நான் ஒரு பிச்சைக்காரனை போல கந்தை உடுத்து குறுகிய ஒழுங்கை வழியாக நடந்துசெல்ல கனவு கண்டேன்
நாய் ஒன்று எனக்குப்பின்னால் நின்று குலைக்கத்தொடங்கியது. நான் வெறுப்புடன் திரும்பிப் பார்த்து “ஏய் எச்சில் நக்கும் ஜென்மமே வாயை மூடு” என்று கத்தினேன். அது தனக்குள்ளேயே சிரித்தது.
ஓ இல்லை இந்த விசயத்தில் நான் மனிதனை போல் இல்லையே.
“என்ன!” கோபம் பொங்க அதனை இழைக்கப்பட்ட பெரிய அவமதிப்பாக கருதினேன்.
“எனக்கு கூற வெட்கமாக இருக்கிறது செப்பிற்கும் வெள்ளிக்கும் பேதம் காணவோ, பட்டுக்கும் பருத்திக்கும் இடையே வேற்றுமை காணவோ, அதிகாரவர்க்கத்தையும் பாமர மக்களையும் வித்தியாசம் காணவோ எசமானர்களையும் அடிமைகளையும் வேறுபடுத்திக்காணவோ எனக்கு தெரியவில்லையே….”
நான் திரும்பி ஓட்டம் பிடித்தேன்.
கொஞ்சம் பொறு நாமிருவரும் இன்னும் கொஞ்சம் பேசுவோமே என்று உரத்த குரலில் என்னை நிற்கும்படி கூறியது.
ஆனால் எவ்வளவு வேகமாக ஒடமுடியுமோ அவ்வளவு வேகமாக ஓடி எனது கனவிலிருந்து வெளிவந்து எனது கட்டிலில் சாய்ந்தேன்.
தமிழாக்கம் நடனசபாபதி, லூ ஷுன் போர்க்காலச்சிந்தனைகள், தேசிய கலை இலக்கியப்பேரவை
Friday, January 23, 2009
நாயின் பதிலடி
Wednesday, January 7, 2009
மத நம்பிக்கையின் ஏமாற்றமும் மூடநம்பிக்கைகளின் சோகமும்
பழைமையின் பேரால் அற்புதங்கள் என்ற கட்டுக் கதைகளால்
அறியாமையும் வறுமையும் கொண்ட மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள்.
இவ் உயிர் இழப்புகளை எந்தத் தீவிரவாதப் பட்டியலில் சேர்ப்பது?
மத மூட நம்பிக்கைத் தீவிரவாதம் என்று கூறினால் ஏற்றுக் கொள்ளப்படுமா? இவ்வாறு உயிரிழப்போர் சாதாரண உழைக்கும் மக்களாவர். ஏனெனில் இந்தியக் கோவில்களில் வசதி வாய்ப்புப் பெற்ற பெரும் பணக்காரர்கள் முதலாளிகள் பெரும் அரசியல் புள்ளிகள் கடவுளின் இருப்பிடத்திற்கு அண்மையாகச் சென்று அருள் வாங்கிச் செல்ல உரிய ஏற்பாடுகள் தாராளமாக உண்டு. அதற்குரிய தொகைகளும் பெரியனவாக இருக்கும்.
ஆனால் சாதாரண பக்தர்கள் சிறிய தொகை செலுத்திப் பெரிய அளவில் அருள் வாங்க முண்டியடித்து நெரிசல் பட்டு உயிர் இழக்கின்றனர். இவை எதனைக் காட்டுகின்றன? கோவில்களும் கடவுளர்களும் வர்க்கம் சாதி பதவி அந்தஸ்துப் பார்த்தே 'அருள் புரிகிறார்கள்" என்பது தான்.
இந்தியா சாதிகளின் நாடு மட்டுமன்றி மதங்களினதும் மூடநம்பிக்கைகளினதும் நாடுமாகும். பழைமையின் பேரால் அற்புதங்கள் என்ற கட்டுக் கதைகளால் அறியாமையும் வறுமையும் கொண்ட மக்கள் ஏமாற்றப் படுகிறார்கள். தமது வறுமை, வேலையின்மை, நோய்கள், அன்றாடப் வாழ்க்கைப் பிரச்சினைகள் போன்றவற்றுக்குத் தீர்வு இல்லாத சூழலில் மக்கள் மீண்டும் மீண்டும் கோவில்கள் நோக்கியே தள்ளப்படுகிறார்கள்.
மூட நம்பிக்கைக்குள் மேன்மேலும் அமிழ்த்தப்படுகிறார்கள். புதிய புதிய கோவில்களும் கடவுள்களின் புதிய அவதாரங்களும் தோன்றி மக்களை திசை திருப்பிய வண்ணமே உள்ளனர்.
பிராமணியக் கோவில்களுக்கு அப்பால், ஒவ்வொரு சாதியிலும் நவீன அவதாரங்கள் ஆச்சிரமங்களும் கோவில்களும் அமைத்து அவற்றை வணிக மையங்களாக்கிக் கொள்கின்றன. இந்த அவதாரங்கள், தொடுகை செய்தும், கட்டிப்பிடித்தும், கைகள் உயர்த்திப் பொருட்களை வரவழைத்தும் பிள்ளைவரம், அற்புதங்கள் என்ற பெயரில் மக்களை மயக்கி வருகின்றனர்.
இதன் மூலம் சமூக நெருக்கடிகள் அரசியல் பிரச்சனைகள் அவற்றுக்கான காரணங்கள் பற்றி அறியவோ அணிதிரளவோ தமக்குரிய போராட்டங்களைத் தாமே நடத்தவோ முன்வராதவர்களாக மக்கள் ஆக்கப்படுகின்றனர்.
இந் நிலை இந்தியாவில் மட்டுமன்றி இலங்கையில் இன்றைய யுத்த நெருக்கடியின் மத்தியிலும் இந்த வகை ஏமாற்றுக்குள் தொடர்கின்றன.
தமது வாழ்க்கைப் பிரச்சினைகட்குத் தீர்வு இல்லாத சூழலில் மக்கள் கோவில்கள் நோக்கித் தள்ளப் படுகிறார்கள். மூட நம்பிக்கைக்குள் அமிழ்த்தப் படுகிறார்கள். புதிய புதிய கோவில்களும் அவதாரங்களும் தோன்றி மக்களை திசை திருப்பிய வண்ணம் உள்ளன.
இதனைப் பக்தி என்பதா காசு மிஞ்சிய கொழுப்புத்தனம் என்பதா மூட நம்பிக்கை கொண்ட பக்தி என்பதா எனப் புரியவில்லை.
இது போன்ற கொழும்பின் பெரிய கோவில்களின் நிகழ்வுகள் ஆடம்பரமாகவும் அசத்தல்களாகவும் இடம் பெறுவது இன்றைய யுத்த சூழலில் வழமையாகி விட்டது.
வன்னியில் குழந்தைகளுக்குப் பால் மா கிடைக்கவில்லை. நோயாளர்களுக்கு மருந்து இல்லை. மக்களுக்கு உணவு பெற முடியவில்லை. ஆனால் தலைநகரில் திருவிழாக்களும் வீதிவலங்களும் பெருவிழாக்களும் ஆடம்பரமாக நடாத்தப்படுகின்றன. விலை உயர்ந்த பட்டாடைகள் கழுத்துக் கைகால்களில் தங்க நகைகள் தத்தமது அந்தஸ்தை வெளிக்காட்டி நிற்கின்றவாறு பெண்களும் ஆண்களும் நடந்து கொள்கின்றனர்.
இவர்களையும் இந் நிகழ்வுகளையும் பார்க்கும் பேரினவாதிகள் 'தமிழர்களுக்கு எங்கு என்ன பிரச்சினை இருக்கிறது? சுதந்திரமாகவும் செழிப்பாகவும் தானே இருக்கிறார்கள்" எனக் கூறிச் சோற்றுப்பதம் காட்ட நிற்கிறார்கள். இவற்றை ஒரு கணம் இன்றைய வடக்கு கிழக்கின் அவல வாழ்வுடன் இணைத்துப் பார்க்கும் போது தான் பிரச்சினைகளின் உள்ளார்த்தத்தைப் புரிந்து கொள்ள இயலுமாகிறது.
Tuesday, January 6, 2009
நினைவூட்ட வேண்டியவை பற்றி
இந்தியா பற்றிய மயக்கங்கள் நம்மிடைய கலையவிடாமல் தடுப்பதில் நமது அரசியல் தலைவர்கள் முதலாக அறிஞர் பெருமக்கள் எனப்படுவாரும் பத்திரிகைகளில் அரசியல் ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வருகிறவர்களும்வரை பலரும் தீவிரமாகவே உள்ளனர்.
எனவேதான் சில விடயங்களைப் பற்றித் திரும்பத் திரும்ப நினைவூட்ட வேண்டிய தேவை நம்மிற் சிலருக்கேனும் உள்ளது. இந்தியக் குறுக்கீட்டை எதிர்க்கிற எவரும் சீன ஆதரவாளராகவோ பாகிஸ்தானின் நண்பராகவோ வேறெந்த நாட்டினதும் நலனை வலியுறுத்தும் ஒருவராகவோ இருக்க வேண்டியதில்லை. இந்தியக் குறுக்கீட்டை எதிர்க்கிற எவரும் எல்லா அந்நிய நாடுகளினதுங் குறுக்கீட்டையும் எதிர்க்கிறவராக இல்லாது போனால் இந்தியக் குறுக்கீடு பற்றிய அவரது நிலைப்பாடு நியாயமற்றதாகிவிடும்.
இவ்விடயத்தில் இந்தியாவை விமர்சித்துக் கொண்ட இந்தியாவின் தவறான அணுகுமுறையைச் சீனாவினதும் பாகிஸ் தானினதும் நோக்கங்கள் எனக் கூறப்படுகிறவற்றின் அடிப்படையில் விளக்கவும் நியாயப்படுத்தவும் சிலர் வெகுவாக முயல்வதைக் காணலாம். இது முன்கூறிய நோயின் இன்னொரு வகை.
கம்யூனிஸ்ற்றுக்கான ரஷ்ய முகவர்கள் என்றும் சீன முகவர்கள் என்றும் வசைபாடிய காலம் கடந்துவிட்டது. எனினும், எந்தவொரு கம்யூனிஸ்ற்றும் இந்த நாட்டின் எந்தப் பிரச்சினையையும் தீர்க்க ரஷ்யா குறுக்கிட வேண்டுமென்றோ சீனா குறுக்கிடவேண்டும் என்றோ சொன்னதில்லை.
அப்படிச் சொல்லியிருப்பார்களானால் அது அவர்கள் இந்த நாட்டின் மக்களுக்குக் கேடு நினைத்தவர்களாயிருப்பர். ஒவ்வொரு சமூக விடுதலை எழுச்சியினின்றும் கற்க வேண்டும் என்றும் வெற்றி பெற்ற எழுச்சிகளையடுத்துச் சமூக நிதியை நிலைநாட்டிய நாடுகளினின்று கற்க வேண்டும் என்றும் பயனுள்ள நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் சொல்வது சரியானதும் தவையானதுமாகும்.
யாரிடமும் இருந்து கற்க மாட்டாம் என்று சொல்கிற மூடர்கள் இருக்கிறார்கள். அவர்களால் மக்களுக்கோ நாட்டுக்கோ ஒரு நன்மையும் இல்லை.
இந்தியக் குறுக்கீடு என்று சொல்லுகிற போது நம் மனதில் இருப்பது இந்திய அரசின் குறுக்கீடுதான். அது இந்தியாவில் ஆட்சிப் பொறுப்பில் இருப்பது எந்தக் கட்சி என்றோ என்னவிதமான கூட்டணியா என்பது பற்றியதல்ல. இந்திய அரசு என்பது இந்தியாவின் பெரும் முதலாளிகளுடைய நலன்களையும் பெருங் காணிச் சொந்தக்காரர்களுடைய நலன்களையும் பணி நிற்கிற ஒரு சமூக அமைப்பின் காவலனாகச் செயற்படுகிற ஒரு நிறுவனம். பொலிஸ், நீதிமன்றம், இராணுவம், அரச நிறுவன அமைப்புகளும் பல்வறு அதிகாரிகளும் ஆலாசகர்களும் அதன் பகுதிகள். அங்க ஒவ்வொருவரும் தனி மனிதர்களாகத் தாற்றமளித்தாலும் அவர்களால் தனிமனிதர் களாகச் சிறு எல்லைகட்கு உட்பட்ட செயற்பட இயலும். அவ்வாறு செயற்பட்டுச் சில சீர்திருத்தங்கட்கு உதவியவர்கள் உள்ளனர்அவர்கள் நல்லவர்கள் அதற் கப்பால் அடிப்படையான சமூக அமைப்பை மாற்ற அவர்களுக்கு வலிமை இல்லை.
சமூகத்திலிருந்து எழும் நெருக்கு வாரங்களே அப்படிப்பட்ட சீர்திருத்தங் களுக்கான தவையையும் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்பை யும் வழங்குகின்றன. சில சமயங்களில் செல்வாக்குள்ள சிறுபான்மையினரால் சமூக நீதிக்கான சீர்திருத்த நடவடிக்கைகளை நிறைவற்றாமற் தடுக்க இயலும். உதாரணமாக, பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு பற்றி மண்டல் ஆணைக் குழு முன்வைத்த பரிந்துரைகள் உயர் சாதியினராலும் வசதிபடைத்த வர்க்கத்தினராலும் எதிர்க்கப்பண்ண ஒருவர் தீங்கிழைத்ததையடுத்து அப்படித்தான் கிடப்பில் போடப்பட்டன. ஒவ்வாத அதிகாரத்தில் உள்ளவர்களால் சட்டத்திற்கு உட்பட்டும் வேண்டிய போது சட்டத்தை மீறியும் தமது நலன்களைப் பாதுகாப்பதற்கான வல்லமை இருந்து வந்துள்ளது.
எனவதான், சமூக நீதிக்காகப் போராடுகின்றவர்கள் இருக்கிற சமூக அமைப்பின் சட்டங்கட்கு உட்பட்டு வெல்லக்கூடியவை எவை என்பது பற்றித் தெளிவாக இருக்க வேண்டும். அவ்வாறு வெல்ல இயலாதவற்றைச் சட்ட ரீதியான பாராட்டங்கள் மூலம் புதிய சட்டங்களை ஆக்கி வெல்ல இயலுமா என்று ஆராய வேண்டும். அதன் பாக்கில் சட்டத்திற்கு வெளிய நின்று போராடவேண்டியவை எவை என்று விளங்கும். இருக்கிற ஆட்சி அமைப்பைத் தூக்கி எறியாமல் இந்தியாவின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிர்காலம் இல்லை என்ற உண்மை அப்பாது தெளிவாகும். அதைச் செய்யப் போராடுகிறவர்கள் பயங்கரவாதிகளாக்கப்படுகின்றனர். சட்டத்தை மீறாமல் சமூக ரீதியை வென்றெடுக்க இயலாது என்ற நிலையிலய மக்கள் சட்டவிராதமாகப் பாராடுகின்றனர். அப்பாது அரசு வன்முறையைப் பாவிக்கிறது. அதிகார வர்க்கமும் வன்முறையைப் பாவிக்கிறது. எனவ, உரிமைப் போராட்டமும் வன்முறையைப் பாவிக்க நேருகிறது.
பல சமயங்களில் ஒடுக்குமுறையாளர்கள் தாக்கும் வரை மக்கள் காத்திருக்க இயலாது. அவர்கள் எதற்கும் ஆயத்தமாக இருக்க வண்டியுள்ளது. அதைக் காரணங்காட்டியும் அரச வன்முறைக்கு எதிரான பதிலடிகளைக் காரணங்காட்டியும் எல்லாவிதமான எதிர்ப்புகளையும் அரசு பயங்கரவாதம் என்று முத்திரை குத்த இயலும். என்றாலும் எல்லாவிதமான வன்முறைகளும் பயங்கரவாதமாகக் கொள்ளப்படுவதில்லை. பொலிஸ், இராணுவ வன்முறைகள் மட்டுமன்றி இந்துத்துவ வன்முறை இதுவரை பயங்கரவாதமாக அறிவிக்கப்படவில்லை. ஆகமிஞ்சித் தனிமனிதர்கள் தண்டிக்கப்படுகின்றனர ஒழிய அவர்களுக்குப் பின்னாலுள்ள பயங்கரவாத மதவெறி அமைப்புகளில் எதுவும பயங்கரவாத அமைப்பு என்று தடைசெய்யப்படவில்லை. இந்தப் பின்னணியிலய இந்திய அரசு பயங்கரவாத அமைப்புகள் என்று தடைசெய்துள்ள அமைப்புகளைக் கருத வேண்டியுள்ளது.
அவை ஏன் அவ்வாறு தடைசெய்யப்பட்டுள்ளன என்று கவனிக்க வேண்டியுள்ளது. சத்திஸ்கார் மாநிலத்தில் பழங்குடியினரிடைய மாஓவாதிகள் செல்வாக்கு வளர்ந்து வருவதைத் தடுக்க 2004 முதல் ஸல்வா ஜுடும் என்கிற பயங்கரவாத அமைப்பு இந்திய அரசால் ஊட்டி வளர்க்கப்பட்டுள்ளது.
பொதுவாக,அபிவிருத்தி என்ற பேரால் பழங்குடியினரின் பொருளாதாரமும் சமூக இருப்பும் பெரும் மிரட்டலுக்கும் அழிவுக்கும் முகங்கொடுக்க நேர்ந்துள்ளது. அதன் பயனாக மற்கு வங்காளக் கிராமங்களை அந்நியருக்கு வழங்குகிற முயற்சியை (நந்தி கிராமம்) எதிர்த்து மக்கள் போராடியுள்ளனர்.
இந்தியப் பெரு முதலாளி டாட்டாவை நுழையவிடாது (சிங்கூர்)மக்கள் போராடி யிருக்கிறார்கள். போராடி வென்றிருக்கிறார்கள். அவர்களது போராட்டங் கேட்கும் பயங்கரவாத முத் திரை குத்தப்பட்டது. மிக அண்மையில் அத மாநிலத்தில் ஒரு பழங்குடிப் பிரதேசத்தில் (லால்கர்ஹ்) இந்தியப் பொலிஸையும் "அபிவிருத்திக்காரர்களையும்' நுழையவிடாமல் மக்கள் தடைசெய்துள்ளார்கள். இது ஒரு புதிய போராட்டமுறை. இந்த மக்கள் இயக்கத்திற்கும் மாஓவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டுள்ளது. பொலிஸார் விசாரித்த பாது ஒரு பழங்குடிப் பெண்மணி "அப்படியானால் நாங்கள் எல்லாரும மாஓவாதிகள் தான்' என்று பதில் கூறியிருக்கிறார்.
எல்லா ஆயுதப் போராட்டங்களும் புரட்சிகரமானவை அல்ல. பயங்கரவாதம் கணிசமாகவ உள்ள போராட்டங்கள் உள்ளன. அடிப்படையிலய பயங்கரவாத முறையிலான போராட்டங்கள் உள்ளன. இவ்வாறான போராட்ட அமைப்புகள் பலவற்றுக்கு வெகுசன ஆதரவு இல்லை. மும்பைப் பயங்கரவாதத்தை இந்தியாவில் உள்ள முஸ்லிம்களா மாஓவாதிகள் எவருமா அங்கீகரிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
அதை விடுதலைப் புலிகளுடன் உறவுபடுத்துகிற இலங்கை அரசுசார்ந்த முயற்சிகட்கு ஒத்தூதிய இந்திய அதிகாரிகளும் உள்ளனர். இங்கெல்லாம் பயங்கரவாத்ததை முறியடிக்க அரசு தனது பங்கரவாதத்தையும் அடக்குமுறையையுங் கட்டவிழ்த்து விடுகிறதயொழிய அவ்வாறான பயங்கரவாதத்தின் விளைநிலம் எது என்று தடி அறியவா அதற்கான விஷ வித்துகள் எவை என்று விசனித்து அவற்றைக் களையவா முயல்வதில்லை. ஏனெனில், தீரவிசாரித்தால் விளைநிலங்கட்கும் வித்துகட்கும் அரச ஒடுக்குமுறைய காரணமாக இருப்பது தெரியவரும்.
எனவதான் எளிமையான ஆக்கபூர்வமான தீர்வான சமூக நீதிக்குப் பதிலாக பயங்கரவாத ஒழிப்பு என்கிற அழிவுமிக்க சிக்கலான தீர்வு நாடப்படுகிறது.
அமெரிக்காவின் உலகப் பயங்கரவாத ஒழிப்பின் பாடங்களை இந்திய ஆட்சியாளர்கள் கற்க ஆயத்தமாக இல்லை. இந்தப் பின்னணியிலய இந் தியாவில் தடைசெய்யப்பட்ட இயக்கங்கட்கு ஆதரவாகப் பசுவார் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற காரிக்கைகளை நாக்க வண்டும். இவை சனநாயக விராதமானவை, கருத்துச் சுதந்திரத்தை மறுப்பவை.
தடைசெய்யப்பட்ட ஒரு அமைப்பிற் செயற்படுவாரைச் சட்டம் தண்டிக்கிறது ஒரு விடயம். தடைசெய்யப்பட்ட அமைப்பின் நியாயத்தை எடுத்துச் சொல்வதையும் தடையை நீக்கக் கோருவதையும் தண்டனைக்குரியதாக்குவது இன்று ஒருசில அமைப்புகளைப் பாதிக்கலாம். நாளை அதுவ இன்று கடும் நடவடிக்கை கோருவோரைத் தண்டனைக்குரியாராக்கலாம்.
ஞாயிறு தினக்குரலில் கோகர்ணன் எழுதிய "மறுபக்கம்" பத்தியிலிருந்து.....
Thursday, January 1, 2009
2008 இன் சிறத்த மென்பொருட்கள்......
PC magazine னால் வருடம் தோறும் வெளியிடப்படும் வரிசைப்படுதலின் 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த மென்பொருட்களாக தெரிவு செய்யப்பட்ட மென்பொருட்களில் முதல் 10 இடங்களையும் பிடித்த மென்பொருட்களின் பட்டியலே இங்கே பட்டியலிடப்பட்டுள்ளது.
Adobe Reader
www.adobe.com
pdf ன் ஆக்கிரமிப்பு கணணி உலகில் பிரமிக்கத்தக்கது .Adobe reader தொடர்ந்து பலவருட்களாக முதல் 10 இடங்களுக்குள் தனது இருப்பிடத்தை தக்கவைதுள்ளது.2009 இலும் இதன் தானம் நிலைக்கும் என்பதில் ஜயம் இல்லை. google கூட pdf reader ஜ புதிதாக அறிமுகப்படுத்தி உள்ளது.
AIM
www.aim.com
AIM messenger சட்டிங்கில் இந்த ஆண்டு பிரமிக்கத்தக்க வளர்ச்சியை கண்டுள்ளது.google கூட தனது messenger ஊடாக AIM ல் login பண்ணக்கூடிய வசதியை செய்துகொடுத்துள்ளது.
Audacity
audacity.sourceforge.net
இது ஒரு open source software. இலவசமாக தரையிக்ககூடிய audio recording மற்றும் editing மென்பொருள்.இந்த மென்பொருளும் பல தரப்பட்ட பாவனையாளர்களால் அதிகம் தரையிறக்கப்பட்ட மென்பொருள்
Firefox
www.mozilla.com
எல்லோராலும் அறியப்பட்ட browser.அறிமுகமான நாளில் இருந்ந்து முதல் 10 இடங்களை விட்டு நகருவதாக தெரியவில்லை.firefox download day ல் அதிகமாக தரையிறக்கம் செய்யப்பட்டு உலக சாதனை புரிந்த ஒரு மென்பொருள்.
GIMP
www.gimp.org
இது ஒரு image editing open source software.இது photoshop செய்யக்கூடிய அனைத்து வேலைகளையும் செய்வதாலும் இலவசமாக கிடைப்பதாலும் முதல் 10 இடங்களில் அரியாசன்ம் இட்டு அமர்ந்துள்ளது.
iTunes
www.apple.com/itunes
அப்பிளின் முன்னனி மென்பொருள். அப்பிள் iphone ஜ அறிமுகப்படுத்திய பின்பு இதன் மவுசு இன்னும் கூடிவிட்டது.
OpenOffice.org
www.openoffice.org
openoffice sum micro system த்தால் வெளியிடப்பட்ட ஒரு open source software. windows office இல் செய்யக்கூடிய அனைத்தையும் இதில் செய்யக்கூடியதாக உள்ளமையாலும் இலவசமாக கிடைப்பதாலும் தொடர்ந்து பல வருடங்களாக முதல் 10 இடங்களில் தனது இடதை தக்கவைத்துள்ளது.
Skype
www.skype.com
உலகில் அதிகமானவர்களால் பாவிக்கப்படும் ஒரு messenger மென்பொருள். PC to Phone என்னும் இந்த மென்பொருளின் தாரக மந்ந்திரம் பலரயும் கட்டிப்போட்டுள்ளது.
Thunderbird
www.mozilla.com/thunderbird
இது ஒரு movable email client software.mozilla வின் மற்றுமொரு வெளியீடு.தொடர்ந்து இந்தப்பட்டியலில் இருந்துவரும் மற்றுமொரு மென்பபொருள்
Ubuntu
www.ubuntu.com
Windows தனது பாவனையாளர் அனுமதியை கிடுக்கு பிடி பிடித்ததால் அடித்தது லாபம் Ubuntu க்கு. பல வருடங்களாக இந்தப்பட்டியலில் இருந்தாலும் தற்போது இதற்க்கு கிராக்கி கூடியுள்ளது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.முக்கியமாக windows vista மிரள வைக்கும் graphics.
WinAmp
www.winamp.com
சுமார் 10 வருடங்களுக்கும் மேலாக இப்பட்டியலில் தனது இருப்பிடதை தக்கவைத்துள்ள ஒரே ஒரு மென்பொருள்.
தமிழ் பூங்காவின் புத்தாண்டு வாழ்த்துக்கள்
வணக்கம் தமிழ் பூங்கா வாசகர்களே
உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்........
மலர்ந்துள்ள இந்த இனிய ஆண்டாவது சாந்தியும் சமாதானமும் மலரட்டும் என்ற பிரார்த்தனையுடன் தமிழ் பூங்கா தன்னுடைய முதல் பதிவை இப்புத்தாண்டில் பதிவிடுகின்றது.
தமிழ் பூங்கா வாசகர்களுக்கு சிறிது காலமாக ஏமாற்றத்தை தந்தமைக்காக முதலில் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்.தமிழ் பூங்கா பராமரிப்பாளர்கள் யாவரும் professional workers.வேலைப்பழு காரணமாகவே தொடர்ந்து புதிய பூக்களையோ அல்லது பூக்கூடைகளையோ உங்களுக்கு பரிமாறா இயலாமல் போய்விட்டது.(எல்லாம் இந்த பாழாப்போன American economy தான் பாஸ் காரணம் :) வேலை செய்யாட்டி ஆபிஸ்ல இருத்து அடுத்த நாளே துக்குறாங்களாமே :'( ).
இப்புத்தாண்டில் தமிழ் பூங்கா பூத்துக்குலுங்கும்.நீங்களும் வந்து இளைப்பாறிச்செல்லுங்கோ...............