கவிஞர் மாவை வரோதயன் இன்று(2009-08-29 சனிக்கிழமை) அதிகாலை யாழ்ப்பாணத்தில் காலமானார். தேசிய கலை இலக்கியப் பேரவையின் கொழும்புக் கிளையின் இலக்கியச் செயலராக மாவை வரோதயனின் பங்களிப்பு அளப்பரியது. இவரது பன்னிரு சிறுகதைகளைக் கொண்ட "வேப்பமரம்" என்ற சிறுகதை தொகுதியும் "இன்னமும் வாழ்வேன்" என்ற கவிதை தொகுதியும் வெளிவந்துள்ளன.
சிவகடாட்சம்பிள்ளை சத்தியக்குமரன் எனும் இயற்பெயரை உடைய மாவை வரோதயன் யாழ்ப்பாணத்தின் வடக்கே மாவிட்டபுரத்தின் பளை எனும் இடத்தை பிறப்பிடமாகக் கொண்டவர். கவிதை, சிறுகதை, நாடகம், விமர்சனம், சினிமா எனப் பல்வேறு துறைகளில் தன்னை ஈடுபடுத்தி வந்தவர். தொடக்கத்தில் கொழும்பில் பரீட்சைத் திணைக்களத்தில் இவர் பணிபுரிந்தார். பின்னர் இலங்கை சுகாதார சேவையில் சுகாதாரப் பரிசோதகராக கடமையாற்றிய இவர் சகல சமூக மக்களுடனும் மிக நெருக்கமான உறவைப் பேணியவர்.
அவரதுமறைவு நிரப்ப முடியாத இடைவெளியை ஈழத்து இலக்கிய உலகில் ஏற்படுத்தி இருக்கிறது அவரது பிரிவு தமிழ் இலக்கிய உலகிற்கும் சமூக விடுதலைச் சிந்தனையாளர்கட்கும் ஒரு பேரிழப்பாகும்.
அவரது பிரிவால் வருந்தும் அவரது மனைவியார் அவர்கட்கும் பிள்ளைகட்கும் குடும்பத்தினருக்கும் நாம் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதுடன் அவருக்கான இறுதி அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்வதில் அவருடைய நண்பர்களுடனும் உறவினர்களுடனும் இணைந்து, எமது ஆழ்ந்த துயரை அவர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
மாவை வரோதயனின் இழப்பு குறித்து
செ.பொ.கோபிநாத் வலைப்பதிவில் http://spggobi.blogspot.com/2009/08/blog-post_29.html
கானா பிரபாவின் வலைப்பதிவில்http://kanapraba.blogspot.com/2009/08/blog-post_30.html
மாவை வரோதயனின் நூலகள் நூலகம் திட்டத்தில்
Saturday, August 29, 2009
அஞ்சலி: கவிஞர் மாவை வரோதயன்
பூக்களின் வகைகள்
அறிவிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
3 பின்னூட்டங்கள்:
எம்மைப் போன்ற நண்பர்களுக்கும், இலக்கிய உள்ளங்களுக்கும் அதிர்ச்சி தரும் செய்தி. சமூகத்தை நேசித்த உள்ளம்.
மாவை அவர்கள் நோய்வாய்ப் படுவதற்கு முன்னதாக இருக்கிறம் சஞ்சிகைக்காக "வீட்டில் ஒரு நாடகம்" என்ற நாடக வடிவிலான ஆக்கங்களை எழுதியிருந்தார்.
அன்னாரது பிரிவால் துயருறும் குடும்பத்தாருக்கு ஆறுதல்களை கூறிக் கொள்கின்றேன்.
எஙகளுடன் ஓடியாடி, சுறுசுறுப்பாக இயங்கிய மாவை அண்ணாவை என்றுமே மறக்கமுடியாது.
அவருடன் இறுதியாக ஒரே மேடையில் 'இரும், சற்றுப்பொறும்,எல்லாம் சரிவரும்' என்ற தலைப்பில் கவியரங்கம் செய்ததையும் மறக்கமுடியாது.
எம்மை விட்டுப்பிரிந்தாலும், எங்கள் எல்லோரது நெஞ்சங்களில் அவர் என்றுமே வாழ்வார். அவரின் பிரிவால் துயருறும் எல்லோருடனும் சேர்ந்துகொள்கின்றேன்.
Post a Comment
உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம். அனைவரும் இந்த வலைப்பூவை வாசிப்பார்கள். எனவே நல்ல வார்த்தைப் பிரயோகங்களைப் பாவியுங்கள். அத்துடன் இடுகையின் மேற்புறத்தில் உங்கள் நட்சத்திர வாக்கையும் இட்டுவிட்டு செல்லுங்கள்.
நன்றி