இருக்கும்வரை அருமை தெரிவதில்லை இறந்தவுடன்தான் இழப்பை உணர்கின்றோம். அல்லது இருக்கும்போது அருமை பெருமைகளைப் பேசி புகழ்மாலை சூட்டும் வழமை தமிழனிடம் இல்லை. உண்மையில் சுஜாதா, வாழ்நாட்சாதனையாளன் விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டிருக்க வேண்டிய ஒரு எழுத்தாளன்.
தனது கடைசிக் காலம்வரை எழுதிக்கொணடேயிருந்த ஒரு வெற்றி எழுத்தாளன். எனக்குத் தெரிந்தவரை இன்றுவரை தமிழில் விஞ்ஞானச் சிறுகதைகளுக்காக ஒரு எழுத்தாளன் சஜாதாவேதான். அவரது “என் இனிய இயந்திரா” மற்றும் “மீண்டும் ஜீனோ” என்னும் நாவல்கள் ஒரு சிறிய இயந்திர நாய்க்குட்டிக்கு மனிதர்கள்போல உணர்ச்சிகள் வருவதுபற்றிய ஒரு அருமையான விஞ்ஞானப் புனைகதை (Science Fiction) கள். இது ஒரு உதாரணமே. அவரது ஒவ்வொரு படைப்புக்களும் தனித்துநின்று வாழக்கூடியவை.
இங்கே ஆனந்தவிகடனில் மிகவும் வெற்றிபெற்ற தொடராக வந்த அவரது “கற்றதும் பெற்றதும்” இனைப் பற்றிக் கூறியாகவேண்டும். “கற்றதும் பெற்றதும்” தமிழுக்குப் புதிது. அது கட்டுரையல்ல, கவிதையல்ல, விமர்சனமுமல்ல. அது ஒரு புதுமாதிரியான ஒரு எழுத்துநடை. வாசித்து மட்டுமே அனுபவிக்கக்கூடிய படைப்பு.
அவர் தனது எண்ணங்களையும் எழுத்துக்களையும் குறிப்பிட்ட வகைகளுக்குள் மட்டும் மட்டுப்படுத்திக் கொண்டவரல்லர். விஞ்ஞானம், வாழ்க்கை, ஆன்மீகம் (அவரது சில ஆன்மீக்க கட்டுரைகளுடன் எனக்கு உடன்பாடில்லை), தமிழிலக்கண இலக்கியம், கவிதை, விமர்சனம் மற்றும் சினிமா என எல்லாத்துறைப் படைப்புக்களிலும் வெற்றியீட்டிய ஒரு படைப்பாளி.
தமிழில் எழுத்துச் சீர்திருத்தங்கள் மற்றும் மொழி ஆராச்சிகளில் சிறந்த முடிவுகளையும் விமர்சனங்களையும் தந்தவர்.
மொத்தத்தில் எழுத்துத்துறைக்கும் தமிழுக்கும் அவரது மறைவு (27. 02 2007 அன்று) ஒரு ஈடுசெய்யமுடியாத இழப்பு.
தமிழ்ப்பூங்கா சார்பாக எமது அஞ்சலிகளை அவருக்குக் காணிக்கையாக்குகிறோம்.
____________________________________________________
சுஜாதா எங்கோவொருமுறை எழுதியது: தமிழ்ப் புணர்ச்சி விதிகளில் எனக்கு இன்னமும் புரியாதவொன்று,
தங்கம் + காசு = தங்கக்காசு (திரிதல் விகாரம்)
சங்கம் + காலம் = சங்ககாலம் (கெடுதல் விகாரம்)
சங்கக்காலம் எனப்படவேண்டியது ஏதோவொரு காரணத்தால் சங்ககாலம் எனப்படுகிறது
____________________________________________________
சுஜாதாவின் 'கடவுள்' கட்டுரை தொகுப்பிலிருந்து,
மனிதனைப் பொறுத்தவரை உயிர் என்பது உடல் இயக்கமா ? அவன் நினைவுகளா ?........
உயிர் என்பது என்ன அன்று ஆதாரமாக சிந்திக்கும் பொழுது, நம் ஞாபகங்கள் தான் உயிர்...