பேரூந்து இருக்கையில் அவனும் நானும் ஒரே சட்டையில்
அவனைப்பார்த்து எனக்கு வெறுப்பு
என்னைப்பார்த்து அவனுக்கு வெறுப்பு
Friday, April 4, 2008
வெறுப்பு
Wednesday, April 2, 2008
சில படைப்புக்கள் - புகைப்படங்கள்
இதில நான் என்னத்தை சொல்ல? படங்கள் இருக்குது, பாத்து ரசியுங்கோ. எனக்கு மின்னஞ்சலில வந்தது. கனபேர் பாத்திரப்பியள். எதுக்கும் திருப்பியும் ரசியுங்கோ.










Tuesday, April 1, 2008
ஊர்க்குருவி ஒன்று பருந்தாக முயற்சிகிறது
எவனோ ஒருவனின் கைக்கூ வகை கவிதையை பார்த்தவுடன் என் மனதில் எங்கோ வாசித்து மறந்திடாத ஒரு சில
மாற்றங்கள் மார்தட்டி பெறப்பட வேண்டியவை!
மண்டியிட்டல்ல!!
பகலில் சூரியன்
இரவில் நிலா,
தங்கிட ஒரே கிணறு.
இரண்டு லாரிகள் மோதல்
இரண்டின் முகப்பிலும்
அம்மன் துணை.
மழைக்காலப் புகைப்பிடிப்பாளன்....
அன்று மணியோ ஆறு.
வீதியால் செல்லுகையில்,ஆயிரம் பிளஷ்(Flash) .
ஒரே சந்தோசம்
அண்ணாந்து பார்த்தால் .. அன்று ஒரு மழைநாள்.
ம்ம் , மின்னல் தான்..........
இலங்கையில் கிரிகெட் ரசிகன்................
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கிரிகெட் போட்டி
இடையில் மூன்று வித ரசிகர் கூட்டம்
இந்தியா ரசிகனிடம் காரணம் கேட்டால்..
இலங்கை அரசாங்கத்தின் அரசியல்...
இந்தியாவுக்கு ஆதரவு.
ஆனால் இந்தியா அரசாங்கம் இலங்கை தமிழனுக்கு ......................???