகும். அவர்களை விட்டு நாம் பிரியத்தான் வேண்டும். நண்பர்களாய்ப் பிரிய வேண்டுமேயொழிய பகைவர்களாய்ப் பிரிய வேண்டியதில்லை
முகவுரையாகச் சொல்லிய இக்குறிப்புக்களை வாசகர் செவ்வையாய் உணர்தல் வேண்டும். உணர்ந்தால் இந்த நிர்மாணத் திட்டம் அவர் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் என்பது நிச்சயம். அரசியல் என்று சொல்லுகிறார்களே அதுவும் மேடைப் பிரசங்கமும் எப்படி உள்ளத்தைக் கவர்கின்றனவோ அப்படியே இத்திட்டமும் உள்ளத்தைக் கவரும். அவற்றைவிட இது மிகவும் முக்கியமானதாயும் உபயோகமுள்ளதாயும் இருக்கும் என்பது உறுதி.
வகுப்பு ஒற்றுமை
…..நான் கூறகிற வகுப்பு ஒற்றுமையானது எந்த விதத்திலும் பிளவுபடுத்த முடியாத இதய ஒற்றுமையாகும். காங்கிரஸ்காரர் ஒவ்வொருவரும் தாம் எந்த மதத்தைச் சார்ந்தவராயினும் சரி தம்முடைய வாழ்க்கையில் தாமே ஒரு ஹிந்துவாகவும் முஸ்லிமாகவும் கிறிஸ்தவராகவும் பார்ஸியாகவும் யூதராகவும் மற்ற மதத்தினராகவும் இருந்துவர வேண்டும். சுருங்கச் சொன்னால் அவரே ஹிந்துவல்லாத பிற மதத்தினராகவும் இருந்தவரவேண்டும். இப்படி இருப்பது மேற்சொன்ன இதய ஒற்றுமை உண்டாவதற்கு முக்கியமான முதல் விஷயமாகும். காங்கிரஸ்காரர் ஹிந்துஸ்தானத்திலுள்ள கோடிக்கணக்கான மக்களில் ஒவ்வொருவருடைய இதயத்தையும் நேரே உணர்தல் வேண்டும். இவ்விதம் உணரும் பொருட்டு அவர் தம்முடைய மதமல்லாத பிற மதத்தினரோடு நட்புரிமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். தம்மதத்தில் அவருக்கு எவ்வளவ பக்தி இருக்கிறதோ அவ்வளவு பக்தி மற்ற மதங்களிடத்திலும் இருத்தல் வேண்டும்……..
தீண்டாமை ஒழிப்பு
ஹிந்துமதத்தில் ஏற்பட்ட மாசு என்றும் சாபம் என்றும் சொல்லத்தக்கது. இதை ஒழிப்பது எவ்வளவு அவசியம் என்பதுபற்றி இவ்வளவு காலத்துக்குப் பின் விஸ்தரித்துச் சொல்லத் தேவையில்லை. இது சம்பந்தமாய்க் காங்கிரஸ்காரர் அரிய சேவை செய்திருக்கிறார்கள் என்பது உண்மை. ஆயினும் இன்றைய அரசியல் நிலை காரணமாகச் செய்யவேண்டியிருக்கும் வேலைகளுள் ஒன்று என்று தான் காங்கிரஸ்காரர்கள் அனேகர் தீண்டாமையொழிப்பைக் கருதுகிறார்கள். ஹிந்துக்கள் சம்பந்தப்பட்ட வரையில் ஹிந்து மதமே அழியாமல் நிலைத்து நிற்பதற்கு இன்றியமையாத காரியம் என்று அவர்கள் இதைக் கருதுவதில்லை. இதைச்; சொல்ல எனக்கு மிக்க வருத்தம் உண்டாகிறது. காங்கிரஸில் ஹிந்துக்களாயுள்ளவர் அரசியலைக் காரணமாகக் கொண்டு தீண்டாமையொழிப்பில் ஈடுபடாமல் முக்கியமாய்ச் செய்ய வேண்டிய சேவை என்ற எண்ணத்தோடு இதில் ஈடுபடவேண்டும். அவ்விதம் ஈடுபட்டால் இன்று சனாதனிகள் மனத்தை எவ்வளவு தூரம் மாற்ற முடிந்திருக்;கிறதோ அதைவிடப் பலமடங்கு அதிகமாக மாற்றமுடியும்…….
மது விலக்கு
கதர்
கிராமக் கைத்தொழில்கள்
துப்பரவு
ஆதாரக் கல்வி
வயது வந்தோர் கல்வி
பெண்ணுரிமை
உடல்நலம்
தாய் மொழி
நாட்டுப்; பொதுமொழி
பொருளாதார சமத்துவம்
விவசாயிகள்
தொழிலாளர்
ஆதிக்குடிகள்
…..நம் நாடு எவ்வளவோ விசாலமானது. இங்குள்ள மக்கள் வௌ;வேறான இனத்தவர்கள். எனவே மக்களனைவரையும் அவர்கள் நிலைமையையும் பற்றிய எல்லாச் செய்திகளையும் நம்முள் எவரும் அறிந்ததாகச் சொல்லமுடியாது. எவ்வளவு சிறந்த மனிதராலும் அறிந்திருக்கமுடியாது. நாம் ஒரே மக்கட் சமுதாயம் என்று சொல்லிக் கொள்ளுகிறோமே இந்தச் சொல்லை நிலை நாட்டுவது எவ்வளவோ கஷ்டமானது. சமுதாயத்திலுள்ள ஒவ்வொரு தொகுதியும் மற்ற ஒவ்வொரு தொகுதியோடும் தான் ஒன்றியிருப்பதாக உண்மையுணர்வு பெற்றால்தான் இது சாத்தியம். நம் மக்களைப்பற்றிய மேற் கூறிய செய்திகளை ஒருவர் தாமே உணரும் போதுதான் இந்தக் கூற்றையும் அவர் நன்றாக உணர முடியும்……
குஷ்;ட ரோக நிவாரணம்
…. இந்தியாவின் ஒவ்வோர் அங்கத்திலும் புத்துயிர் எழுந்து பொங்குமானால் சத்தியத்தையும் அகிம்சையையும் கடைப்பிடித்து மிக்க விரைவில் சுதந்திரமடைய வேண்டும் என்ற உணர்ச்சி நம்மிடம் உண்மையாகவே இருக்குமானால் இந்தியாவில் ஒரு குஷ்;டரோகியேனும் பிச்சைக்காரரேனும் பராமரிப்பில்லாமலோ எண்ணுவாரற்றோ இருக்க முடியாது.
மாணவர்
கட்சி அரசியலில் மாணவர்கள் ஈடுபடக் கூடாது…..
அரசியல்பற்றி மாணவர் வேலைநிறுத்தம் செய்யக் கூடாது……
மாணவர்களெல்லோரும் சாஸ்திரோக்தமான முறையில் நூல் வேள்வி செய்ய வேண்டும்……
எப்போதும் அவர்கள் கதரே உடுத்த வேண்டும்…..
வந்தே மாதரம் பாடும்படியோ தேசியக் கொடியை வணங்கும்படியோ மற்றவர்களை நிர்ப்பந்தப்படுத்தக் கூடாது……….
அவர்கள் மூவர்ணக் கொடியின் தத்துவத்தைத் தங்கள் சொந்த வாழ்க்கையில் கடைப்பிடித்துச் சாதி வேற்றுiமையோ தீண்டாமையுணர்ச்சியோ தங்கள் இதயத்தில் ஒரு சிறிதும் இல்லாதபடி அகற்ற வேண்டும் மற்ற மதங்களைச் சேர்ந்த மாணவர்களையும் ஹரிஜனங்களையும் தங்களுடைய சொந்த உற்றார் உறவினர்போல் எண்ணி அவர்களுடன் நட்பு பூண்டு ஒழுக வேண்;டும்.
அயலில் வாழ்பவர்களுக்கு ஏதேனும் நோயோ காயமோ ஏற்பட்டவிடத்து அவர்கள் வேண்டிய முதலுதவி செய்ய வேண்டும். பக்கத்துக் கிராமங்களில் சென்று குப்பை வாரித் துப்பரவு வேலை செய்து கிராமத்துச் சிறு பிள்ளைகளுக்கும் பெரியவர்களுக்கும் சுத்;தமாயிருக்கக் கற்பிக்க வேண்டும்.
தேசிய மொழியாகிய ஹிந்துஸ்தானி மொழி பேச்சிலும் எழுத்திலும் இப்போது இரண்டு உருவமுடையதாயிருக்கிறது. இரண்டையும் அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். இதன் மூலம் ஹிந்தி பேசினாலும் உருது பேசினாலும் அவர்கள் எளிதாய் அறிந்து கொள்ள முடியும். நாகரி எழுத்தோ உருது எழுத்தோ எழுதினாலும் படிக்கவும் முடியும்.
தாங்கள் கற்பதில் புதிதாயுள்ளதெல்லாவற்றையும் அவர்கள் தங்கள் தாய்மொழியில் பெயர்த்தெழுத வேண்டும். அயலூர்களுக்கு வாரந்தோறும் போகும்போதெல்லாம் இப்படிக் கற்ற அறிவை அங்கு பரப்ப வேண்டும்.
ரகசியமாக அவர்கள் ஒன்றும்; செய்யலாகாது. எல்லா விவரங்களிலும் சிறிது சந்தேகத்துக்கும் இடம்கொடுத்தலாகாது. புலன்களைக் கட்டுப்படுத்தித் தூய வாழ்க்கை வாழ வேண்டும். அச்சத்தை அடியோடு அகற்ற வேண்டும். தங்களோடு படிக்கும் மாணவர் யாரேனும் பலவீனராயிருந்தால் அவரைப் பாதுகாக்க எப்போதும் சித்தமாயிருக்க வேண்டும். …..
தங்களுடன் படிக்கும் பெண்களோடு பழகுவதில் முறை தவறாமலும் பெருந்தன்மையாகவும் நடந்த கொள்வதில் மிக்க கவனத்தோடிருக்க வேண்டும்.
இப்படியான அரிய கருத்துக்களைச் சொல்லிய மகானுடைய நாட்டிலா இத்தனை அக்கிரமங்கள் என மனம் வெதும்புகிறேன். இன்றைய ஆட்சியாளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் சமயத் தலைவர்களுக்கும் சமூகத்தில் அக்கறையுடைய அனைவருக்கும் இது சமர்ப்பணமாகிறது.
சுத்தானந்த பாரதி என நினைக்கிறேன். ஏதோ ஒரு பாடலில் தான் தான் திருந்தச் சமூகந் திருந்தும் என்று சொல்லியுள்ளார். எனது வலைப்பதிவில் தொடக்கத்திலிருந்து அனேகமாக அனைத்துக் கட்டுரைகளிலும் பொதுவாக நீதிக் கருத்துக்கள் மற்றும் சமத்துவம் பேணும்தன்மை ஊடுருவியிருப்பதை உணர முடியும்.
மதுவர்மன் அவர்களே!
நீங்கள் சொல்வதில் எனக்கு உடன்பாடு கிடையாது. எனது கிருத்தியம் வலைத்தளத்தைப் பார்த்தால் அதில் நான் பக்தி என்ற கட்டுரையில் மிகவும் தெளிவாக குறிப்பிட்டுள்ளென். தினகரனில் வெளிவந்தது.
அதேபோல இந்துக் கோவில்கள் என்ற கட்டுரையில் கன்னியாகுமரி விவேகானந்தர் ஆச்சிரம வெளியீட்டைப் பதிதுள்ளேன். பார்வையிடவும்.
சமயத்தின் பேரால் நடக்கும் கொடுமைகளுக்கு சநாதன தர்மமாகிய சமயம் எந்தப் பொறுப்பையும் ஏற்க முடியாது.
சுவாமி விவேகானந்தர் இந்து சமயத் துறவியே அவரால் உருவாக்கப்பட்டவர்களே இன்று அவருடைய பணியைச் செய்து வருபவர்கள் என்பதை ஏன் மறைக்கிறீர்கள்! அல்லது தடுமாற்றம் கொள்கிறீர்கள்.
இந்து சமயம் என்றால் என்ன ? என்று என்னை வினவியிருக்கிறீர்.
மதம் என்ற சொல்லை நான் தவிர்த்தே வருகின்றேன். காரணம் அது யானைக்குரிய மூர்க்க குணம். அது எம்மை செம்மைப்படுத்தும் நெறியில் இருக்க வேண்டும் என்ற ஆதங்கத்தால் சமயம் வழி முறை தர்மம் நெறி என்ற பதங்களைப் பாவித்து வருகின்றேன்.
என்னைப் பொறுத்தவரை இந்து என்பதன் சரியான அர்த்தம் இம்சையைக் கண்டு துக்கிக்கின்றவன் எவனோ அவனே உண்மையான இந்து என்பேன்.
அதாவது அனைத்து உயிர்களிடத்தும் அன்பாய் இருப்பவன் எவனோ அவனே உண்மையான இந்து.
தன்னைப் போல சகலதையும் எவன் நோக்கி ஏனையவர் அனைவரையும் தன்னைப் போலக் கருதுபவன் எவனோ அவனே நான் விரும்பும் இந்து.
திருவிளையாடற் புராணத்தில் இறைவன் மனிதனால் வெறுத்து ஒதுக்கத் தக்கதாகிய பன்றிக் குட்டிகளுக்குப் பால் கொடுத்த வரலாறை நாம் சற்று ஆறஅமர இருந்து சிந்தித்துப் பார்ப்பது சிறந்ததெனக் கருதுகிறேன்.
நாம் முதலில் மனிதராக வாழப் பழகிக் கொள்ள வேண்டும். அதற்கு கலைச்சுடர் ஜப்பார் அவர்களால்(ஈழத்து எழுத்தாளர்) மனிதன் மாமனிதனாக…என்ற மணிமேகலைப் பிரசுர நூலை வாசித்தல் மிகவும் அவசியம். தேவையேற்பட்டால் அந்நூலில் மனிதன் என்ற முதல் கட்டுரையை மட்டுமல்ல முழுக் கட்டுரைகளையுமே விரும்பினால் வாசகர்களுக்காக பதிவிடலாம். அக்கட்டுரையின் இறுதியில் உள்ள பந்தி இவ்வாறு இருக்கிறது.
இதயம் இருக்க வேண்டிய இடத்தில் வேறு என்னவோ இருக்கிறது. மூளை இருக்க வேண்டிய இடம் காலியாகி விட்டதா? இல்லை. ஆனால் மூளை வேறு விதமாக வேலைசெய்கிறது. என்ன செய்யலாம் இவனை என்று இறைவனை சிந்திக்க வைத்துவிட்டான். அதனால் மனிதன் எங்கே என்று இறைவன் கேட்கிறான்.
இந்தியாவில் மட்டுமல்ல இலங்கையிலும் குறிப்பாக கீழைத்தேய ஆசிய நாடுகளில் அரசாட்சி முறையை நாம் மாற்றியமைப்பது அவசியமாகிறது. இந்தியா சுதந்திரமடைந்தபோது தேசபிதா மகாத்மாவுக்கு அன்றைய நிலையில் முழுமன நிறைவு ஏற்படவில்லை. அவர் எதிர்பார்த்திருந்த ஒன்றுபட்ட இந்தியா பிளவுபட்டிருந்தது. பாகிஸ்தான் இந்தியா என ஒரு பெரிய ராஜ்யம் பிளவுபட்டது இனங்களின் அடிப்படையில். ஆனால் இன்று என்ன நடக்கிறது?
நான் காந்தி திரைப்படத்தை சுமார் 25 தடவைகளுக்கு மேல் பார்த்திருப்பேன். அதில் இந்தியா சுதந்திரமடைந்த வேளையில் அவரது ஆச்சிரமத்தில் கொடி எதுவுமற்ற கம்பத்தைக் காணலாம். இதன் அர்த்தம் என்ன? நினைத்தது நடக்கவில்லை என்ற ஆதங்கம். அவர்மீது குறைசொல்வோர் பலரும் இருக்கிறார்கள். ஆங்கிலேயேருடன் அவர் எவ்வளவு போராட்டங்களையும் பேச்சுவார்த்தைகளையும் செய்துள்ளார். ஆவர் தனி ஒரு மனிதனாக இருக்கவில்லை. பல தொண்டர்கள் மக்கள் இனமத வேறுபாடின்றி அவரைத் தம் தலைவராக ஏற்றுத்தானே நடந்தார்கள். அவரை எப்போது ஒரு இந்து சுட்டுக் கொலை செய்தானோ அன்றே எமக்கெல்லாம் ஒரு பழியும் பாவமும்; ஏற்பட்டது. நான் மானசீகமாக என் குருவாகக் கொள்ளப்பட்டவர்களில் அவரும் மகாகவி பாரதியும் சுவாமி விவேகானந்தரும் அன்னை திரேசாவும் அடங்குவர்.(மேலதிக தகவல் தேவையாயின் எனது கிருத்தியம் வலைப்பதிவை நோக்கவும்)
தற்போதைய நிலையில் இன்னொரு மகாத்மா பாரதி விவேகானந்தர் அன்னை திரேசா போன்றோர் தோன்றினாலேயே சமத்துவமுடைய சமுதாயத்iதை ஏற்படுத்த முடியும் என்பது எனது அறிவுக்கு எட்டிய கருத்து.
மீண்டும் கருத்துத் தெரிவிக்கவருவதுடன் இதுகுறித்து ஒரு செயற்திட்டத்தை தீட்டி நடைமுறைப்படுத்த அனைவரையும் நான் முழுமனதுடன் வேண்டுவதுடன் இதற்கு என்னாலான பங்களிப்பையும் செய்ய சித்தமாயிருக்கிறேன் என்பதையும் இவ்விடத்தில் குறிப்பிட விரும்புகின்றேன். சும்மா தேவையற்ற விடயங்களில் வீணாகப் பொழுதைப் போக்காமல் ஆக்கபூர்வமான விடயங்களில் ஈடுபட்டு நம் சமூகத்தை திருத்தியமைக்க சுவாமி விவேகானந்தர் அறைகூவியதையும் நினைவு படுத்தி இப்போதைக்கு இதனை நிறைவு செய்கின்றேன்.
Hiiiiiiiiiiiiiiiiii Guys HOLD ON!!!!!!!!!! ,
My grand pa thought us few religions (Hinduism, Christianity, Islam & Buddhism. Its the tamil community had cast prob. The religion did not. As someone said here, many misinterpreted many things. Just be true to yourself guys.
Religions (may be made) to guide ppl. Ppl misinterpreted it. I dont think so the author has studied the puranakal well.
I am not religious. But, from what my grand pa thought made me respect Hinduism. The only religion says man & woman equal (arthanatheswarar) It has female gods. Shakthi (female) powers Shiva (male)
The religion never said god is great. Its saying "matha - pitha - guru - then only god".
Why on the earth you guys are writing some topics without a complete knowledge.
Just close this topic for god sake. & write something meaningful. Dont be like the hair dresser who did dressing for the cat coz he had nothing to do.
:-(((
this untouchability when going to an end... I don't know
உங்கள் பதிவு நன்றாக இருக்கிறது,
இந்த கொடுமை நடக்கின்றது என்று தெரியும்,ஆனால், இவ்வளவு கடுமையான நிலை என்று இன்று தான் அறிதேன்!
Post a Comment
உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம். அனைவரும் இந்த வலைப்பூவை வாசிப்பார்கள். எனவே நல்ல வார்த்தைப் பிரயோகங்களைப் பாவியுங்கள். அத்துடன் இடுகையின் மேற்புறத்தில் உங்கள் நட்சத்திர வாக்கையும் இட்டுவிட்டு செல்லுங்கள்.
நன்றி